நம்ம ஜனங்க கிட்டே ஒரு கெட்ட பழக்கம் உண்டு. வாழும் காலத்தில் ஒரு சாதனையாளனை , சிறந்த படைப்பாளியை , நல்ல தலைவனைககண்டுக்க மாட்டாங்க . அவர் இறந்த பின் தான் அநியாயத்துக்குக்கொண்டாடுவாங்க . இன்னொரு கோணத்தில் சொல்லனும்னா கமலின் அன்பே சிவம், குணா மாதிரி படங்களை ரிலீஸ் டைம்ல பார்க்காம அதை ஃபெய்லியர் ஆக்கிட்டு 20 வருடங்கள் கழித்து டி வி ல பார்த்து அடடே, செம படமா இருக்கே? இது ஏன் ஓடலை?னு நம்ம கிட்டேயே கேள்வி கேட்பாங்க . அந்த மாதிரி தான் வாழும் காலத்தில் கண்டுக்கப்படாத அல்லது மக்களால் கொண்டாடப்படாத ஒரு கலைஞன் பற்றிய கதை
அய்யா ஆதிமூலம் ஒரு நாடக நடிகர் அந்தக்காலத்துல இருந்து நாடகத்தில் நடிச்ட்டு வர்றார். சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லாதவர்/ முன்பு மாதிரி நாடகங்களுக்கு பொது மக்களிடம் வரவேற்பு இல்லை , கொஞ்சம் கொஞ்சமா நாடகக்கலை அழிஞ்சிட்டு வருவதை கண்கூடாகக்கண்டு மனம் வருந்துகிறார்
பர்சனல் லைஃப்லயும் ஒரு பிராப்ளம் , மகள் வயிற்றுப்பேரனுக்கு ஒரு ஆபரேசன் பண்ணனும், கைல பணம் இல்லை , இந்த வருத்தங்கள்ல அவர் மேடைல நாடகத்துல நடிச்ட்டு இருக்கும்போதே உயிர் துறக்கிறார்
உடலால் தான் அவர் இறப்பை சந்திக்கிறார். உணர்வால் உயிரோடதான் இருக்கார். அவரோட ஆன்மா அங்கேதான் சுத்திட்டு இருக்கு . மேடை நாடகம் நடக்கும்போது யாராவது ஒரு நடிகர் உடலில் புகுந்து அருமையா நடிக்க வெச்சு கலக்கறார்
அப்போ அந்த நாடகக்குழுவில் இருக்கும் ஒருவருக்கு சினிமா வாய்ப்பு வருது. ஷூட்டிங் ல ஆதிமூலம் அய்யாவின் ஆன்மா அவரது உடலில் புகுந்து பிரமாதமா நடிச்சு பேர் வாங்கித்தருது. இந்த விஷயம் மக்களிடையே பரவி அவரது ஆன்மா நடிக்கும் படம் என விளம்பரப்படுத்தப்பட்ட படங்களுக்கு நல்ல மார்க்கெட் கிடைக்குது
புகழின் உச்சிக்குப்போன ஹீரோ அய்யா ஆதிமூலத்தின் தயவால் தான் தான் இந்த நிலைக்கு வந்தோம் என்பதை மறந்து ஆணவத்தால் மாமூல் மசாலா படத்தில் நடிக்க ஆரம்பிக்கறார். அதுக்குப்பின் என்ன ஆச்சு என்பதே கதை
ஹீரோவா விஜய் சேதுபதி. முதல் 37 நிமிடங்கள் மட்டுமே இவரது போர்சன், கி, ராஜ நாராயணன் கெட்டப் இவருக்கு , சிட்டிஜன் அஜித்க்கு மேக்கப் எடுபடாதது போல இதிலும் சில காட்சிகளில் ஒப்பனை சுமார் ரகமே
இவர் வ்ரும் காட்சிகள் மிக மெதுவாக நகர்வதும் ஒரு பின்னடைவு தான்
அவரது இறப்புக்குப்பின் கதை வேகம் எடுக்கிறது . மவுலியின் அனுபவம் மிக்க நடிப்பு கை கொடுக்குது
ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆதிமூலம் ஆன்மா வராத காட்சிகளில் நடிகர் நடிப்பு வராமல் பம்முவது கலக்கலான காட்சிகள் , ஒரே ஷாட் 2 நிமிச வசனம் கூ ட நடிக்க முடியாமல் தடுமாறுவது அருமை. 10 டேக்குகளிலும் 10 விதமான நடிப்பை வழங்குவது சபாஷ்
ஸ்வாதி முத்யம் ( சிப்பிக்குள் முத்து)படத்தில் நாயகன் கமல் கதைப்படி நடனம் ஆடத்தெரியாதவர் , ஆனால் முறைப்படி நடனம் கற்றவர் . நடனம் தெரியாதவர் ஆடுவது போல அவர் ஆடும்போது தியேட்டரில் விசில் பறக்கும். அந்த மேஜிக் தான் இங்கே நிகழ்ந்திருக்க வேண்டும், ஆனால் ஆல்ரெடி ஜனங்களால் அறியப்பட்ட நல்ல நடிகர் இதில் நடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும், புதுன்முகம் என்பதால் எடுபடலை போல
க்ளைமாக்சில் இன்னொரு நடிகர் கோர்ட்டில் நடித்து தன்னை ப்ரூஃப் பண்ண வேண்டிய காட்சியில் நடிக்க முடியாமல் தடுமாறுவதும் அருமை.
