Friday, June 26, 2020

KAPPELA ( மலையாளம்) 2020 - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் த்ரில்லர்)

What are the best Malayalam movies in 2020? - Quora

இந்தப்படம் பார்த்த பலரும்  முதல்  20 நிமிடங்கள் பார்த்துட்டு  12 / 7 /1996ல்  ரிலீஸ் ஆன காதல்  கோட்டை , 12/2/1997 ல்  ரிலீஸ் ஆன காலமெல்லாம் காதல் வாழ்க  டைப்பில்  நாயகனும் நாயகியும்  பார்க்காமயே காதலிக்கும் கதை அப்டினு நினைச்ட்டாங்களாம். நான்  கூட இடைவேளை  ட்விஸ்ட்டா   20/4/2003 ல் ரிலீஸ் ஆன  புன்னகை பூவே  டைப்பில்   இருக்கும் போல என  தவறாக கணித்து விட்டேன் , ஆனா சாதாரண லவ் ஸ்டோரியா  ஆரம்பிச்ச  கதை த்ரில்லர் மூவியா இடைவேளைக்குப்பின் தான்  பறக்குது திரைக்கதை

படத்தோட விமர்சனத்துக்கு போறதுக்கு முன்னால நாயகியா நடிச்ச அன்னாபென்( டாஸ்டிக்) பற்றி பார்த்துடுவோம்.மோஸ்ட் அண்டர் ரேட்டட் ஹீரோயின் ஆஃப் இண்டியன் சினிமா யார்?னு யாராவது உங்க கிட்டே கேட்டா  கண்ணை மூடிக்கிட்டு அன்னா பென் அப்டினு சொல்லிடுங்க . பிரமாதமான ஆக்டிங் , சின்ன சின்ன  சீன்களில் கூட க்யூட் எக்ஸ்பிரசன் தரும் குட்டி தேவதை . ஆடை விஷயத்தில் நம்ம ஊர் நதியா , ரேவதி , சுஹாசினி மாதிரி கண்ணியம் காப்பவர் , இவர் நடித்த கும்பாளிங்கி நைட்ஸ் சக்கை போடு போட்டது , இவர் நாயகியாக  மெயின்  ரோலில்  முழுக்க முழுக்க இவர் நடிப்பை மட்டுமே நம்பி வெளி வந்த த்ரில்லர்  மூவியான  ஹெலன் ( குவாரண்ட்டைன் த்ரில்லர் )  பலரின் பாராட்டுதல்களையும் பெற்றது 

சரி , படத்தோட  கதை என்ன?  நாயகியோட அம்மா ஒரு டெய்லர்  கஸ்டமருக்கு  ஃபோன் போட்டு ஜாக்கெட் அளவு  கேட்கையில் ராங் நெம்பர்  போய்டுது. ஆட்டோ  டிரைவரான  ஹீரோ அட்டெண்ட் பண்றார்.  அதுக்குப்பின்  அடிக்கடி பேசி  அந்த  நெருக்கம் காதலா மாறுது. வீட்ல  மாப்ளை  பார்க்க ஆரம்பிச்ட்டாங்க . வீட்ல லவ் மேட்டரை  சொல்லலாம்னா நாயகனை இன்னும்  நேர்லயே பார்க்காம எப்படி? நேர்ல மீட் பண்ண முடிவெடுத்து  கோழிக்கோடு பஸ் ஸ்டேண்ட்  தான் மீட்டிங்  பாய்ண்ட்னு முடிவு  பண்ணிடறாங்க . குறிப்பிட்ட நாளில்   கோழிக்கோடு பஸ்ஸ்டேண்டில்   இருவரும்  வந்து  இறங்கும்போது  ஹீரோ  செல்ஃபோன்  எவனாலோ பிக் பாக்கெட் அடிக்கப்பட்டு  வில்லன்  கைல வந்து  சேர்ந்துடுது 


இதுவரை சாதாரண படமா  ட்ராவல்  பண்ணிட்டு இருந்த படம்  இதுக்குப்பின் தான்  திரைக்கதை ல  வித்தை காட்டுது, வில்லன்  என்ன செஞ்சான்?  ஹீரோயின்   வில்லனிடம்  ஏமாந்தாரா? ஹீரோ ஹீரோயின்  சேர்ந்தாங்களா? இல்லையா?  என்பதை எல்லாம்  நெட்  ஃபிளிக்சில் காண்க   கடைசி  30 நிமிடங்கள்   வேற  லெவல் 


