Saturday, January 16, 2021

IS LOVE ENOUGH SIR ? ( HINDI) - சினிமா விமர்சனம் ( A YOUNG WIDOW'S LOVE STORY) NET FLIX

 300  கோடி  செலவு  பண்ணி  பிரம்மாண்டமா  படம்  எடுத்துட்டு  அது  ஓடுமா?  ஓடாதா?னு  வயித்துல  நெருப்பைக்கட்டிக்கிட்டு    காத்திருப்பவங்களும்  உண்டு. திரைக்கதையை  மட்டும்  நம்பி  லோ பட்ஜெட்டில்  பிரமாதமான  படம்  கொடுப்பவர்களும்  உண்டு . இப்போ நாம  பார்க்கப்போறது  விருதுகளை  அள்ளிக்குவித்த  ஒரு  ஃபீல்  குட்  மூவியை  பத்தி




இது  ஒரு  ஹீரோயின்  ஓரியண்ட்டட்  ஃபிலிம்.. ஹீரோயின்  ரத்னா  19  வயசே  ஆன  ஒரு  இளம்  விதவை . வைதேகி  காத்திருந்தாள்  படத்துல ரேவதி  மேரேஜ்  ஆன  சில  நிமிடங்களிலேயே  ஒரு  பரிசல்  விபத்தில்  கணவனை பலி  கொடுத்து  விதவை  ஆன  மாதிரி  இந்தப்பட  நாயகி  ரத்னாவும்  திருமணம்  ஆகி  4  மாதங்களில்  கணவனை  இழந்தவர் ..ஆல்ரெடி  நோய்வாய்ப்பட்டு  இருந்த ஆளுக்கு  கல்யாணம்  பண்ணி  வைக்கறாங்க .  மாப்ளை  வீட்டு  சைடுல  அவரு  இறக்கப்போறவர்னு  தெரியும்.ஆனா  மணமகளுக்கு  தெரியாது. .


ரத்னா   வசிப்பது  ஒரு  பழமை  வாய்ந்த  கிராமம், அங்கே  எல்லாம்  விதவைன்னா  வளையல்  அணியக்கூடாது , பொட்டு  வைக்கக்கூடாது  ப்ளா ப்ளா... அதனால  நாயகி  ரத்னா  பிழைப்புக்காக  நகரத்துல  மும்பைல   ஒரு   பணக்காரர்  வீட்டுல்  பணிப்பெண்ணா  சேர்றார்,  வீட்டில்  சமையல்  வேலை , வீட்டை  க்ளீன்   பண்றது  இதுதான்  அவர்  வேலை . ஆனா  இவரோட  லட்சியம்  ஒரு  ஃபேஷன்  டிசைனர்  ஆவது .இவருக்கு  ஒரு  தங்கை  இருக்கு.  டிப்ளமோ படிக்குது. அதுக்கான  படிப்பு செலவுக்கு  நாயகி  ரத்னா  தான்  பணம்  அனுப்பறாங்க 


நாயகன்  அஸ்வின்  ஃபாரீன்ல  இருக்கறவர். அவரோட  சகோதரர்  உடம்பு  சரி  இல்லாம  இருக்கார்னு  நியூஸ்  வந்ததும்  தன்  குடும்பத்துக்கு  ஒரு  மாரல்  சப்போர்ட்டா  இருக்கனும்னு  ஃபாரீன்ல  இருந்து  மும்பை  வந்து  தங்கறார். அந்த  வீட்டில்  தான்  நாயகி பணிப்பெண்ணா  இருக்கார்.நாயகனுக்கு  மேரேஜ்  ஏற்பாடுகள்  நடக்குது. ஆனா  மணப்பெண்னுக்கு  வேற  ஒரு அஃபர்  இருப்பதால்  மேரேஜ்  கேன்சல்  ஆகுது. அந்தக்கடுப்புல  நாயகன்   இருக்கார் .


நாயகன்  அஸ்வின்  ஃபிளாட்டுக்கு  அவரோட  அம்மா, சகோதரி  அப்பப்ப  வரும்போதெல்லாம் நாயகி  ரத்னா  அவங்களை  நல்லாவே  டீல்  பண்றாங்க. நாயகன்  அஸ்வின்  பக்கா  டீசண்ட். வேலைக்காரிதானேனு  சீப்பா  நடத்தாம  ரத்னாவை  ரொம்ப  டீசண்ட்டா  நடத்தறான். ஏதாவதுன்னா  தாங்க்ஸ்  சொல்றது ., சாரி  சொல்றது    இதெல்லாம்  நமக்கு  ரொம்பவே  புதுசு .  ஏன்னா  பொதுவா  சம்பளம்  கொடுக்கற  ஆள்  கிட்டே  சாரி , தாங்க்ஸ்  சொன்ன  ஓனருங்களை  நாம  பார்த்ததில்லை .


