Sunday, September 13, 2020

அழகிய கண்ணே (1982)– சினிமா விமர்சனம் ( எ மகேந்திரன் ஃபிலிம்)

 


அழகிய   கண்ணே (1982)– சினிமா விமர்சனம் ( எ மகேந்திரன் ஃபிலிம்)

 

நாயகி ஒரு நடன தாரகை , அந்தக்காலத்தில் எல்லாம்  நடன  மங்கயினரை  தேவ தாசி  போல நடத்தி  வந்திருப்பார்கள்  போல , நாயகியை  விலை  பேச  பலரும்  துடிக்கின்றனர், நாயகிக்கு அதனால்  நடனத்தின்  மீதே வெறுப்பு

 

 நாயகன்  ஒரு சிற்பி. நாயகியின் நடனத்துக்கு  ரசிகன், அவன்  ரசித்து  நாயகியின் உருவத்தை  சிலையாக  வடிக்கிறான். ஒரு முறை  ஷாப்பிங்  வந்த  நாயகி தன்  சிலையைக்கண்டு விசாரித்து  நாயகனைப்பற்றி  அறிகிறாள்

 

 இருவரும்  சந்திக்கின்றனர், முதல்  சந்திப்பிலேயே  ஓப்பனாக நாயகி தன்னை  மணக்க  சம்மதமா? என  நாயகனிடம்  கேட்கிறாள். ஆனால்  நாயகன  சம்மதிக்கலை. முறைப்பெண்  இருக்கா, அவளைத்தான்  கட்டிக்குவேன் என்கிறார்

 

 ஒரு கட்டத்தில்  நாயகன்  நாயகியின்  அன்பைப்புரிந்து  அவளை  மணக்க சம்மதம்  சொல்றான், ஆனா  நேரடியா  நாயகி கிட்டே  சொல்லாம  நாயகியின்  பெற்றோரிடம், உறவினர்களிடம்  சொல்றார்.மயக்க  நிலையில்  இருக்கும் நாயகிக்கு அது  தெரியாது

 

நாயகிக்கு  திருமணம்  ஆகிட்டே  தங்கள்  வருமானம்  போய்டும் என  நினைக்கும்   அவர்  உறவினர்கள்  ஒரு மந்திரவாதியிடம்  அவரை  அழைத்துச்சென்று   நாயகிக்கு சிற்பியுடன் திருமணம்  நடக்கும்  யோகம் உண்டா? என  விசாரிக்கிறார்கள்

 

  சாமியார்  நம்ம  நித்யானந்தாவுக்கு  சீனியர், நாயகியை  அடைய  நினைத்து  பலவந்தப்படுத்த  முயல்கிறார், நாயகியிடம்  அவர்  பருப்பு  வேகலை, கொலை  பண்ணிடறார்  சாமியார். உறவினர்களிடம்  நாயகி சிங்கப்பூரில்  இருப்பதாக  சொல்லி  ஒரு தொகையைக்கொடுத்து  அவங்க  வாயை அடைச்சிடறார்

 

இப்போ  நான்  சொன்ன  கதை  எல்லாம்  முதல்  20 நிமிடத்தில்  முடிஞ்சிடுது. அதுக்குப்பின்   என்ன  என்ன சுவராஸ்யமான  சம்பவங்கள்  நடந்தன, க்ளைமாக்ஸ்ல என்ன  ஆச்சு? என்பதை  யூ  ட்யூப்பில்  கண்டு மகிழுங்கள்

 

முதல்லியே சொல்லிடறேன், இது வழக்கமான  மகேந்திரன்  ஃபார்முலா  படம் அல்ல. அவரது  படங்களில் யதார்த்தம்  இருக்கும், இது  மூன்றாவது கண் , ஆயிரம்  ஜென்மங்கள் , நீயா   டைப்  மறு ஜென்ம   பழி  வாங்கல்  ஃபார்முலா  கதை

 

நாயகியாக  சாருலதா அருமையாக  நடிச்சிருக்கார்.  நாட்டியப்பெண்மணிகளுக்கே  உரித்தான  முகமும் , கண்களும் கவிதை  பாடுகின்றன. ஆனா  அவர்  வரும் காட்சிகள்  முதல்  அரை  மணி  நேரம்  மட்டும் தான்

 

 நாயகனாக   சரத்பாபு . படம்  பூரா வந்தாலும் இவருக்கு  பெரிய  அளவில்  நடிக்க  வாய்ப்பு இல்லை

 

 அத்தை  பெண்ணாக  சுஹாசினி , கச்சிதமான  நடிப்பு , ஆனா   நெஞ்சத்தைக்கிள்ளாதே  படத்தில்  அண்ணன், தங்கையாக  நடிச்ச  செட்  இப்போ காதலர்களா  நடிக்கறதை  அந்தக்கால  ஜனங்க  எப்படி ஜீரணிச்சுக்கிட்டாங்கனு தெரியலை. எல்லாம் நடிப்புதான்னு மனசை  தேத்திக்கனும்

