Sunday, May 22, 2022

12TH MAN -2022 (மலையாளம் ) சினிமா விமர்சனம் ( இன்வெஸ்டிகேஷன் க்ரைம் த்ரில்லர் )

 



ஜீத்து ஜோசஃப் + மோகன்லால்  கூட்டணி  ஆல்ரெடி  த்ரிஷ்யம் 1 (  பாபநாசம்) த்ரிஷ்யம் 2 என  இரு  மெகா  ஹிட்  த்ரில்லர்களை  தந்தது  என்பதால்  ஏகப்பட்ட  எதிர்பார்ப்புகள் . அவற்றை  பூர்த்தி  செஞ்சுதா?  சாஞ்சுதா?  பார்ப்போம்

விரைவில்  திருமணம்  நடக்க  இருக்கும்  ஒரு  ஜோடி ,  ஆல்ரெடி  மேரேஜ்  ஆன  4  செட் ஜோடி  ( செட்டுன்னாலும்  ஜோடின்னாலும்  ஒண்ணுதானே? ) ஒரு  டைவர்ஸ்  ஆன  பொண்ணு  மொத்தம்  11 பேரு  ஒரு  பேச்சிலர்  பார்ட்டில  கலந்துக்கறாங்க . இவங்க  11 பேருமே  +2  ரீயூனியன் , காலேஜ்  ரீ யூனியன்  மாதிரி  ஒரு  வாட்சப்  க்ரூப்ல  இருக்கறவங்க. பார்ட்டில  ஒரு  விளையாட்டு . எல்லாரும்  அவங்கவங்க   ஃபோனை  டேபிள்ல  வைக்கனும், ஒரு  மணி  நேரத்துக்கு  யார்    ஃபோனுக்கு  என்ன  கால்  வந்தாலும்  ஸ்பீக்கர்ல  போட்டு  பேசனும், மெசேஜ்  வந்தா  அதை  பப்ளிக்கா  படிச்சுக்காட்டனும்


இந்த  ஜாலி  கேலி  கேம்ல  ஆரம்பத்துல  ஒரே  ரகளையா  போய்க்கிட்டு  இருக்கு அப்போ  ஒரு  ட்விஸ்ட் .. மேரேஜ்  ஆகப்போகும்   சித்தார்த்தோட  நண்பன்  ஃபோன்  பண்றான், ஸ்பீக்கர் ல  ஃபோன்  இருப்பது  தெரியாமல் “அந்த  க்ரூப்பில்  உள்ள  ஒரு  பொண்ணுக்கு  சித்தார்த்  கூட  இருக்கும்  கள்ளத்தொடர்பு  பற்றியும் , அவளுக்கு  கர்ப்பத்தடை  மாத்திரை  வாங்கிக்கொடுத்தது  பற்றியும்  ஓப்பனா  சொல்லிடறான்


கூட்டத்துல  இருக்கும்  மொத்த  11  பேர்ல  6  பெண்களில்  ஒருவர்  டாக்டர். நானே  டாக்டர்  நான்  எதுக்கு  இன்னொருவர்  கிட்டே  டேப்லெட்  கேட்பேன், அது  நான்  இல்லைனு  சொல்லிடறா. டைவர்ஸ்  லேடி  நான்  எதா  இருந்தாலும்  துணிச்சலா  ஃபேஸ்  பண்ணுவேன், நான்  இல்லைங்கறா ./ அப்போ  மீதி  இருக்கும் 4 பேருல  சித்தார்த்தை  மேரேஜ்  பண்ணிக்கப்போற  பொண்ணு தவிர    மீதி  இருக்கும்  மூவரில்   யாரோ  ஒருவர்  கூட தான்  கனெக்சன்  போல, 


 சொல்வதெல்லாம்  உண்மை  டி  வி  ரியாலிட்டி  ஷோ  மாதிரி   ஆகிப்போச்சு.. சித்தார்த்தை  மேரேஜ்  பண்ணிக்கும்  ஐடியாவையே  கேன்சல்  பண்ணிடலாமா?னு மணப்பெண்  யோசிக்குது . சித்தார்த்தின் இந்த  தவறான  நடத்தை  பற்றி  கோபமாக  விமர்சிக்கும்  ஷைனி  கொலை  செய்யப்படுகிறார். அந்தக்கொலையை  செய்தது  யார்  என்பதை   12 வது  நபராக  வரும்  ஹீரோ  துப்பு  துலக்குவதுதான்  மிச்ச  மீதிக்கதை


