Monday, May 23, 2022

மவுனம் சம்மதம் (1990) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் & கோர்ட் ரூம் டிராமா)

 


📷
மவுனம் சம்மதம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் & கோர்ட் ரூம் டிராமா)
மெகா ஸ்டார் மம்முட்டி தமிழில் அறிமுகமான முதல் படம்.ரஜினியின் அதிசயப்பிறவி , 13ம் நம்பர் வீடு போன்ற படங்களுடன் சத்தமே இல்லாம 15/6/1990 ல் ரிலீஸ் ஆகி ஹிட் ஆன படம்.டைட்டிலைப்பார்த்து பலரும் இது ஏதோ ரொமாண்டிக் மெலோ டிராமானு ஸ்கிப் செஞ்சிருக்கவும் வாய்ப்புண்டு . போதாததுக்கு பிரமாதமான மெலோடி ஹிட் கல்யாணத்தேன் நிலா காய்ச்சாத பால் நிலா பாட்டுக்காகவே பார்த்தவர்கள் பலர்
ஹீரோயின் அமலாவோட அண்ணன் ஜெய்சங்கர் ஒரு அப்பாவி. இவரோட தம்பி சரத் குமாரோட மனைவி திடீர்னு ஒரு நாள் வீட்டில் எரிந்த நிலையில் பிணமா கிடக்கறார். சம்பவம் நடந்தப்போ சரத் குமார் வீட்டில் இல்லை . இது தற்கொலையோ?னு போலீஸ் நினைக்குது . அப்போ ஜெய்சங்கரோட தொழில் எதிரி நாகேஷ் இதுதான் சாக்குன்னு சில போலி சாட்சிகளை வெச்சு அது ஜெய்சங்கர் செஞ்ச கொலை தான்னு ஜோடிச்சு மாட்டி வைக்கிறார்.
மாலைமலர் மாதிரி நியூஸ்காரங்களுக்கு கொண்டாட்டம் , பிரபல தொழில் அதிபர் தம்பி சம்சாரத்தை தன் சம்சாரமா நினைச்சு தொடப்பார்த்திருக்கார், மசியலைன்னதும் கொன்னுட்டார்னு கதை கட்டி விடறாங்க
கோர்ட்ல கேஸ் நடக்குது , ஜெய் சங்கருக்கு பாதகமா தீர்ப்பு வருது .அந்தக்காலத்துல ஜோக்கே சோல்லத்தெரியாம தான் சொல்ரதுதான் செம காமெடினு அவரே நினைச்சு அவரே சிரிச்சுக்குவாரே ஒய் ஜி மகேந்திரன் அவர்தான் ஜெ3ய் சங்கரோட வக்கீல் . அவரால ஒண்ணும் பண்ண முடியலை , சரி அப்பீல் பண்ணலாம்னு அவரோட ஃபிரண்ட் மம்முட்டி மூலமா கேஸ் நடத்தறாங்க.
ஹீரோ மம்முட்டி அந்த கேசை நடத்தி ஜெய் சங்கர் நிரபராதினு தீர்ப்பு வாங்கிக்கொடுக்கறதோட மட்டும் இல்லாம யார் கொலையாளி, எதுக்காக நடந்த கொலைனும் கண்டு பிடிக்கிறார். க்ளை மாக்ஸ் ட்விஸ்ட் நல்லாருக்கு
ஹீரோ மம்முட்டி தமிழ் பேசி நடிச்ச முதல் படம் , இது ஈரோடு ஆனூர்ல ரிலீஸ் ஆகி 30 நாட்கள் ஓடுச்சு ஆச்சர்யமான விஷயம் , இவரோட நடிப்பைப்பற்றி புதுசா சொல்ல என்ன இருக்கு? யதார்த்தமான நடிப்பு . அமலாவிடம், பம்மும்போதும் சரி சவால் விடும்போதும் சரி கோர்ட் காட்சிகளில் வாதிடும்போதும் சரி , முத்திரை பதிக்கும் நடிப்பு
நாயகி அமலா . அமலாவின் அதிக பட்ச அழகு அக்னி நட்சத்திரம் , ஜீவா,வேலைக்காரன் , மெல்லத்திரந்தது கதவு போன்ற படங்களில் தான் செமயா இருக்கும்,. இதுல முதலுக்கு மோசம் இல்ல ரகம் தான் ( என்னமோ 1 கோடி ரூபா முதல் போட்டு படம் எடுத்த மாதிரியே பேசறான் பாரு )
வேலைக்காரனாக சார்லி கச்சிதமான நடிப்பு சரத்குமார் மனைவியாக ஸ்ரீஜா அதிக வாய்ப்பில்லை . அவரது முன்னாள் காதலனாக கொஞ்சம் பிரபலம் ஆன முகத்தை போட்டிருக்கலாம்
