Sunday, January 10, 2021

மாறா ( 2021) - சினிமா விமர்சனம்




 பொதுவா   நாம  பொண்ணு  பார்க்கப்போறப்ப  பொண்ணை  விட பொண்ணோட தங்கச்சியோ , தோழியோ  பொண்ணை  விட  அழகா  இருக்கும்,. இதை  வெளில  சொல்லவும்  முடியாது  ( அதான்  இப்போ  சொல்லிட்டியே?). இதே    மாதிரி  தான்  ஒரு  சினிமா    ஹீரோயினை  விட  ஹீரோயின்  தோழியோ  சில  சமயங்கள்ல  ஹீரோயினோட அம்மாவோ  நல்ல  ஃபிகரா  அமைஞ்சிடும் . அந்த  மாதிரி  இந்தப்படத்தோட  மெயின்  கதையை  விட  கிளைக்கதை  நல்லா  அமைஞ்சு  மெயின்  கதையை  ஓவர்  டேக்  பண்ணிடுச்சு. அதே  மாதிரி  ஹீரோயின்  அழகை  விட  இன்னொரு  சின்ன  கேரக்டர்  ஹீரோயினை  விட  அழகா  அமைஞ்சிருக்கு

 

ஒளிப்பதிவாளர்  பிசி  ஸ்ரீராம்  முதன்  முதலா  இயக்கிய  மீரா  அப்டினு  ஒரு படம்  பாடல்கள்  எல்லாம்  செம  ஹிட்ஃபோட்டோகிராஃபி  கண்ல  ஒத்திக்கற  மாதிரி  இருக்கும். ஆனா  படம்  அட்டர்  ஃபிளாப்காரணம்  ஒரு  ஒளிப்பதிவாளரா  ஃப்ரேம்  பை ஃப்ரேம்  பார்த்து  பார்த்து  இழைச்ச  சீன்கள்  எல்லாம்  பிரமாதமா  இருந்தாலும்  திரைக்கதைல  கோட்டை  விட்டதால  அவர்  இயக்குநரா  வெற்றி    பெறலை . அதே  மாதிரிதான்  இந்தப்படமும்   மேக்கிங்  ஸ்டைல்ல  நல்லா  பண்ணி  இருந்தாலும்  திரைக்கதைல  கோட்டை  விட்டுட்டாங்க  அப்டினு  சில  விமர்சனங்கள்  வந்தது .

 

படத்தோட  விமர்சனத்துக்குப்போகும்  முன்   இது  ஒரு    செண்ட்டர்  ஃபிலிம்மாமூல்  மசாலாப்பட  ரசிகர்களுக்கு  பெரிய  அளவில்  பிடிக்காது ., காதலர்களுக்கு  மட்டுமே  பிடிக்கும், ஒரிஜினல்  படமான  சார்லி  மலையாளப்படம்  பார்க்காதவர்களுக்கு  இது  பிடிக்கும்கற  டிஸ்கியை  பதிவு  பண்ணிடறேன்  (  நான்  சார்லி  பார்த்துட்டேன்  ) 

 

இது  ஒரு  ஹீரோயின்  ஓரியண்ட்டட்  ஃபிலிம். ஹீரோயின் க்கு  வீட்ல  மாப்ள  பார்க்கறாங்க , ஆனா  ஹீரோயினுக்கு  அவனைப்பிடிக்க்லை . வேற  லவ்  எல்லாம்  இல்லை, ஆனாலும் இவ்னைப்பிடிக்கலை. இதை  வெளில  சொல்ல  முடியாம  நைசா  ஹீரோயின்  வீட்டை  விட்டுக்கிளம்பிடுது

 

வந்த  இடத்துல  ஒரு  ஓவியனைப்பத்தி  கேள்விப்படுது   அவன்  வாழ்க்கைப்பயணத்தில்  சந்திச்ச  பல  மனிதர்களுக்கு  ஏதோ  ஒரு  வகைல  உதவி  பண்ணி  இருக்கான். நாடோடி  மாதிரி  சுத்திட்டு  இருக்கான்னு  தெரிஞ்சுக்குது அவனை  நேர்ல  பார்க்கனும், சந்திக்கனும்னு  ஆசைப்படுது. அவளோட  பயணங்கள்  தான்   கதை 

 

