கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் கைல கொடுத்து இதை குமுதம் ல ஒரு பக்க சிறுகதையா எழுதனும்னு சொன்னா அசால்ட்டா அஞ்சு நிமிசத்துல அவர் அதை செஞ்சிடுவாரு . நேர்மாறாக இயக்குநர் விஜய், பிரபுதேவா , ஐஸரி கணேஷ் இந்த 3 பேரும் சேர்ந்து நாங்க ஒரு படம் தயாரிக்கிறோம், ஒரு பக்க சிறுகதையை ஒண்ணே முக்கால் மணி நேர படமா ஆக்கனும் , முடியுமா?னு சவால் விட்டா இயக்குநர் ப்ரியதர்சன் என்ன செய்வாரு? அதான் இந்தப்படம்.
ஒரு ஹாஸ்பிடல் ஹால் தான் கதைக்களம். அங்கே ஹெச் ஐ வி டெஸ்ட்க்கு பிளட் சாம்ப்பிளஸ் கொடுத்துட்டு ரிசல்ட்டுக்காக வெய்ட் பண்றாங்க பலர் . அவங்கள்ல 7 பேர் கொள்ளும் பரிதவிப்பு தான் கதை இதை ஒரு சினிமாவாக ஆக்க எவ்வளவு துணிச்சலும், ஸ்க்ரிப்ட் நாலெட்ஜூம் , தைரியமும் ஒரு இயக்குநருக்குத்தேவை? அசால்ட்டா செஞ்சு இருக்காரு வந்தனம் , கோபுரவாசலிலே புகழ் மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் , அவருக்கு ஒரு சல்யூட்
ஆஃபீஸ் ஹையர் ஆஃபீசர்ஸோட நடந்த ஒரு பார்ட்டியில் எல்லாரும் ஒரு பெண்ணை ஷேர் பண்ணிக்கறாங்க. அவங்கள்ல ஒருவர் நோய் தாக்கி இறந்துடறாரு.அதனால தனக்கும் அந்த பாதிப்பு இருக்கா?னு பார்க்க வந்திருக்கும் பிரகாஷ் ராஜ்
நர்சை காதலிக்கும் அசோக் செல்வன் அவரோடு கலந்து விடுகிறார். அவர் காதலியான நர்ஸ் ஹெச் ஐ வி வார்டில் பணி புரிவதால் ஒரு டவுட், எதுக்கும் செக் பண்ணிக்கலாம்னு வர்றாரு
ஓடும் ரயிலில் யாரோ ஒருவனால் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் அஞ்சலி ராவ் தனக்கு திருமணம் நிச்சயம் ஆனதால் தன்னால் ஒருவனின் வாழ்வு பாதிக்கப்படக்கூடாது என செக்கப்க்கு வர்றார்
போலீஸ் ஆஃபீசரான சண்முகராஜன் தப்பான பொண்ணுங்களோட தப்பான தொடர்பு வெச்சவரு
இது மாதிரி ஒவ்வொருவருக்கும் ஒரு கதை. இப்போ பிளட் சேம்ப்பிள் கொடுத்தாச்சு, மாலை 5 மணிக்குதான் ரிசல்ட் , அதுவரை காத்திருக்கனும்
ரிசல்ட் சொல்லும் கவுண்ட்டர்ல இருக்கற ஸ்ரேயா ரெட்டிக்கு அடிக்கடி ஃபோன் வருது. அம்மாதான் . யாருக்கோ பணம் தர வேண்டி இருக்கு , பணத்தேவை உள்ளவரு
டென்சனோட காத்திருப்பதற்குப்பதிலா லஞ்சம் எதுனா கொடுத்து முன் கூட்டியே ரிசல்ட் வாங்கிக்கலாம்னு அந்த 7 பேரும் முடிவு பண்றாங்க
ஆனா டாக்டர் கண்காணிப்பு பலமா இருக்கறதால ப்ராப்பரா உதவ முடியாத சூழல் ஸ்ரேயா ரெட்டிக்கு. அதனால பணத்தை லஞ்சமா வாங்குனதுக்காக 7 பேர்ல ஒருவருக்கு மட்டும் பாசிட்டிவ் ., மற்றவருக்கு எதுவும் இல்லை , நெகடிவ்னு சொல்றாரு
இப்போ எல்லாருக்கும் டென்சன் ஏறிடுது. பார்வையாளர்களான நமக்கும் தான்.கடைசி 20 நிமிடங்களில் டெம்ப்போ ஏற்றும் காட்சிகள் . க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் உருக்கம்
இந்த மாதிரி ஜீவன் உள்ள படத்துக்கு இசை அமைக்க இளையராஜாவைத்தவிர வேறு யார் இருக்க முடியும்?மவுனமும் நல்ல இசை தான் என்பதை பல இடங்களில் உணர்த்துகிறார். கடைசி திக் திக் நிமிடங்களில் கிளாசிக் ம்யூசிக்
லொக்கேசன் சேஞ்ச் , காஸ்ட்யூம் சேஞ்ஜ் என எந்த சேஞ்சும் இல்லை , ஆனால் திரைக்கதையில் நல்ல ஒரு சேஞ்ஜ் இருக்கு .
