டைட்டிலைப்பார்த்ததும்
எனக்கு மாளவிகா நடிச்ச
சி யூ அட் நைன் படம்
தான் நினைவுக்கு வந்தது , ஆனா படம் பார்த்ததும்
தான் அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைனு தெரிய
வந்தது . ஆனாலும் இந்தக்கதையோட ஒன்
லைன் 2018 ல் ரிலீஸ்
ஆன ஹாலிவுட் படமான selective படத்தில் இருந்து எடுக்கபப்ட்டுள்ளது
ஃபகத் ஃபாசில் , அவர் மனைவி நஸ்ரியா
நசீம் இருவரும் தான் தயாரிப்பாளர்கள். 2020 ல்
மார்ச் முதல் வாரம் ரிலீஸ் ஆன கப்பீலா
எனும் படத்தில் ஹீரோவாக
நடித்தவர் தான் இதிலும் ஹீரோ . இதில்
என்ன பியூட்டின்னா அவரோட கப்பீலா படம் தியேட்டர்களில் ரிலீஸ்
ஆகி 5 நாட்களில் கொரோனா காரணமா
தியேட்டர்கள் இயங்கலை , இப்போ இந்தப்படம்
ரிலீஸ் ஆகும்போதும் தியேட்டர்கள்
இயங்கலை
இந்தப்படம் அவுட்டோர் ஷூட்டிங்
எல்லாம் போகாமல் முழுக்க
முழுக்க ஐ ஃபோனில்
படம் ஆக்கப்பட்டது. மாறுபட்ட படங்களை
ரசிப்பவர்கள் பார்க்கலாம்.
ஹீரோ ஓப்பனிங் சீன்லயே
ஹீரோயின் கூட சேட்டிங் பண்றார். ஆரம்ப அறிமுகங்கள் , சாப்ட்டியா? பல் துலக்கினாயா? வழக்கமான
விசாரணைகளுக்குப்பின் தடாலடியாய் மேரேஜ் பண்ணிக்கலா,மா? ல வந்து நிக்குது
வீடியோ காலிலேயே
தன் அம்மா, தங்கை இவர்களுக்கு
நாயகியை அறிமுகம் பண்ணி வைக்கறாரு . ஒரு நாள் திடீர்னு
நாயகி அழுதுகிட்டே இங்கே வீட்ல பிரச்சனை , என்னை உங்க
வீட்டுக்கு கூட்டிட்டுப்போய்டறியா?னு
கேட்க நாயகனும் ஏதோ பிரச்சனை என்பதை
உண்ர்ந்து அவரை அழைத்து
வருகிறார். அப்பா அவரை அடிச்சதாகவும்
பிரச்சனை என்றும் அவர் சொல்றார்
நான் போய் உன் அப்பாவைப்பார்த்துட்டு வர்றேன்
என நாயகன் கிளம்பறார். நாயகி அதெல்லாம் வேணாம், அதான் இங்கே
வந்தாச்சே? என சொல்லியும் கேட்காமல் ஹீரோ அப்பாவைப்பார்க்கப்போறார்.
அப்பா அலட்டிக்காம ஏதோ கோபத்துல அடிச்ட்டேன் , அவளை இங்கே அனுப்புப்ங்க
, உன் அப்பா அம்மா ஃபோன் நெம்பர்
குடுங்க , நான் பேசறேன் என்கிறார்
அதுக்கு மறுத்த ஹீரோ அவ ஃபோன் நெம்பர்
மட்டும் தர்றார். அதான் வினை , என்ன ஆச்சோ? திடீர்னு
நாயகி அழுதுட்டே ஒரு வீடியோ
க்ளிப் அனுப்புது .அதுல தான் தற்கொலை பண்ணிக்கப்போறதா அழுதுட்டே
சொல்லுது
ஹீரோ பயந்துடறாரு,
இந்த சூழலில் அவரை போலீஸ் தேடிட்டு
வருது , ஹீரோ தன் ஃபிரண்டான
ஹேக்கர் ஒருவரிடம் உதவி கேட்கறார்,
அவர் ஹீரோவுக்கு எப்படி உதவி செஞ்சார்/ ஹீரோயினுக்கு என்ன ஆச்சு?என்பதே பின் பாதி திரைக்கதை
ஹீரோவாக வருபவர் நடிப்பு
கன கச்சிதம் , கப்பீலா பாதிப்பில்
அவர் வில்லனா மாறுவாரோ
என்ற சஸ்பென்ஸ் ஏற்படுவது
படத்துக்கு ஒரு பிளஸ்.