டெய்லரிங்  வேலை  கத்துக்கலாம்னு  ஃப்ரீ  டைம்ல  ரத்னா  ஒரு  மாஸ்டர்  கிட்டே  பார்ட்  டைம்  அசிஸ்டெண்ட்டா  சேருது . அந்தாள்  என்னடான்னா  வீட்டு  வேலை,  கூட்டற  வேலை . நூல்கண்டு ,  லேஸ்  வாங்கற  வேலைனு  அலைக்கழிக்கறான். இது  செட்  ஆகாதுனு   ரத்னா  அங்கே  இருந்து  வந்துடுது


நாயகன்  அஸ்வின்  , நாயகி  ரத்னா  இருவருக்கும்  இடையே  ஏற்படும்  அன்பு  தான்  படம் .  இவங்க  வாழ்க்கை  என்ன  ஆச்சு? என்பதுதான்  திரைக்கதை. காதல்  கோட்டை , உன்னிடத்தில்  என்னைக்கொடுத்தேன்  க்ளைமாக்ஸ்  எல்லாம்  எந்த  அளவுக்கு  உங்க  மனசை  டச்  பண்ணுச்சோ  அதே  அளவு  தாக்கத்தை  இந்த  பட  க்ளைமாக்சும்  தரும்.  


 சபாஷ்  டைரக்டர் 


1   நாயகியின் கேரக்டர்  ஸ்கெட்ச்  பிரமாதம். .நாயகி    திலோத்தமா  ஷோமி  பிரமாதமான  அழகி  கிடையாது . ஆனா  அவங்க  மனசு , கேரக்டர் , தன்மானம்  எல்லாம்  அருமை . சில  காட்சிகளில்  அவர்  காட்டும்  ஃபேஸ்  எக்ஸ்பிரஸ் ஷன்ஸ்  எல்லாம்  செம  க்யுட்


2   நாயகனாக  விவேக்  கம்பீர்   இவரோட  தோற்றமும் , அமைதியான  நடிப்பும்  பெரிய  பிளஸ். ஒரு  பார்ட்டியில்  ரத்னா ஒரு  பானத்தை  அவரது  தோழி  மேல்  கொட்டி விட ஓவராக  அலட்டும்  தோழி  இவ  சம்பளத்துல  சில  ஆயிரத்தை  கட்  பண்ணு  அஸ்வின்  எனும்போது  கூல்  கூல்  என  அவரை  சமாதானப்படுத்துவதும், அதுக்குப்பின்னும் அவரது  ஓவர்  சலம்பல்  பார்த்து  அவ  என்  வீட்டுக்கு  தான்  வேலைக்காரி , உனக்கு வேலைக்காரி  இல்லை  என  நோஸ்கட்  விடுவதும்  அருமை 


‘3  நாயகன்  தனது  பிளாட்டுக்கு  ஒரு  பெண்ணைக்கூட்டி வரும்போது  நாயகி  ரத்னா  தன்  கோபத்தை  ,   இயலாமையைக்காட்டும்  இடம்  கவிதை 


4  இந்திய  சினிமா  வரலாற்றிலேயே  இளம்  விதவை  நாயகியாக  உள்ள  படங்களில்  ஒரு  ஆள்  கூட  அவரை  தவறான  கண்ணோட்டத்தில்  பார்ப்பதோ , அணுகுவதோ  இல்லாமல்  எல்லாரையும்  நல்லவராகக்காட்டி  இருக்கும்  முதல்  படம்  இதுதான்  என  நினைக்கிறேன். அநேகமா  இதன்  திரைக்கதை  ஒரு  பெண்ணாகத்தான்  இருக்கும் 


5  ரெகுலராக ஃபார்மல்   டிரஸ்  போடும்  நாயகனுக்கு   நாயகி  பூ  போட்ட கேசுவல்  டிரஸ்  பர்த்டே  கிஃப்டாக  தருவதும்  அதை  அப்பவே  அணிந்து  பார்த்து  ஆஃபீஸ்க்கு  அதே  டிரசில்  அவர்  போவதும்  அதை  பெருமிதமாக  நாயகி  பார்ப்பதும்  கவிதை   என்றால்  நாயகி  ரத்னா வுக்கு  ஃபேஷன்  டிசைனிங்க்ல  ஆர்வம்  இருக்கறது  தெரிஞ்சு   நாயகிக்கு  நாயகன்  ஃபேஷன்  டிசைனிங்க்  சம்பந்தப்பட்ட  காஸ்ட்லியான  புத்தகம்  பரிசாகத்தருவது ,  தையல்  மிஷின்  கிஃப்டாக  தருவது  , நாயகியின்  தங்கைக்கு  நடக்க  இருக்கும்  திருமணத்துக்கு  அவர்  கேட்காமயே  பண  உதவி  செய்வது  அப்போது  நாயகி  காட்டும்  ஃபேஸ்  எக்ஸ்பிரசன்ஸ்  அழகு  கவிதை  


6  நாயகன்  நாயகியிடம்  ப்ரப்போஸ்   செய்யும்போது  அதை  ஏத்துக்காம 

 உங்க  வீட்ல ஒத்துக்க  மாட்டாங்க , சமூகம்  என்னை  தப்பா பேசும் என  மறுப்பதும்  ஆச்சரியம். 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில நெருடல்கள்


1    படம்  போட்டு  முதல்  18  நிமிடங்கள்  என்னமோ  ஆர்ட்  ஃபிலிம்  பார்ப்பது  மாதிரி  நாயகி  செய்யும்  பணி  விடைகள்  மட்டுமே  காட்டப்படுவது  அயர்ச்சி.  சிலர்  அதோடு  ஸ்கிப்  ஆகும்  அபாயம்  இருக்கு . 


