Tuesday, September 15, 2020

ஒத்த செருப்பு சைஸ் 7 – சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்)

ஒத்த செருப்பு சைஸ் 7 – சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) 

ஒத்த செருப்பு சைஸ் 7 | Dinamalar

சம்பவம் 1 - பிரபல மந்திரி ஒருவரோட ஆசைநாயகியை அவரது தம்பியே கரெக்ட் பண்ணிடறதால மந்திரிக்கு செம காண்டு .அரசியல்லயும் தனக்குப்போட்டியா வந்துடுவாருனு அவரை ஆள் வெச்சு போட்டுத்தள்ளிடறாரு . தம்பி காலை ல வாக்கிங் போறப்ப கழுத்துல மாஞ்சாக்கயிறு இறுக்கி கொலை செய்யப்படறார், மந்திரியோட அடியாள் கொலை பண்றப்போ ஸ்பாட்ல தடயமா அவரையும் அறியாம அவரோட ஒத்தை செருப்பை அங்கே விட்டுட்டு வந்துடறார்.பின் புலம் மந்திரி என்பதால் ஒரு போலீஸ் ஆஃபீசரே இதுக்கு உடந்தையா இருந்து கேஸ் எதுவும் ஃபைல் பண்ணாம காப்பாத்திடறாரு


 சம்பவம் 2 - இதே பாணில நகரத்துல 4 கொலைகள் நடக்குது. ஒவ்வொரு கொலை நடந்ததும் ஸ்பாட்ல ஒரு ஒத்த செருப்பு தடயமா விடப்படுது. யார் அந்த சீரியல் கில்லர்னு போலீஸ் மண்டையைப்பிச்சுக்குது ஆனா கண்டுபிடிக்க முடியல். மந்திரிக்கு,ம், அந்த அடியாளுக்கும், இந்த 4 கொலைகளுக்கும் சம்பந்தம் இல்லை , எவனோ மேட்டர் தெரிஞ்சவன் விளையாடறான் 



 சம்பவம் 3 ஹீரோவுக்கு ஒரு கிராமத்துப்பொண்ணு கூட மேரேஜ் ஆகுது, அவங்க சந்தோஷமான வாழ்க்கைக்கு சாட்சியா ஒரு குழந்தை பிறக்குது, ஆனா பிறக்கும்போதே குழந்தை நோயோட பிறந்துடுது. அதுக்கான மரண தேதியும் டாக்டர்கள் குறிச்சுடறாங்க, இருக்கற வரைக்கும் குழந்தை சந்தோஷமா இருக்கட்டும்னு நினைக்கறாங்க ஒரு சமயம் ஒரு பார்ட்டில கலந்துக்க ஹீரோ தன் மனைவியை ஒரு கிளப்க்கு கூட்டிட்டுப்போறாரு, அங்கே இருக்கும் ஆடம்பரமான பெண்களின் நடவடிக்கைகளைப்பார்த்து மனைவியின் மனம் மாறுது.தானும் அதே போல் ஆடம்பரமா வாழனும்னு தன் தகுதிக்கு மீறி ஆசைப்படுது 



 மேலே சொன்ன 3 சமபவங்களையும் ஒரே நேர்கோட்டில் இணைக்கும் திரைக்கதை தான் இந்தபப்டம் ஒன் மேன் ஷோ , மோனோ ஆக்டிங் , ஸ்டேஜ் டிராமா பர்ஃபார்மென்ஸ் இதெல்லாம் கேல்விப்பட்டிருப்போம், இப்போதான் முதல் முறையா அதை சினிமாவில் பார்க்கிறோம், தமிழ் சினிமாவுக்கு புதிய புதிய தொழில் நுட்பங்களையும் , கதைக்களன்களையும் புதுசு புதுசாக அறிமுகப்படுத்துவதில் விற்பன்னரான கமல் ( அன்பே சிவம் , குணா, மைக்கேல் மதனகாமராஜன், அபூர்வ சகோதரர்கள் , அவ்வை சண்முகி உடபட பல படங்கள் ) கூட இதுவரை இறங்காத புது முயற்சியில் இரா பார்த்திபன் இறங்கி புதிய பாதை அமைத்துத்தந்திருக்கிறார் 



 படத்தில் காட்சி வடிவில் இவர் ஒருவர்தான் கேரக்டரே, மீதி எல்லா கேரக்டர்களும் குரல் வடிவில் தான் , மாறுபட்ட முயற்சி மேலே நான் சொன்ன கதை முழுவதையும் ஒருவரே வாய்ஸ் மாடுலேஷன்லயே விளக்கி கதை சொல்லிடறார். போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு லாக்கப்[ ரூம்ல நடக்கும் விசாரணை தான் முழுப்படமும். ஒப்புதல் வாக்குமூலம் , அல்லது தன்னிலை விளக்கம் அளிக்கும் நாயகன் முழுக்கதையையும் அவரே சொல்வது போல திரைக்கதை



