படத்தோட விமர்சனத்துக்குள்ளே போகும் முன் தமிழ் சினிமாவில் காதல் காட்சிகள் எப்படிப்படமாக்கப்பட்டன என்பதை ஒரு கிளான்ஸ் பார்த்துடுவோம். பொதுவாவே டூயட் சீன்கள் , பாடல் காட்சிகளை ஹீரோக்கள் ஹீரோயின்களை தடவுவதற்காகவே உபயோகப்படுத்திக்கொண்டனர். இதில் எம் ஜி ஆர் எல்லோருக்கும் முன்னோடி , கமல் , கார்த்திக் , அர்ஜூன் வகையறாக்கள் அவரது வழித்தோன்றல்கள். சிம்பு , தனுஷ் யாரும் இதில் விதிவிலக்கில்லை . ஆனால் தமிழ் சினிமா வரலாற்றிலேயே கதாநாயகியை தொடாமல் நடித்த ஒரே ஆள் என்ற பெருமை டி ராஜேந்தருக்கு உண்டு
தனது கதையின் நாயகன்
நாயகியை தொடாமல் கண்ணியம் காப்பவன் என்பதை
அவர் காட்டிய விதம் ஆச்சரியப்படுத்தியது.
புதுசாவும் இருந்தது , விக்ரமனின் புது வசந்தம்
, அகத்தியனின் காதல் கோட்டை
போன்ற படங்களுக்கெல்லாம் காட் ஃபாதர் ஒரு தலைராகம் , ரயில் பயணங்களில்
போன்ற படங்கள்
ஹீரோயின் ஒரு எழுத்தாளினி . ஹீரோ ஒரு பாடகர் .அவரது பாட்டுக்கச்சேரிக்கெல்லாம் தவறாமல் நாயகி
அட்டெண்டென்ஸ் போட்டுடுவார். நாயகனுடன் அறிமுகம் ஆன
பின்பும் இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர்
விரும்பிணாலும் சொல்லாத காதல் , வெளிப்படுத்திக்கொள்ளாத காதல். சொல்லப்போனால் இதயம் முரளிக்கு
முன்னோடி இந்தப்படம்
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நாயகிக்கு
வீட்டில் பார்த்த மாப்பிள்ளையுடன் திருமணம்
நடக்குது. நாயகன் காதல் தோல்வியில்
தேவதாஸ் ஆகிறார்
நாயகியின் கணவன் புரியாத
புதிர் ரகுவரனுக்கும் , கல்கி பிரகாஷ் ராஜ்க்கும் அண்ணன், சந்தேகப்பிராணி. மனைவியின் முன்னாள்
மானசீகக்காதல் விஷயம் தெரிய வருது. சொல்லால் தினம் தினம் அவளைக்காயப்படுத்தறான்
இப்படி நிலைமை
இருக்கும்போது நாயகனுக்கு நாயகியின்
சிரமங்கள் தெரிய வருது . இறுதியில் என்ன முடிவெடுத்தான் என்பது
க்ளைமாக்ஸ்
வில்லனா ராஜீவ் பிரமாதமா
பண்ணி இருப்பார் . வார்த்தை விளையாட்டு வசனங்கள்
அவருக்கு கைகொடுக்குது
ஹீரோவா ஸ்ரீநாத் . ரொம்ப பாவமான கேரக்டர், ஹீரோயினா ஜோதி. குடும்பப்பாங்கான முகம் . நல்ல நடிப்பு
திலீப் ஒரு முக்கிய கேரக்டரில் வர்றார்
கதை , திரைக்கதை , வசனம் , பாடல்கள், இசை , ஒளிப்பதிவு , இயக்கம் ஆல் இன் ஆல் டி ஆர் தான்
நச் வசனங்கள்
1
ஏன்? உங்க தோழி இறங்கி
வர மாட்டாங்காளா?
அவ ரிசர்வ் டைப்
. ஆனா இரங்கி வருவா
======
2
ஒரு ஆம்பளை பின்னால இத்தனை
பொண்ணுங்க அலையராங்களா?
ஆமா, நாட்டுல பத்தினிங்க
பர்சண்ட்டேஜ் குறைஞ்சிட்டே வருது போல
==============
3
தன்னால சொல்ல முடியாத
ஒரு விஷயத்தை பொண்ணு கண்ணால சொல்லிடுவா
4
ஏன் மாத்தனும்?
ஏமாத்தனும்
=================
5
தனக்கு வரப்போற பொண்டாட்டி
கிளியோபாட்ரா மாதிரி இருக்கனும்னு ஆசைப்படறதை விட கண்ணகியா இருக்கனும்னுதான் ஒரு ஆண் ஆசைப்படுவான்
================
6
ஹாய், சாந்தி முகூர்த்தம்
முடிஞ்சதா?
வாட்?
சாரி , ஹாய் சாந்தி , முகூர்த்தம் முடிஞ்சுதா?
===================
7
கைல விலங்கு மாட்டிட்டாங்களேனு கவலைப்படறியா? ஒரு விலங்கு கிட்டே
இப்படி மாட்டிக்கிட்டமேனு கவலைப்படறியா?
=============
8
கீழே வர பயமா இருக்கு
முத டைம் கஷ்டமா இருக்கும்,, பழகப்பழக சரி ஆகிடும்
================
மாப்ளை உன்னை சந்தோஷமா வெச்சிருக்காரா? அடிக்கடி ஃபோன் பண்ணும்மா
அடிக்கு அடி தான்மா ஃபோன் பண்றேன்
===============
என்னடி தடுமாறுறே?
தடுமாறுகிறேன், ஆனா தடம் மாறலை
=============
இனிமே என் பேரை பாடலில் யூஸ் பண்ண வேணாம். வழி தான் சொல்ல தெரியும், வலியை சொல்ல தெரியல
=================
உனக்கு ஒரு நல்ல வழி சொல்லத்தான் வந்திருக்கேன்
எந்த வழியும் சொல்ல வேணாம், வந்த வழியே சென்றா போதும்
=================
சி.பி ஃபைனல் கமெண்ட் - சென்சார் சர்ட்டிஃபிகேட் ஏ கொடுத்திருக்காங்களே, ஆனா தொடாத காதல் என்கிறானேனு நினைக்காதீங்க, இது வில்லனின் டார்ச்சர் வசனங்களுக்காக, காட்சி ரீதியாக கண்ணியம் காத்த படம். அந்தக்கால காதலர்களால் கொண்டாடப்பட்ட படம் , க்ளைமாக்ஸ் மட்டும் ரத்தக்கண்ணீர் மாதிரி அமையும்னு நினைச்சேன், ஏமாந்தேன், ஆனா ட்விஸ்ட் குட் ரேட்டிங் 2.75 / 5