Thursday, July 30, 2020

சில நேரங்களில் சில மனிதர்கள் ( 1977)– சினிமா விமர்சனம்




சாகித்ய அகாடமி விருது  பெற்ற  எழுத்தாளர், இலக்கிய சிங்கம்  ஜே கே எனும்  ஜெய காந்தன் ஆனந்த விகடன்ல  அந்தக்காலத்துல   முத்திரை  சிறுகதையா அக்னி பிரவேசம்  என ஒரு சிறுகதை  எழுதினார். அது  பலரின்  பாராட்டுதல்களைப்பெற்றது. அதுக்குக்கிடைச்ச   வரவேற்பைப்பார்த்து பிரமித்த  அவர் அதை  டெவலப்  பண்ணி  கங்கா எங்கே  போகிறாள்?  என்ற நாவல்  எழுதினார், அது  அக்னிப்பிரவேசம்  கதையின் தொடர்ச்சியாக  அமைத்தார். கதை  முடியும் இடத்தில்  நாவல்  துவங்கும்,  அதுதான்  சினிமாவாக   சில நேரங்களில்  சில  மனிதர்கள் 

பொதுவா  எழுத்தாளர்களின்  கதைகள்  சினிமா ஆகும்போது  சினிமாவுக்கு  ஏத்தபடி கதை சொல்றேன்னு அதை  சிதைச்சிடுவாங்க., அந்தத்த்தப்பு  இதுல  நடக்கலை , பீம்சிங்  தன் வ்ழக்கமான  பாணியிலிருந்து  விலகி  இதை  எடுத்திருந்தார் 

முதல்ல  அந்த  சிறுகதை  என்ன? என்பதை  சுருக்கமா  பார்த்துடுவோம், ஆல்ரெடி  அந்த  கதை  படிச்சவங்க  இந்த  பத்தியை ஸ்கிப்  பண்ணிடலாம்.  ஒரு மழை நாள். பஸ் ஸ்டாப்ல  நாயகி    பஸ்க்கு  வெய்ட்டிங். எல்லாரும்  அவங்கவங்க    பஸ்  வந்ததும்  ஏறிப்போறாங்க. நாயகி  போற  பஸ்  மட்டும்  வர்லை. காத்திருக்கையில் அவள்  முன்  ஒரு கார் நிதானமா வந்து  நிற்குது, பின் கதவை  திறந்து  விடறார்  கார்  ஓனர். நாயகி  கொஞ்சம்  யோசிச்சு  பின்  வேற  வழி இல்லாம  அதில்  ஏறிக்கறா . யாரும்  எதும் பேசலை. கார்  பாட்டுக்குப்போய்க்கிட்டு இருக்கு . கொஞ்சம்  தூரம்  போனதும் இது நான் போக வேண்டிய வழி இல்லையே? காரை நிறுத்துங்கனு நாயகி சொல்லியும்  கார் ஓனர்  அதை சட்டை செய்யலை ஒரு தனிமையான  இடத்துல  நிக்குது.   கார்  ஓனர் இறங்கி  பின் கதவைத்திறந்து  உள்ளே  போறார்.10  நிமிசம்  கழிஞ்சு  காரை நாயகி  வீட்டுக்கு  அருகே  தெரு  முனையில்  டிராப்  பண்ணிட்டு  போய்டுது  கார். நாயகியின்  அம்மா  விபரம்  அறிந்து   அவள்  தலையில் ஒரு குடம் தண்ணீர்  ஊற்றிஅவ்ளோ  தான்  நீ சுத்தம்  ஆகிட்டே  அப்டிங்கறா. அதான் கதை

இந்தப்படத்துல  நாயகிக்கு அதே சம்பவம் நடக்குது , ஆனா  வீட்ல  ஆர்ப்பாட்டம் பண்ணி  ஊரைக்கூட்டி  அவமானப்படுத்திடறாங்க. கெட்டுப்போனவளுக்கு இங்கே இடம்  இல்லைனு  துரத்தி  விட்றாங்க நாயகி  ஒரு உறவுக்காரர் (  தாய்மாமா) வீட்ல தங்கி  மேல்  படிப்பு  படிக்கறா. 12  வருடங்கள்  கழித்து  ஒரு ஆஃபிஸ்ல  அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆஃபீசரா  ஒர்க் பண்றதைக்காட்றாங்க