ஒளிப்பதிவு , எடிட்டிங் எல்லாம் கனகச்சிதம் . வசனங்களில் ஆங்காங்கே கவனிக்க வைக்கிறார் இயக்குநர்
அசோக் செல்வன் தான் கிட்டத்தட்ட ஹீரோ மாதிரி . எல்லாரையும் கனெக்ட் பண்ணும் விதம், பேச முயற்சிப்பது குட்
நாசருக்கு சின்ன பாத்திரம். அதிக வாய்ப்பில்லை. பிரகாஷ் ராஜ் பிரமாதமான நடிப்பு , அவ்ருக்கு எல்லாம் சொல்லித்தரத்தேவை இல்லை
எம் எஸ் பாஸ்கர் வயித்தெரிச்சலில் பேசும் காட்சி , போலீஸ் க்கு சாபம் விடும் காட்சி சிரிப்பு
ஸ்ரேயா ரெட்டி அழுகை , குற்ற உணர்வு அவமானம் , கடன் பிரச்சனை என பல பிரச்சனைகளையும் முகத்தில் கொண்டு வருகிறார்
சண்முக ராஜன் நல்ல கேரக்டர் ரோல் . அஞசலி ராவ் கவனிக்க வைக்கிறார்
சபாஷ் இயக்குநர்
1 டெஸ்ட்க்கு வந்தவங்க எல்லாருமே பிபி டெஸ்ட், சுகர் டெஸ்ட்க்காக வந்ததா பொய் சொல்வது மிக யதார்த்தம். 7 முக்கியமான கேரக்டர்களையும் மனதில் நிற்கும்படி வடிவமைத்த இயக்குநர் சாமார்த்தியம் குட்
2 ஸ்ரேயா ரெட்டியின் இயலாமை , வெறும் 3000 ரூபாய் கடனுக்காக சக ஊழியரிடம் கெஞ்சுவது , அடிக்கடி ஃபோன் செய்யும் அம்மாவை சமாளிப்பது என கொஞ்ச நேரமே வந்தாலும் நல்லதொரு பங்களிப்பு
3 உச்ச கட்ட காட்சியில் அந்த திருப்புமுனை காட்சில் அமைதி , இசை , நடிப்பு எல்லாமே மனதில் நிற்பவை
நச் வசனங்கள்
1 கேன்சர் நோய் வந்தா அய்யோ பாவம்னு பரிதாபப்படும் இந்த சமூகம் ஏன் ஹெச் ஐ வி வந்தா மட்டும் ஒரு தொழு நோயாளியைப்பார்ப்பது போல் , தெரு நாயைப்பார்ப்பது போல் , ஒரு பாவம் பண்ணுனவனைப்பார்ப்பது போல் ரீ ஆக்சன் காட்டுது?
2 இந்த நோயை யாரும் முன் வந்து தர்றதில்லை , நாமாப்போய் வாங்கிக்கிட்டாதான் உண்டு
3 தப்பு பண்ணாதவங்கனு யாரும் இங்கே இல்லை
ஷட்டப், ஐ ஆம் ஃபேமிலி மேன்
ஏன்? ஃபேமிலி மேன் தப்பு பண்ணமாட்டானா?
4 தேவைன்னு வந்தா எல்லாத்தையும் கத்துக்கறம் இல்ல?
5 கடவுள் என்னை தண்டிப்பாரோ?னு பயமா இருக்கு?
