Sunday, May 01, 2022

NIGHT DRIVE (மலையாளம்) 2022 - சினிமா விமர்சனம் ( பொலிட்டிக்கல் த்ரில்லர் )

 


சமீபத்தில்  ஈகோ  கிளாஸ்  என  ஒரே  ஒரு  விஷயத்தைக்கையில்  எடுத்து ஒரே  இயக்குநர் 2  வெவ்வேறு  திரைக்கதைகளை  வெற்றிகரமாகப்படம்  ஆக்கினார்.. அய்யப்பனும்  கோஷியும் , டிரைவிங்  லைசென்ஸ். அதே பாணியில்  ஒரு  கதையை   கேரளாவில்  பர பரப்பாக  பேசப்பட்ட  தங்க  கடத்தல்  வழக்கோடு  சம்பந்தப்படுத்தி ஒரு  அட போட  வைக்கும்  த்ரில்லர்  கதை  ரெடி  பண்ணி  இருக்காங்க 


 சம்பவம் 1 -  வில்லன் ஆளும்  கட்சி  அரசியல்வாதி பிரபல  பெரும்புள்ளி  திடீர்னு  மாட்டிக்கப்போகும்  சூழ்நிலை , அவர்  வீட்டுக்கு  ரெய்டு  வரப்போகுது . அவர்  கிட்டே  இருக்கும்  18  கிலோ  தங்கம்  வீட்டில்  இருந்து  இடம்  மாத்தனும். இந்த  பிராசஸ்ல  தான்  தப்பிச்சா  மட்டும்  பத்தாது , இதை  நமக்கு  சாதகமா  பயன்படுத்தனும்  எனும்  கிரிமினல்  மூளையுடன்  செயல்பட  முடிவெடுக்கிறான் 


   சம்பவம் 2  -  வில்லன்  கிட்டே  கார்  டிரைவரா  வேலை  பார்ப்பவன்  ஒருவன் , அவனுக்கு  மனைவி , குழந்தை  இருக்கு . அவனை  கடத்தல்  கேஸ்ல  வில்லன்  மாட்ட  வைக்கப்போறான்னு  தகவல்  வருது. ஒரு  கிரிமினல்  கூட  இருந்தவன்  தனக்கு  ஆபத்துன்னா  அவனுக்கு  மட்டும்  கிரிமினல்  மூளை  வேலை  செய்யாதா? செய்யுது 


 சம்பவம் 3 - ஹீரோயின்  ஒரு  மீடியா  பர்சனாலிட்டி , மாடர்ன்  பொண்ணுங்களுக்கு  இயல்பாவே  தைரியம்  ஜாஸ்தி, மீடியா  என்பதால்  தெனாவெட்டும்    ஜாஸ்தி . சாதாரண ட்ராஃபிக் கேசில்   சிக்க  வைக்க  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  ட்ரை  பண்றப்போ  அவர்  கிட்டே  ரூல்ஸ்  அண்ட்  ரெகுலேஷன்  பேசி  அப்போதைக்கு  தப்பிக்கும்  ஹீரோயின்  ஒரு  விபத்து  கேஸ்ல  மாட்டுது . சாதா  விபத்து கேசை  கொலை  கேசா  ஃப்ரேம்  பண்ணலாம்னு  அந்த  ஈகோ  டச்  ஆன  போலீஸ்  ஆஃபீசர்  நடத்தும்  கேம்  பிளேன்கள்  ஒரு  பக்கம் , ஹீரோயின்  அதுக்கு  எதிரா காய்   நகர்த்தும்   செக்  மேட்  கேம்கள்  மறுபக்கம் 


 சம்பவம் 4   - ஹீரோ 13  வயசா  இருக்கும்போதே  அவன்  கேர்ள்  ஃபிரண்டை  ஒருத்தன்  சைல்டு  அப்யூஸ்  பண்ணுனான்னு  அவனைப்போட்டுத்தள்ளி  சிறுவர்  சீர்திருத்தப்பள்ளிக்குப்போனவன்,  இப்போ  மேஜர்  ஆகி  அதே  முரட்டு ரத்தம்  ஓடற கோபக்காரன், அவனோட  கேர்ள்  ஃபிரண்ட்  இப்போ  ஒரு  சிக்கல்ல  மாட்டிக்கறா


