Sunday, July 05, 2020

ARTICLE 15 – (HINDI) – சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

Article 15 - Trailer | Ayushmann Khurrana | Anubhav Sinha ...
ARTICLE  15 – (HINDI) – சினிமா விமர்சனம்  (  க்ரைம் த்ரில்லர் )

தினக்கூலியா ரூ  25  வாங்கிட்டு  இருந்த   பெண் கூலித்தொழிலாளிகள்  3 பேரு ரூ 28 தரனும்னு  கூலியை  உயர்த்திக்கேட்டதற்காக  2 பேரு   கேங்  ரேப்  செய்யப்பட்டு   கொலை  செய்யப்படறாங்க . ஒரு ஆள்  மிஸ்சிங் கொலை செய்யப்பட்ட  இருவரும்  லெஸ்பியன்கள் , இதை கண்டித்த  அவங்க  அப்பா  சொல்லை  பொறுக்க மாட்டாம  தற்கொலை பண்ணிக்கிட்டாங்கனு  கேஸ்  ஜோடிக்கப்படுது. கமிஷனரா அந்த ஊருக்கு  வரும்  ஹீரோ  அந்த  கேசை  எப்படி  துப்பு துலக்கினாரு    என்பதே  கதை

ஹீரோவா ஆயுஸ்மான் குரானா. இவர்  ஹீரோவா நடிச்ச படத்தை  இப்போதான் முத டைம் பார்க்கறேன். ஆள்  செம  பர்சனாலிட்டி .  நம்ம  ஊர் சித்தார்த் சாயல்ல   இருக்கார் , போலீஸ் ஆஃபீசருக்கான   மிடுக்கு , கம்பீரம்  எல்லாத்தையும் பார்வையிலேயே  கொண்டு  வர்றார். ஓவர்  ஆக்டிங்  ஒரு துளி  கூட இல்லை

ஹீரோயின்  க்கு  அதிக  வேலை இல்லை என்றாலும் அப்பப்ப  வந்து  போறார்.  கேசில்  துப்பு  துலக்கும்போதெல்லாம்  அப்பப்ப  மனைவியிடம்  நாயகன்  அப்டேட்  பண்ணி  டிஸ்கஸ்  பண்ணுவது  புதுசா  இருக்கு

புரட்சியாளரின்  காதலியா  வரும் பெண்  யாரோ? பிரமாதமான  கண்கள் , கதை  சொல்லும்  உடல்  மொழி, இவருக்கு நல்ல எதிர் காலம்  உண்டு

வில்லன்களாக  3 பேரு. முதலில்  பிடிபடும்   வில்லன்  பெரிய  அளவில்  வாய்ப்பில்லை   2  வது  வில்லன்  பிடிபட்டதும்  செய்யும்  எதிர் வினை  திடுக்கிட  வைப்பதாக  உள்ளது . 3 வது  மெயின் வில்லன்  தான்  இயக்குநரின்  ட்விஸ்ட்  துருப்பு  சீட்டு , அசால்ட்டா நடிச்சிருக்கார்

படத்தில்  4  முக்கிய அம்சங்களை  குறிப்பிடனும், முதல்  அம்சம்  அனைவரின்  நடிப்பும்  , அவர்கள்  தேர்வும் , எந்த  கேரக்டரும்  சோடை  போகவில்லை , 2 வது நறுக்குத்தெரித்தது  போல கூர்மையான  வசனங்கள் . சமூக அவலங்களை இவ்வளவு ஓப்பனாக  சூசகமாக  பட்டவர்த்தனமாக  என பல  கோணங்களில் ஆங்காங்கே  அறைந்து  சொன்ன  விதம் . ஒளிப்பதிவும்  , கேமரா  ஆங்கிளும்   அழகு , ஹீரோ  ஜீப்பில்  வரும்  லாங்  ஷாட்   ஏரியல்  வ்யூ எல்லாமே பிரமாதம் . இசையும் , பின்னணி இசையும்  கதைக்கு பக்கபலமாய் இருக்கு

சபாஷ்   டைரக்டர்

1   ஹீரோ   சார்ஜ்  எடுத்ததில்  இருந்து  அவருக்குக்கீழே  பணி  ஆற்றும்  ஒருவர்  அவர் அப்படியாக்கும், இவர் இப்படியாக்கும் பார்த்து சார்  என  எச்சரிப்பதும்  அவரை  ஹீரோ லெஃப்ட் ஹேண்டில்   டீல்  பண்ணுவதும்

2  வில்லனை விசாரிக்க  அவர்  வீட்டுக்குப்போகனும்,  ஜாதிப்பிரச்சனை  வரும்  என்றதும்  அங்கே  இருப்பவர்கள்  அனைவரையும்  ஜாதி என்ன  என  கேட்டு  பின் அவர்  எடுக்கும்  முடிவும்

3  தூய்மைப்பணியாளர்கள்  ஸ்ட்ரைக் செய்தால்  எப்படிப்பட்ட  பாதிப்பு ஏற்படும்? என்பதை  விபரமாக காட்டியது 


4   
4   சிபி ஐ ஆஃபீசர்  நாசர்   க்ளைமாக்சில் வந்து நாயகனை கிடுக்கிப்பிடி  கேள்வி கேட்கும்போது   அவரையே மடக்கும் காட்சி  

