Tuesday, April 19, 2022

கயமை கடக்க (2022) -சினிமா விமர்சனம் ( சைக்கோ க்ரைம் த்ரில்லர்)- உலக சினிமா


 குடைக்குள்  மழை , காளிதாஸ் , அந்நியன்  இந்தப்படங்களைப்பார்த்தவங்களூக்கு   ஈசியா  கதை  புரியும் . , ஹீரோ , வில்லன், போலீஸ்  ஆஃபீசர் ஹீரோவின்  தம்பி  என முக்கியமான  நான்கே  கேரக்டர்களை  வைத்து  ஒரே ஒரு  பெண்  கேரக்டர்  கூட  திரையில்  காட்டாமல்  விறு விறுப்பான  ஒரு  சஸ்பென்ஸ்  த்ரில்லர்  எடுக்க  முடிவது  பாராட்ட  வேண்டிய  விஷயம் தான், டெக்னிக்கலாக  சவுண்டான  படமான  இது  க்ரவுட்  ஃபண்ட்  முறையில்  தயாரிக்கப்பட்ட  மினிமம்  பட்ஜெட்  படம்  2021; ரெடி  ஆகி  பல  விருதுகளை  வென்று     ஓ டி டி  யில்  ரிலீஸ்  ஆகி  இருக்கு , அமேசான்  பிரைம் ல  இப்போ  பார்க்கலாம்


ஹீரோ பேரு  சந்தோஷ். அவனுக்கு  ஒரு  அம்மா , ஒரு  தம்பி , அப்பா  ல்லை . ஃபேஸ்புக்  போராளி . அதாவது  பெண்களுக்கு  எதிரான  குற்றங்கள்  நடக்கும்போது  குற்றவாளி  பெரிய  இடமா  இருந்தா நைசா  தப்பிடுவான். சமூக  வலைத்தளங்களில்  குற்றவாளிக்கு  எதிராகக்குரல்  கொடுத்து  பதிவுகள்  போடுபவன்  ஹீரோ


ஹீரோ  மாதிரியே கேரக்டர்  உள்ள   வில்லன்  ஃபேஸ்புக்  மூலம்  ஃபிரண்ட்  ஆகறான். இருவரும்  ஒரு  நாள்  குறிப்பிட்ட  ஒரு  இடத்தில்  ச்ந்திக்க  முடிவு  ஆகுது.இருவரும்  சந்திக்கும்போதுதான்  தெரிய வருது. இருவரும்  வேறு  வேறு  குணாத்சியம்  கொண்டவங்க


 அதாவது ஃபேஸ்புக்கில்  போராளியாக  காட்டிக்கொண்டாலும்  ஹீரோ  பயந்த  சுபாவம்  உள்ள  சட்டத்துக்கு  பயந்த  ஒரு  சராசரி  நபர் .  வில்லன் சட்டத்தை  தானே  கையில்  எடுத்து  குற்றவாளீகளூக்கு  தண்டனை  தர  நினைப்பவன், தந்து  கொண்டிருப்பவன்


ஹீரோவோட  தம்பியும்  ஒரு  பெண்  விஷயத்தில்  தப்பு  செய்த  குற்றவாளி  என  தெர்யும்போது  கதை  சூடு  பிடிக்கிறது. ஹீரோ  தன்  தம்பியை  வில்லனிடம்  இருந்து  காப்பாற்றினா? இல்லையா?  என்பது  க்ளைமாக்ஸ்


யூகிக்க  முடியாத  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  ஒண்ணு  படத்தில்  இருக்கு 


டி  ஆர்  மாதிரி  கதை  திரைக்கதை  சவுண்ட்  எஃபக்ட், எடிட்டிங். ஒலிப்பதிவு  அப்டினு  பல  துறைகளைக்கையில்  எடுத்திருக்கும்   இயக்குநருக்கு  ஒரு  ஷொட்டு . பேரு  கிரன்  ஆர் (  வின்னர்  பட  ஸ்லோமோஷன்  ஹீரோயின்  கிரண்  வேற இவர்  வேற  ) 


ஹீரோவா வட்சன்  எம்  நடராஜ்  முகச்சாயலில்  ட்ரீம்ஸ்  பட  தனுஷ்  மாதிரி  இருக்கார் , நல்ல  நடிப்பு நுணுக்கமான  முக  உணர்வுகளை  இயல்பாக  பிரதிபலிக்கிறார்.க்ளைமாக்சில்  இவ்ருக்கும்  தம்பிக்குமான  கான்வோவில்  செம  ஆக்டிங் 


