Sunday, September 06, 2020

ஜானி (1980) – சினிமா விமர்சனம் ( எ மகேந்திரன் ஃபிலிம் )

ஜானி (1980 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா

எந்த டைரக்டர்  படம்னாலும்   டூயல்  ரோல் சப்ஜெக்ட்னா  அதுல  ஆள் மாறாட்டம்  நிச்சயம் இருக்கும். அந்தக்கால  சிவாஜி  உத்தமபுத்திரன் , எம் ஜி ஆர்  நாடோடி மன்னன் ல இருந்து  இந்தக்கால  இம்சை  அரசன்  வரை அது  மாறலை . ஆனா இயக்குநர்  மகேந்திரன்  மசாலாப்படங்கள்  எடுக்க மாட்டார், நிச்சயம்  ஏதாவது  மாறுபட்ட  கதைக்கரு  இருக்கும்னு  நினைச்சேன். ரொம்ப நாளா  இந்தப்பட  பாட்டான  “ ஆசையைக்காத்துல  தூது  விட்டு “ பாட்டு  மட்டும்  அடிக்கடி  கேட்டிருக்கேன் ,  பாத்திருக்கேன் , படம்  இப்போதான்பார்க்கறேன்

 

ஹீரோ ஒருபக்கா  ஃபிராடு. மத்தவங்களை  ஏமாற்றி  பணம்  சம்பாதிக்கறதுல கில்லாடி . எதேச்சையா  ஒரு நிகழ்ச்சில   ஒரு பாடகியை  சந்திக்கறாரு. அவர்  கூட பேச, பழக  வாய்ப்பு கிடைக்குது. இத்தனை  நாளா  தனிமையில்  இருந்த  நாயகிக்கு நாயகனின் சமீபம்  பிடிச்சிருக்கு. தன்னைக்கல்யாணம்  பண்ணிக்க  ஆசையா?னு ஓப்பனா கேட்டுடுது. ஆனா  ஹீரோக்கு  அதுல  எல்லாம்  பெரிய  ஆர்வம் இல்லை , ஆரம்பத்தில்  மறுப்பவர்  பிறகு  சம்மதம்  சொல்றார். தனக்கு சில  கடமைகள்  இருப்பதாவும் அதை  எல்லாம் முடிச்ட்டு வந்துடறேன்னும் சொல்லிட்டுப்போறார்

 

இங்கே  அப்டியே  கட் பண்ரோம், இவரோட முகச்சாயல்ல  இருக்கற  இன்னொரு ஹீரோ வைப்பத்தி  பார்ப்போம். இவர் ஒரு பார்பர் . சலூன்  கடை  வெச்சிருந்தாலும்  நல்ல  வசதியான  வாழ்க்கைதான் , பங்களா  எல்லாம்  வெச்சிருக்கார்  அப்போ அழகான பொண்ணு  ஒண்ணு  வாலண்ட்ரியா   வேலை  கேட்டு  வருது . சமையல்  வேலைக்கு , வீட்டு வேலைக்கு –னு வந்து அந்த  வீட்டையே ஆக்ரமிச்சதை  சசிகலா – ஜெ காலத்துல இருந்து  பாத்துட்டு  இருக்கோம்.இந்தப்பொண்ணை  ஹீரோவுக்குப்பிடிச்சுப்போய்டுது, கலயாணம்  பண்ணிக்க  சம்மதமா?னு  கேட்க  முதல்ல  ஓக்கே சொன்ன  அந்தப்பொண்ணு  பிறகு  அவரை  விட  வசதியான , ஆள்  கிடைச்சதும்   கட்சி  மாறப்பாக்குது , உன்னை  நினைத்து  லைலா  கேரக்டர்  மாதிரி

 

ஹீரோ நெ1   செஞ்ச  சில  ஃபிராடுத்தனங்கள் , திருட்டுக்கு எல்லாம் ஹீரோ  நெ 2  வை  போலீஸ்  தேடுது. இதைத்தெரிஞ்ச  ஹீரோ நெ 1   நெ2  வை அவரே  வந்து  சந்திச்சு   ஒரு வாரம் எங்கயும்  வெளில  போக வேணாம், எனக்கு ஒரு கடமை  இருக்கு , அதை  முடிச்ட்டு  வந்துடறேன்  அப்டிங்கறார்.ஆரமபத்துல  கெட்டவரா  இருந்த  ஹீரோ  நெ 1  திருந்தி நல்லவரா  வாழ  நினைக்கறார்

 

ஆனா  இப்போ  திடீர்னு ஒரு ட்விஸ்ட்.தனக்கு  துரோகம்  பண்ணிட்டு  இன்னொரு  ஆள் கூட  ஓட முயன்ற  அந்தக்காதலியையும், அவளோட புதுக்காதலனையும்  ஹீரோ  நெ 2   போட்டுத்தள்ளிடறார்

 

இப்போ  போலீஸ்  கொலைகாரனை  தேடுது. 2  ஹீரோக்களும்  ஆளுக்கு ஒரு பக்கம்  ஒளிஞ்சிருக்காங்க.   ஹீரோ  நெ 1  உடையா காதலியான  பாடகி  வீட்டுக்கு  ஹீரோ நெ2  வந்துடறார். இந்த  ஆள்  மாறாட்டத்துல  என்ன  ஆச்சு?னு   பதற  வைக்கும்  க்ளைமாக்சில்  சொல்லி  இருக்காங்க

