Monday, September 28, 2020

MUNNARIYIPPU ( THE DEAD LINE 2014)-சினிமா விமர்சனம் ( சைக்கோ க்ரைம் த்ரில்லர்)

 



 

மம்முட்டி  நடிச்ச  படங்கள்லயே  படம் பூரா அண்டர்ப்ளே  ஆக்டிங்  பண்ண  ஒரே படம்  இதுதான். மற்ற படங்களிலெல்லாம்   க்ளைமாக்ஸ்  காட்சி அல்லது  ஏதோ ஒரு காட்சியிலாவது  உணர்ச்சி  பொங்க   நடிச்சிருப்பார் , எனக்குத்தெரிஞ்சு  இதுல மட்டும் தான்  ஓப்பனிங்  சீன்ல  இருந்து  லாஸ்ட்  சீன் வரை  ஒரே மாதிரி  அமைதியான  கேரக்டர்

 

நாயகி  ஒரு ஃப்ரீ லேன்ஸ்  ரிப்போர்ட்டர் . அவர்  ஒரு பார்ட்டில கலந்துக்கறார்

. அதுல  அவருக்கு  ஒரு வாய்ப்பு வருது . ஓய்வு  பெறப்போகும்    ஒரு ஜெயில்  அதிகாரி  தன்  அனுபவங்களை   சுய சரிதை  மாதிரி  எழுத  ஆசைப்படறார். அதை  எழுத  ஒரு  கோஸ்ட்  ரைட்டர்  தேவை .

 

நாயகி  அந்த  ஜெயிலரை  சந்திக்கறாங்க . எழுத  சம்மதம்  சொல்றாங்க . அப்போ  அவர்  கூடவே  இருக்கும்  ஒரு ஆள்  பற்றி ஜெயிலர்  சொல்றார்/ இவன்  பாருங்க  பேரு  ராகவன். 2  கொலை  செய்த  வழக்கில்  கைதாகி  20 வருட  ஜெயில் தண்டனையும்  முடிஞ்சிடுச்சு , ஆனா  வெளில  போக மாட்டேங்கறான். கேட்டா  வெளீல  எனக்கு  யார்  இருக்கா?  இங்கேயே  இருந்துக்கறேன்கறான்.  ஏதோ கூட மாட  ஒத்தாசைக்கு  இருக்கட்டும்னு  நானும்  சரின்னுட்டேன், இந்த  மாதிரி  பல கேஸ்ங்க பல அனுபவங்களை  கட்டுரையா எழுதனும்

 

இதுல  என்ன  ஒரு சுவராஸ்யம்னா  ராகவன்  தான் அந்த  கொலைகளை  செய்யவே இல்லைனு  சொல்றான்.  ஏன் வக்கீல்  வெச்சு  வாதாடிக்கலைன்னா நாந்தான் கொலையே செய்யலையே?    எதுக்கு  வாதாடனும்?கறான்

 

 நாயகிக்கு  அந்த  ராகவன்  கேரக்டர்  பிடிச்சுடுது. இதன் மூலம் ஒரு பர பரப்பான ஆர்ட்டிக்கிள்  ரெடி  பண்ண  முடியும்னு  நினைக்கறா.  அதே  சமயம்  இது பற்றிய  ஒரு இண்ட்ரோ   ஆர்ட்டிக்கிள்  எழுத  அது  பிரபலமான  பத்திரிக்கைல  வந்து  ஓவர்  நைட்  ஒபாமாவாக நாயகியும், அந்தக்கைதியும் புகழ்  அடைகிறார்கள்

 

ஒரு  முன்னணி  நிறுவனம்  அந்த  நாயகியுடன்  ஒரு ஒப்பந்தம்  போடுது . குறிப்பிட்ட  நாட்களுக்குள்  அந்த  கட்டுரையை  முடிச்சுக்கொடுத்துட்டா  இவ்ளோ  சன்மானம்  அப்டினு ஆஃபர்  தருது

 