2  நாயகியின்  கேரக்டர்  ஸ்கெட்ச்  ரொம்பவே  பக்கா  அண்ட்  டீசண்ட்.  ஆனா  அவர்  2  இடங்களில்    நிலை  தடுமாறுகிறார். 1  மத்த  வீட்டு  வேலைக்காரிங்க  எல்லாம்  ஆள்  இல்லாதப்ப  டி வி  பார்ப்பது  சோபாவில்  அமர்வதுனு  இருப்பாங்க  நான்  அப்படி  இல்லை  என  தன்னிலை  விளக்கம்  தருவது  அவரது  கேரக்டருக்கு  செட்  ஆகலை . 2  நாயகன்  கேட்காமல  அவரா  தானா  முன்  வந்து  நான்  ஒரு  விதவை  இளம்  வயதில்  கணவனை  இழந்தவள்  என   வாலண்ட்ரியா  சொல்வது  இடிக்குது


3   நாயகன்  வசதியானவன்,  டீசண்ட். அவன்  நினைத்தால்  தன்  கேர்ள்  ஃபிரண்டை  வேறு    ஒரு  இடத்துக்கு ,  ஹோட்டலுக்கு  அழைத்து  சென்றிருக்க  முடியும், ஆனா  நாயகி  இருக்கும்  அதே  பிளாட்டுக்கு  நைட்  டைமில்  இன்னொரு  பெண்ணை  தன்  பெட்  ரூமில்   தங்க  வைப்பது  இடிக்குது


4   நாயகன்  அம்மா  தரும் பார்ட்டியில் நாயகி  வேலைக்காரியாய்  நடந்து கொண்டது  பிடிக்கலை  என  சொல்லும்  நாயகன்  அதுக்கு  முன்பே  நாயகியிடம்  நீ  இந்த  வீட்டில்  மட்டும்  வேலை  செஞ்சா  போதும், பார்ட்டிக்கு  வேற  ஆள்  அரேஞ்ச்  பண்ணிக்கறேன்னு  சொல்லி  இருக்கலாமே? 


5  நாயகி  க்கு  டெய்லரிங்க்  தெரியாது . கத்துக்கனும்கறா. பொதுவா  டெய்லரிங்  கத்துக்கும்போது  ஓபனிங்கில் சாதா  மிஷினான  உஷா , மெரிட்  சிங்கர்  மிஷின்ல  தான்  பழக்குவாங்க . நல்லா  செட்  ஆன  பின் தான்  ஜூக்கி  மிஷின்  தருவாங்க ,ஆனா  இவர்  பயிலும்  இன்ஸ்ட்டிடியூட்டில்  சாதா  மிஷின்  இருந்தும்   இவர்  பழகுவதே  ஜூக்கி  மிஷினில்தான் , அது  எப்படி ?இவர்  ஒரே  பாட்டில்  பணக்காரன்  ஆகும் தமிழ்  சினிமா ஹீரோ  மாதிரி  டகால்னு  ஃபேஷன்  டிசனர்  ஆவதும்  காதில்  பூ  சுற்றல் , இன்னும்  ஸ்டெப்  பை  ஸ்டெப்பா  காட்டி  இருக்கலாம் 


6  பார்ட்டியில்  இங்கிதமே  இல்லாமல்  நாயகியிடம்  நடந்து  கொள்ளும்  அங்கிதா  க்ளைமாக்சில்  நாயகிக்கு  உதவுவது , சிரித்துப்பேசுவது   நம்ப  முடியல . நாயகன்  கேட்ட்க்கொண்டார்  என  சொல்லப்பட்டாலும்  அந்த  சீன்  இன்னும்  நல்லா  டெவலப்  பண்ணி  இருக்கனும்


சி.பி    ஃபைனல்  கமெண்ட் -  இது  ஒரு  ஏ  செண்ட்டர்  ஃபிலிம். பரபபரப்பான  மசாலா  படம்  மட்டுமே  பார்ப்பவர்களுக்கு  பிடிக்காது . பெண்களை  மிகவும்  கவரும் . நெட்  ஃபிளிக்சில்  நெ 1  பிளேசில்  ட்ரெண்டிங்கில்  இருக்கு .   ரேட்டிங்  3.75  / 5