 நாயகி  தன்னை  இந்த  நிலைக்கு ஆளாக்கின  பணக்காரரை  ஒரு எழுத்தாளர்  மூலமா அடையாளம்  தெரிஞ்சுக்கறா. அந்தப்பணச்க்காரருக்கு  ஒரு குடும்பம் இருக்கு , மனைவி 3   வாரிசுகள் . இதுக்குப்பிறகு  நடக்கும்  சம்பவங்கள்  தான் மிச்ச்ச  மீதி  திரைக்கதை

இந்த  படத்துல  குறிப்பிட்டுச்சொல்லவேண்டியது  2 அம்சங்கள் . கதாசிரியரின்  திரைக்கதை  அமைப்பும், நாயகியின்  கேரக்டர் ஸ்கெட்சும். அந்தக்காலத்துலயே  அபாரமான  புரட்சிப்பெண்ணா  வடிவமைக்கப்பட்ட  கேரக்டர்  (  பிற்காலத்தில்  வந்த  ஆர் சி சக்தியின்  சிறை  கூட இதே  கதை  அமைப்பின் சாயல் தான் , புதிய  பாதை கூட )

 நாயகியா  அபாரமான  உடல் மொழி , அட்டகாசமான  நடிப்பு  என  கலக்கி  இருந்தார்  லட்சுமி . அப்பாவிப்பெண்ணாக  காரில்  ஏறும்போது  ஒரு வித  நடுக்கம் காட்டிய  அவர் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆஃபீசராக  காட்டும் கெத்து  அழகு . மாமா, அம்மா  முன் சோபாவில் கால் மேல் போட்டு அமரும் கம்பீரமும்  அருமை / சபலிஸ்ட்  மாமாவை   லெஃப்ட்  ஹேண்டில்  டீல்  பண்ணுவதும்  , க்ளைமாக்ஸில்  பொங்குவதும்  அற்புதம் . சோர்வாகவே  இருக்கும்  அவர்  நாயகனைக்கண்டதும்  சூரியனைக்கண்ட  தாமரை மாதிரி , சூரிய காந்திப்பூ மாதிரி  நந்தியாவட்டை இதழ் போல சிரிப்பது கண்கொள்ளாக்காட்சி . க்ளைமாக்ஸில் அவர்  குடைக்குள்  மழை  பார்த்திபன்   மாதிரி  , மயக்கம் என்ன  தனுஷ்  மாதிரி , பிக்பாஸ் ஜூலி  மாதிரி  கற்பனையில்  கற்பிதம்  செய்து  வாழ்வது  உருக்கம்

 நாயகனா  ஸ்ரீகாந்த் . இவர்  தான் ஒன்றும் அவ்ளோ நல்லவன் கிடையாது  என  வெளிப்படையாக  சொல்லிக்கொல்லும் கெட்டவன்  என  கேரக்ட்சர்  ஸ்கெட்ச்  அமைக்கப்பட்டாலும்  கதாசிரியர்  அந்த கேரக்டர்  மேல்  மரியாதை அல்லது  பரிதாபம்  ஏற்படும் வகையில்  தான்  அமைத்திருக்கிறார்.  எனக்கு  அப்டி ஏதும்  பரிதாபம் வரவில்லை . ஒரு வேளை  அந்தக்கால  லேடீஸ்  ஆடியன்சுக்கு  அப்டி  உணர்வு  வந்திருக்கலாம்

சபலிஸ்ட்  மாமாவாக  வருபவர்  நடிப்பு  கனகச்சிதம். ரைட்டர்  ஏகே  வாக  வரும் நாகேஷ்  கேரக்டரை  ஜே கே  தன்னைப்போலவே  சாயலில்  அமைத்திருக்கிறார்

லட்சுமியின் அம்மா  கேரக்டர்  கூட நல்ல நடிப்பு , ஆனா  அவர் சகோதரர் , நங்கையா  போன்றவர்கள்  நடிப்பு  நாடகத்தனம் . அதே போல்  ஆஃபீசில்  லட்சுமியின்   உதவியாளராக வரும்  பெண்மணியின் நடிப்பில் , உடல் மொழியில்  ஒரு செயற்கைத்தன்மை  எட்டிப்பார்க்கிரது

 எம் எஸ் வி இசை  அருமை

 நச்  வசனங்கள்

1        இலக்கியம்  என்பது  நமக்குப்பிடிச்ச விஷயங்களைப்பட்டியல் போடுவதல்ல
2        நமக்குப்பிடித்தமானவற்றை மட்டுமே தருவது  வாழ்க்கை அல்ல
3        ஏன்  வீட்டுக்குள்ளே  இல்லாம  வெளில  வாசல்ல  திண்ணைல  இருக்கீங்க?
மழை வரும்போது  வீட்டுக்குள்ள்ளே  ஒழுகும், அதான்