படத்தில்  ஹீரோவா  இன்வெஸ்டிகேஷன்  ஆஃபிசரா  மோகன்லால். கச்சிதமான  நடிப்பு , ஓப்பனிங்க்  சீனில்  ஓசி  சரக்கு  கேட்கும்  ஆளாக  சாதா ஆளாக  வரும்போது  அவர்  காட்டும்  பாடி  லேங்க்வேஜ் , பின்  பாதியில்  போலீஸ்  ஆஃபிசராக  காட்டும்  மிடுக்கு  நல்ல  ட்ரான்ஸ்ஃபர்மேஷன். (  ஆனா முன்  பாதியில்  வரும் மோகன்லால்  கேரக்டர் அவ்ளோ  தூரம்  இறங்கி இருக்கனுமா?  என்பது  என்  தனிப்பட்ட  சந்தேகம் )

சபாஷ்  டைரக்டர் 

இந்தப்படத்துல  ரெண்டு  முக்கியமான  விஷயங்களை  சொல்லியே  ஆகனும். டைரக்டரை  பாராட்டியே  ஆகனும்.


 1 ஒவ்வொருவர்  தரும்  வாக்குமூலம் அல்லது  ஃபிளாஸ்பேக்    சீன்  ஓப்பனிங்  ஆகும்  இடமும்  அது  ஃபினிஷிங்  ஆகும்  விதமும்  கேமரா  கட்  ஆகும்  இடமும்  அபாரம் . எடிட்டர் ,  ஃபோட்டோகிராஃபர் , டைரக்டர்  மூவரும்  அபாரமான  உழைப்பு. 


2  அதே  போல்  விசாரணை. எதிராளியை  பேச  வைத்து  அவங்க  வார்த்தையை  வெச்சே  மடக்கும்  உத்தி   அருமை .  அவங்க  விளையாண்ட  ஸ்பீக்கர்  ஃபோன்  ஐடியாவையே  எக்ஸ்டண்ட்  பண்ணி  துப்பு  துலக்கும்  ஐடியாவும் குட் 


முதல்  40  நிமிஷம்  போராகத்தான்  மூவ்  ஆகுது .  கதையில்  வரும் 11  கேரக்டர்களும்  நம்  மனசில்  பதியவே  ஒரு  மணி  நேரம்   ஆகிடுது. பின்  பாதியில்  நல்ல  விறுவிறுப்பு \

\ஆனா த்ரிஷ்யம்  படத்தில்  இருந்த  க்ரிஷ்பான  திரைக்கதை  இதில்  மிஸ்சிங் வித்தியாசமான  இன்வெஸ்டிகேஷன்  த்ரில்லர்  தான்  , ஆனா  த்ரிஷ்யம்  உடன்  கம்பேர்  பண்ணிட்டு  பார்ப்பவர்களை  திருப்திப்படுத்தாது . 


 அனுசிதாரா , வெயில்  பிரியங்கா , அனுஸ்ரீ , லியோனா  லிசா, ஷிவ்தா  அனைவரும்  நடிப்பும்  குட்   ஆண்கள்  நால்வர் ஷைஜூ, க்ரூப், ராகுல் , மாதவ்  ஓக்கே  ரக  நடிப்பு 


ரெண்டே  முக்கால்  மணி  நேரம்  ஓடும்  படம்  என்பதால்  ஒரு  சலிப்பு  வருது . கொலையாளி  யார்  என  தெரியும்போது  சரி சரி  படம்  முடிஞ்சுதா?என்ற  எண்ணம்  தான்  தோணுது 


எடிட்டர்  வினாயக் , ஒளிப்பதிவாளர்   சதீஷ்  க்ரூப்  இருவரும்  கடுமையான  உழைப்பு , அனில்  ஜான்சன்  பிஜிஎம் ஓக்கே  ரகம்  தான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1 கொலை  செய்யப்பட்ட   பெண்  பைப்போலார்  பேஷண்ட்  என்பதற்கும்   திரைக்கதைக்கும்  என்ன  சம்பந்தம்,? 