படம் போட்ட முதல் 40 நிமிடங்கள் கொஞ்சம் ஸ்லோதான் , யார் யார் என்ன என்ன கேரக்டர்கள்? ஹீரோ பில்டப் ஹீரோ ஹீரோயின் சந்திப்பு மோதல் இப்டி 46 நிமிசம் போன பின் மெயின் கதைக்கு வருது . அதுக்குப்பின் சுவராஸ்யமான திரைக்தை. டிஸ்னி ஹாட் ஸ்டார்ல யூ ட்யூப்ல கிடைக்குது . பார்க்கறவங்க முதல் 46 நிமிசம் ஸ்கிப் பண்ணிட்டு பின் பார்க்கவும்.
ரசித்த வசனங்கள்
1 ஒரு வக்கீல் எல்லா கேஸ்லயும் ஜெயிக்கனும்னு அவசியம் இல்லை அவனால முடிஞ்ச வரை திறமையா வாதிடலாம் , அவ்ளோ தான்
2 என் பேரு அழகு
\
சரி , பேருலயாவது அழகு இருக்கே ?
அவன் பேரு ஜெய் சேகர் .. ஏதாவது ஒரு கேஸ்லயாவது ஜெயிச்சிருக்கானா? கேள்
3 இவரு சாதாரண வக்கீல் இல்லை , இவரு ஒரு கேஸ்ல வாதிடறார்னா எதிர் த்து வாதிடும் வக்கீல் லைப்ரரி போய் நோட் ஸ் எடுப்பாங்க , அங்கே போனா அவங்களுக்கு முன்பே ஜட்ஜ் நோட்ஸ் எடுத்திட்டு இருப்பார்
4 நிக்கற மரத்தை சாய்க்கவும் என்னால முடியும், சாய்ச்ச மரத்தை நிக்க வைக்கவும் முடியும்
5 யோவ் நீ எல்லாம் என்னா ஆளு ? 25 வருசமா பியுனா இருக்கற என் கிட்டே கிடைக்காத தகவலா ஆறு மாசமா மேனேஜரா இருக்கும் அந்த ஆள் கிட்டே கிடைச்சுடப்போகுது?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல டெட் பாடி பின்னந்தலைல அடிபட்டிருக்கு என்ற தகவல் தெரிஞ்சிடும்கறது கொலையாளிக்கு தெரியாதா? என்ன தைரியத்துல டெட் பாடியை எரிச்சுட்டா அது தற்கொலையா நினைச்சுக்குவாங்கனு நினைக்கறார்?
2 உயிருள்ள பொண்ணு தீப்பிடிச்சு எரியும்போது கதறல் சத்தம் ஊரையே தூக்கும், யாருக்கும் கேட்கலையா>னு கோர்ட்ல யாரும் வாதிடவே இல்லையே ?
3 முன்னாள் காதலியை சந்திக்க வரும் காதலன் இப்படியா லூஸ் மாதிரி கூட்டுக்குடித்தனம் இருக்கற வீட்டுக்கு வருவான் ?
4 சாதா குடும்பத்தைச்சேர்ந்த பெண்ணுக்கு துப்பாக்கி எப்படி கிடைச்சுது ? சம்பவம் நடந்த பின் ரிப்போர்ட்ல அந்த துப்பாக்கி பற்றி தகவலே இல்லையே?
5 சரத் குமாரின் மனைவி ஒரு பேங்க்ல ஒர்க் பண்ணினார் , அப்போ ஒரு காதலன் இருந்தான் என்பது ஃபிளாஸ்பேக் கதை , ஓக்கே , ஆனா அதே ஊரில் வாழ அவள் எப்படி ஒத்துக்கிட்டா? பின்னாளில் காதலனால் பிரச்சனை வரும் என யூகிக்க மாட்டாளா? பொதுவாக பெண்கள் மேரேஜ்க்குப்பின் ஏரியா மாறிடுவாங்களே ?
6 டெட்பாடியிடம் நகை மிஸ்சிங் என்ற கேள்வியே யாரும் கேட்கலையே?
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - த்ரில்லர் ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம், மம்முட்டி ரசிகர்களும் பார்க்கலாம் . ஆனந்த விக்டன் மார்க் 42 ரேட்டிங் 2.5 / 5
Release date: 14 January 1989 (India)
Director: K. Madhu
Music director: Ilaiyaraaja
Screenplay: S. N. Swamy

Language: Tamil