Tuesday, June 01, 2021

FIFTY SHADES OF GREY -2015 - சினிமா விமர்சனம் 18+ ( கில்மா சினிமா)

 150  கோடி  செலவில்  படம்  எடுத்து அது  100 கோடி  வசூல்  பண்ணிடுச்சுனு  கொண்டாடுற  நடிகர்கள்  இருக்கும்  சூழலில்  40  மில்லியன்  டாலர்   பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு  470  மில்லியன்  டாலர்  வசூலை  வாரிக்குவித்த  படம் இது  என  தெரிந்ததும்  ஆச்சரியப்பட்டு நிச்சயம்  அதைப்பார்த்தே  தீர  வேண்டும்  என  முடிவெடுத்தேன். இது  ஏகப்பட்ட  விருதுகளையும்  குசிச்சிருக்கு . உலகிலேயே   மிக  மோசமான  படம்  என்ற  விருதும்  வாங்கி  இருக்கு. மோசமானவங்கள்லயே  முக்கியமானவங்க  பஞ்ச்  டயலாக்  தான்  ஞாபகம் வருது


 கதைனு  பார்த்தா  பெருசா  ஒண்ணும்  இல்லை,  நம்ம  இளைய தளபதி  நடிச்சு  2000 ம்  வருசம்  ரிலீஸ்  ஆன  ப்ரியமானவளே  கதை  தான்  கொஞ்சம்  காரம்  ,  மணம் ,  மசாலா  தூவி  பட்டி  டிங்கரிங் பண்ணி  எடுத்திருக்காங்க. அந்த  ப்ரியமானவளே  படமே  வேற  ஒரு  ஃபாரீன்  படத்தின்  உல்டாதான்


ஹீரோ  ஒரு   பெரிய  பிஸ்னெஸ்  மேக்னெட்.  அவரை  பேட்டி  எடுக்க  ஒரு பெண்  ரிப்போர்ட்டருக்கு 10  நிமிசம்  அப்பாய்ண்ட்மெண்ட்  தந்திருக்கார்.  அந்த  லேடிக்கு  உடம்பு  சரி  இல்லை.  அவ  தோழி  கிட்டே    இந்த  உதவியை  எனக்காக  பண்ணிக்குடுங்கறா

  

  நாயகி  தான்  தோழி .  அவ ஹீரோ  கம்பெனிக்குப்போய்  பேட்டி  எடுக்கறா.  ஹீரோவுக்கு  ஹீரோயினைப்பிடிச்சுடுது. 10  நிமிசம்  மட்டும்  டைம்  தந்தவர்  ஒரு  மணி  நேரம்  கடலை  போடறார்


அதுக்குப்பின்  அடிகடி  சந்திக்கறாங்க. கடைசில  லவ்  பண்ணி  கல்யாணம்  தான்  பண்ணப்போறாருனு  நினைச்சா  அங்கே  தான்  ஒரு  ட்விஸ்ட்.. 


 ஹீரோ   ஒரு  அக்ரிமெண்ட்  போட்டுக்கலாம்கறார். ஹீரோயின்  சரி . அக்ரிமெண்ட்  பேப்பர்ஸ்  குடுங்க  பார்ப்போம்கறா.


 இந்த இடத்துல  ஹீரோவைப்பற்றி  ஒரு சின்ன  ஃபிளாஸ்பேக்.  ஹீரோ  சின்னப்பையனா  இருந்தப்போ   அவரோட  அம்மாவோட  தோழி  ஹீரோவை  சைல்டு  அப்யூஸ்  பண்ணி  இருக்காரு .  சாடிஸ்ட்  மாதிரி .  


 அதாவது   மத்தவங்களை  துன்புறுத்தி  அதில்  இன்பம்  காணுதல் . அந்தக்கொடுமைக்கு  சின்ன  வயசுலயே  ஆளாகும்  ஹீரோ  பெரிய  ஆள்  ஆகி  அதே  போல பெண்களை  க்ரூரமா  சித்ரவதை  பண்ணி  பின்  அனுபவிக்கும் சாடிச  மனம்  உள்ளவர் 


ஹீரோ  மேல்  உள்ள  காதலால  அதுக்கு  ஒத்துக்கும்  ஹீரோயின்  அதுக்குப்பின்  என்ன  முடிவெடுத்தார்  என்பது  க்ளைமாக்ஸ் 


படத்துல  செலவே  இல்லை  ஒரே  ஒரு  பங்களா .  ஹீரோ  ஹீரோயின்  2  பேரு ..90%  ஷூட்டிங்  இந்த  வீட்டுக்குள் தான். 


