பஞ்சவர்ணக்கிளி மாதிரி பொண்டாட்டி அமைஞ்சாலும் பஞ்சத்தில்
அடிபட்ட வெட்டுக்கிளி மாதிரி இருந்தாலும் பரவாயில்லைனு ஒரு வெப்பாட்டி வெச்சுக்குவாணாம் ஆம்பளை அப்[படினு
ஒரு கொங்கு மண்டல சொலவடை உண்டு . அதான் இந்தக்கதஒயோட மையக்கரு
ஹீரோ ஒரு வக்கீல் , ஆனா
ஒரு கேஸ் கூட இதுவரை சிக்கலை , வெட்டியாதான் இருக்காப்டி , அவனுக்கு அம்சமான அழகில்
ஒரு மனைவி , ஒரு மகன் உண்டு ,ஹீரோ ஒரு சபலக்கேஸ் , தன் மனைவி கிட்டேயே
அடிக்கடி சில்மிஷம் பண்ணிட்டு ஜாலியா இருப்பாப்டி . அவங்க 2 பேர் லூட்டிகள் , அவங்க பெண் பார்க்கும் படலம் ஃபிலாஸ்பேக் இப்படி முதல் 30 நிமிடங்கள் ஜாலியாப்போகுது
ஹீரோவுக்கு ஒரு பிரபல நடிகையோட நட்பு எதேச்சையாக்கிடைக்குது. அவங்க கூட யதார்த்தமா பழகிட்டு இருக்கும்போது ஒரு பத்திரிக்கைல பதார்த்தமா
ஒரு கிசு கிசு வருது. அதனால
கடுப்பான நடிகை அந்த பத்திரிக்கை
மேல மானநஷ்ட வழக்கு போட ஹீரோவை வக்கீலா
ஃபிக்ஸ் பண்றா
ஹீரோ க்கு டபுள் சந்தோசம், ஒண்ணு ஒரு கேஸ்
கிடைச்சுது . இன்னொண்ணு இதை சாக்கா
வெச்சு நடிகையை அடிக்கடி
மீட் பண்ணலாம்
ஷூட்டிங் விஷயமா
ஒரு டைம் நடிகை பெங்களூர் போறா. உடனே
ஹீரோவும் தன் மனைவி கிட்டே நண்பனோட மேரேஜ்னு ஒரு பொய்யைச்சொல்லி மும்பை போகனும்னு சொல்லி
பெங்களூர் போறான்
அதுக்குப்பின் என்னென்ன் சம்பவங்கள்
நடக்குது? கணவன் , கனைவி பிரிஞ்சாங்களா? நடிகை என்ன ஆனார்? என்பது பின்
பாதி திரைக்கதை
ஹீரோவா கமல், கரும்பு தின்னக்கூலிம்பாங்களே, அது மாதிரி படம் முழுக்க
கேப் கிடைக்கும்போதெல்லாம் ஒரு ஹீரோயின் இடையைக்கிள்ளனும், இன்னொரு ஹீரோயின் கூட கடலை
போடனும். இதுக்கே அவ்ளோ சம்பளம். ஜாலியா பண்ணி இருக்கார் . அது போக போனஸ் மாதிரி
4 டூய்ட், சமமா பங்கிட்ட மாதிரி 2 ஹீரோயின் கூடவும் தலா 2 டூயட். காதல் இளவரசனுக்குக்கேட்கனுமா? கிளப்பிட்டார்
நாயகியா ஸ்ரீதேவி ,அந்தக்காலக்கனவுக்கன்னி ,பெண் பார்க்கும்
படலத்தில் நல்ல நடிப்பு ,கோபப்படும்
காட்சியில் அவருக்கு முகம் பெருசா
கை கொடுக்கலை , பிஜிஎம் மூலமா சமாளிக்கறாங்க
இன்னொரு நாயகியா
தீபா, முந்தானை முடிச்சு டீச்சர். படம் பூரா கமல்
கூட ஜாலியா சுத்திட்டு திடீர்னு புது
வசந்தம் சித்தாரா மாதிரி பழகுனேன், ப்ரியமான தோழி மாதவன் மாதிரி
டைப்னு கதை விடுது
இதை காமெடி படமா
எடுத்ததால லாஜிக் மிஸ்டேக்ஸ்
ஏராளம் உண்டு , கே பி யின் பட்டறையில்
இருந்து வந்த அனந்து
திரைக்கதை அமைத்தும் அங்கங்கே
பம்மும் திரைக்கதை
ஜாலியாப்போகுது,
டைம் பாஸ் மூவி
சபாஷ் டைரக்டர்
1 ஸ்ரீதேவி கிட்டே அட்வான்ஸ்
தரும்போதே இயக்குநர் நீங்க பெருசா இந்தக்கதைல
நடிப்பை எல்லாம் காட்டத்தேவை இல்லை , சும்மா இடுப்பை
மட்டும் காட்டிட்டு இருந்தாப்போதும்,
கமல் அங்கே அப்பப்ப
கிள்ளுவார் அப்டினு இன்ஸ்ட்ரக்சன் கொடுத்திருப்பார் போல , பார்க்க
ஜாலியா தான் இருக்கு
2 இளையராஜா கிட்டே
பிரமாதமா 4 பாடல்கள்
கம்போஸ் பண்ணி வாங்கி
இருக்காரு , சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
பாட்டு செம சாங் . கமல்
ஸ்ரீ தேவியை பெண் பார்க்க வரும்போது
பாடுவது , அடிக்கடி டி வில ஒளியும் ஒலியும்ல அப்போ பார்த்தது
, இப்போ படத்தில் பார்க்க நல்லாருக்கு , ராதா ராதா நீ
எங்கே , கண்ணன் எங்கே நான் அங்கே செம மெலோடி
3 தீபா கூட ஆடிப்பாடும் பொன்னான
, மேனி உல்லாசம் கொண்டாட
வா நீ பாட்டில் ஜாலியான
ஸ்டெப்சுடன் கமல் கலக்கறார், அதே போல் ஏய்
, ஏய் ஓர் ஆயிரம் மலர்களே
பாட்டும் அருமை
4 கமல் அனைவருக்கும்
அறிமுகப்படுத்தும் சீடை சாப்பிடும்
விதம். மேலே தூக்கிப்போட்டு வாயால்
கேட்ச் பிடிப்பது கண்டு அனைவரும்
அதை முயற்சிப்பது காமெடி
நச் டயலாக்ஸ்
1
எனக்கு டான்ஸ் பத்தி பேசத்தான்
தெரியும், ஆடத்தெரியாது
2
என்னை விட நல்லா சண்டை போடறே, கத்திச்சண்டையை விட நீ கத்தி போடும்
சண்டை அபாரம்
3 மாலைன்னா கழுத்தை
நீட்டீடுவீங்களே?
