Thursday, August 06, 2020

மெட்ரோ (2016)- சினிமா விமர்சனம் ( ராபரி த்ரில்லர் )

Metro Where to Watch Online Streaming Full Movie

இத்தனை வருட தமிழ் சினிமா வரலாற்றில் கழுத்துச்செயினை சாலையில் பயணிக்கும்போது வழிப்பறி செய்யும் கும்பல் பற்றிய இவ்ளவ் டீட்டெய்லான திரைக்கதை வந்ததே இல்லை என அடிச்சுச்சொல்லாம். பிரமாதமான் விபரங்கள் அசர வைக்கின்றன இந்தப்படத்தை இத்தனை நாட்களா எப்படி மிஸ் பண்னேன்னு தெரியல இந்தப்பட விமர்சனங்கள் சில படிச்சப்ப பலரும் சொன்ன கருத்து இந்தப்படத்தைப்பார்த்து எத்தனை பேர் செயின் கொள்ளைல ஈடுபடப்போறாங்களோ? அப்டினு, ஆனா நான் பாசிட்டிவா பார்க்கிரேன் , எத்தனை பெண்கள் இதைப்பார்த்து மேலும் ஜாக்கிரதையாக இருக்கப்போறாங்களோ? 


 ஹீரோ ஃபேமிலி பேக் கிரவுண்ட் டீடெய்லா சொல்லப்படுது , அம்மா, அப்பா , காலேஜ் படிக்கும் தம்பி இவங்க 4 பேர் கொண்ட அழகான குடும்பம். ஹீரோவோட தம்பி மட்டும் தன் குடுமப வசதிக்கு மீறுன ஆசைகளை வளர்த்துக்கிட்டு இருக்கார் . உதாரணமா 35,000 ரூபா பைக் வாங்கித்தர்றேன்னு அண்ணன் சொன்னா எனக்கு ஒன்றரை லட்ச ரூபா பைக் தான் வேணும், அப்போதான் எல்லாரும் மதிப்பாங்க அப்டிங்கறார்..



. இன்னொரு கோஷ்டி அறிமுகம். ஊர்ல வழிப்பறி கொள்ளை செய்யற ஒரு கோஷ்டி . அதுக்கு ஒரு தலைவன். அவன் தான் ஸ்கெட்ச் போட்டுக்குடுப்பான் அதை செயலாக்கம் செய்வது அவனது எடுபுடிகள் . அந்த கும்பலில் ஒரு ஆள் புதுசா வேலைக்கு சேர்றான். பாலைவனக்கூடாரத்துல ஒட்டகம் நுழைஞ்ச கதையா அவன் அந்த கும்பலுக்கே தலைவன் ஆக திட்டம் போடறான்


 இந்த 2 கதையையும் இணைக்கும் புள்ளி எது? அந்த செயின் பறிப்புக்கும்பலால பாதிக்கப்படும் ஹீரோ குடும்பம்... அதனால ஹீரோ எடுக்கும் முடிவு தான் மிச்ச மீதிக்கதை 



 ஹீரோ ஹீரோவோட தம்பி 2 பேர் நடிப்பும் அருமை , வில்லன் பாபி சிம்ஹா நடிப்பு கன கச்சிதம். இசை , ஒளிப்பதிவு பக்கா . திரைக்கதை , எடிட்டிங் சபாஷ் போட வைக்குது 



 சபாஷ் டைரக்டர்


 1 பின் பாதியில் செயின் பறிப்பு சம்பவம் நடக்கும்போது வில்லன் பைகல லேடி கழுத்தை நோக்கி கை நீண்டுட்டுக்கிட்டே வர ஹீரோ சரியா பைகல கையை நீட்டி அந்தக்கையை தடுப்பது பிரமாதமான ஷாட் . ஆபாவாணனின் இணைந்த கைகள் படத்துல இண்ட்டர்வல் பிளாக் சீன் ல ராம்கி கையை அருண் பாண்டியன் பிடிக்கும் சீனுக்கு இணையான சீன், கேமரா ஒர்க் பிரமாதம் 



 நச் வசனங்கள்


 1 ஏன் லேடீசை மட்டும் டார்கெட் பண்றீங்க? ஏன்னா லேடீஸ்க்கு தான் பயம் அதிகம், திருப்பித்தாக்க மாட்டாங்க 