 இப்போ நாயகிக்கு  ஜெயிலர்  சுயசரிதை  எழுதுவதை  விட இந்த  ராகவன்  கதை  எழுதுவதில்  ஆர்வம்  அதிகம் ஆகிடுது. நைசா  ஜெயிலரை  சமாளிக்கறா. சார் உங்க  கதையை  அப்புறம்  எழுதறேன்,  முதல்ல  ராகவன்  கதையை  எழுதறேன்கறா

 

 ஜெயிலருக்கு  ஏமாற்றம், அதே சமயம்  மீடியா நியூசால்  ஃபேமஸ்  ஆன ராகவன் பற்றி  விசாரித்து  அடிக்கடி  ஃபோன் கால்ஸ்  வருது . ஜெயிலர்  கடுப்பாகிடறார்

 

 இத்தனை  நாட்களா  நீ இங்கே  இருந்தது  போதும், கிளம்புங்கறார். இதுதான்  சாக்குனு நாயகி  தன்  கஸ்டடில  ஒரு வீடு  எடுத்து  ராகவனை  தங்க  வெச்சு  கதை  எழுதச்சொல்றா

 

 ராகவன்   அதிகம்  படிக்காதவர் . ஆங்கிலம்  அவ்வளவா  தெரியாது . அவர்  மலையாளத்துல  எழுதனும், இவரு  ஆங்கிலத்தில்  அதை  மொழி பெயர்த்து   மேகசின்க்கு தரனும் . இதான்  பிளான்

 

நான்  மேலே சொன்னவை எல்லாம்  படம்  ஆரம்பிச்சு  20 நிமிடங்களில்  முடிஞ்சுடுது. இதுக்குப்பின்  நடந்த  சுவராஸ்யமான  சம்பவங்கள்  தான்  மொத்தப்படமே.மொத்தம்  2  மணி  நேரப்படம் . க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  கடைசி  5 நிமிடங்களில்  தான்  வருது . நீங்க  யூகிச்சிருக்கவே  முடியாது , அதுக்கு  நான் கேரண்டி . ஜியோ  சினிமா ல இது  கிடைக்குது

 

ஹீரோவா  மெகா ஸ்டார்  மம்முட்டி .  அமைதியான  நதியினிலே  ஓடம்  பாட்டுதான் நினைவு வருது . படம்  பூரா  என்ன  ஒரு சாத்வீகமான  ந்டிப்பு?

ஹீரோயினா  அபர்ணா  ஓக்கே ரகம்,  அவர்  பத்திரிக்கைக்காரர்  என  காட்ட  பாய்ஸ்  கட்டிங்  தேவையா?  சேலை  உடுத்தும்  பெண்ணாகக்காட்டி இருக்கலாம்.

 

பிருத்விராஜ்   கெஸ்ட்  ரோல்.  தேவை  இல்லாத  கேரக்டர்

 

ஒளிப்பதிவு  , இசை , எடிட்டிங்  கனகச்சிதம் .

 

 படம்  முதல்  30 நிமிடங்கள்  எதிர்பார்ப்பை  ஏற்படுத்தும் விதமாகவும்  அடுத்த  1  மணி  நேரம்  மெலோ  டிராமாவாகவும் ஸ்லோவா   போகுது. க்ளைமாக்ஸில் கடைசி  5  நிமிசம்  கலக்கல் /

 

 க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  நேரடியாக  சொல்லப்படாமல்  பூடகமாக  சொல்வது  சிறப்பு


சபாஷ்  டைரக்டர்


1  ஓப்பனிங்  சீன்ல இறந்த  பல்லியை  எறும்புகள்  இரை ஆக்கிக்கொள்வது  போல்  காட்டும்  சீன்., பல்லி  இறந்ததுக்கு  எறும்புகள்  காரணமா  இருக்கலாம், அல்லது பல்லி இறந்த  பின் எறும்புகள்  மொய்த்திருக்கலாம்.,  பார்ப்பவர்  க ண்ணோட்டத்தைப்பொறுத்து அது மாறுபடும் என்ற குறியீடு சீன் 


2    வழக்கமாக  எல்லா  க்ரைம்  த்ரில்லர்களிலும்   கொலை  எப்படி  நடந்தது? அல்லது  யார் கொலை செஞ்சாங்க? எனும் ஃபிளாஸ்பேக்  சீன்  இருக்கும், இதில் மாறுபட்டு  ஒரு புதுமையான  விளக்கம்