க்ளைமேக்ஸ் கன கச்சிதம்
சபாஷ் இயக்குநர்
1 போஸ்டர் டிசைன்களிலும் , மார்க்கெட்டிங்க்களிலும், ப்ரமோக்களிலும் விஜய் சேதுபதிதான் ஹீரோ என்பதை நம்ப வைத்த சாமார்த்தியம்
2 கோர்ட் காட்சிகளில்; இயக்குநர் மகேந்திரன் ஜட்ஜ் ஆக வரும் காட்சிகள் சுவராஸ்யம், மிக இயல்பான நடிப்பு அவருடையது
3 நாடக காட்சிகளில் 1948 லவகுசா 1985 , 1970 , 2013 அவுரங்க சீப் என தேர்ந்தெடுக்கப்பட்ட நாடகக்கட்சிகள் அருமை
நச் வசனங்கள்
1 ஜனங்க முன்னாடி நின்னு நடிக்கறப்போ பாராட்டோ , திட்டோ உடனே கிடைச்சுடுது, மனநிறைவு இது
2 அரசாங்கத்துக்குப்பிடிக்காத ஆட்களுக்கு ஏன் உதவி செஞ்சீங்க?
எனக்குப்பிடிச்சிருக்கே?
3 நமக்காகத்தான் அரசாங்கம், அரசாங்கத்துக்காக நாம இல்லை
4 இமயத்தின் உச்சியில் இருந்து பார்க்கும்போது கண்ணுக்குத்தெரிவது எல்லாம் பள்ளத்தாக்குகள் \
5 வரும்போது வெறும் கையுடன் வந்தோம், போகும்போது பாவ மூட்டைகளுடன் போறோம்
6 மனிதர்களைக்கொலை பண்ரது மட்டும் கொலை இல்லை, உண்ர்ச்சிகளைக்கொலை பண்றதும் கொலை தான்
7 நீங்க சொல்லிக்குடுத்த மாதீர் பண்ணிடவா?
நான் சொல்றதைப்பண்ண நீ எதுக்கு ,? நீயா பண்ணு
லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1 விஜய் சேதுபதிதான் ஹீரோ என்பது போல ப்ரமோ பண்ணுனது ஓப்பனிங் ஆடியன்சை வரவழைத்த வகையில் பலம் எனில் வந்த ஆடியன்சை ஏமாற்றம் பெற வைத்த விதத்தில் பலவீனமே .
2 பொதுவாக 45 வயதில் வழுக்கை விழ ஆரம்பித்து விடும், முடியும் உதிரத்தொடங்கும்., ஆனா ஹீரோவுக்கு 60 வயதாகியும் இந்த இரண்டு சம்பவங்களும் நடக்கவே இல்லை முழுசா நரைச்ச முடி ஆனா அவளோ அடர்த்தி சாத்தியமே இல்லை
3 இயக்குநர் மவுலி மிக்க திறமை மிக்க ஒரு நடிகர். காமெடி டயலாக் டெலிவரியில் கலக்கியவர் , அவ்ளோ அனுபவம் மிக்க ஒரு நடிகர் படம் பூரா ஒரே மாதிரி சோக முக பாவத்தை டெம்ப்ளேட்டாக வைத்திருப்பது ஏனோ?
4 க்ளைமாக்ஸ் கோர்ட் சீன்கள் அந்த நடிகர் அவர் இஷ்டத்துக்கு அனைவரையும் அவமானப்படுத்துவது அபத்தம். அப்டி எல்லாம் கோர்ட்ல பேசவே முடியாது
5 பாட்ஷா , விஸ்வரூபம் மாதிரி ட்ரான்ஸ்ஃபர்மேஷன் சீன்கள் வைத்திருக்கலாம், அதாவது நடிப்பே வராத நடிகர் தானா நடிக்கும்போது எப்டி நடிச்சார்? சொதப்பினார்? என்பதையும் ஆதிமூலம் அய்யா ஆன்மா புகுந்தபின் எப்படி கலக்கினார் என்பதையும் ஒரு சேரக்காட்டி இருந்தால் அரங்கம் அதிர்ந்திருக்கும், ஏனோ அப்டி சீனே வைக்கலை , மிஸ் பண்ணிட்டாங்க
சி.பி ஃபைனல் கமெண்ட் - விஜய் சேதுபதி படம் பார்க்கறோம்னு நினைக்காம ஒரு நல்ல படம் பார்க்கறோம்னு நினைச்சுப்பார்த்தா இந்தப்படம் பலருக்கும் பிடிக்கும் , ரேட்டிங் 3 / 5
டைட்டில் விளக்கம்
செத்துங் கொடுத்தான் சீதக்காதி` என்று இன்றும் தமிழ் உலகில் வழங்கிவரும் முதுமொழி ஒன்றே அவரின் வள்ளன்மையை உலகுக்குப் பறைசாற்றும். இவரின் சிறப்பே, வறுமையில் வாடுவோர், செல்வர், புலவர்கள்,பாமரர் போன்ற அனைவருக்கும் -சாதி,மதம், இனம் பாராது வந்தோர்க்கெல்லாம்- இல்லையென்னாமல் வாரிவாரி வழங்கியமையே.
அப்படிப்பட்ட சீதக்காதி போல தான் இறந்த பின்னும் தன் குடும்பத்துக்கு பொருளையும், தன் நாடகக்குழுவுக்கு நடிப்பையும் வழங்கினார் என்பதால் இந்த டைட்டில்