Sunday, June 06, 2021

யார் நீ ( 1966) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

 ஹீரோ  ஒரு  டாக்டர் , அவருக்கு  ஒரு  அம்மா , பங்களா வில்  வேற  யாரும்  இல்லை , ஹீரோக்கு சாப்பிடக்கூட  நேரம்  இல்லை.  ஹாஸ்பிடலை  விட்டு  வீட்டுக்கு  சாப்பிட  வந்தா  உடனே  ஹாஸ்பிடல்ல  இருந்து  கால்  வரும், உடனே  போய்டுவார்.இவரோட  வாழ்க்கைல  4  வித்தியாசமான  சம்பவங்கள்  நடக்குது 


சம்பவம் 1  -  ஹீரோ ஒரு  ராத்திரி  நேரத்துல  மழை  நாளில்  காரில்  போய்க்கிட்டு இருக்காரு .  அப்போ நடு  ரோட்ல  அமைச்சர்  ஜெயக்குமார்  மாதிரி   மெயின்  ரோடு  க்யூன்  மாதிரி  ஒரு பொண்ணு  நிக்குது, இவரு  காரை  நிறுத்தி  அந்தப்பொண்ணுக்கு லிஃப்ட்  தர்றாரு .  அந்தப்பொண்ணு  சுடுகாட்டு  வாசலில்  காரை  நிறுத்தச்சொல்லி  இறங்கிக்குது.  சுடுகாட்டு  கேட்  ஆட்டோமெடிக்கா  ஓப்பன்  ஆக  அது  உள்ளே  போய்  மறைஞ்சிடுது , ஹீரோக்கு  அல்லு  இல்ல .


சம்பவம்  2   ஹீரோக்கு  ஒரு  ஃபோன்  வருது . பெண்ணின்  குரல். அந்தப்பெண்ணின்  வழிகாட்டல்  படி  அந்த  பங்களாவுக்குப்போனா  அங்கே அந்தப்பொண்ணு  டெட்பாடியா  கிடக்குது. அது  வேற  யாருமில்ல . அந்த சுடுகாட்டுப்பொண்ணுதான். அப்போ  போலீஸ்  கேங்  அங்கே  வருது . இந்த  மாதிரி  சம்பவம்  அடிக்கடி  இங்கே நடக்கறதாவும் நாங்க  தகவல்  தெரிஞ்சு  ஸ்பாட்டுக்கு  வந்தா  டெட்  பாடி  இங்கே  இருக்கறதில்லை  எனவும்  சொல்லுது,  ஹீரோ  பார்த்த  டெட் பாடியை  இப்போக்காணோம்


சம்பவம் -3   ஹீரோக்கு  ஒரு  காதலி  இருக்கா .  திடீர்னு  ஒரு  விபத்துல  இறந்து  போறா ,அந்த  சோகத்துல  ஹீரோ  வேலைல  கவனம்  இல்லாம  இருந்தப்போ  அம்மாவோட  வற்புறுததலால அம்மாவோட  சொந்தத்துல்  இருக்கும்  ஒரு  பொண்ணை  மேரெஜ்  பண்ணிக்கறார். அவ  முகத்தைக்கூட  பாக்கலை , சாந்தி  முகூர்த்த  அறைல  முதன்  முதலா  அவ  முகத்தை  பார்த்ததும்  ஜெர்க்  ஆகறார்.  சம்பவம்  1  , சம்பவம் 2  ல  அவர்  சுடுகாட்டு    லேடியா  ,  டெட்பாடியா  பார்த்தாரே   அந்த  லேடிதான்  இந்த  புது  மனைவி 


சம்பவம்  4  .  ஹீரோ  தன்  மனைவியை  தொடக்கூட  இல்லை .  பேய்  , பிசாசுனு  நம்பறார். .  போன  ஜென்மத்துல  அவங்க  2  பேரும்  காதலிச்சதாவும் ஒரு  விபத்துல  அந்தப்பொண்ணு  இறந்துட்டதாவும்  இப்போ  ஹீரோவும்  தற்கொலை  பண்ணிக்கிட்டா   2  ஆத்மாவும்  ஒண்ணு  சேரலம்னும்  அந்த  மனைவி  சொல்றாப்டி 