 ஹீரோயின்  அழகும்  கண்களும்  தான்  பிளஸ்  பாயிண்ட் .ஹீரோ    ஓக்கே  ரகம். 


 சபாஷ்  டைரக்டர் 


1   ஹீரோ  உடன்  லிஃப்டில்  வரும்  ஹீரோயின்   வெளியே  வரிசையாக  நிற்க  வைக்கப்பட்டிருக்கும்  16 கார்களைப்பார்த்து  இதில்  எது உங்க  கார்   எனக்கேட்க  எல்லாமே  நம்ம  கார்தான்  என  சொல்லும்  சீன்


2   இண்ட்டர்வுயூவை  மிஸ்  செய்த  தோழி  பின்னாளில்   நாயகிக்குப்பதிலாக  தான்  போய்  இருந்தால்  ஹீரோவை  கரெக்ட் பண்ணி  இருக்கலாமோ  என  நினைக்கும்  சீன்


3   ஹீரோவின்  கில்மா  பங்களா  செட்டிங் . இந்தப்பட  ரிலீசுக்குப்பின்  அந்த  நாட்டில்  செக்ஸ்  டாய்ஸ்  சேல்ஸ்  எகிறியதாக  மீடியாக்களில்  பரபரப்பாக  நியூஸ்    


4    ஹீரோ  ஹீரோயின்  ரொமாண்டிக்  போர்சன்ஸ் 


5  க்ளைமாக்ஸ் 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  ஹீரோ  தான்  ஏற்கனவே  15  பெண்களுடன்  பழகி இருக்கேன்  என்று  சொன்னபோதும்  வெர்ஜினான  ஹீரோயின்  அது  பற்றிக்கவலையோ  (  நோய்)  பயமோ    இல்லாமல்  சாதாரணமாக  நெருங்கிப்பழக   முன்  வருவது 


2   ஹீரோவின்  அம்மா  திடீர்  என  வீட்டுக்குள்  வரும்போது  அவ்ளோ  பெரிய  பங்களாவில்  சிசிடிவி  கேமரா  அல்லது  தாழ்ப்பாள்  கூட  இல்லாத  கதவாக  இருப்பது 


3   ஹீரோ  சின்ன  வயசில்  சைக்கோ  சாடிஸ்ட்  பிடியில்  சிக்கி  சீரழிந்த  விதத்தை  விஷுவலாக  சொல்லாமல்  வசனத்தின்  மூலமாக  மட்டுமே  விளக்குவது  ஒட்டலை ,.   சிகப்பு  ரோஜாக்கள்  , நடுநிசி  நாய்கள் ,தேவதையைக்கண்டேன்  போன்ற  சைக்கோ க்ரைம்  த்ரில்லர் படங்களில்  ஃபிளாஸ்பேக்  உத்தி  மூலம்  தான்  செம  ஹிட்  ஆனது . தமிழ்ப்படங்களில்  இருந்த டீட்டெய்லிங்க்  கூட  இதில்  இல்லை 



சி.பி  ஃபைனல்  கமெண்ட் -    நெட்  ஃபிளிக்சில்  இது  கிடைக்குது  ஹீரோயின்  அழகுக்காக  பார்க்கலாம்.  ரேட்டிங்  2.5  / 5 


Fifty Shades of Grey poster.jpg
Theatrical release poster
Directed bySam Taylor-Johnson
Produced by
Screenplay byKelly Marcel
Based onFifty Shades of Grey
by E. L. James
Starring
Music byDanny Elfman
CinematographySeamus McGarvey
Edited by
Production
companies
Distributed byUniversal Pictures[1]
Release date
  • February 9, 2015 (Los Angeles)
  • February 13, 2015 (United Sta