Friday, May 27, 2022

KuttavumShikshayum (மலையாளம் ) -CRIME AND PUNISHMENT - சினிமா விமர்சனம் (இன்வெஸ்டிகேஷன் டிராமா)


இயக்குநர்  ராஜீவ்  ரவி  வித்தியாசமான  பர்சனாலிட்டி . கமர்ஷியல்  மசாலா அயிட்டங்கள்  இருக்காது. ரியலிஸ்டிக்  சினிமா  தான்  இவர்  சாய்ஸ். வைரஸ்  உட்பட  பல  படங்களின்  ஒளிப்பதிவாளர் . 2016 ல்  துல்கர்  சல்மான்  நடிப்பில்  வந்த Kammatti Paadam  தான்  இவரது   முந்தைய  படம் 

ஹிரோ ஒரு  போலீஸ்  ஆஃபிசர். ஒரு  நகைக்கடைல  கொள்ளை  நடக்குது.விசாரிக்கப்போறார். அங்கே  கடை  ஓனரோட  மகன்  அசால்ட்டா  வீடியோ  கேம்ஸ்  விளையாடிட்டு  செல்லும் கையுமா  எப்பவும்  இருக்கான் , அவன்  முகத்துல  களவு  போன  கவலையே  இல்லை அவன்  மேல  அவருக்கு  ஒரு   டவுட். அவனோட  செல்  ஃபோன்  நெம்பரை  சைபர்  க்ரைம்  போலீஸ்  மூலமா  டிராக்  பண்ணினா  இடுக்கி  மாவட்டம்  வண்ணப்புரம்கற  ஊர்ல  இருந்து  ஒரே  ஒரு  ஃபோன்  நெம்பர்ல  இருந்து  அடிக்கடி  கால்ஸ் , மெசேஜ்  வருது.  விசாரிச்சா  அவனோட  கேர்ள்  ஃபிரண்ட்


 யார்  மீதாவது  டவுட்  இருக்கா?னு   விசாரிச்சா இதுக்கு  முன்னால  கடைல  வேலை  செஞ்சு  இப்போ  கடைல  இல்லாத  ஒரு    ஆளைப்பத்தி  சொல்றார்  கடை  ஓனர்  , அவனைத்தொக்காத்தூக்கிட்டு  வந்து  விசாரிச்சா   அவன்  இல்ல.  சிசிடிவி  கேமரா  மூலம்  சந்தேகத்துக்கு  இடமான  வாகனங்கள் , ஆட்கள்   நடமாட்டம்  இருக்கா?னு  பார்த்ததுல    இந்த  ஏரியா  ஆட்களே  இல்லை . வடக்கே  இருந்து  வந்த  ஆட்கள்  தான்  இந்த  வேலையை  செஞ்சதுனு  தெரிய  வருது .  மேலிடத்தின் அனுமதியுடன்  4  பேர்  கொண்ட  டீமுடன்  ஹீரோ   பயணம்  பண்றார். அவர்  தான்  எடுத்துக்கிட்ட  வேலையை  வெற்றிகரமா  எப்படி  முடிச்சார்  என்பதுதான்  மிச்ச  மீதிக்கதை 


ஹீரோவா  ஆசிஃப் அலி  பிரமாதமான  ஆக்டிங் . முகச்சாயலில்  நம்ம  ஊரு  காக்க  காக்க  சூர்யா  வை  நினைவுபடுத்தறார்

ஹேர்  ஸ்டைல் , பாடி  லேங்க்வேஜ்  என  போலீஸ்  மிடுக்கு  பக்கா . அவரது  டீம்  மெம்பர்ஸ்  எல்லாரும்  கச்சிதமான  நடிப்பு


 ஹீரோவுக்கு    ஜோடி  இல்லை , ஹீரோயின்  இல்லை , காமெடி  டிராக்  இல்லை , மாமூம்  கமர்ஷியல்   விஷயங்கள்  இல்லை 

முதல்  பாதி  என்கொயரில  சுமார்   வேகத்துல  போகுது , பின்பாதி  நல்ல  வேகம். க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  என   எதுவும்  இல்லை 


ஒளிப்பதிவு   கனகச்சிதம், எடிட்டிங்  இசை  ஓக்கே  ரகம் 


சபாஷ்  டைரக்டர் 


1  போலீஸ்  ஆஃபிசர்கள்  யூனிஃபார்மில்  இருக்கும்போது  வைக்கும்  சல்யூட்கள் , மஃப்டில   இருக்கும்போது  ஹையர்  ஆஃபீசர்களுக்குக்காட்டும்  மரியாதை  இவற்றை  கச்சிதமாக  பிரித்துக்காட்டியது. அந்த  டீம்  மெம்பர்சுடனான  கெமிஸ்ட்ரி 