சேட்டிங் பண்ண ஆரம்பிச்ச
கொஞ்ச நாட்களிலேயே ஹீரோ மேரேஜ் ப்ரப்போஸ்
வரை போவது ரொம்பவே
ஃபாஸ்ட் ., மணிரத்னம் இயக்கிய
பம்பாய் படத்தில் அப்படித்தான்
லவ் போர்சன் மிக வேகமாக
டேக் ஆஃப் ஆகும்,
பின் பாதியில் பல சம்பவங்கள்
திரைக்கதையில் காத்திருப்பதால்..
ஹேக்கராக வரும் ஃபகத் ஃபாசில்
நடிப்பு வழக்கம் போல் டாப்
, வழக்கமாக அவர் எப்பவும்
முகத்தை மோகன் , சுரேஷ் போல மென்மையாக
வைத்திருப்பார் , ஆனால் இதில் கேரக்டர்
படி பதட்டமான , பரப்ரப்பான சூழலில் எப்பவும்
முகத்தை வைத்திருப்பது புதுசு
நாயகியின் நடிப்பு அபாரம்,நிஜமாகவே அவருக்கு
அடிபட்டிருக்குமோ என எண்ண வைக்கும் துடிப்பு
அவர் கதறி அழும் காட்சிகள் எல்லாம்
நமக்கு கதி கலங்குது தர்சனா ராஜேந்திரன் நாயகி பேரு
இசை , ஒளிப்பதிவு
, எடிட்டிங் என தொழில் நுட்ப
அம்சங்கள் கன கச்சிதம்
சபாஷ் டைரக்டர்
1
எடுத்துக்கொண்ட கதையை விட்டு
விலகாமல் ஆரம்பத்தில் இருந்து
கடைசி வரை திரைக்கதை
ஒரே நேர் கோட்டில் பயணிப்பது
2
படத்தில் பாதிக்கப்படும் கேரக்டர்கள் அடையும் பதட்டம்
நமக்கும் வருவது
3
அனைத்து நடிகர்களின்
நடிப்பும், பங்களிப்பும் அருமை
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1
ஹீரோ தன் குடும்பத்தை அறிமுகப்படுத்துவது போல் ஹீரோயின் ஏன் அறீமுகப்படுத்தலை? அட்லீஸ்ட் ஃபோட்டோ
கூட காட்டலை? என்ற டவுட் ஹீரோவுக்கு
ஏன் வர்லை?
2
ஹீரோ ஒவ்வொரு டைம் சேட் பண்ணும்போதும் வீடு , ஆஃபீஸ்
என வெவ்வேறு லொக்கேஷன்களில் இருக்கார் , ஆனா ஹீரோயின்
கிட்டே சிம் கிடையாது , ஆனா நெட் உண்டு
. எப்பவும் ஒரு ரூம்க்குள்
ஒளிஞ்ச மாதிரி தான் பேசறார், இது ஏன் அவருக்கு
உறுத்தலை?
3
ஹீரோயின் அப்பாவுக்கு
தான் சிசிடிவி கேமராவில் ஹோட்டலில் பதிவாவோம் என்பது தெரியாதா?
சி.பி ஃபைனல்
கமெண்ட் - ரொமாண்டிக்
க்ரைம் த்ரில்லர் பார்க்க
விருப்பம் உள்ளவர்கள் பார்க்கலாம், டூயட் , ஃபைட் , காமெடி எல்லாம்
கிடையாது. பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஊட்டும்
படம் ரேட்டிங் 2.75 /
5