Friday, June 11, 2021

அவனா இவன் ? 1962 - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

 வீணை  எஸ்  பாலச்சந்தர்  இயக்கிய   அந்த  நாள் பாடல்களே  இல்லாமல்  ரிலீஸ்  ஆகி  செம  ஹிட்  ஆன  க்ரைம் த்ரில்லர். அதில்  சிவாஜி கணேசன்  ஆண்ட்டி  ஹீரோவாக  கலக்கி  இருப்பார்.ரோஸ்மான்  எஃபக்டில்  எடுத்த  படம். அதாவது  விருமாண்டி  படத்தில்  வருவது  போல்  படத்தில்  வரும்  கேரக்டர்கள்  அவரவர்  மன  ஓட்டத்தின்படி  என்ன  நடந்திருக்கும்  என்ற  கற்பனையை  சொல்ல  காட்சியாக  முன்னிறுத்தும்  உத்தி 


நடு  இரவில்  , பொம்மை  என   இவர்  இயக்கிய  படங்கள்  எல்லாம்  க்ரைம்  த்ரில்லராக  இருக்கும்,  ஏதாவது  ஃபாரீன்  படத்தின்  அஃபிசியல்  ரீமேக்காகவோ  தழுவலாகவோ இருக்கும் 


AN AMERICAN TRAGEDY  நாவலின்  தழுவலான  , A PLACE IN THE SUN  ஹாலிவுட்  படத்தின்  தழுவல்  இது 


ஹீரோ  ஒரு  கார்மெண்ட்ஸ்  நிறூவனத்தின்  ஓனர்.  காதலி  கர்ப்பம்,  அந்த  டைமில்  ஒரு  செல்வச்சீமாட்டியின்  குடும்பத்துடன்  ஹீரோவுக்கு  சம்பந்தம்  நடக்கிறது .இந்த  மாதிரி  நேரத்தில்  காதலியால்  பிரச்சனை  வரக்கூடாது  என  நினைத்து  ஒரு  டூர்  ஸ்பாட்க்கு கூட்டிட்டுப்போய்  ஹீரோ  காதலியை  போட்டுத்தள்ளி  விடுகிறான்


ஸ்கூல் எக்ஸ்கர்சன்  வந்த  பஸ்  ஒன்று  பஞ்சர்  ஆகி  அந்த  இடத்தில்  நிற்க அதில்  இருக்கும்  இரு குழந்தைகள்  கொலையை  பார்த்து  விடுகின்றன


ஆனா  அவங்க  பேச்சை  யாரும்  நம்புவதாக  இல்லை . போலீஸ்   ஸ்டேஷனில்  கூட  போய்  புகார்  சொல்லியாச்சு .  ஆனா  நோ  யூஸ்


இப்போ கல்யாண  ஏற்பாடுகள்  துரிதமாக  நடக்கின்றன. அந்த  கொலையைப்பார்த்த  சாட்சிகளான  இரு  குழந்தைகளும்   என்ன  திட்டம்  போட்டு  ஹீரோவை  மாட்டி  விடுகின்றன  என்பதே  மிச்ச  மீதிக்கதை 


வீணை  எஸ்  பாலச்சந்தர்  இயக்கிய  4  படங்களில்  வசூல்  ரீதியாக  பெரிய  வெற்றி  பெறாத  ஒரே  படம்  இது  தான்.


ஓப்பனிங்  சீனில்  செல்வச்சீமாட்டி  வீட்டில்  வசிக்கும்  ஒரு  சிறுமி   அவளுடன்  நட்பு  பாராட்டும்  வேலைக்காரி  மகன் ஆக  ஒரு  சிறுவன்

இவர்கள்  இருவருக்கும்  இடையே  இருக்கும்  வர்க்க  பேதம்  பற்றி  கொஞ்சம்  சொல்லி முதல்  30 நிமிடங்கள்  இழுவை  போட்டதுதான்  படத்தின்  பெரிய  மைனஸ் 


குட்டி பத்மினி  முக்கியமான  ரோலில்  வருகிறார்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் ,  திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  ஹீரோ  தன்  காதலியை  நீர்  நிலை  அருகே  அழைத்து  வந்து  கட்டையால்  அடித்துக்கொலை  செய்து  பின்  நீர்  நிலையில்  டெட்  பாடியை  தள்ளி  விடுவது  ரிஸ்க்  தான்.  டெட்  பாடி  போலீஸ்  கையில்  கிடைத்தால்  அது  கொலை  என  தெரிந்து விடும்.  அதுக்குப்பேசாம  அவன்  காதலியை  தண்ணீரில்  மூழ்கடித்தே   சாகடித்து  இருக்கலாம்


2  கொலை  செய்யும்  யாரும்  கொலை  நடந்து  முடிந்த  பின்  சுற்றிலும்  ஒரு  பார்வை  பார்த்து  யாராவது  நம்மைப்பார்க்கிறார்களா? என  நோட்டம்  விடுவர். ஆனா  ஹீரோ  அதெல்லாம்  கண்டுக்கவே  இல்லை . அப்படி  நோட்டம்  விட்டிருந்தால்  சாட்சிகளைப்பார்த்திருக்கலாம்


3  குழந்தைகள்  போலீசில்  புகார்  கொடுத்ததும்  போலீஸ்  அவங்க  சொன்ன  ஸ்பாட்டில்  டெட்  பாடி இருக்கா?  என  தேடச்சொல்லி  ஆர்டர்  போட்டிருக்கலாம்,  ஆனா  அதை  செய்யவில்லை 


4  க்ளைமாக்சில்  மக்கள்  அந்த  கொலை  நடந்த  இடத்தில்  டெட் பாடியைத்தேடும்  இடத்தில்  வில்லன்  பதட்டப்படுவது  தேவையே  இல்லாதது . அங்கே  தேடாதீங்க  , இங்கே  தேடுங்க  என  லொக்கேஷன்  மிஸ்கெய்டு  பண்ணுவதும்  அமெச்சூர்த்தனமான  முயற்சியே 


5   நீரில்  மூழ்கிய  டெட் பாடி  மீன்களுக்கு  இரையாகி  அழுகிய  நிலையில் தான் இருக்கும், ஆனா  பல  நாட்களுக்குப்பின்  தண்ணீருக்கு  உள்ளே  இருந்த  டெட்  பாடி  ஃபிரெஷ்  ஆக  இருப்பது  எப்படி  ? 



சி.பி  ஃபைனல்  கமெண்ட் - வீணை எஸ்  பாலச்சந்தர்  ரசிகர்களைப்பொறுத்தவரை  இது  ஒரு  நல்ல  படம், சராசரி  சினிமா  ரசிகர்களுக்கு  இது  சுமார்  ரக  படம்,  பார்க்கறவங்க  பாருங்க . யூ  ட்யூப்ல  கிடைக்குது