Thursday, July 02, 2020

NANNA PRAKARA ( KANNADAM) -2019 - சினிமா விமர்சனம் (மிஸ்ட்ரி க்ரைம் த்ரில்லர் )




ஒரு புதுமுக இயக்குநர்  தன் முதல் படத்துலயே  வித்தியாசமான  க்ரைம்  த்ரில்லர்   சப்ஜெக்ட் டச் பண்ணது கூட பெரிய விஷயம் இல்லை . படத்தோட  ஓப்பனிங்க்ல டைட்டில் கார்டுல  தன் பேரைப்போடாம இயக்குநர்  கே பாக்யராஜ் பாணில  படம்  ஓடி 40 நிமிசம் கழிச்சு   பிரமாதமான  டர்னிங்  பாய்ண்ட்  வர்றப்போ  கெத்தா   கதை , திரைக்கதை , வசனம் , இயக்கம்னு  தன் பேரைப்போடறார்னா எவ்ளோ  தன்னம்பிக்கை இருக்கனும்? சும்மா  தியேட்டர்ல  பொறி பறந்திருக்கும்  இல்ல?


 ஹீரோ  ஒரு போலீஸ்   ஆஃபீசர் . ஒரு  விபத்து  கேஸ். கார்ல  ஒரு பொண்ணு   இறந்து  கிடக்கு . கார்  உருத்தெரியாம  சிதைஞ்சு  கிடக்கு . நெம்பர்  பிளேட்  இல்ல, டிக்கில  இன்னொரு லேடியோட  டெட்  பாடி  கிடக்கு .  அது  வேற  கேஸ் , இது  வேற  கேஸ்  இந்த  இரண்டு  கேஸ்க்கும்  என்ன சம்பந்தம்?  இந்த  உருவாக்கப்பட்ட  விபத்தின் பின்னணி  என்ன? என்பதை  ஹீரோ  கண்டுபிடிப்பதே  கதை 


 கேட்கும்போது   ரொம்ப சாதா  கதையா  தெரிஞ்சாலும்   திரைக்கதை  , க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  எல்லாம்  நல்லா  வந்திருக்கு. 


 ஹீரோவா   கிஷோர் . நல்ல  போலீஸ்  கம்பீரம்.  ஓப்பனிங் ல  ஒரு இண்ட்ரோ  ஃபைட்  , பின் அவர்  மனைவியுடன்  ஓப்பனிங்  டூயட்   இந்த  இரண்டை  மட்டும்   கடந்து  போய்ட்டா  படம்  விறு  விறுப்பு . விசாரனையில் காட்டும்  மிடுக்கு  ஆக்சன்  , ஃபைட்  காட்சியில்  கொஞ்ச,ம் கம்மி 


  ஹீரோயினா  , மனைவியா , டாக்டரா  ப்ரியாமணி . பருத்தி  வீரன் , சாருலதா  வில்  பிரமாதமான   நடிப்பை  வழங்கியவருக்கு   இது  யானை பசிக்கு சோளப்பொறி  கதை  தான்


இந்த  க்ரைம்  கதைல  ஒரு செண்ட்டிமெண்ட்  லவ் ஸ்டோரி யும்  இருக்கு , அந்த  போர்சன் மட்டும்  கொஞ்சம் ஸ்லோவாதான்  இருக்கும் 


 ஒளிப்பதிவு , இசை , எடிட்டிங்  எல்லாம் நல்ல  தரம் 

 அமேசான்  பிரைமில்  இருக்கு 


 சபாஷ்  டைரக்டர் 


1   கமல் - கிரேசி மோகன்  கூட்டணில  ஆள் மாறாட்டக்காமெடி  பல படம்  பார்த்திருக்கோம்,  இது ஒரே பேருள்ள   2  பெண்கள்  இவங்களுக்கு நடந்த   சம்பவங்கள் , இருவருக்கும் சம்பந்தம்  இல்லைன்னாலும்  எப்படி கதைல சம்பந்தப்படுத்தப்படுது என்பது   ஆச்சரியம்


2    தேவை  இல்லாத ஆணி என நான் நினைத்த ஓப்பனிங்  ஃபைட்  சீனை
க்ளைமாக்சில் கனெக்ட்  பண்ணிய விதம்


3   படம்  பூரா  சம்பந்தம்  இல்லாம ஆங்காங்கே  வரும்  துண்டு துண்டு  காட்சிகளை  கடைசியில்  நியாயப்படுத்திய  விதம்


 நச்  டயலாக்ஸ்


1  நாம  யாருக்காவது  உதவி செஞ்சா நமக்கு யாராவது  உதவி செய்வாங்க . இது ஒரு செயின் மாதிரி 

2   சொந்தத்தொழில்  செய்யறவனை  ஒரு கம்பெனில  யார் கிட்டேயோ கை கட்டி வேலை பாருன்னா பார்ப்பானா? 