 ஹாரர்  த்ரில்லர்  மாதிரி  போற  இந்தக்கதை  கடைசி ல  எப்படி  க்ரைம்  த்ரில்லரா  மாறுது  என்பதுதான்  மிச்ச  மீதிக்கதை 


 ஹீரோவா  ஜெய்  சங்கர் .  ஆள்  ஜம்முனு  இருக்கார் .   டிரஸ்ஸிங்  எல்லாம்  செம ,  எம்ஜியாரையே  பொறாமை  கொள்ள  வைத்தவர்னா  சும்மாவா ? க்ளைமாக்ஸில்  ஒரு ஃபைட்  சீன்  இருக்கு குட்  ஆக்சன் 


 ஹீரோயினா ,  மாண்புமிகு  இதய  தெய்வம்  புரட்சித்தலைவி  ஜெ  ஜெ  . பேயாக  டெட் பாடியாக  மனைவியாக  3  வேவ்வேறு  நிலைல  அசத்தல்  நடிப்பு  (  விமர்சனத்துக்கு  சம்பந்தம்  இல்லாத  தகவல்  , இந்தப்பட  ஷூட்டிங்க் ல  இருந்துதான்  ஜெய் - ஜெ ஜெ  நெருக்கம்  அதிகம்  ஆனதாவும், எம்ஜியார்  செம  காண்ட்  ஆனதாகவும்  அதிரை  புகாரி  தகவல் 


மனோரமா  வேலைக்காரியா  காமெடி  டிராக்ல  வர்றாப்டி 


நச்  வசனங்கள் 


1  அதிர்ஷ்டம்  நமக்காக   காத்திருக்கலாம் ,  ஆனா  நம்மைப்பார்க்க  நம்மைத்தேடி  வந்தவங்களை   நாம  காக்க  வைக்கக்கூடாது 


2   என்னை  விட்டுட்டு  வேற ஒருத்தியை  மேரேஜ்  பண்ணி பண்ணிக்கப்போறீங்களா? 


 சரி  ,  உன்னை  மேரேஜ்  பண்ணிக்கறேன், வேற  ஒருத்தியை லவ்  பண்ணிக்கறேன் 


3   அய்யா  ஏதாவது  வேலை  இருந்தா  போட்டுக்குடுங்க 



 ஒயிஃப்  வேலை  காலியா  இருக்கு   செய்யறியா?


 வாட்?


 டாக்டருக்கு , நர்சுக்கு  ஹெல்ப் பண்றா மிட்  ஒயிஃப்  வேலை 



4  பதில்  பேசாம  பாதிலயே போனா  பாதி  சம்மதம்னு  அர்த்தம் 


5   வாழ்க்கைல  சிலர்   எதிர்காலத்தைப்பற்றியே  நினைச்சுட்டு  இருப்பாங்க , சிலர்   கடந்த  கால  வாழ்க்கையைப்பற்றி  நினைச்ட்டு  இருப்பாங்க 



ஒயிட்  அண்ட்  பிளாக்  படம்  தான்   6  பாட்டு  இருக்கு அதுல  நானே  வருவேன்னு  ஒரு  பாட்டு  3  டைம்  வரும் .  எல்லா  பாட்டையும்  ஓட  விட்டு  பார்த்தா   போதும் . மொத்த  ட்யூரேசன்  2.36  மணி  நேரம்  6  பாட்டு  ,  மனோரமா  காமெடி  டிராக் ,  க்ளைமாக்ஸ்  ஃபைட்  இதை  எல்லாம்   ஓட  விட்டு  பார்த்தா  ஒண்ணே  முக்கால்  மணி  நேரப்படம்  தான் .  யூ  ட்யூப்  ல   அவெய்லபிள் 


சி.பி  கமெண்ட் -  க்ரைம்  த்ரில்லர்  ரசிகர்கள்  ஹாரர்  த்ரில்லர்  ரசிகர்கள்  எல்லாருமே  பார்க்கலாம், .  ரேட்டிங்  2.75  / 5