2   ஏற்கனவே  எரேஸ்  பண்ன  கசமுசா  வீடியோ  க்ளிப்  என்னிடம்  இருக்கு  என  மிரட்டுபவரிடம்  5  லட்ச  ரூபா   தர  தயாரா  இருப்பவர்  அப்படி  க்ளிப்பிங்  இருக்கா?னு  ஃபோனை  செக்  பண்ணாமல்  ஏமாறுவது  எப்படி?


3   பத்து  லட்ச  ரூபா  பணத்தேவை  உள்ளவர்  தவணையாக  5  லட்சமாக  இருவரிடம்  ஏன்  கேட்கனும்? வீடியோ  காட்டி  மிரட்டி  அவர்ட்டயே  ஏன்  கேட்கலை ? 


4    ஓப்பன்  ஃபோன்  போட்டி  வைக்கும்போது  சைலண்ட்  மோடில்  அல்லது  ஏரோப்ளேன்  மோடில்  யாராவது  ஃபோனை  வெச்சிருக்காங்களா?  என்பதை  ஏன்  யாரும்  செக்  பண்ணலை ? (  ஹீரோ  தான்  கண்டுபிடிக்கனுமா?  அந்த  11  பேரில்  ஒருவருக்குக்கூடவா  அந்த  ஐடியா  வர்ல >) 


6  காலைல  கிளம்பறவங்க  மிட்  நைட்  வரை  எல்லார்  ஃபோனும்  ஆன்ல  இருப்பது  எப்படி ? பவர்  பேங்க்கும்  இல்லை ,  ஒருவருக்குக்கூடவா  பேட்டரி  டவுன்  ஆகாது ? 


7  டெட்  பாடி  உடலில்  உள்ள  ஃபிங்கர்  பிரிண்ட்டை  வெச்சு  மேட்ச்  பண்ணாலே  அங்கே  இருக்கும்  கொலைகாரன்  யார்?னு  தெரிஞ்சிடுமே? அதை  ஏன்  செய்யலை ?   


மனம்  கவர்ந்த  வசனங்கள் \\


1   காசையே  பார்த்துட்டு  இருந்தா  வாழ்க்கை  எப்படி வாழ? 


வாழ்க்கைல    காசுதான்  முக்கியம், அது  இல்லாம  எப்படி  வாழ்க்கை  வாழமுடியும்?


2   குடும்பத்தைப்பற்றி  அவருக்கு  அக்கறை  இல்லை ,  வேலை , பணம்  இந்த  ரெண்டிலும்  தான்  அவர்  கவனம்  பூரா 

 எந்த  வேலையா  இருந்தாலும்  ஃபுல்  கான்செண்ட்ரேஷன்  பண்ணினாதான்  ஜெயிக்க  முடியும், ஜெயிச்சா தானே  குடும்பத்தைப்பார்க்க முடியும் ? 


3   மிஸ்!  உங்களை  எங்கேயோ  பார்த்த  நினைவு  இருக்கே?


 இதெல்லாம்  ஓல்டு  டெக்னிக், ஏதாவது  புதுசா  ட்ரை  பண்னலாமில்ல? 


4   எவ்வளவு  கருத்தொருமித்த  தம்பதியா  இருந்தாலும் ,  க்ளோஸ்  ஃபிரண்ட்சா  இருந்தாலும்  பகிரப்படாத / பகிரக்கூடாத    ரகசியங்கள் அ வரவர்க்கு  இருக்கும் 


சி.பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   த்ரிஷ்யம்  புகழ்  ஜீத்து  ஜோசப்  அட்லீ  அவதாரம்  எடுத்து  30 %   * 3  படங்கள்  + 10%  சொந்த  சரக்கு  போட்டு 

1  12 Angry Men (1957 film)நெட் ஃபிளிக்ஸ்  கோர்ட் ரூம்  டிராமா 


2  An Inspector Calls (2015 TV film)  த்ரில்லர் 


3  Perfect Stranger (2007 film) 

  சைக்கோ  த்ரில்லர்   ,  இதன்  ரீமேக்  ( NOTHING TO HIDE ( FRENCH)

எடுத்த  படம்தான்  இது . இந்த  3  படங்கள்  பார்க்காதவர்கள்    பார்க்கலாம்.  டிஸ்னி  ஹாட்  ஸ்டார்  ரிலீஸ் .  பிரமாதமான படமும்  இல்லை ,  வேஸ்ட்டும்  இல்லை,  பார்க்கலாம்  லெவல்   ரேட்டிங்  2.25  / 5