Monday, May 02, 2022

மன்மத லீலை 2022 - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )



கமல்  நடிச்ச  மன்மத  லீலை  படத்துக்கும்  இதுக்கும்  எந்த  சம்பந்தமும்  இல்லை 

 ஒரு  படத்தோட  டீசர்  அல்லது  ட்ரெய்லர்  ரசிகனைக்குழப்பிடக்கூடாது . இந்தப்படத்தோட  ட்ரெய்லரைப்பார்த்தா  எதோ  டபுள்  மீனிங்  டயலாக்ஸ்  அதிகம் உள்ள  அடல்ட்  காமெடி  படம்  மாதிரி  தோணும். ஆனா அப்படி  இல்லை , இது  பக்காவான  க்ரைம்  த்ரில்லர் மெட்டீரியல்   ஆனா  ரசிகர்களை  தியேட்டர்க்கு   வர வைக்க  இயக்குநர்   செய்த  ஐடியாதான்  அந்த  கோக்கு  மாக்கு  ட்ரெய்லர்  கட் , அது  அவருக்கே  எதிரா  திரும்பிடுச்சு . கில்மா  காமெடியை  எதிர்பார்த்து  வந்தவர்கள்  ஏமாந்தார்கள் , க்ரைம்  த்ரில்லர்  ரசிகர்கள்  தியேட்டருக்கே  வரவில்லை . நீதி - ரசிகனை  ஏமாற்ற  நினைக்கக்கூடாது 


மாநாடு எனும்  சூப்பர்  ஹிட்  டைம்  லூப்  கதையைத்தந்த  இயக்குநர்  வெங்கட்  பிரபு  கிட்டே  தயாரிப்பாளர்  அட்வான்ஸ்  கொடுத்து  இந்த  லாக் டவுன்  டைம்ல  அவுட்டோர்  ஷூட்டிங்  அதிகம்  இல்லாம  ஒரே  பங்களாவில்  கதையை  முடிக்கனும்  என  கண்டிசன்  போட்டு  மினிமம்  பட்ஜெட்டில்  ஒரு  க்ரைம்  த்ரில்லர்  கதையை  மாநாடு  பாணிலயே  எடுத்துட்டாரு 


ஹீரோ ஒரு  பிளே பாய் . ஃபேஸ்புக்ல  ஒரு  தோழி  கிடைக்கறார். அவர்  கூட  டெய்லி  சாட்டிங்க்ல   கடலை  போடும்  ஹீரோ  ஒரு  சமயம்  வீட்ல  அப்பா  இல்லை , வெளியூர்  போறார், அதனால  வீட்டுக்கு  வானு   தோழி  அழைக்க வீட்டுக்குப்போறார். அங்கே  ஒரு  ட்விஸ்ட் தோழினு  நினைச்சது  தோழி  இல்லை  அது  ஒரு  ஆண்ட்டி ,  அப்பானு  சொன்னது  அப்பா  இல்லை  , ஆண்ட்டியின்  கணவர் . வெளியூர்  போன  கணவர்  திடீர்னு  வீட்டுக்கு  வந்துடறார்.. இந்த  சம்பவங்கள்  எல்லாம்  2010ல  நடக்குது 


 அப்டியே  கட்  பண்ணா  இப்போ 2020  ல  அதே  ஹீரோ  அவருக்கு  மேரேஜ்  ஆகி  ஒரு  சம்சாரம்,  ஒரு  குழந்தை  இருக்கு ,  அவங்க  ரெண்டு பேரும்  ஊருக்குப்போக  ஹீரோ  வீட்டில்  தனியா  இருக்கார் .  வெளில  மழை . ,  ஜாவர்  சீதாரமன்  எழுதுன  மின்னல்  மழை  மோகினி  கதை  மாதிரி  ஒரு  மோகினி  வீடு தேடி  வருது .  வீட்ல  ஆள்  இல்லை ஹீரோவுக்கு  கேக்க  வேணுமா? ஜாலி  மூட்  தான் . இங்கே  ஒரு  ட்விஸ்ட்  அந்த  லேடி  ஏதோ  பிளான்  போட்டுதான்  இங்கே  வந்திருக்கு 


 2010  ல நடந்த  அந்த  சம்பவம்  ,  2020  ல  நடக்கற  இந்த சம்பவம்  ரெண்டுக்கும்  ஏதோ  தொடர்பு  இருக்கு . அது  என்ன?  சிக்கலில்  இருந்து  ஹீரோ  தப்பிச்சாரா?  மாட்னாரா?  எனப்தே  திரைக்கதையின்  பின்  பாதி 


ஹீரோவா  அசோக்  செல்வன் . லட்டு  மாதிரி  கேரக்டர் .  பூந்தி  மாதிரி  அசால்ட்டா  சாப்ட்டு  இருக்கார் .அப்பாவியான  பிளே  பாய்  கேரக்டரிலும்   சரி  பொறுப்பான  கணவன்  ரோலிலும்  சரி    ஸ்கோர்  பண்றார் 


சம்யுக்தா  ஹெக்டே  2010  ல  வர்ற  தோழியா வர்றார்.  இவரோட  நடிப்பு  ஓக்கே  ரகம் , இன்னும்  வில்லித்தனம்  காட்டி  இருக்கலாம், அடக்கி வாசிச்சிருக்கார் 


2020  ல  வர்ற  மின்னல் , மழை  மோஹினி யா   ரியா  சுமன்,  கூடுதல்  கிளாமர் ஹஸ்கி  வாய்ஸ்  உதவியுடன்  ஸ்கோர்  பண்றார். படத்தில்  இவருக்குத்தான்  3  ஹீரோயின்களில்  அதிக  காட்சிகள் 


