ஃபேஸ்புக்ல பிரபலமான 2 ரைட்டர்ஸ் இருந்தாங்க . ஒரு நாள் ஒருத்தர் இன்னொருத்தரைத்தாக்கி ஒரு சர்ச்சைக்குரிய பதிவு போட்டாரு. அது பரபரப்பா பேசப்பட்டு வைரல் ஆச்சு . எங்கே பார்த்தாலும் இதே பேச்சு. 4 நாட்கள் கழிச்சு இவரு அவருக்கு பதிலடி கொடுத்து ஒரு பதிவு போட்டாரு . அதை விட இது காரசாரமா இருந்தது . இதுவும் ஹிட் ஆகிடுச்சு . இரு தரப்பு ஆட்களின் வாசகர்களும் கமெண்ட்ஸ்ல மாறி மாறி சண்டை போட்டுக்கிட்டாங்க . மாலைமலர் ல கூட இது நியூஸா வந்துச்சு
3 நாட்கள் கழிச்சு அந்த 2 ரைட்டர்சும் ஒண்ணா தண்ணி அடிச்ட்டு சலம்பல் பண்ணிட்டு இருந்ததை சிலர் பார்த்து அதை வீடியோ எடுத்து பதிவு போட்டாங்க . விசாரிச்சா எல்லாமே டிராமா தான் அப்டின்னும் ஒரு பப்ளிசிட்டிக்குத்தான் இப்டி செஞ்சதாவும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாங்க கடைசில வடிவேல் காமெடி மாதிரி ஆகிப்போச்சு . என் குடும்பத்தை அவன் கேவலமாப்பேசுவான், அவன் குடும்பத்தை நான் கேவலமாப்பேசுவேன் கணக்கா..
சரி , நம்ம விமர்சனத்துக்குள்ளே போவோம் . ஒரு பெரிய அபார்ட்மெண்ட்ல ஒரு செக்யூரிட்டி செத்துக்கிடக்கறாரு . தூக்குப்போட்டு தற்கொலை .
நம்ம ஹீரோயின் க்ரைம் பிராஞ்ச் ல ஒர்க் பண்ணுது. இதுதான் அவரோட முதல் கேஸ். அதனால ரொம்ப நுணுக்கமா இந்த கேசை விசாரணை பண்ணுது. இது தற்கொலை இல்லை , கொலை தான்னு ஹையர் ஆஃபீசர் கிட்டே ரிப்போர்ட் கொடுக்குது. அவரு அட ஏம்மா கேசை க்ளோஸ் பண்ணாம இழுத்துட்டுப்போறே?ங்கறாரு
அபார்ட்,மெண்ட் ஓனரை விசாரிக்கப்போறாரு. அப்போ எதேச்சையா அந்த ஓனரோட மகள் கடத்தப்பட்டிருக்கா அப்டினு தெரியுது. அபார்ட்மெண்ட் ல தற்கொலை செஞ்சதா சொல்லப்படும் செக்யூரிட்டி யின் மரணம் , ஓனரின் மகள் கிட்நாப் கேஸ் இந்த இரண்டுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கறதா நினைச்சு கேசை இன்வெஸ்டிகேட் பண்றாரு .அதுதான் மிச்ச மீதி திரைக்கதை
நித்ய ஸ்ரீ தான் நாயகி . கம்பீரமான தோற்ரம் என்றாலும் அவரிடம் ஒரு விஜயசாந்தி ( வைஜெயந்தி ஐபிஎஸ்) , ரம்யா கிருஷ்ணன் ( படையப்பா, பாகுபலி) இவங்க கிட்டே இருந்த தோரணை மிஸ்சிங் . அவரோட முக அழகு கம்பீரத்தை மறைக்குது. அதுவும் நல்லதுக்குதான். அவரோட காஸ்ட்யூம்ஸ் எல்லாம் ரொம்பவே அழகு
கடத்தப்பட்ட பொண்ணோட அம்மாவா வருபவர் நல்ல நடிப்பு . அவருக்கு பிபி அதிகமாகி தன் நிலை இழக்கும் காட்சிகளில் எல்லாம் தத்ரூபமான நடிப்பு
அப்பாவாக வருபவர் இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம் .