 பெண் மனோதத்துவ டாக்டர் , இன்ஸ்பெக்டர் , போலீஸ் கான்ஸ்டபிள்ஸ் , மந்திரி , கமிஷனர் , அடியாள் , மனைவி போன்ற கேரக்டர்கள் எல்லாம் பின்னணி யில் குரல் மட்டுமே ஒலிக்கின்ற அளவில் படம் பிடித்திருக்கிறார்கள் ஒண்ணே முக்கால் மணி நேரம் ஓடும் இந்தப்படம் ஒரு சீன் கூட போர் அடிக்காமல் போவதோடு அடுத்து என்ன? க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் என்ன? என யூகிக்க முடியாத அளவுக்கு மிகச்சிறப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கு



 சபாஷ் டைரக்டர் 


 இந்த மாதிரி கதைக்களனை இயக்குநர் தேர்ந்தெடுக்க 3 காரணங்கள் தான் இருக்க முஜ்டியும், 1 லோ பட்ஜெட்டில் படத்தை முடிச்சிடலாம் 2 யார் கிட்டயும் கால்ஷீட் கேட்டு க்கெஞ்சிட்டு இருக்கத்தேவை இல்லை , யாருக்காகவும் வெய்ட் பண்ணிட்டு இருக்கவும் தேவை இல்லை 3 தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சி என்ற அங்கீகாரமும், அடையாளமும் கிடைக்கும். அவர் நினைச்சது நடந்துடுச்சு



 2 ஒரு ஆளின் முகத்தை ஒண்ணே முக்கால் மணி நேரம் பார்த்துட்டு இருப்பது எவ்ளோ பெரிய ரிஸ்க் என்பதை உணர்ந்து பின்னணியில் ஒலிக்கும் குரல்கள் மூலம் நம் கண் முன் சம்பவங்களை அப்படியே முன்னிறுத்துவது நல்ல டெக்னிக் 



 3 பின்னணி இசை , எடிட்டிங் , ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் மிகச்சரியாக கையாளப்பட்டதுடன் இரா பார்த்துபனின் வ்ழக்கமான குறும்பு வசனங்கள் , நையாண்டிகள் ஆங்காங்கே சேர்த்துக்கொண்டது


 4 இந்த மாதிரி பரீட்சார்த்தமான முயற்சிகள் பெரும்பாலும் கலைப்படமாகத்தான் இருக்கும், ஆனா கமர்ஷியலாக ஒரு க்ரைம் த்ரில்லர் ஜர்னரில் திரைக்கதை அமைத்த புத்திசாலித்தனம்




 லாஜிக் மிஸ்டேக்ஸ், 



திரைக்கதையில் சில நெருடல்கள்


 1 பொதுவா கள்ளக்காதலன் அல்லது கள்ளக்காதலன்கள் உள்ள பெண் தன் கணவனைக்கொலை செய்ய முடிவெடுக்கும்போது சாப்பாட்டில் விஷம் வைத்தல் , தூக்கத்தில் தலையணையால் அமுக்கிக்கொல்தல் போன்ற ரிஸ்க் குறைவான , எளிய வழியைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் . போலீஸ் கேஸே ஆகாம பல கொலைகள் இயற்கை மரணம் போல் இப்படி சித்தரிக்கப்பட்டது உண்டு , ஆனா இந்தக்கதையில் ஆள் வெச்சு பப்ளிக் ப்ளேஸ் ல புருசனை அடிச்சுக்கொல்லும் யுக்தியை மனைவி தேர்ந்தெடுப்பது ஏன்? என்ற கேள்வி வருது 


 2 கணவனுக்குத்தெரியாமல் “சம்பாதிக்கும்” மனைவி தன் ஆடம்பர வாழ்க்கையை குறிப்பொ ஸ்மார்ட் ஃபோனை கணவன் இருக்கும் சமயத்தில் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி மறைவாக வைத்திருப்பாள் , கணவன் பார்க்கும்படி செல் ஃபோனை வெச்சிருப்பது எப்[படி?


 3 பொதுவாக மந்திரிகள் , எம் எல் ஏக்கள் வீட்டில் பணி புரியும் ஆட்கள் குறிப்பா வேலை ஆட்கள் ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பதை அவர்கள் அனுமதிப்பதில்லை . ஏன்னா எசகு பிசகா ஃபோட்டோவோ, வீடியோவா எடுத்து மீடியாக்கு வித்துட்டா ஆபத்தாச்சே? எனவே ஒரு கொலைக்கு ஆதாரமான விஷயத்தை நாயகன் தான் பணி புரியும் மந்திரியின் வீட்டில் ஃபோனில் ரெக்கார்டு பண்ணுவது சாத்தியக்குறைவு உள்ல விஷயம்


 4 மந்திரியை பிளாக்மெயில் செய்யும் நபர் இதான் சான்ஸ்னு மருத்துவ உதவிக்கான பணம் கேட்கவே இல்லையே? 




நெட் ஃபிளிக்சில் இந்தபப்டம் கிடைக்குது , வாய்ப்புள்ளவர்கள் பார்த்துடுங்க ரேட்டிங் 3 / 5