 மனைவியாக  வரும்   ஸ்மிருதி  வெங்கட்  குட். ஆனா  அதிக  காட்சிகள்  இல்லை ,. வந்தவரை  ஓக்கே  ரகம் 


ஜெயப்பிரகாஷ்  அதிரடியான  எண்ட்ரி , நல்ல  நடிப்பு , கருணாகரன்  ஓக்கே  ர்கம் 


 இசை  பிரேம்ஜி .,  கலக்கி  இருக்கார் .  பிஜிஎம்    பக்கா 


 படத்தில்  2  லிப்  லாக்  காட்சிகள்  இருக்கு .  ட்ரெய்லர்ல  பார்த்த  அந்த  காட்சிகளை  கட்  பண்ணினா  இது  ஒரு  யூ  படம்  ஆகி  இருக்கும் 


திரைக்கதை  எந்த  குழப்பமும்  இல்லாமல்  2010 , 2020  என  மாறி  மாறி  நகர்கிறது. சுவராஸ்யமான  திரைக்கதை  அமைப்புதான் 



  சபாஷ்  டைரக்டர் 


1 இந்தக்கால  இளைஞர்கள்  யுவதிகள்  செய்யும்  ஃபேஸ்புக்  சேட்டிங்  சேஷ்டைகளைப்பற்றி  முதல்  பாதியில்  சொல்வதால்  சுவராஸ்யமாய்  படம்  போகுது 


2 ,  அப்பா  என  சொன்னவர்தான்  கணவர்  என்ற  ட்விஸ்ட்  தெரிந்தபின்  ஹீரோ  காட்டும்  கோபம், அங்கலாய்ப்பு எல்லாம்  செம  அலப்பறை 


3   2010ல்  நடந்த  சம்பவத்துக்கும்    2020ல்  நடந்த  மழை  மோகினி  சம்பவத்துக்கும்  உண்டான  தொடர்பு  அருமையான  ட்விஸ்ட் 


4  ரெண்டே  ரெண்டு   பங்களா , ஒரு  ஃபார்ம்  ஹவுஸ் , ஹீரோ ,  3  ஹீரோயின்கள்   என  கிட்டத்தட்ட  5 அல்லது  6  கேரக்டர்களில்  ஒரு  முழுப்படத்தையே  முடித்த  சாமார்த்தியம் 


5   இசை , பின்னணி  இசை , ஒளிப்பதிவு  இன்ன  பிற  டெக்னிக்கல்  அம்சங்கள்  எல்லாம்  சராசரிக்கும்  மேலே 


  ரசித்த  வசனங்கள் \\


1   நான்  உன்னைக்கரெக்ட்  பண்றதா  நினைச்சுதான்  வந்தேன் , இங்கே  வந்து  பார்த்தா  நீ  தான்  என்னைக்கரெக்ட்  பண்ணி  இருக்கே \


2  டிரஸ்  குறையக்குறைய  உன்னோட  கிளாமர்  கூடிக்கிட்டே  இருக்கு 

\3    நான்  அவனுக்கு  இண்ட்ரோ  பண்ணுன  பொண்ணை  ஆஸ்திரேலியாவில்  வேலை  வாங்கித்தர்றேன்னு   அவன்  உஷார்  பண்ணி  மேரேஜ்  பண்ணிக்கிட்டான், எல்லாம்  என்  தலை  எழுத்து 


4  ஆமா,  நான்  ஒண்ணுதானே  கேட்டேன் ? எதுக்கு  இத்தனை ?


 மத்ததெல்லாம்  எனக்கு 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ்   ,  திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  நம்பகத்தன்மையுடன்   ,  நகைச்சுவையுடன்   செல்லும்  திரைக்கதையில்  க்ளைமாக்சில்  காட்டும்  ஓவர்  வில்லத்தனம்  ஒட்டவில்லை , சினிமாத்தனம்  தூக்கல் 


2 மனைவி திடீர்னு  வீட்டுக்கு  வந்ததும்  கணவன்  பம்முவது  ஓக்கே , ஆனா  உள்ளே  வேறு  ஒரு  பெண்  வாசனை  இருப்பதை  எந்த  மனைவியாவது  கண்டு  பிடிக்காமல்  இருப்பாங்களா? 


3   பொதுவா  ஆண்கள்  தான்  திருமணம்  ஆகி  இருந்தாலும்  ஆகவில்லை  எனக்கூறி  பெண்களை  ஏமாற்றுவார்கள் , ஆனால்  திருமணம்  ஆன  ஒரு  பெண்  தனக்கு  மணம்  ஆகவில்லை  எனக்கூறி  ஆணை  ஏமாற்ற  அவசியமே  இல்லையே? அதுக்கான  காரணத்தை  சொல்லவே  இல்லை 


4   க்ளைமாக்சில்  ஃபார்ம்  ஹவுஸ்ல  ஹீரோ  வில்லன்  வில்லி  காம்போ  காட்சிகள்  நம்பும்படி  இல்லை , அப்படியா  அசால்ட்டா  ஏமாறுவாங்க ?

சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தியேட்டரில்  ரிலீஸ்  ஆன  இந்தப்படம்  ஆஹா    ஓ டி டி  யில்  கிடைக்குது   டைம் பாஸ்  த்ரில்லர்  மூவி  , பார்க்கலாம், ரேட்டிங்  2.75 / 5