லோ பட்ஜெட் படமாக இருந்தாலும் ஒளிப்பதிவு தரமா இருக்கு . எடிட்டிங் கச்சிதம் . பின்னணி இசை நல்லாருந்தது , இன்னும் பெட்டரா பண்ணி இருக்கலாம் .
க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராதது. ஆடியன்ஸ் யூகிக்காத ஆளை குற்றவாளியாகக்காட்டி அதை நம்ப வைப்பதில் தான் ஒரு இயக்குநரின் வெற்றி இருக்கிறது. அந்த வகையில் இது அவருக்கு ஒரு வெற்றிப்படமே
சபாஷ் இயக்குநர்
1 ஹீரோயின் டென்சனா இருக்கும்போது எல்லாம் தன் மாமாவோடு செஸ் விளையாடுவார் என்பது புதுசா இருந்தது. ஏன்னா செஸ்சே ஒரு தலைவலி கேம் தான் . யோசிக்கும்போது டென்சன் ஆகும்.,
2 வில்லனின் அடியாள் கேரக்டர் ஸ்கெட்ச் கன கச்சிதம், மவுத் கேன்சர் வந்த பின்பும் அவரால் பீடியை வாயில் வைத்தால் தான் ( குடிக்க தேவை இல்லை) பேசவே முடியும் என விளக்குவது ஆச்சரியமான தகவல்
3 போலீஸ் , கிட்நாப் பண்ண ஆள் இருவருக்கான சேசிங் சீனில் கிட்நாப்பரை மிஸ் செய்த போலீஸ் அங்கே இருக்கும் சிறுவர்களிடம் ஏம்ப்பா சிரிக்கறீங்க? என கேட்கும்போது ஒளிந்து இருக்கும் கிட்நாப்பரை காட்டிக்கொடுப்பது நகைக்க வைத்தது
4 குற்றவாளிகள் திருடப்பட்ட மொபைல் ஃபோனில் இருந்து பேசறாங்க அல்லது ஹாக் பண்ணப்பட்ட நெம்பரில் இருந்து பேசறாங்க என்பதும் அதைத்தொடர்ந்து வரும் சைபர் க்ரைம் சமாச்சாரங்கள் ரசிக்க வைத்தது
நச் டயலாக்ஸ்
1 நமக்கு சாதாரணமா தோணும் விஷயம் சம்பந்தப்பட்டவங்களுக்கு பெருசா தோணும் / முக்கியமானதாத்தோணும்
2 நம்ம பர்சனல் லைஃபையும் , ப்ரொஃபஷனல் லைஃபையும் போட்டுக்குழப்பிக்கக்கூடாது , இது தனி அது தனி ரெண்டையும் பேலன்ஸ் பண்ணிக்கனும், இல்லைன்னா சிரமம் தான்
3 ஒவ்வொரு டைம்லயும் செஸ்ல என்னை ஜெயிச்சுடறே, ஆனா கேஸ்ல ஏன் ஜெயிக்க முடியல ?
உங்க மூவ் என்ன?னு எனக்கு அத்துபடி , ஆனா குற்றவாளி மூவ் என்னனு தெரியல, அவ்வளவு ஏன்? குற்றவாளியே யார்னு தெரியல
4 ரவுண்ட் ராபின் அப்டினு செஸ் ல ஒரு கேம் இருக்கு. குறிப்பிட்ட அந்த பொசிஷன்ல உன் கிட்டே 10 வெவ்வேற பிளேயர்ஸ் விளையாடுவாஙக் . 10 வெவ்வேற மூவ் கொடுப்பாங்க . நல்லா ட்ரெய்ன் ஆகிடுவே...