நான் மாலையைத்தேடிப்போவதில்லை, சாயங்காலம் ஆனா அதுவா
தேடி வருமே?
4 உலகிலேயே அதிக பிரப்லங்கள் 2 பேர் தான்
1 நடிகன் 2 அரசியல்வாதி
அரசியல்வாதி ஸ்டீரியோ டைப்பா
ஒரே மாதிரி நடிப்பான் , போர் அடிக்கும்,
ஆனா நடிகன் வெரைட்டியா நடிக்க வேண்டி இருக்கும்;, அப்போதான் ஜனங்களைக்குஷிப்படுத்த முடியும்
5 விவாகரத்தை கேலி பண்றீங்களா?
மேரேஜே ஆகலை , இது
வேர விவகாரம்
6 இந்த நிமிசமே என்
உயிர் போயிடக்கூடாதா?னு எனக்கு இருக்கு
அய்யய்யோ, நான் இன்னும்
ஜோக்கே சொல்ல ஆரம்பிக்கலையே?
7 பிரிவு என்பது
ஒரு ஆளை விட்டு பிரிவது
மட்டும் அல்ல , ஒரு இடத்தை விட்டுப்பிரிவதும்தான்
8 நடிகையான என் முன்னாலயே
நடிக்கறாங்க
9 நீங்க எங்கே பிறந்தீங்க?
ப்ரியா நர்சிங் ஹோம்ல
அய்யோ, எந்த ஊரு?னு கேட்டேன்
10 வாழ்க்கைல நான்
சந்திச்ச புத்திசாலித்தனமான ஆள் நீங்க, உங்களை விட புத்திசாலித்தனமான
ஆள் கிடைச்சா உங்களைத்தூக்கி எறியத்தயங்க மாட்டேன்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஆம்பளைங்க எல்லாருமே கொஞ்சம்
முன்னே பின்னே தான் இருப்பாங்க , நாம தான் அட்ஜஸ் பண்ணிக்கனும்,
என்ற கருத்து மறைமுகமா சொல்லப்பட்டிருக்கு , இத்தனைக்கும் பெண் புரட்சி படங்களை
இயக்கிய கே பி யின் பட்டறையில் பயின்ற அனந்து
வின் எழுத்தில்...
2 க்ளைமாக்சில் ஹீரோ அந்நியப்பெண்கள் வேணாம்
என திருந்தி மனைவியிடம்
சேரவில்லை . அவ ஒதுக்கின பின் தான்
வர்றான். இது எப்படி
ஏத்துக்க முடியும்?
3
கமல் – தீபா இருவரும் ஒரே ஊரில்
, ஒரே ஹோட்டலில் , ஒரே ரூமில் தங்கி இருக்காங்க
, அருகருகே படுத்து உறங்கறாங்க , ஆனா தீபா நான் உங்களை
நல்லவன்னு நினைச்சேன் என பல்டி அடிப்பது காமெடி , இருவருக்கும் இடையே எந்த தொடர்பும் ஏற்படலை
என அவர் ஸ்தாபிப்பது
நம்ப முடியல
4
பெங்களூர் போகும் கமல் எதுக்காக நாயகியிடம்
மும்பை போறேன்னு பொய் சொல்லி
மாட்டிக்கனும்? மேரேஜ் பெங்களூரில்னே
சொல்லி இருக்கலாமே?
5
நண்பனுக்கு மேரேஜ் என்று கணவன்
சொன்னதும் பத்திரிக்கை எங்கே?னு மனைவி கேட்கவே
இல்லை
சி.பி ஃபைனல் கமெண்ட் - லாஜிக் சொதப்பல்கள் எல்லாம் ஒரு ஓரமாக்கிடக்க்ட்டு,ம், ஜாலியா ஒரு படத்தை ரசிப்போம் என்பவர்களுக்கு உகந்த காமெடி மெலோ டிராமா, ரேட்டிங் 2.75 / 5