ஹீரோயினா  நேர்  கொண்ட  பார்வை  புகழ்   ஷ்ரத்தா ஸ்ரீநாத், பேருக்கு  ஏற்ற  மாதிரி  மிகவும் சிரத்தை  எடுத்து  நடிச்சிருக்கார்ஆனா  அவரோட  முகம்  ஒரு  சிடுமூஞ்சி , அல்லது  கோபமான  சாயல்  உள்ள  முகம் , கன்ஃபைட்  காஞ்சனா , ரிவால்வர்  ரீட்டா , வம்படி  வனஜா  மாதிரி  கேரக்டர்கள்  அவருக்கு  நல்லா  செட்  ஆகும்,   காதலுக்கு  ஏங்கும்  முகம்  சரியா  செட்  ஆகலை . ஒரு  லவ்  சப்ஜெக்ட்ல  ஹீரோயினைப்பார்த்ததும்  ரசிகனுக்கு  அடடா, இந்த  மாதிரி  ஒரு  ஃபிகர்  நமக்கு  சிக்கலையே  அப்டினு  ஒரு  ஃபீல்  வரனும். அது  நமக்கு  வர்லை . அது  ஒரு  மைன்ஸ் . ஆனாலும்  அவர்  நடிப்பில்  குறைவில்லை 

 

 ஹீரோவா  மாதவன் .   மின்னலே , அலை  பாயுதே  டைம்ல  வேணா  இந்த  கேரக்டர்  அவருக்கு  செட்  ஆகி  இருக்கும், இறுதிச்சுற்று   மாதிரி  மிடில்  ஏஜ்  கேரக்டர்  பண்ண  வேண்டிய  டைம்ல  சாக்லேட்  பாய்  கேரக்டர்  செட்  ஆகலை 

 

படத்தின்  முக்கியமான  அனைவரையும்  கவர்கின்ற  ரோல்  இயக்குநர்  கம்  ரைட்டர்  மவுலிக்கு  . கலக்கிட்டார்  மனுசன்கடைசி  அரை  மணி  நேரம்  இவர்  ராஜாங்கம்  தான்  .  பூ  வேலி  கார்த்திக் கின்  க்ளைமாக்ஸ்  நடிப்புக்கு  ஈடானது 

 

தற்கொலைக்கு  முயலும்  லேடி  டாக்டராக   ஷிவதா  ஹேர்ஸ்டைல்  , ஃபெஸ்கட்  இரண்டும்  அழகு . நாயகியை  விட  அழகு . பேசாம  இவரை  நாயகியா  போட்டிருக்கலாம் 

 

கில்மா  லேடியாக  விருமாண்டி  புகழ்  அபிராமியைப்பார்க்க  அதிர்ச்சியா  இருக்குஆள்  டபுள்  ஆகிட்டார் பபுள்கம்  மாதிரி  பெருத்துட்டார் 

 

அலெக்சாண்டர்  பாபு  நல்லா நடிச்சிருக்கார்.   கிஷோர்  , அப்புக்குட்டி  அனைவரும்   விழலுக்கு  இரைத்த    நீர் 

 

ஒளிப்பதிவு  கண்ல  ஒத்திக்கலாம்.,  அற்புதம். ஆர்ட்  டைரக்சன்  ஒர்க்  குட் , இசை  ஜிப்ரான்பாடல்கள்  ஹிட்  , குறிப்பா  முதல்  பாடல் .. பின்னணி  இசைலயும்  ஸ்கோர்  பண்ணி  இருக்கார்

 

 அறிமுக  இயக்குநர்  திலீப்  குமார்  பிரசண்ட்டேஷன்  நல்லா  பண்ணி  இருக்கார் . பொதுவா  ஒரு  கிஃப்ட்  கொடுக்கும்போது  கிஃப்ட்  பேக்கிங்  நல்லா  இருந்தா  மட்டும்  போதாது  உள்ளே  கண்ட்டெட்ண்ட்  செமயா  இருக்கனும்கொஞ்சம்  மிஸ்  பண்ணிட்டார் 

 

ஹீரோ  ஹீரோயின்  இருவரும்  சேர்வார்களாமாட்டார்களாஎன்ற  பதை பதைப்பே  ஆடியன்சுக்கு  வர்லை . அது  பெரிய  மைனஸ்  . மாறாக  மவுலி  -  மீனாட்சி  லவ்  போர்ஷன்  அருமை ,    க்ளைமாக்ஸ்   ட்விஸ்ட்  நல்லாருந்தது 

 

 

நச்   வசனங்கள்

 

நம்ம  பிறந்த  நாளுக்கு  யாரெல்லாம்  வருவாங்கனு  நமக்கு  தெரியும், ஆனா  நம்ம  சாவுக்கு  யார்  எல்லாம்  வருவாங்கனு  நமக்கு  தெரியுமாஆனா  அவனுக்கு  தெரியும் /. அவன்  சாவுக்கு  வந்தவங்களை  அவன்  நேர்லயே  பார்த்தான் 

 

2   என்னைப்பொறுத்தவரை   நாம  செய்யற  வேலை  புதுசா  இருக்கனும்இல்லை  வேலை  செய்யற  ஊரு  புதுசா  இருக்கனும்

 

ஒரே  ஒரு  ஃபோட்டோக்குள்ள  அடக்குற  அழகா  அவளுது?