’ஹீரோவா  சூப்பர்  ஸ்டார்  ரஜினி, தனது  வழக்கமான  ஸ்டைலான  சிகரெட்டை  தூக்கிப்போடும்  மேனரிசத்தை  இரு கேரக்டர்களிலும்  காட்டாதது  ஆச்சரியம். நகைகக்டையில்  ஃபிராடு  பண்ணும்  ஒப்பனிங்  சீன் ஆகட்டும் ,  பார்பர்  ஆக வரும்  கேரக்டர்  ஆகட்டும்  அனாயசமா நடிச்சிருக்கார்

 

 ஹீரோயினாக  ஸ்ரீ தேவி . பாடகியா  வரும்  இவர்  குணச்சித்திர  நடிப்பில்  கலங்க  வைக்கிறார். வேலைக்காரப்பெண்ணாக  வந்து   பின்  வேற  செல்வாக்கான  ஆள்  சிக்கியதும்  ஹீரோவைக்கழட்டி  விடும்  வில்லித்தனமான  ஹீரோயினாக  தீபா.  திறந்த  மனதுடன் ,  திறந்த  முதுகுடன்  படம்  முழுக்க  வந்து  கிளாமர்   போர்சனை  கவனிச்சுக்கறார்

 

 

இசை  பிரமாதம்., கலக்கலான  3  ஹிட் பாட்டு  இருக்கு . ஒளிப்பதிவு  கண்ணில்  ஒத்திக்கலாம்.  ஆசையைக்காத்துல  தூது  விட்டு  டான்ஸ்  ஸ்டெப்  அழகோ  அழ்கு ஆள்  மாறாட்டம்  நடக்கும்போது   ஒரு திருப்பம்  நடக்குது, ஆச்சரியமான  திருப்பம் . வசனம்  தீபா – ரஜினி     காம்போ  காட்சிகளில்  வாழ்க்கைத்தத்துவத்தை  புட்டு  வைக்கிறது


பாடல்கள்  செம  ஹிட்டு

1   ஒரு இனிய  மனது 

2  என் வானிலே

3  எந்தன்

4  ஸ்னோரீட்டா

 சபாஷ்  டைரக்டர்

1  தீபாவின்  கேரக்டர்  ஸ்கெட்சை  பிரமாதமாக  வடிவமைத்தது  அருமை. ஓப்பனிங் சீன்ல யே    தான் வேலை  செய்யும்  இடத்தில்  வாங்கும் சம்பளத்தை  விட   அதிகம்  தந்தா  இங்கே  வெலைக்கு  வருவதா  சொல்வது , ஜவுளிக்கடையில்  ஒவ்வொரு  புடவை  தேர்வு  செய்யும்போதும்  இன்னொரு நல்ல  புடவை  பார்த்தா  அதை  தேர்வு செய்வது  எல்லாம்  அபாரம்

 

2   ஆள்  மாறாட்டம்  நடந்தது,ம்  நாம்  நினைக்கும்  சம்பவங்கள்:  வேற திரைக்கதை  சொல்லும் சம்பவங்கள்  வேற  ஆச்சரியமான  திருப்பம்

 

 நச்  வசனங்கள்:

 

1  இந்த  உலகத்துல  எதை  எடுத்தாலும்   அதை  விட  இன்னொண்ணு  பெட்டராத்தான் இருக்கும் , அதுக்காக  நம்ம மனசை  போட்டுக்குழப்பிக்கக்கூடாது

 

2  பணத்துல  கருமியா  இருப்பது  தப்பில்லை ,மத்தவங்க  கிட்டே  அன்பு காட்றதுல  கருமியா  இருக்கக்கூடாது

 

3 அன்பு காட்ட  ஆள்  இருந்தா  யாருமே  அனாதை  இல்லை

 

 4  கெட்டவங்க  யாரும் தன்னை  கெட்டவன்னு  சொல்லிக்க மாட்டாங்க , அப்டி சொன்னா அவங்க  கெட்டவங்களா  இருக்க  முடியாது

 

லாஜிக்  மிஸ்டேக்ஸ்

 

1        ஸ்ரீதேவி  ஜானிக்கு  பதிலாக  பார்பர்  கேரக்டரை  பார்க்கும்போது  ஹேர் ஸ்டைல் ,  மீசை , ஆள் பேச்சு  எல்லாமே  மாறி இருந்தும்  அவருக்கு  துளி டவுட்  கூட வராதது எப்படி?

2  ஹீரோ   நெ 1  சீட்டிங்  செய்வதாக  அதிகபட்சம் நமக்கு  காட்டப்படுவது சுமாரா  2  லட்சம் ரூபாய் தான்  , ஆனா  ஒரு சீன்ல  ஸ்ரீ தேவி  தன் எல்லா  சொத்துக்களையும் வித்து   அவர்  ஏமாற்றிய    காசை எல்லாம் அடைச்ட்டேன் என்பது  எப்[படி?

 

சி.பி  ஃபைனல் கமெண்ட்  -  ஆள் மாறாட்ட  டூயல்  ரோல்  கதையில்   நிச்சயம்  இது மாறுபட்ட  ஒரு கதை  தான் . ரஜினி ,ஸ்ரீ  தேவி  , தீபா   இசை , பாட்டு  இந்த  5 அம்சங்களுக்காகவும் பார்க்கலாம், அஞ்சுமே  அம்சம். ரேட்டிங்  3 / 5 

 

இயக்கம்மகேந்திரன்
தயாரிப்புவி. கோபிநாத்
கே. ஆர். ஜி. ஆர்ட் பிலிம்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
ஸ்ரீதேவி
வெளியீடுஆகத்து 151980
நீளம்3986 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்