3   டீக்கடை  வெச்சிருக்கறதால  கேவலமாப்பேசாதீங்க . ஒரு நாட்டோட   பிரதமர் , மாநிலத்தோட  முதல்வர்  டீ கடை வெச்சிருந்து  முன்னேறியதை  கண் கூடா பார்த்து இருக்கோம்


  லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில ஆலோசனைகள் 


1  விஸ்மயா   நெ 1  ஒரு ஜாலி பேர் வழி . காதலனுடன்  பப்க்கு போவது , ஜாலியா  இருப்பது என  ஏனோ  தானோ  கேரக்டரா  அவரைக்காட்டிட்டு  திடீர்னு  காதலனிடம்  நான்  மாசமா  இருக்கேன் , மேரேஜ் பண்ணிக்கோ  என கறார்  காட்டுவது நம்பும்படி  இல்லை .இத்தனைக்கும் அது சின்சியர்  லவ் போலவே  காட்டலை , ஒப்புக்குச் சப்பாணி லவ் மாதிரி தான்  காட்றாங்க 


2   பொதுவா மாடர்ன்  பொண்ணுங்க  மாசம் ஆன 2 வது மாசத்துலயே  ஜாக்கிரதை ஆகி  கலைக்க முடிவு எடுப்பாங்க அல்லது கல்யாணம் பண்ணுனு பிரச்சனை பண்ணுவாங்க , இவர்   5  வது மாசத்துல தான் பிரச்சனை  பண்றார். . காதலனுக்கு  டெய்லி சந்திக்கறவர்  டவுட்  வந்து  கலைனு சொல்லவும் இல்லை 


3   வாக்குவாதம்., கை கலப்பில்  ஒரே ஒரு பளார் ல ஆள் அவுட் என்பது நம்பும்படி  இல்லை அவ்ளோ பெரிய  அபார்ட்மெண்ட்ல   சிசிடிவி கேமரா வை எல்லாம் மிஞ்சி   பாடியை  காருக்கு  கொண்டு  போவது நம்பும்படி இல்லை 


4   விஸ்மயா  நெ 2   தன் அம்மாவை  ஒரு சமயத்தில்  காப்பாற்றினார்  என்பதற்காக   அவருக்கு  ஒருவர் தன்  கிட்னியை  தானம் செய்ய முடிவெடுப்பதும்  ஓவரா  இருக்கு , அதனால நாயகிக்கு அவர்  மேல  காதல் வருது என்பதெல்லாம்  சரி , ஆனா  ரொம்ப  பழகி  அட்டாச்மெண்ட் ஆன பின்புதான்  ஒருவர்  தன் கிட்னியை  தானம் செய்ய  முன் வருவார் .  ரொம்ப ரிஸ்க் ஆச்சே? ரத்த தானம்  மாதிரி அல்ல 


5   போதை  கும்பல் 4  பேர் ( 2 ஆண்  2 பெண் )  அபார்ட்மெண்ட்டில் ரகளை  பண்ணுனதை  விஸ்மயா நெ2    போலீசில்  புகார்  கொடுத்தவர்  என்பதற்காக  என்னமோ  ஜென்ம  விரோதி மாதிரி  ட்ரீட்  பண்ணுவது  ஓவர், போலீசின்  சந்தேகப்பார்வை தங்கள் பக்கம்  திரும்பும் என்பது தெரியாதா?


6  கொரியர்  டெலிவரி  பொதுவா  காலை 10 -  மாலை 6 க்குள்  முடிஞ்சிடும், நைட்  டைம்  எப்டி  கொரியர்  மேன்  வர்றார்?


 சி.பி  ஃபைனல்  கமெண்ட்  .  ஃபேமிலியுடன்  பார்க்கத்தகுந்த   க்ரைம்  த்ரில்லர் தான் , செம ஸ்பீடு எல்லாம் இல்லை .  ஆனா  பார்க்கலாம் , அமேசான்  பிரைம்ல  கிடைக்குது ., ரேட்டிங்   3 /. 5