 

4    காத்திருப்பதில்  வலியோட    சேர்த்து  சுகமும்  இருக்குனு  அனுபவிக்கறவங்களுக்கு  மட்டும்  தான்  தெரியும் , வேற  யாருக்கும்  புரியாது 

 

5   அவ  இப்போ  என்  கூட  இல்லைஙற  வலியை  விட  அவளை  எங்கே  நான்  மறந்துடுவேனோங்கற  பயம்  தான்  இப்போ  அதிகமா  இருக்கு

 

6   காதல்  ஒரு  மனுசனை  அவன்  அதுவரை  போகாத  இடத்துக்கெல்லாம்  கூட்டிட்டுப்போகும் 

 

7    நேத்து  உயிரா  நினைச்சுப்பழகுன  ஒருத்தியை  இன்னைக்கு  மயிரா  நினைச்சு  தூக்கிப்போடுற  உலகத்துல  50  வருசமா  ஒருத்தியையே  நினைச்சு  உருகிட்டு  இருக்காரே.... இவரோட   காதல்  ஜெயிக்கனும் 

 

8   நான்  ஸ்டேட்  ஃபர்ஸ்ட்  வந்தப்போ  நான்  உம்முனு  இருக்கற  ஃபோட்டோவைத்தான்  பப்ளிஷ்  பண்ணாங்க, ஆனா  நான்   ஒரு  கொலை  பண்ணப்ப  வந்த   ஃபோட்டோல  நான்  சிரிச்சுட்டு  இருக்கற  மாதிரி  ஃபோட்டோவைப்போட்டு  இந்தக்கொலையை  செய்தது  இந்தப்பெண்  தான்னு  போட்டாங்க 

 

9   சாத்தானுக்கு  சர்ச்    என்ன  வேலை  ?

 

10  ஏண்டா  டேய் , அடுத்தவங்க  லெட்டரைப்படிக்கறதே  தப்பு , அதுல   தப்பு  வேற  கண்டு  பிடிக்கறியா?

 

11    ரயில்ல  வந்தது  வித் அவுட்ல  இதுல  கலை  ஆர்வம்  வேற  (  கலைஞர்  ரெஃப்ரன்ஸ்டாப்  பூரா  ஓவியம்கற  பேர்ல  கிறுக்கி  வெச்சிருக்கான்

 

12    இந்த  இடத்துக்கு  இப்போவே  போகனும்..

 

 சாரி. நான்  திருடன். பகல்ல    எனக்கு  ரூட்டு  தெரியாது 

 

 

13   பிங்க்கி  பிங்க்கி  பாங்க்கி  ராஜா  ராணி  ஜாக்கி  

 

சி.பி  ஃபைனல்  கமெண்ட்  ஸ்லோ  மெலோ  டிராமா  என்பதால்  பொறுமையாகப்பார்ப்பவர்களுக்கு , காதலர்களுக்கு,   காதலில்  தோல்வி  கண்டவர்களுக்கு  படம்  பிடிக்கும்ஆனந்த  விகடன்  எதிர்பார்ப்பு  மார்க்   41குமுதம்  ரேட்டிங்  ஓக்கே . அட்ரா  சக்க  ரேட்டிங்  2.75  / 5 .  அமேசான்  பிரைம்    கிடைக்குது 

டிஸ்கி -  சில  விமர்சகர்கள்  ஹீரோ  பேரு  மணி  மாறன், ஆனா  எல்லாரும்  அவரை  மணி  மணி  அப்டினு  கூப்பிடாம  மாறா  மாறா  அப்டினு  தான்  கூப்பிடறாங்க, அது  ஏன்?  அப்டினு  நக்கல்  பண்ணி  இருந்தாங்க . கதிரேசன்கற  பேரை  சுருக்கி, செல்லமா  பொதுவா  கதிர்  அல்லது  ரேஷன்  அப்டினு தானே  கூப்பிடனும், ஆனா  ஒரு  படத்துல   ஹீரோவை  கத்தினு  கூப்பிடுவாங்க. அதுக்கு  இது  தேவலை