 2 என்னோடது மிடில் கிளாஸ் வாழ்க்கை , ஹை க்ளாஸ் சந்தோஷம்


 3 கடன் அதிகம் ஆகிடுச்சுன்னா வாழ்க்கைல நிம்மதி இருக்காது , கொடுத்த கடனைக்கேட்டு வீட்டு வாசல்ல ஒருத்தன் வந்து நிக்கக்கூடாது 

 4 இந்த உலகத்துல எல்லாமே கிடைக்கும், நமக்குத்தேவையானதை நாம தான் எடுத்துக்கனும் 

 5 ரிட்டயர் ஆன போலீஸ்க்கு ரிவால்வர் எதுக்கு ? நான் ட்யூட்டில இருந்த போதே துப்பாக்கியை யூஸ் பண்னதில்லை ( டபுள் மீனிங்))

 6 பெத்தவங்க பிள்ளையோட ஆசையை நிறைவேத்தலாம், ஆனா பேராசையை நிறைவேற்றக்கூடாது , நாமே பிள்ளையைக்கெடுத்த மாதிரி ஆகிடும்

 7 செயினை அறூக்கனும் நு முடிவு பண்ணிட்டா கொண்டை போட்ட , அல்லது ஜடை வெச்ச பொண்ணா செலக்ட பண்ணனும் , லூஸ் ஹேர் ஆபத்து , செயின் சிக்கிக்கும்

 8 கடந்த காலத்துல நடந்ததையெநெ நினைச்ட்டு இருந்தா எப்படி? எதிர் காலம் பற்றியும் யோசி , ஐ மீன் நம்ம லவ் 

 9 உனக்கு ஹிட்லர் பிடிக்குமா? காந்தி பிடிக்குமா? காந்தி தான் ஏன்? ஏன்னா நோட்டுல காந்தி படம் தானே இருக்கு ? 

 10 தெரியாம எடுக்கறவன் திருடன், மிரட்டிப்பறிப்பவன் கொள்ளைக்காரன், நாம 2 பேருக்கும் இடைல இருக்கோம். செயின் பறிப்பு அந்த மாதிரி ஒரு ரிஸ்க்


 11  ஸ்னாட்சிங்? ஐ ஆம் வாட்சிங் 


 லாஜிக் மிஸ்டேக்ஸ் 

 1 சொந்த அண்ணன் ரெகுலரா போடற பேண்ட் சர்ட் போட்டிருக்காரு , அவரோட ஹைட், பாடி எல்லாம் தம்பிக்கு தெரியாதா? ஹெல் மெட் போட்டிருந்தா அடையாளம் தெரியாம போய்டுமா? 

 2 செயின் ஸ்னாட்சிங்ல ஈடுபடும்போதுன் நெம்பர் பிளேட் இல்லாத பைக்ல போகனும்னு சொல்லப்படுது. அப்போ டிராஃபிக் போலீஸ் பிடிக்காதா? தவறான / போலியான நெம்பர் பிளேட் தானே சேஃப்? சம்திங் ஈஸ் பெட்டர் தன் நத்திங் 

 3 ஒரு சாதா காலேஜ் ஸ்டூடண்ட் போலீஸ்க்கு போக்கு காட்டி பைகல போறான். அந்த சேசிங் ல போலீஸ் வேன் தலை குப்புற விழுவதெல்லாம் நம்பவே முடியல

 4 ஒரு கொள்ளைக்கூட்டத்தலைவனோ , திருடர் தலைவனோ அவனுக்குன்னு விசுவாசமான ஆட்கள் பாதிப்பேராவது இருப்பாங்க , புதுசா ஒரு பொடிப்பையன் தலைமைப்பொறுப்புக்கு வரும்ப்;ஓது பாதிப்பேராவது எதிர்க்க மாட்டாங்களா? 



 சி.பி ஃபைனல் கமெண்ட் மெட்ரோ = செயின் பறிப்புக்கும்பல்களைப்பற்றிய நல்ல த்ரில்லர் படம், பெண்களுக்கான விழிப்புணர்வுப்பதிவும் கூட , டோண்ட் மிஸ் இட் , ரேட்டிங் 3.5 / 5