யாரு ? இவரா?( கிருஷ்ணர் சிலை) இவரே 16,008 பொண்ணுங்களோட தப்பு பண்ணி இருக்கார் , இவருக்கே எதுவும் ஆகலை ( இந்த வசனத்தை சென்சார்ல எப்டி விட்டாங்க?னு தெரியல )
6 சாதா பிளட் டெஸ்ட் மாதிரி , ஹெல்த் டெஸ்ட் மாதிரி இதுவும் ஒரு நார்மல் செக்கப் தான்
7 இந்தியாவில் ஹெச் ஐ வி பேஷண்ட்ஸ் ல 35% பேர் லாரி டிரைவர்கள் தானாம்
8 பொல்லாத நேரம் வந்தா பொடலங்காயும் பாம்பாகும்
9 ஒரு டவுட் , மலேரியா , டைஃபாய்டு மாதிரி ஹெச் ஐ வியும் கொசுவால பரவ வாய்ப்பு இருக்கா?
இல்ல , ஹெச் ஐ வி பேஷண்ட்டை கடிச்ச கொசு நம்மைக்கடிச்சா நமக்கு ஒண்ணும் ஆகாது . அந்த கொசுவே அதை ஜீரணம் பண்ணிக்குமாம் அதனால கொசுவால ஹெச் ஐவி பரவாது
10 தெரியாம தப்பு பண்ணிடறோம், ஆனா தப்பு தப்பு தானே? விதி...
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1 காலைல 10 மணிக்கு டெஸ்ட் கொடுத்தவங்க மத்தவங்க எல்லாம் கிளம்பிப்போன பின் இந்த 7 பேர் மட்டும் அங்கேயே இருப்பதன் அவசியம் என்ன? அருகாமை பார்க் , பீச் ,சினிமா அப்டினு டைம் பாஸ் பண்ணி வரலாமே? டென்சனை ரிலாக்ஸ் பண்ண உதவும்
2 அடிக்கடி ஃபோன் பேசும் ஸ்ரேயா ரெட்டியிடம் ஃபோனில் அவர் பிசியா இருக்கும்போதே தண்ணீர் எங்கே கிடைக்கும்?னு பிரகாஷ் ராஜ் கேட்கறார். ஏன்? அங்கே தூய்மைப்பணியாளர்கள் 2 பேர் , ஒரு செக்யூரிட்டி நிக்கறாங்க , அவங்க கிட்டே கேட்டிருக்கலாமே?
3 போலீஸ் ஆஃபீசரா வர்றவர் தன் செல்வாக்கைப்பயன்படுத்தி டெஸ்ட் ரிசல்ட்டை கேட்டிருக்கலாமே? அவரும் 1000 ரூபாய் லஞ்சம் தருவது எப்படி?
4 கவுண்ட்டர்ல இருந்த பொண்ணு எங்கே?னு கேட்டு ஏன் யாரும் தகறாரு பண்ணலை ?
5 பொதுவா ஆஃபீஸ்ல வேலை செய்யற சக லேடி ஸ்டாஃப் கிட்டே ரூ 3000 கடன் கொடுத்த ஆள் ஒரு ஆண் என்பதால் அதை வெச்சு மிஸ்யூஸ் பண்ணவோ , பெருந்தன்மையாவோதான் காட்டிக்குவான். ஆனா இந்த ஆள் ஸ்ரேயா கிட்டே ஏற்கனவே வாங்குன 3000 ரூபாயே இன்னும் தரலை என சொல்லிக்காட்றார், இப்படி எங்காவது நடக்குமா?
6 க்ளைமாக்ஸ் ல்; தனக்கு நோய் இல்லைனு தெரிஞ்சதும் அசோக் கிளம்புவது நம்பும்படி இல்லை , ஆரம்பத்தில் இருந்தே எல்லோரிடமும் வலியப்போய் பழகும் அவர் பிர்காஷ் ராஜ் ஜை அப்டி தனியே விட்டுப்போவதில் லாஜிக் இல்லை. இன்னும் 2 நிமிசம் இருந்து போக மாட்டாரா?
சி.பி கமெண்ட் - மாறுபட்ட கதைகளை விரும்பிப்பார்ப்பவர்கள் அவசியம் பார்க்கலாம். பரபரப்பான மாமூல் மசாலா படங்களை மட்டுமே பார்ப்பவர்கள் தவிர்க்கலாம், இது ஒரு ஏ செண்ட்டர் மூவி , ரேட்டிங் 3 / 5 நெட் ஃபிளிக்சில் கிடைக்குது