ஹீரோயின் ஹீரோவான கணவருடன் சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கும்போது கணவரை போலீஸ் ஒரு கேஸ்ல கைது பண்ணி 4 வருச ஜெயில் தண்டனை வாங்கித்தருது. 4 வருசம் தனிமைல சிரமப்பட்ட நாயகி பின் கணவன் ரிலீஸ் ஆன பின்பு மீண்டும் ஒன்றாக வாழ்ந்து வர்றாங்க
மனைவிக்கு டிப்ரஷன் வருது. டாக்ட்ர் கிட்டே போறாங்க . அவர் எழுதித்தரும் மாத்திரைகள் இவருக்கு செட் ஆகலை . இவரோட தோழி யூஸ் பண்ற இன்னொரு மருந்தை டாக்டர் எழுதித்தரனும்னு வேண்டி விரும்பிக்கேட்கறாரு. டாக்டரும் நமக்குதான் மருந்துக்கம்பெனில இருந்து கமிஷன் கிடைக்குதேனு அந்த மாத்திரையை எழுதி தந்துடறாரு. தரும்போது இந்த மாத்திரையை சாப்பிட்டா ஒரு சைடு எஃப்ஃபக்ட் வரும், அதாவது தூக்கத்துல நடக்கறது.
இந்தத்தூக்கத்துல நடக்கற வியாதியை வெச்சு இதுவரை தமிழ்ல ஏகப்பட்ட மொக்கை ஜோக்குகள் வந்திருக்கு , ஆனா இதுல க்ரைம்.
ஒரு நாள் இந்த மாத்திரை சாப்பிட்ட நாயகி மிட் நைட்ல கிச்சன்ல என்னமோ பண்ணிட்டு இருக்காங்க .எதேச்சையா எந்திரிச்ச கணவர் இந்த டைம்ல இங்கே என்னம்மா பண்ணிட்டு இருக்கே?னு ஒரே ஒரு கேள்வி தான் கேட்கறாரு. சதக் சதக். 2 குத்து ( எஸ் வி சேகரின் டிராமாவில் ஒரு ஜோக் வரும் . ஒரே குத்து , சதக் சதக்.. அதெப்பிடி? ஒரு குத்துக்கு ஒரு சதக் தானே வரும்? )
கொலை பண்ணிட்டு ஹீரோயின் அசால்ட்டா பெட்ரூம் போய் படுத்துத்தூங்கிடறாரு, காலைல எந்திரிச்சு இவரே கொலையைப்பார்த்து பயந்து போலீஸ்க்கு ஃபோன் போட்டு கணவர் இறந்திருக்கார், எப்டினு தெரியல அப்டிங்கறார்
வந்த போலீஸ் நாயகியை அரெஸ்ட் பண்ணி மாமியார் வீட்டுக்கு அனுப்பிடுது
இப்போ கேஸ் நடக்குது. நிஜமாவே நாயகி தூக்கத்துல தெரியாத்தனமா கொலை பண்ணிட்டாரா? இதை சாக்கா வெச்சு திட்டம் போட்டு போட்டுத்தள்ளினாரா?
இப்போ மேலே நான் சொன்ன 188 வார்த்தை சம்பவங்கள் படம் போட்டு முதல் 10 நிமிசத்துல முடிஞ்சிடுது. மீதி 2 மணி நேரம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்
இப்போ டாக்டர்க்கு போலீஸ் ரெண்டு ஆப்சன் தருது. 1 நாயகி தான் தான் கொலை செஞ்சேன்னு ஒத்துக்கனும் , இல்லைன்னா டாக்டர் தான் தந்த மருந்தாலதான் கொலை நடந்தது , தார்மீகப்பொறுப்பு ஏத்துக்கறேன்னு சொல்லனும்
இப்போ டாக்டர் வேற வழி இல்லாம தன்னைக்காப்பாத்திக்க இந்த கேசை துப்பு துலக்கறார்.
படத்துல நாயகி நடிப்பு டாப் க்ளாஸ் ரகம் . அது எப்டிண்ணே முகத்தை அப்பாவி மாதிரி வெச்சுக்கறீங்க? அப்டினு நடிகன் படத்துல கவுண்டமணி சத்யராஜ் கிட்டே கேட்கற மாதிரி நாயகி கிட்டே நாம கேட்கனும். அவ்ளோ அற்புதமான நடிப்பு
டாக்டரா வர்றவர் நடிப்பும் பரவால்ல , ஆனா நாயகி நடிப்புக்கு முன் அவர் பெருசா எடுபடலை
படத்துல கான்வோ அதிகம் , ஆனா மிஸ் பண்ணாம பார்க்கனும் , க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் புரியாமப்போறதுக்கு வாய்ப்பு அதிகம்
இந்தப்படத்துக்கு முதல்ல வெச்ச டைட்டில் BITTER PILL (கசப்பு மருந்து )
30 மில்லியன் டால்ர் செலவில் எடுக்கப்பட்ட படம் 66 மில்லியன் டாலர் அள்ளுச்சு
63 வது பெர்லின் இண்ட்டர் நேச்னல ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட்டது
இந்தப்படத்தோட டைரக்டர் இந்தப்பட ரிலீஸ் டைம்ல இதுதான் நான் இயக்கும் கடைசிப்படம் அப்டினு பேட்டி கொடுத்து பர பரப்பு ஏற்படுத்துனார்
சில அரசியல்வாதிகள் “ இது நான் சந்திக்க இருக்கும் கடைசி தேர்தல்னு சொல்லியே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பாங்களே அந்த டெக்னிக்
அமேசான் பிரைம் ல கிடைக்குது. ரேட்டிங் 3 / 5