 மேலே  சொன்ன  4  சம்பவங்களும்  ஒரே  நேர்கோட்டில்  சந்திக்கும்போது  ஏற்படும்  திருப்பங்கள்:  தான்  திரைக்கதை 


கோடிக்கணக்கில்   ஹீரோவுக்கு தண்டமா சம்பளம்  கொடுத்து  அட்டர்  ஃபிளாப்  ஆகும்  ஆக்சன்  படங்கள்  ஒரு  பக்கம் , இப்படி  திரைக்கதையை  நம்பி  படம்  ஆகி  ஹிட்  ஆகும்  மலையாளப்படங்கள்   இன்னொரு  பக்கம் , மக்கள்  ஆதரவு  என்றும்  கதை  அம்சம்  உள்ள  படங்களுக்கே 


கப்பீலா  படத்தில்  ஹீரோவா  நடிச்ச   ரோஷன்  மாத்யூ  தான்  இதுல  ஹீரோ. ஆரம்பத்தில்  அமைதியான  காதலனாக  வருபவர்  பின்  கிரிமினல்  மைண்ட்  ஆக்சன்  ஹீரோவாக சேஞ்ச்  ஆகும்  இயல்பான  கதாபாத்திர  வடிவமைப்பு  கனகச்சிதமாப்பொருந்துது 


ஹெலன்  படத்தில் அபாரமான  நடிப்பாற்றலை  வெளிப்படுத்திய  அன்னாபென்  இதில்  நாயகி . அசத்தி  இருக்கார் போலீஸ்  ஆஃபீசருடன்  இவரது  வாக்குவாதங்கள்  , வியாக்கியானங்கள்  படம்  பார்க்கும் நமக்கு  ஒரு  பதை பதைப்பை  ஏற்படுத்துது


போலீஸ்  ஆஃபீசராக  இந்திர்ஜித்  சுகுமாரன்  கனகச்சிதமான  கம்பீரமான  போலீஸ்  கெத்து  நடிப்பு , இவரது  பாடி லேங்க்வேஜ்  பக்கா 


இந்த  மூன்று  முக்கியமான  கதாபாத்திரங்களின்  நடிப்பும்  அவர்களின்  கேரக்டர்  ஸ்கெட்சும்  கச்சிதமாக  வடிவமைக்கபட்டிருக்கு 


 இவர்கள்  போக  கார்  டிரைவர் ,  வில்லன்  ரோல் , வில்லன்  போலீஸ்  ஆஃபீசராக  இன்னொருவர்  என அவரவர்கள்  கொடுக்கப்பட்ட   ரோல்களில்  கச்சிதமாக   பங்காற்றி  இருக்காங்க 



சபாஷ்  டைரக்டர் 


1 ஓப்பனிங்  சீன்  பார்க்கும்போது , கதையோட  ஒன்  லைன் கேட்கும்போது துல்கர்   நடிச்ச  கலி  படம்  நினைவு  வந்தது , ஆனா சாமார்த்தியமா ட்விஸ்ட்  கொடுத்து  கதையின்  போக்கையே  மாற்றிய  விதம் \\


2  போலீஸ்  ஆஃபீசர் - ஹீரோயின்  கான்வோ  செமயான  டெம்ப்போ  ஏத்தும் காட்சிகள் ,  ஹீரோயின்  அன்னாபென் அமர்த்தலான  நடிப்பு  பெரிய பிளஸ் 


3  மினிஸ்டரின்  கையாளாக  வரும்  லேடி  கமிசனரின்  தெனாவெட்டு  கனகச்சிதம் 


4   ஃபிளாஸ்பேக்  காட்சிகள்  வைக்காமலேயே  ஹீரோவின் 13  வயசு  கிரிமினல்  வேலையின்  தாக்கத்தை  வசத்தாலும் , காட்சிகளாலும்  செம்மைப்படுத்திய  விதம் குட் 


5   ஹீரோ  அந்த  18  கிலோ  தங்கம்  இருக்கறச்  பேக்கை  மறைப்பது  சிசிடிவி  கேமரா  காட்சிகள்  மூலம்  தெரிய  வருவதும்  அதை  ஹீரோ  சமாளிக்கும்  இடமும் 


 ரசித்த  வசனங்கள்


 1  உங்கப்பா  சரியான   ஃபிராடா  இருக்காரு \\

  ஏன்?


