அபூர்வ ராகங்கள் ( 1975 ) - சினிமா விமர்சனம்
இயக்குநர் மணிரத்னம்
ரோஜா, தளபதி, ராவணன் உட்பட பல படங்களுக்கான ஒன் லைனை புராண
, இதிகாசங்களில் இருந்துதான் எடுத்திருக்கிறார்.
அது மாதிரி விக்கிரமாதித்தன் , வேதாளம் கதைல வர்ற
ஒரே ஒரு விடுகதையையே ஒன் லைனாக எடுத்து
திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் சிகரம் கே.பி . அந்தக்காலத்துலயே இப்படி புதுசா
யோசிச்சதால தான் இந்தக்காலத்துலயும்
ரசிக்கும்படி படம் இருக்கு
ஹீரோ ஒரு கம்யூனிச
சித்தாந்தம் உள்ளவர், பணக்கார வீட்டுப்பையன்.
அம்மா இல்லை, அப்பா மட்டும் தான். புரட்சி பண்றேன், ஏழைகளுக்கு உதவறேன்னு
எதுனா ஏடாகூடமா பண்ணி
போலீஸ் ல மாட்டிக்குவார் அப்பா , மகன் இருவருக்குமான
கருத்து மோதலில் மகன் வீட்டை
வெளில போறார், வெளீல போனவர்
ஒரு ரவுடிக்கும்பல் கிட்டே மாட்டி அடி வாங்கி ரோட்டோரமாக்கிடக்கறார்
நடுத்தர வயசு உள்ள
ஆண்ட்டி ஒருவர் மேடைகள்ல
பாடுபவர. அவர் கார்ல போறப்ப
ஹீரோவைப்பார்த்து வீட்டுக்குக்கூட்டிட்டு
வந்து அடைக்கலம் தர்றார். ஹீரோ அங்கேயே கிட்டத்தட்ட
பேயிங் கெஸ்ட் மாதிரி
தங்கி இருக்கார்
ஹீரோவோட அப்பா ஒரு
18 வயசுப்பெண்ணை சந்திக்கிறார். அந்தப்பொண்ணு ஒரு அநாதைனு சொன்னதால தன் கூடவே
தங்கிக்கலாமேனு சொல்லி தங்க வைக்கிறார். இவங்க 2 பேருக்கும்
தொடர்பு இருக்குனு ஊர் பேச
கல்யாணம் பண்ண முடிவெடுக்கிறார்
அங்கே ஹீரோ அந்த ஆண்ட்டி
கிட்டே பிரப்போஸ் பண்ண அவரும்
ஆரம்ப தயக்கங்களுக்குப்பின் சம்மதம் சொல்றார்
இப்போ நடக்க இருக்கும் இரு கல்யாணத்துக்கும் 2 வகையான
வில்லன்கள்
மேரேஜ் பண்ணிக்காமயே ஏமாற்றி
ஓடிப்போன பழைய கணவன் இப்போ திரும்பி
வர்றான். அந்த ஆண்ட்டிக்குப்பிறந்த மகள் தான் ஹீரோ வோட அப்பா மேரேஜ்
பண்ணிக்கப்போறவர் .
சுருக்கமா சொல்லனும்னா
அப்பா , மகன் இருவரும் சிக்கலான
உறவு கொண்ட ஒரு சூழலில்
தள்ளப்படறாங்க , என்ன ஆச்சு ? என்பதே க்ளைமாக்ஸ்
ஹீரோவா கமல். பால் டப்பா மாதிரி முகம் வெச்சிருக்கும் கமல் சிவப்பு மல்லி விஜயகாந்த் மாதிரி
புரட்சி ரோல் பண்ணுவது
ஒத்து வர்லைன்னாலும் மெயின்
கதை அது இல்லை என்பதால் பெருசா
உறுத்தலை. கோபமாக மிருதங்கம் வாசிக்கும்
சீன் , நண்பர்களுடன் புரட்சிக்கருத்து பேசுவது
, ரஜினியுடன் நெகிழ்ச்சியுடன் உரை ஆடுவது
என பல இடங்களில்
கமல் முத்திரை பதிக்கிறார்
ஹீரோயினா ஸ்ரீ வித்யா . அந்தக்கால ஆண்கள்
சில்க் ஸ்மிதாவைத்தான் பெரிய கண்ணழகி என வர்ணிப்பாங்க,
ஆனா பெண்கள் ரசித்த
கண் அழகி ஸ்ரீ வித்யாதான் , ஓப்பனிங்
ஷாங் ல இருந்து , க்ளைமாக்ஸ் சாங் வரை அவர் கண்களாலேயே நடித்து
விடுகிறார். பல இடங்களில் கமலை ஓவர் டேக்
பண்ணிடறார்
ஹீரோவோட அப்பாவா மேஜர் சுந்தர் ராஜன் கச்சிதமான கம்பீரமான நடிப்பு . இங்க்லீஷ் வரி ஒன்றை
சொல்லி அதன் தமிழாக்க வரியையும் சொல்லும் அவரது பாணி இதில்
காணோம்
அவருக்கு ஜோடியாக நடிப்பவர்
பேர் தெரில. நாக்கைத்துறுத்தி அழகு
காட்டுவது மனதில் நிற்கிறது
பாடகியின் கணவனா ரஜினி இதில்
கெஸ்ட் ரோல் . நல்ல ஆக்டிங் . ரஜினி , கமல் இருவரும்
ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வது அப்போ இருந்து இப்போ வரை
தொடர்வது மகிழ்ச்சி
நாகேஷ் ஸ்ரீ வித்யா வின் ஃபேமிலி டாக்டரா வர்றார். குட் ஆக்டிங்