4        அதுக்கப்புறம் என்னென்னமோ நடந்துடுச்சு , ஆனா  கல்யாணம்  மட்டும் நடக்கலை
5          சஸ்பென்ஸ்  கதை  நான் எழுதறதில்லை , கடைசிப்பக்கத்தை  முதல்லியே படிச்சுட்டா மேட்டர்  ஓவர்
6          ஊர்  எப்படி வேணா  பேசட்டும்
 ஒரு பொண்ணோட வாழ்க்கைல  ஊர் பேசறதுதான்  முக்கியம்

7        நீங்க  யாரையாவது  லவ்  பண்ணி  இருக்கீங்களா?  அட்லீஸ்ட்  உங்க பொண்டாட்டியையாவது
8        நம்ம  ஆத்துக்குழந்தையை  நாமளே  கரிச்சுக்கொட்டுனா ஊர் ஏன் பேசாது?
9        அவர்  யாரு?
 ஹீ   ஈஸ்  மை மேன்

10    எங்க  அப்பாவுக்கு  டீசண்ட்டான  ஃபிரண்ட்ஸ்  உண்டு  என்பதே  உங்களைப்பார்த்த  பின் தான்  தெரியும்
11     எத்தனை  புலிகள்  பசுத்தோல்  போர்த்திட்டு  திரியுதுங்கனு  எனக்கு தெரியும்
12     அம்மா, இவ்ளோ  பேசறியே , நீ அப்பா  செத்த  பி  உன் தலைமுடியை  சிரைச்சா  வெச்சுக்கிட்டே? எண்னெய் தடவிப்படியபடிய  வாரிக்கலை?
13    உன்  பேரு  வீணாக்கெட்டுப்போய்க்கிட்டு இருக்கு, கெட்டுப்போறது கூட  தப்பில்லை “வீணா” கெடுது
14      நம்மைப்பற்றி 
15    தெரிஞ்சவங்க  நாசூக்கா  இருந்தா நாமும்  அப்[டியே இருந்துக்க  வேண்டியதுதான்


சபாஷ்  டைரக்டர்

1   நாயகி   தன் அம்மாவிடம்  கோபமாக   ஒரு வார்த்தை  விட்டு விடுவார். அப்பா இறந்த பின் அந்தக்கால  லேடீஸ் போல  நீ  மொட்டையா  ஆடிச்சுக்கிட்டே? எண்னெய்  போட்டு தலை சீவி சிங்காரிச்க்கலை? என்பார். அடுத்த நாள்  காலைல  ஆளைக்காணோம், பார்த்தா  நிஜமாவே  மொட்டை  போட்டு  வந்திருப்பார்.  அதிர்ச்சி ஆன  நாயகி  கண்களில்  கண்ணீர்  வழிய   நிற்பார் . டச்சிங்கான  சீன்  ( ஆனா  அம்மா கிட்டே  ஒரு சாரி   கேட்டிருக்கலாம் )

2  ஒரு நாள்  அம்மாவும், மாமாவும்  இல்லாத  ஒரு மாலைப்பொழுதில்  தன் காதலன்  வீட்டுக்கு வரப்போகிறான் என்ற குதூகலத்தை  அவர் கண்களில் , முகத்தில் , நடையில்  காட்டும்  விதம்  அற்புதம், ஆனா கரெக்டா  அந்த  டைமில்  மாமா  வந்து  விடுவதும்  முகம் சுருங்குவதும்   வெல்டன்  டைரக்டர்  சொல்ல  வைக்கிறது


3   நாசூக்காக  அம்மாவிடம்   நீ போகும் முன் மாமாவையும்  ஊருக்கு  அனுப்பிட்டுப்போ என்பதும்  அதை  ஏற்று  அவரை  பேக்  பண்ண  அம்மா செய்யும் முஸ்தீபுகள்  அழகு


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதை  நெருடல்கள்

1        நாயகன்  ஒரு செயின் ஸ்மோக்கர் , அதுபோக குடி  வேற . ஒரு வருங்கால  கேன்சர்  பேஷண்ட்ட்டை , கிட்னி ஃபெய்லியர்  பார்ட்டியை  ஒரு சீன்ல கூட நாயகி கண்டிக்கவே இல்லையே? முன் பின்  அறிமுகம் இல்லாதவங்களைக்கூட டாக்டர் ராம்தாஸ்  கண்டிக்கறாரு. இவ்ளோ  வாய் பேசும் நாயகி  இது கூட செய்யலயே?  (  கதாசிரியர் ஜே கே வும் ஒரு தம் பார்ட்டி  தான்  , தண்ணி  பார்ட்டிதான். அதனால் கூட இருக்கலாம்)