 

 மறு ஜென்ம  குழந்தையா  நடிச்சிருக்கும்  அந்த  பேபி  கச்சிதம்

 

சாமியாராக  சாருஹாசன், இவர் மேல  எவ்ளோ மரியாதை வெச்சிருந்தேன். ரேப் சீன்ல் எல்லாம்  நடிச்சு கொலை  எல்லாம் பண்றார். அடடா. அவர்  முகத்தில்  வில்லத்தனம்  எல்லாதான்  வருது, ஆனா  நமக்கு  அவரை  நல்லவரா, பரிதாபகரமான  அப்பா  கேரக்டரில்  பார்த்தே  மைண்ட்  செட்  ஆகி விட்டது

 

காந்திமதி  நடிப்பு பரவால்லை , அவருக்கு  வேற  யாரோ  டப்பிங்  வாய்ஸ்  தந்திருக்காங்க  போல , கொடுமை

 

சபாஷ்   டைரக்டர்

 

1  படத்தில்  வரும் முதல் 30 நிமிடங்கள்  மட்டும்  இயக்குநர்  டச்  தெரியுது , கவிதையான  காட்சிகள் , அதுக்குப்பின்  வேற  யார்ட்டயொ     சப் காண்ட்ராக்ட்  டைரக்ட்  நடந்திருக்குமோனு டவுட்டு

 

2  நாயகி  புதுமுகம்  சாருலதா  ஆடை வடிவமைப்பு , சிகை  அலங்காரம்  நடிப்பு  அனைத்தும்  அருமை

 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள்

 

1  நாயகி , நாயகனைப்பற்றி கேள்விப்படுவது   மையல்  கொள்வது எல்லாம்  ஓக்கே, ஆனா முத  சந்திப்பிலேயே  நாயகன்  கிட்டே  அப்படி  ஓப்பனா கேட்பது  என்னமோ மாதிரி  இருக்கு, கொஞ்ச நாட்கள்  பழகி அல்லது  நாயகன்  ரீ ஆக்சன் எல்லாம் கவனிச்சு பின் கேட்டிருக்கக்கூடாதா?  ஒரு பொண்ணு  தானா வந்து காதலை முதல்ல  சொன்னா அதுக்கான  மதிப்பு  குறைஞ்சுடாதா>?

2   நாயகன்  முதல்ல  மறுக்கறார், மாமன் மகள்  இருக்கா-னு சொல்றார்  ஓக்கே , பின் மனம் மாறி  முதலில்  நாயகியிடம் தானே  மணக்க  சம்மதம்னு  சொல்லனும்?  சொந்தக்காரங்க  கிட்டே  சொல்வது  ஏன்?

 

3  நாயகி  மயக்கம்  போட்டு விழுந்தது,ம்  மருத்துவரிடம்  காட்டாமல் அல்லது  மயக்கம் தீர்ந்த  பின்  அழைத்து  வராமல்  அவரை    தூக்கிக்கொண்டு  வருவதும்  நாடகத்தனமே , செயற்கை

 

4  பழி  வாங்கும்  நாயகி  சாமியாரைப்போட்டுத்தள்ள  சமயம்  வரட்டும்  என  காத்திருப்பது  ஏன்? உடனே  போட்டுத்தள்ளக்கூடாதா? சீக்கிரம்  படம்  முடிஞ்சிடுமா?

 

5  நாயகி  இறந்ததும்  அப்பவே  ஆவியா  வந்து  சாமியாரைபோட்டுத்தள்ளி இருக்கனும், அல்லது  மறு ஜென்மம்  எடுத்து அதே  உருவம்  எடுத்து  வந்து  பழி  வாங்கனும், அதென்ன 7 வயசு சிறுமியாக  ஆகி   பின் பழி  வாங்குவது  என்ன  கணக்கு?   சாமியாருக்கு  ஏழரை  அப்போதான்  ஸ்டார்ட் ஆகுமா?

 

6  சிறுமியைத்தொலைத்த  காந்திமதி  அண்ட்  கோ   பட்டணம்  வருவதும்  கரெக்டா  குழந்தை இருக்கும் இடம்  கண்டு பிடிப்பதும்  சாதா  டைரக்டர்  படம் மாதிரி  இருக்கு

 

சி.பி  ஃபைனல்  கமெண்ட்  - மகேந்திரன்  படம் என்ற  ஒரே ஒரு லேபிளுக்காக  படம் பார்த்தேன், ஆனா  பெரிய  அளவில்  ஏமாற்றம், மாமூல்  மசாலா பேய்  கதை  மாதிரி  போகுது .  முதல்  அரை  மணி  நேரம்  மட்டும் பார்க்கலாம், ரேட்டிங்  1.5  /  5