5 சுயநலம் என்பது மனித இயற்கை . சுயநலம் இல்லாதவங்க யாருமே இல்லை , அம்மா பால் தருவது குழந்தையின் முகத்தில் சிரிப்பை வரவழைக்க , சுயநலம் இல்லாம எதுவும் இல்ல .
6 சிலரோட சுயநலங்களால அவருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் நல்லதும் நடந்திருக்கு. சில டைம் கெட்டதும் நடக்கும்
7 என் கிட்டே குற்ற உணர்ச்சி எதுவும் இல்லைனு சொல்றவன் தன்னிலை விளக்கம் கொடுத்துட்டு இருக்க மாட்டான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1 பொதுவா ஒரு போலீஸோ , செக்யூரிட்டியோ , வாட்ச்மேனோ இந்த மாதிரி காவல் பணில இருக்கறவங்க ட்யூட்டி டைம்ல தற்கொலை பண்ணிக்க மாட்டாங்க . இந்த பேசிக் நாலெட்ஜ் கூட இல்லாம இன்ஸ்பெக்டர் பேசுவது அபத்தம்
2 ஹீரோயின் ஒரு விசாரணைக்காக டாஸ்மாக் பாருக்கு தனியா போகுது. என்ன தைரியத்துல? அத்தனை பேரும் பொறுக்கிப்பசங்க , குடிகாரங்க , துனைக்கு ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை கூட்டிட்டுப்போகல ஏன்?
3 குற்றவாளியோட ஃபோட்டோ ஹீரோயின் ஃபோன்ல கேலரில இருக்கு . ஒரு ஆஃபீஸ்க்கு விசாரிக்க வந்தவர் அவர் ஃபோனை சர்க்குலர் ஃபைல் அனுப்பற மாதிரி ரவுண்ட்ஸ் விடறாரு , இது ரிஸ்க் ஆச்சே? அதுக்கு அங்கே ஒர்க் பண்ற ஒருவரோட செல் ஃபோனுக்கு அந்த ஃபோட்டோவை ஃபார்வார்டு பண்ணினா போதாதா?
4 அபார்ட்மெண்ட் ஓனர் ஒரு பெரும்புள்ளி , அரசியல் செல்வாக்கு இருக்கலாம்.,அதனால விசாரிக்க போக வேணாம்னு ஹையர் ஆஃபீசர் சொல்லியும் கேட்காம போகும் ஹீரோயின் அப்பவே அதே ஸ்பாட்ல இருந்து ஃபோன் பண்ணி இன்ஸ்பெக்டரை ஸ்பாட்க்கு வரச்சொல்றார். அவரும் எதுவும் கேட்கல
5 அவ்ளோ பெரிய புள்ளி யை பார்க்க அவர் பங்களாவுக்குப்போகும் நாயகிக்கு அவர் தன் கையால் டீ போட்டு அவரே கொண்டு வர்றார். வீட்ல வேலைக்காரங்க இருக்க மாட்டாங்களா? அவ்ளோ பெரிய தொழில் அதிபர் சாதாரண எஸ் ஐ க்கு அவ்ளோ மரியாதை தருவாரா?
6
பொதுவா கிட்நாப் கேஸ்ல பேரம் பேசும்போது கடத்தப்பட நபரை ஃபோன்ல பேச வெச்சு கன்ஃபர்ம் பண்ணுவாங்க . இங்கே அது நடக்கலை , ஏன்?
7 கிட் நாப் மேட்டர் தெரிஞ்ச வேற ஒரு ஆள் டபுள் கேம் ஆடறான்னு கண்டு பிடிக்கும் நாயகி அதை முறியடிக்க எந்த ஸ்டெப்பும் எடுக்கலை யே?
சி.பி கமெண்ட் = தெளிவான திரைக்கதை , நாயகியின் அழகு, நல்ல நடிப்பு இந்த 3 அம்சங்களும் போதும் என நினைப்பவர்கள் இந்த க்ரைம் த்ரில்லரை ரசிக்கலாம் . ரேட்டிங் 3/ 5 . அமேசான் பிரைமில் கிடைக்குது