2   கோடீஸ்வரரான  நாயகனின்  மகள்  எப்போதும்  வீட்டில் மாடர்ன்  டிரஸ்  அதாவது  அரைகுறை  டிரஸ்  தான் போட்டிருக்கா , ஆனா  காலேஜ்  ஃபேர்வெல்  பார்ட்டி அன்னைக்கு  மட்டும்  8    முழ  சேலை  கட்டி  ஒரு செண்ட்டிமெண்ட்  டயலாக் வேற  பேசுது. பொருந்தவே  இல்லை . அதே  போல நாயகி லட்சுமி கிட்டெ  ஒரு செண்ட்டிமெண்ட்  டயலாக்  பேசும்போது மட்டும்  சேலை  காஸ்ட்யூம், மத்த டைம்ல  தொடை தெரியும் அளவு சார்ட்ஸ் , பனியன்

3  நாயகியின் அம்மா  ஒரு ஸ்வீட்  கொடுத்து  இது  என்ன?னு சொல்  பார்ப்போம் எனும்போது நாயகி   ருசி  பார்த்துட்டு  பாதாம் அல்வாவா? என கேட்க  இல்லை உருளைக்கிழங்குல  பால், சர்கக்ரை  சேர்த்தது  அப்டிங்குது. அவ்ளோ  வித்தியாசம்  கூடவா  தெரியாது, உருளைக்கிழங்கு  எங்கே  இருக்கு , பாதாம்  எங்கே இருக்கு ?

4   நாயகன்  நாயகி கிட்டே  ஒரு இடத்துல  நான்  கெடுத்த  ஒரே பெண்  நீ தான் அப்டிங்கறார். இன்னொரு சீனில்  நான் உன்னை ரேப் பண்ணுனதா நினைக்கலை, உனக்கு  சம்மதம்  இருந்துச்சுனு நினைச்சேன்கறார், இன்னொரு சீன்ல  நான் லேடீஸ்  மேட்டர்ல  அயோகியன் தான், பலர் வாழ்க்கையை  சீரழிச்சிருக்கேன்கறார். குடிகாரன்  கேரக்டர்னா  எபடி  வேணா  உளறலாமா? ?

5    எனக்கும் என் மனைவிக்கும்  பல வருடங்களா  எந்த  டச்சும் இல்லைனு  ஒரு சீன்ல டயலாக்  சொல்றார்  நாயகன், அதாவது  நாயகியை  டச்  பண்ணி  12  வருசம்  கழிச்சு  பார்க்கும்போது  கடந்த  12- 15   வருசமா மனைவி  கூட டச்  இல்லைனு அர்த்தம்  வர்ற  மாதிரி . அப்போ அவர்   வாரிசுகள்  8 வயசுல  10 வயசுல  18 வயசிலனு 3  இருக்கே? அந்த  18 வய்சு  பொண்ணு  ஓக்கே,  மத்த  2ம் எப்படி  பிறந்திருக்கும்?னு  நாயகி கேட்கவே இல்லை?

6  தனக்குப்பிடிக்காத  ஆண்  தொட்டா  பெண்ணுக்கு கம்பளிப்பூச்சி  ஊறுவது  போல் அருவெறுப்பாதான்  இருக்கும் , ஆனா  நாயகி அந்த  சபலிஸ்ட்  மாமா  அந்தத்தடவு  தடவறான், பெருசா  எதிர்ப்பே   காட்டலையே? க்ளைமாக்ஸ்லதான்  பொங்குது

7  என்னதான்  கதாசிரியர்  தன் படைப்பு மேல்  ஒரு பெருமிதம்  மிக்கவரா  இருக்கட்டும், அதுக்காக  படத்துல  வர்ற  மேக்சிமம்  கேரக்டர்ஸ்  எல்லாமே  அந்த  அக்னி  பிரவேசம்  கதையை சிலாகிப்பது  போல்  காட்சி  வைத்தது  என்னமோ மாதிரி  இருக்கு

 சி.பி ஃபைனல்  கமெண்ட் -  அந்தக்காலத்தில்  வந்த  அபூர்வமான  கதை அம்சம் கொண்ட  நல்ல  படம் , பார்க்காதவங்க  பாருங்க , லேடீஸூக்கு ரொம்பப்பிடிக்கும் . விகடன்  எதிர்பார்ப்பு மார்க் 50 ( ஆக்சுவலா எவ்ளோ  கொடுத்தாங்கனு தெரில )  ரேட்டிங்  3 / 5

3