வில்லனாக  மாசாந்த்  நடராஜன்  இவர்  ஹீரோவை  விட  ஒரு  ஸ்டெப்  கம்மிதான் . ஸ்பிலிட்  பர்சனாலிட்டியில்  இவரு  இரு  வேறு  கேரக்டர்களாக  வெரைட்டி  காட்டும்போது  இன்னும்  சிறப்பாக  செய்து  இருக்கலாம். ஹீரோவை  விட  வில்லனுக்கு  வசனங்கள்  அதிகம்  இருந்தாலும்  காட்சிகள்  எண்ணீக்கையில்  ஹிரோ  முந்துகிறார்


போலீஸ்  ஆஃபிசராக  வருபவர் ,  தம்பி  கேரக்டர்  எல்லாமே  கெஸ்ட்  ரோல்தான்.  ஹீரோவின்  அம்மா  கேரக்டர். பாதிக்கப்பட்ட  அந்த  பெண்  கேரக்டர்  என  எல்லாருமே  வெறும்  வாய்ஸை  வைத்தே  சமாலிச்சிருக்காங்க 


சபாஷ்  டைரக்டர் 


1  பொதுவா  த்ரில்லர்  மூவி  பார்க்க  வரும்  பெண்கள்  சொல்லும்  பெரிய  குறைகள்  எதுவும்  இதில்  இல்லை , அதாவது   எந்த  கேரக்டரும்  தண்ணி  அடிப்பது  தம்  அடிப்பது  போன்ற  செயல்களை  செய்வதில்லை 


2  கதைக்களம்  கோவை  எனப்தால்  ஊட்டி  க்ளைமேட்  ஜில்னெசை  கேமரா  உணர்த்திய  விதம் 


3   பின்னணி  இசை  , இசை  சுமார்தான் என்றாலும் காதை  பதம்  பார்க்கும்  இரைச்சல்கள்  இல்லை


4  மொக்கை  காமெடி  டிராக்,  லவ்  டூயட், க்ளப்  டேன்ஸ்   போன்ற  மாமூல்  மசாலா  அயிட்டங்கள்  எதுவும்  இல்லை 


நச்  வசனங்கள் 


1 நமக்குன்னு  எந்த  பாதிப்பும்  வராத வரை  எல்லா  விஷயங்களும்  நம்க்கு  சின்ன விஷயமாதான்  தோணும் 


2  ஒரே  ஒரு  நாள்  , ஒரே  ஒரு  சம்பவம்  நம்ம  வாழ்க்கையையே  புரட்டிப்போடும் வல்லமை  கொண்டது 


3  நான்  ஒவ்வொரு  உயிரையும்  எடுக்கும்போதும்  என்  என் ஒரு  துளி  உயிரும்  சேர்ந்தே  போகுது 


4  ஒரு  லெவலுக்கு  மேல கோபத்தை  கண்ட்ரோல்  பண்ண  முடியாது 


5 ஒரு  கிராமத்துல  ஏதோ  வியாதியால  பத்துப்பேர்  இருந்தா  100  கிமீ  தள்ளி  இருந்தாலும்  நமக்கு  ஒரு  பயம்  வந்து  போகும்  இல்ல? அது  மாதிரிதான்  நகரத்தில் எங்காவது ரேப் மர்டர்  மாதிரி  சம்பவங்கள்  நடக்கும்போது  ஒரு பயம்  வருது 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  ஸ்பிலிட்  பர்சனாலிட்டி , மல்ட்டிப்ள் டிஸ்  ஆர்டர்   போன்ற  விஷயங்களை ஒரு  மனோதத்துவ  டாக்டர்  மூலமாக  விளக்கி  இருக்கலாம்.  வில்லன்  வாயாலயே  வெளிக்கொணர்ந்திருக்கத்தேவை  இல்லை 


2  வில்லன்  தன்  டார்கெட்  லிஸ்ட்டில்  உள்ளவர்கள்  ஃபேமிலி  டீட்டெய்ல்ஸ்  எல்லாம்  கலெக்ட்  பண்ணி  வைத்திருப்பதாக  சொல்லும்போது  ஹீரோ தன்  தம்பி  டீட்டெய்ல்சும் போய்  இருக்கும்  என  உணர  மாட்டாரா?


3  போலீஸ்  ஹீரோவை  ஃபாலோ  பண்ண  ஆள்  போடவே  இ ல்லை,  தம்பிக்கு  மட்டும்  பாதுகாப்புக்கு  ஆள்  அனுப்பறார்


 சி.பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் .  ஒண்னே  முக்கால்  மணி  நேரம்  ஓடக்கூடிய  ஸ்லோபர்னிங்  த்ரில்லர்  மூவி  இது . பர  பர  விறு  விறு  என  இயக்குநர்  ஹரி , விஷால்  படங்கள்  மட்டும்  பார்ப்பவர்கள்  தவிர்க்கலாம். .பெண்களும்  பார்க்கும்  க்ண்ணியமான  நெறியாள்கை , ஆனந்த  விகடன்  எதிர்பார்ப்பு  மார்க் 43  ரேட்டிங்  3 / 5 .  அமேசான்  பிரைம்ல கிடைக்குது