பாடல்கள் படத்தின்
ஜீவநாடி
1 ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை
பாடல்கள் பாட்டு சீனில் ஸ்ரீ வித்யாவுக்கு 70க்கும் மேற்பட்ட க்ளோசப்
ஷாட்கள்
2 அதிசய ராகம், ஆனந்த
ராகம், அபூர்வ ராகம் பாட்டு
கமலுக்கு தரப்பட்ட பாடலாக
இருந்தாலும் ஸ்ரீவித்யா ஸ்கோர் பண்ணுவது
அருமை
3 க்ளைமாக்ஸ் பாட்டு கேள்வியின் நாயகனே வில் ரஜினி , ஸ்ரீ வித்யா இருவரும் போட்டி போட்டு நடித்திருப்பது \சிறப்பு
சபாஷ் டைரக்டர்
1 இயக்குநர் சொல்ல வரும் இரு காதல் கதைகளிலுமே தனிமை தான் காதலுக்கு அடி கோலுது என்பதை எந்த வித முலாமும் பூசாமல், தெய்வீகக்காதல் என ஜல்லி அடிக்காமல் சொன்ன விதம்
2 நாயகி பாடகி என்பதால் அவர் சம்பந்தப்பட்ட முக்கியக்காட்சிகளை எல்லாம் பாட்டு , மிருதங்கம் , இசை என காட்சிப்படுத்திய விதம்
3 நாயகியின் இந்நாள் காதலன் முன்னாள் கணவனை டீல் செய்யும் விதமும், கணவனின் பெருந்தன்மையும்
4 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராதது. கே பி வழக்கமாக தன் படங்களில் சர்ச்சைக்குரிய க்ளைமாக்ஸ் தான் வைப்பார் , இதில் விதிவிலக்கு
நச் வசனங்கள்
1 நம்ம கம்யூனிச கொள்கைக்கு விரோதமானது ரெண்டு 1 இசை 2 ஆசை
2 சுவரொட்டியால என்ன பயன்?னு எள்ளி நகையாட வேணாம் , சுவரொட்டி நம் கொள்கைகளை விளக்கும், கொள்கைகள் நம்ம் பிரச்சனைகளை தீர்க்கும்
3 நான் இவங்க ஃபேமிலி டாக்டர் ,ஆனா இவங்களுக்கு ஃபேமிலி இல்லை
4 டாக்டர் , உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே?
என்னை மீறி எதுவும் நடந்துடாது
5 தாயக்கரம் விளையாடலாமா?
ஒரு தடவை விளையாண்டேன் , அலுத்துடுச்சு
சீட்டாட்டம் விளையாடலாமா?
ஒரு தடவை விளையாண்டேன் , அலுத்துடுச்சு
இது யாரு? உம்ம பையனா? ஒரு பையனோட நிறுத்திட்டீங்களா?
ஆமா, ஒரு தடவை விளையாண்டேன் , அலுத்துடுச்சு
யோவ்
6 பிடிவாதம்கறது கொள்கை இல்க்லை, அது கெட்ட குணம்
7 ஏன் வேணும்னே செஸ்ல என் கிட்டே தோற்கறே?
வாழ்க்கைல நிறைய இழந்துட்டீங்க , இனி விளையாட்டுல கூட உங்களுக்கு இழப்பு இருக்கக்கூடாது
8 எண்ணங்கள் ஓடற அளவுக்கு நாட்கள் ஓடறதில்லை
9 ஒருத்தர் மேல ஆத்திரப்படறதுக்கு காரணம் சொல்லலாம், அன்பு செலுத்த காரணம் சொல்ல முடியுமா?
10 டாக்டர் வெலியூர் போய் இருக்கார்
அவர் உள்ளூர்ல விலை போகலை போல
11 குடிக்கறதுக்கு ஒரு எல்லை வேணாமா?
கழுத்து வரை தான் குடிப்பேன், அதான் எல்லை
12 தலைல நேர் வகிடு எடுப்பதால் கிடைக்கும் ஒரு வித அழகை இந்தக்காலப்பெண்கள் இழக்கறாங்கனு தோணுது
13 நல்ல புகழோட இருக்கறவங்க வாழ்க்கை எல்லாம் க்ளீன் ஸ்லேட்டாகத்தான் இருக்கும்கறதில்லை, கீறல் இருக்கும்
14 சார் , அர்த்தமுள்ள இந்து மதம் எவ்ளோ புக்ஸ் சேல்ஸ் ஆச்சு?
ஒரு லட்சம்
டைட்டிலை உபயோகம் உள்ள இந்து மதம் -னு வெச்சிருந்தா இன்னும் சேல்ஸ் அதிகரிச்ச்ருக்கும்
15 பிள்ட் கேன்சர்ங்கறது பொண்ணுங்க பேசற வம்பு மாதிரி , வகை தொகை இல்லாம பரவும்
16 நேர்மை இல்லாத அத்தனை ஆண்களுக்கும் ஈடு கொடுக்கும்படியா அந்த ஒருவரோட நடவடிக்கைகள் இருந்தன
சி.பி ஃபைனல் கமெண்ட் - ஸ்ரீ வித்யா நடிப்பு , பாட்டு , கமல்- ரஜினி காம்போ சீன்களுக்காகவே பார்க்கலாம், மிஸ் பண்ணவங்க பார்த்துடுங்க , யூ ட்யூப்ல கிடைக்குது , ரேட்டிங் 3 / 5