2  திருடன்  கிட்டேயே  திருடிய  திருடன்  என  அரசியல்வாதிகள்  வீட்டில்  நிகழும்  திருட்டுகளைப்பற்றி  காமெடிகள்  பார்த்திருக்கோம்,  இதுல  கேரள  போலிசிடமே  லஞ்சம் அல்லது  கிஃப்ட்    கேட்கும்  வட  மாநில  போலீஸ்   அசத்தல் 


3   க்ளைமாக்சில்   திருட்டுக்கும்பல்  இருக்கும்  கிராமமே  போலீஸ்  கூட்டத்தை  துரத்துவது  அவர்கள்  தப்பிக்க  முயல்வது  பரபரப்பான  படப்பிடிப்பு  , கூடவே  இதுவரை  நாம்  பார்க்காத  காட்சி  அமைப்பு 


4   ஓவர்  ஹீரோயிசம், ஹீரோ  பஞ்ச்  டயலாக் ,  ஃபைட்  என  எதுவுமே  இல்லாதது  ஆறுதல். போலிஸ்  சப்ஜெக்ட்  படத்தில்  ஃபைட்  சீன்  கூட  இல்லாதது  ஆச்சரியம், சேசிங்  மட்டுமே  உண்டு 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   அவ்ளோ  கஷ்டப்பட்டுக்கண்டுபிடிச்ச  ஒரு  கொள்ளையனை  கை விலங்கிட்டு  பாதுகாப்பா  வெச்சிருக்கறதெல்லாம்  ஓக்கே , ஆனா  நைட்  டைம்ல  அவனைப்பாதுகாக்க  ஷிஃப்ட்  முறைல  மாத்தி  மாத்தி  தூக்கம்  கெட்டு  பாதுகாப்பது  எதுக்கு ? அவனுக்கு  மயக்க  மருந்தோ , தூக்க  மருந்தோ  கொடுக்கலாமே? அலல்து  கை  காலை  கட்டிப்போட்டு  ரிலாக்ஸா  இருக்கலாமே? 


2  கொள்ளையன்  பாத்ரூம்  போகனும்  என்றதும்  ஒரு  போலீஸ்  அவனை  நம்பி  கை விலங்கை  ரிலிஸ்  செய்து  பாத்ரூம்க்கு  அனுப்ப  அவன்  ஈசியா  தப்பறான். அது  கிராமம்,  அவன்  ஆண்  ,  ஓப்பன்  பிளேஸ்ல  போ  என  அனுப்பி  கண்காணிப்பில்  வைத்திருக்கலாமே? அட்லிஸ்ட்  கால்ல  கயிறு  கட்டி  வெச்சிருக்கலாம்


3  கொள்ளையர்கள்  இருக்கும்  ஊருக்கு   வெறும் நாலஞ்சு  பேர்  மட்டும்  போவது  ஆபத்தாச்சே?  தகவல்  கிடத்ததும்  பெரிய  படையோட  போய்  இருக்கலாமே? 


ரசித்த    வசனங்கள்


1   புதுசா  ஒரு  ஊருக்கோ , மாநிலத்துக்கோ  போனா  அங்கே  கிடைக்கற  சாப்பாட்டை  சாப்பிட்டு பழகிக்கனும்


2 ஒரு  குற்றவாளியைபிடிச்சா  போலிஸ்க்கு  கிடைக்கும்  பாராட்டு, பிரமோசனை  விட    அவனை  தப்ப  விட்டா  கிடைக்கற  தண்டனை  அதிகம்


3  குற்றவாளியை  முதல்ல  காட்டிக்கொடுப்பது  அவன்  கண்  தான்


  இது  உண்மை  சம்பவம்கறாங்க, ஆல்  செண்ட்டர்  ஆடியன்சுக்கும்  இது  பிடிக்காது. குறிப்பிட்ட ஆடியன்ஸ்க்கு  மட்டுமே  பிடிக்கும், விரைவில் நெ ட்  ஃபிளிக்ஸ்  ரிலீஸ் 




 சிபிஎஸ்  ஃபைனல் கமெண்ட் -Kuttavum Shikshayum (மலையாளம்) - நகைக்கடைக்கொள்ளையர்களை தேடிச்செல்லும் மாறுபட்ட த்ரில்லர் . டூயட், மொக்கை காமெடி எதுவும் இல்லாமல் சொல்ல வந்த கதையை ரா வா சொன்ன விதம் குட் , ரேட்டிங் - 3 / 5 #KuttavumShikshayum