  ஃபாரீன் சரக்கு  பாட்டில்ல   மட்டமான  லோக்கல்  சரக்கை  ஊத்தி  வெச்சிருக்காரு


2  நாம  நல்லாருக்கனும்னா  யாரை  வேணா  எப்படி  வேணா  போட்டுத்தள்ளலாம் 


3  உன்  ட்யூட்டில  நீ  நேர்மையா  நடக்கனும்னு  ஆசைப்படறே , ஓக்கே  , ஆனா  அதுக்கு  நீ  ட்யூட்டில  இருக்கனுமே? 


4  பவர் ல  நீடிக்கனும்னா  எக்ஸ்ட்ரீம்  லெவலுக்கும்  அரசியல்வாதி  இறங்குவான்


  லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   அவ்ளோ  பிரச்சனை  பண்ணின  போலீஸ்  ஆஃபீசர்  ஒரு  டாக்குமெண்ட்  கொடுத்து  இதுல    ரெண்டு  பேரும்  சைன்  பண்ணுங்கனு  சொன்னதும்  படிச்சே பார்க்காம  ஹீரோ  , ஹீரோயின்  இருவரும்  சைன்  பண்ணுவது  எப்படி ? 

( அதனால   பெரிய  சம்பவம்  ஏதும்  நடக்கலைங்கறது  வேற  விஷயம் ) 


2  பொதுவா  மினிஸ்டரோ  , பெரும்புள்ளிகளோ  இது  மாதிரி  தங்கம்  கடத்தும்போது  அதுல  என்ன  இருக்குனு  சொல்லாமதானே  டிரைவரை  அனுப்புவாங்க ? சொல்லிட்டா  ஆட்டையைப்போட்ற  மாட்டானா? பெப்பெரெப்பேனு  ஓப்பனாவா  தங்க பிஸ்கெட்டை  அப்படி  பேக்ல  அடுக்கி  வைப்பாங்க ?  மேலே  ஏதாவது  துணி  மணி  வெச்சு  மறைச்சு  அனுப்ப  மாட்டாங்களா? 


3  நாளை  காலை  ரெய்டு  வருதுனு  தகவல்  தெரிஞ்சதும்  மினிஸ்டர்  பண்ற  தற்காப்பு  நடவடிக்கைகள்  எல்லாம்  ஓக்கே , ஆனா  போலீஸ்க்கோ  ரெய்டு  போகிறவர்க்கோ இப்படி  செய்வாங்கனு  யூகிக்க  முடியாதா? கண்காணிக்க  மாட்டாங்களா? 


 4   க்ளைமாக்ஸ்  நெருங்க  நெருங்க  ஹீரோயின்  ஓவரா  கெத்து  காட்ற  மாதிரி  ஒரு  ஃபீலிங் , கொஞ்சம்  அடக்கி  வாசிச்சு  இருக்கலாம், அதே  போல  மினிஸ்டர்  ஓவரா  பம்மற  மாதிரி  தோணுது , வில்லத்தனத்தை  காட்டவே  இல்லை 


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -    நெட் ஃபிளிக்சில்  ரிலீஸ் ஆகி  உள்ள  இந்தப்படம் த்ரில்லர்  ரசிகர்களுக்கானது ,, மாமூல்  மசாலா  படங்கள்  ரசிப்பவர்களுக்கு  இது  பிடிக்காது, மலையாளப்படங்கள்  ரெகுலராப்பார்ப்பவர்கள்  இதை  பார்க்கலாம் ,  ரேட்டிங்  3 / 5