5   ஓப்பனிங்  டைட்டில்  சாங்கில்   ஏழைகளின்  நிலையை  தெம்மாங்குப்பாடலாக  கொண்டு வந்த  விதம் , இசை  , ஹம்மிங்  கலக்கல் 

6   ஆடை   வடிவமைப்பு , ஆர்ட்  டைரக்சன் இரண்டும் அருமை 

 நச்  டயலாக்ஸ்


1   இந்தக்காலத்து  தம்பதிகள் நாம  பேசிக்கிட்டதை  விட விவாதம்  பண்ணுனதுதான்  அதிகம்


2   டியர் , நீ ஹீரோ ஆகனும்னு நினைக்கறே


 நோ. வேற  ஒரு ஹீரோ வருவான்னு காத்துட்டு  இருக்கத்தேவை இல்லைங்கறேன்


3    என்ன  சமைக்க?


  உனக்கு எது நல்லா  வருமோ அது


 எனக்கு எல்லாமே நல்லா வரும் 


4   ஹலோ  மேடம்,  போஸ்ட்,மார்ட்டம்  ரிப்போர்ட்ல  உங்க  இஷ்டத்துக்கு எதுவும்   எழுத  வேணாம் , ஃபேஸ்புக்ல வேணா  கொஞ்சம்  கவிதை   எழுதிக்குங்க , இங்கே   நான்  சொல்றபடி எழுதனும்

5  உன்னையே   உனக்கு தெரியல , என்னை  எப்படி  தெரியும்?


6   ஹையர்  ஆஃபீஸர்ஸ்  இங்கே  வருவாங்க , போவாங்க , நிரந்தரமா  இருக்கப்போறது   நாம  தான்


7   எல்லாரும்  இங்கே  சமம்னா  ராஜா என்பவர் எதுக்கு?

  ராஜா  எதுக்காக  தேவை ?


8  ஒவ்வொரு ஜாதிக்குப்பின்னாலயும்  வலி  இருக்கு , சோகக்கதைகள்  இருக்கு 

 இருக்கலாம், ஆனா கோயிலுக்குள்ளே  நுழைஞ்சா  எலும்பை எண்ணிடுவாங்க என்பது  எங்க  ஜாதிக்கு மட்டும் தான் இருக்கு 


9  பொது வெளில  உன் ஜாதி என்ன? என ஒருவரைக்கேட்பதே   சட்டப்படி தவறு 

10  யாராவ்து   குரலை  உயர்த்தினா அவனை  தேச  துரோகினு முத்திரை  குத்திடறோம்


11  மரணத்தைக்கண்டு பயப்படாதே , நாம  ஒண்ணும் இந்த  உலகத்தின்  கடைசி ஆட்கள்  இல்லை , நமக்குப்பின்னாலயும்  ஆளுங்க வருவாங்க 


லாஜிக்  மிஸ்டேக்ஸ்  , திரைக்கதையில் சில  சறுக்கல்கள்


1   பொதுவா  கழுத்தை  இறுக்கி  கொலை செஞ்சாதான்  தூக்கு  போட்டு செத்த  மாதிரி செட் பண்ணுவாங்க , ஆனா  கேங்  ரேப் செய்யப்பட்டு  கொடுமைப்படுத்தப்பட்ட  இரு பெண்களை  போஸ்ட் மார்ட்டம்  ரிப்போர்ட்  பார்க்கும் முன்பே சாதாரண கண்களுக்கே  அது  ரேப்னு தெரியுது . கிரிமினலான  வில்லன்   அந்த  கோணத்தில்  ஏன் யோசிக்கலை ? புதைச்சோ , எரிச்சோ இருக்கலாமே?  கூலி உயர்வு  கேட்டவங்களுக்கு பயம்  காட்ட  அவங்க  ஆள் காணாமப்போய்ட்டாங்க  என்பதே  போதுமே?


2  ஹீரோவின்  மனைவி  பத்திரிக்கைல  எழுதறவர்  . அவர்  மூலமா  இந்தா  கேசை  மீடியாவுக்கு வெளிச்சம்  போட்டுக்காட்டி இருக்கலாமே? ஹீரோ ஏன் அதை  செய்யலை ?


3    வில்லன்களில்  ஒருவரை  ஹீரோ   கண்டுபிடித்து  அவர் கிட்டே  பேசிட்டு  இருக்கும்போது  வில்லன் எடுக்கும் திடீர்  முடிவை  ஒரு போலீஸ் ஆஃபீசரா  யூகிச்சிருக்க வேணாமா? அஜாக்கிரதையா இருக்காரே?


4   க்ளைமாக்ஸ் ல சிபிஐ  ஆஃபீசரை  ஹீரோ  4 பேர்  முன்னாடி  மடக்கறார். நாசர்  அதை தவிர்த்து  தனி அறையில் விவாதம் செஞ்சிருக்கலாமே?


 சி.பி ஃபைனல்  கமெண்ட்  . இயக்குநர்  பா  ரஞ்சித்  க்ரைம்  த்ரில்லர்  எடுத்தா   எப்படி  இருக்கும்? அது மாதிரி  ஆனா அவர்  படங்களை  விட மிகத்தரமா  இருக்கு ,  டோண்ட்  மிஸ்  இட்  , ரேட்டிங்   4 / 5