3    பாரில்  ஹீரோ 3  ஆண்களுடன்  பேசும்  காட்சியில்  முரண்பாடான  கருத்து  எழும்போது  அவர்  வாதத்தை  தொடராமல  அந்த  இடத்தை  விட்டு செல்வதும்   அதன் மூலம்  ஹீரோ  ஆண்கள்   மேல்  ஈகோ  இல்லாதவர் , ஆண்கள்  பிரஷர்  தரும்போது  அவர்  அதை  பெரிதாக  எடுத்துக்கொள்வதில்லை  என  காட்டுவது  


4    ஓப்பனிங்கில்  நாயகி  நாயகனை  பெரிய  ஹீரோ  போல  பார்ப்பது  பின்  போகப்போக  கடுப்பில்  நாயகி  அவரை  டாமினேட்  பண்ணூவது  போல் காட்டுவது  , க்ளைமாக்சில்  ஹீரோ  டாமினேட்  பண்ணுவது  எல்லாமே  நுணுக்கம்


 நச்  டயலாக்ஸ்

 

1        பாய்  ஃபிரண்டைப்பார்க்கவா  போறே?

 வேணும்னா  அவன்  இங்கே  வரட்டும், நான்  எதுக்கு ?

 

2        வெளிச்சம், உண்மை இரண்டையும்  இல்லாம  ஆக்கவே  முடியாது , வேணும்னா  தற்காலிகமா  மறைக்கலாம்

3        மனுசனைக்காப்பாத்தாம  சட்டத்தை  மட்டும்  காப்பாத்துனா  இந்த  சமூகம் எப்படி  உருப்படும்?

4        வாய்ப்பு  2வது  தடவை  கதவைத்தட்டாது

5        நம்ம  தேசியசின்னத்துல  4  சிங்கம், அதுல 4 வது  சிங்கம்  மறைஞ்சிருக்கு ,   அது  மாதிரி  தான்  சத்தியம். நம்ம  கண்ணுக்குத்தெரியாது

6        இங்கே  ஃபேஸ்  புக்  கிடைக்குதா? 

 இங்கே  எல்லாம்  புக்சும்  கிடைக்கும்

 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில  நெருடல்கள்

 

1        ஒரு பிரஸ்  ரிப்போர்ட்டர்  நண்பரிடமிருந்து  கார்  ஓசி  வாங்கும்போது  ஆர் சி புக்  மற்றும்  பேப்பர்ஸ்  எல்லாம்  கேட்டு  வாங்கிக்க மாட்டாரா? அல்லது  கார்ல இருக்கா?னு செக  பண்ணிக்க  மாட்டாரா?

2   கைதி  தனது  ஸ்டேட்மெண்ட்டை  முதலில்  கொஞ்சம்  சொல்லும்போது  அவன் எழுத்துப்பூர்வமா  சொல்லலை, வாயால்  சொல்ல   நாயகி  டேப்பில்  பதிவு  பண்ணி    எழுத்தாக்குகிறார். அப்படி இருக்க  எந்த  நம்பிக்கையில் அவரை  எழுது  எழுது  என்கிறார். அவர்  எழுதாத  போது  கோபப்படுகிறார்?

 

3  முதல்  முறை  கைதியிடம்  கோபப்படுவது  சரி . ஒவ்வொரு டைமும் அவர்  எழுதாத  போது   சும்மா சும்மா  அவரைக்கோபித்து  என்ன  பயன்? சரி  , என்ன  நடந்தது? சொல்லுங்க  நான்    எழுதிக்கறேன்னா  அப்பவே  படம்  முடிஞ்சிருக்கும் இவ்ளோ இழுவை  எதுக்கு ?

 

சி.பி ஃபைனல்  கமெண்ட் -  மலையாளப்படங்கள்  ரெகுலராப்பார்ப்பவர்கள் , அதன்  ஸ்லோ  வுக்குப்பழக்கமானவர்கள்  பார்க்கலாம், க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  அருமை . ரேட்டிங்  3 /  5