ஹீரோவா  கும்பாளிங்கி நைட்ஸ் பட  ஹீரோதான்  இதிலும்  ஹீரோ , அப்பாவி  முகம்  காட்டும்  இவர் மிக சுலபமாக  மனதில்   பதிகிறார், காதலியை  சந்திக்கும் டைமில்  ஒரு  எமர்ஜென்சி  கேஸ் வர ஆட்டோவில் அழைத்து செல்லும்  காட்சியில்  மதிப்பில்  உயர்கிறார்

  ஹீரோயினா அன்னாபென்.  ஒரு  பெரிய  ஜவுளிக்கடை  சுவர்  ஓவிய விளம்பரத்தில் தன் படம்  உபயோகப்படுத்தப்பட்டிருக்கறதைப்பார்த்து   வெட்கப்பெருமிதம்  காட்டும்  சீன் ஸ்மார்ட் . அப்போது  உடன் வரும்  தோழிகளோடு ஒரு நடை  நடந்து  வருகிறாரே? அருமை . இருவர்  படத்தில்  ஐஸ்வர்யா ராய்   ஒரு அகம்பாவ நடை பயில்வாரே அதற்கு ஜஸ்ட் ஆப்போசிட்

 பின் பாதியில்  கான்வோ வில் மங்களாபுரம்  பேர்  கேட்டதும் நொடியில் அவர் முகம் மாறுவதும்  பின் முகம் இறுகுவதும்  பின்னி பெடல் எடுக்கும் நடிப்பு 


 காதலனுடன்  டெலிஃபோனில்  உரையாடும்போது , அம்மாவுக்கு  டிமிக்கி குடுக்கும்போது  என அவர்  முக பாவனைக்குவியல்களின்  பட்டியலை அடுக்கிட்டே போகலாம், இதெல்லாம் உனக்கு அடுக்குமா?னு யாரும்  கேட்கும் அபாயம் இருப்பதால் அன்னாபென்  புராணத்தை  முடிச்சுடுவோம் .


 வில்லன்  ஓப்பனிங்  சீன்  கலக்கல் , பெட்டிக்கடையில் ரவுடித்தனம்  பண்ணும்போது  இவரும்  மல்லுக்கட்டுவது   செம . இவருக்கும் ஒரு காதலி  இருப்பதும் அவருடனான  உரையாடல்களும் மிக யதார்த்தம் 

படத்தில்  வசனங்களுக்கு  பெரிய  முக்கியத்துவம் தராததற்கு  இயக்குநரிடம்  இருந்த  ஒரே நம்பிக்கை  பின் பாதி  ஜெட்  வேக  திரைக்கதை  படத்தை காப்பாற்றிடும்  என்பதே 


சபாஷ்  டைரக்டர்


 1  ஹீரோ  ஹீரோயினை  சுற்றியே நகரும்  கதையில் வில்லன் வந்ததும் டக்னு அவருக்கு  ஒரு ஃபிளாஸ்பேக்  குடுத்து அவர்  கதையை சொல்ல  ஆரம்பிப்பது 


 2   ஹீரோயினை  பெண் பார்க்க  வரும் மாப்பிள்ளையின் அம்மா  ஹீரோயின்  வீட்டுக்குள்  நுழையும்போதே  காட்டும்  வில்லித்தன்ம்


3    கதைக்களமான  கேரளா - ராகுல்  தொகுதி  வைய நாடு அழகு  கேமராவால்  படைக்கப்பட்ட விதம் அருமை 

4  மொகம்மது முஸ்தபாவின் இயக்கத்திம்  முன் பாதி  ரொமாண்டிக் மியூசிக்கல்  கலக்கல்  பின் பாதியில்   ஸ்பீடு  இசை, பிஜிஎம்  


5  வில்லனின் கேரக்டர்  ஸ்கெட்ச்  அபாரம் 


6  ஒளிப்பதிவு , இசை  எடிட்டிங்  போன்ற   தொழில்  நுட்பங்கள்  அருமை 





லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1  நாயகியை    சிவப்பு விளக்கு பகுதியில் விற்க  முடிவெடுக்கும்  வில்லன்  மடத்தனமாக  அவர் முன் அப்படி ஓப்பனாக  பேசுவாரா? 

2  அந்த  புரோக்கர்  லேடி   நாயகி  முன்பே   வில்லனிடம்  கச முச என  கமெண்ட்  அடிப்பது  உறுத்தல் 


 சி.பி  ஃபைனல்  கமெண்ட்  =   பெண்களுக்கான  விழிப்புணர்வுப்படம் , மிஸ்  பண்ணாம  பார்த்துடுங்க , த்ரில்லர்  மூவி  ரசிகர்களும்  மிஸ்  பண்ணிடாதீங்க ,  ரேட்டிங் -  3 / 5