அலாவுதீனுக்கு அற்புத விளக்கு கிடைச்சது போல , விறகு வெட்டிக்கு தேவதை வரம் கிடைச்சது போல திடீர்னு உங்களுக்கு எதிர்பாராத உதவி முன் பின் அறிமுகம் ஆகாத ஒரு நபர் மூலம் ரெகுலரா கிடைச்சா எப்படி இருக்கும்? இதுதான் படத்தின் ஒன் லைன்
ஒரு கன்ஸ்ட்ரக்சன் ஆஃபீஸ்ல ஹீரோ ஒர்க் பண்றார். இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் உள்ளவர். கொஞ்சம் கூச்ச சுபாவி வேற . இதனால இவரு ஆஃபீஸ்ல ஒர்க் பண்ற ஹீரோயினை ஒரு தலையா லவ்வறார். வெளிப்படுத்தலை. அதே ஆஃபீஸ்ல வேலை செய்யற இன்னொரு ஆளை ஹீரோயின் லவ்வறார்.
அட போங்கப்பா .வழக்கமான லவ் ஸ்டோரியா? அப்டினு நாம சலிச்சுக்கும்போது டைரக்டர் நம்ம மண்டைல கொட்டி இது வேறு மாதிரியான த்ரில்லர் படம்னு உணர்த்தறார்
ஹீரோவா ஃபர்தான் அக்தர். 3 விதமான மாறுபட்ட நடிப்பில் கலக்கறார். ஓப்பனிங் சீனில் பாஸ் கிட்டே பம்மும்போதும், தேவை இல்லாமல் திட்டு வாங்கும்போதும் அவர் காட்டும் பாடி லேங்க்வேஜ் அழகு என்றால் அவருக்கான உதவி கிடைத்த பின் பாஸ் கிட்டேயே ஆர்டர் போடுவது , கோட் சூட் என சுந்தர் பிச்சை போல கெத்து காட்டுவது என ட்ரான்ஸ்ஃபர்மேஷன் சீன்களில் அப்ளாஸ் அள்ளறார். . திடீர் என சிக்கலில் மாட்டும்போதும் . மனோதத்துவ டாக்டருடனான சீனிலும் பதட்டம் காட்டுவதும் அருமை
ஹீரோயினா அரபிக்குதிரை தீபிகா படுகோன். அசால்ட்டான நடிப்பு , உதார் விடும் உடல் மொழி , கச்சிதமான ஆடை வடிவமைப்பு . தேவையான அளவு கிளாமர் என அவரது கேரக்டர் ஸ்கெட்ச் பக்கா . இருந்தாலும் ஹீரோவை விட ஒரு படி கம்மிதான் நடிப்பில் காரணம் திரைக்கதை நாயகனை மையப்படுத்தி செல்வதால்
மனோதத்துவ டாக்டராக வருபவர் எந்த ஃபோன் காலும் உனக்கு வராது அது உன் மன பிரமை , நான் வேணா உன் கூட இருக்கேன் நீ சொல்ற மாதிரி அதிகாலை 5 மணிக்கு கால் வருதா?னு பார்ப்போம் என கெத்தாக சவால் விடும்போதும் , மிகச்சரியாக 5 மணிக்குக்கால் வரும்போது திகில் காட்டுவதும் கலக்கல் நடிப்பு
இசை இந்த மாதிரி த்ரில்லர் படங்களுக்கு ரொம்ப முக்கியம். நூறாவது நாள் படத்தில் இளையராஜா கலக்கி இருப்பாரே அந்த அளவு இல்லைன்னாலும் நல்ல பிஜிஎம். பாடல்கள் 3 ஹிட்
ஒளிபப்திவு , எடிட்டிங் மிக தரம் . திரைக்கதை இடைவேளைக்குப்பின் கொஞ்சம் தடுமாறுது. ஆனா ஃபினிஷிங் பக்கா
சபாஷ் டைரக்டர்
1 எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் கோழையான எம்ஜியார் நம்பியாரிடம் சவுக்கடி வாங்கும்போது உச் கொட்டிய ரசிகர்கள் நான் ஆணையிட்டால் என சவுக்கை கையில் எடுத்ததும் ஆர்ப்பரிப்பார்கள் . அந்த மாதிரி இந்தப்படத்திலும் ஒரு ட்ரான்ஸ்ஃபர்மேசன் சீன் இருக்கு கலக்கல் ரகம்
2 ஃபிளாஸ்பேக் காட்சியில் ஹீரோவுக்கு ஒரு சகோதரன் இருக்கிறான் அவன் மரணத்துக்கு நாயகன் தான் காரணம் என்ற கிளைக்கதை கச்சிதம்
3 நாயகன் மெயிலில் டிராஃப்டில் சேமித்த மொத்த காதல்; கடிதங்களையும் ப்ரபோசல்களையும் காட்டி லவ்வை சொல்வது அழகு
நச் வசனங்கள்
1 நல்லவங்க எல்லாம் ஸ்டோரிகள்ல தான் வருவாங்க போல
2 உன்னை ஏன் எனக்கு பிடிக்கும் தெரியுமா? நீ சேஃப் கை. (safe guy) ஒரு பொண்ணு யார் அருகாமையில் பாதுகாப்பா உணர்றாளோ அவனைத்தான் விரும்புவா
3 நீ இப்போ போதைல இருக்கே, இந்த சந்தர்ப்பத்தை நான் உபயோகப்படுத்த விரும்பலை பை.. கிளம்பறேன்
ஓக்கே
-----
டொக் டொக்
ஏம்ப்பா வந்துட்டே?
இல்ல ., சான்ஸ் மிஸ் பண்ணக்கூடாதுனுதான்
4 என் கிட்டே தப்பா நடந்துக்கப்பார்த்தா அவனுக்கு பாடம் கற்பிக்க என்னால் முடியும்
லாஜிக் ,மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் ஆலோசனைகள்
1 இந்தக்கதையில் வரும் ஃபிளாஸ்பேக்கில் நாயகனுக்கு ஒரு அண்ணன் இருந்தான் என்பதை விட இருவரும் ட்வின்ஸ் என காட்டி இருந்தால் இன்னும் கதை வலுவான சஸ்பென்ஸ் முடிச்சாக அமைந்திருக்கும்
2 ஒரு சாதா ஆஃபீஸ்லயே ஆடிட்டர் ரெண்டு
பேரு இருப்பாங்க . அவ்ளோ பெரிய கன்ஸ்ட்ரக்சன் ஆஃபீஸ்ல ஹீரோ ஒரு ஆளை நம்பியா கணக்கு வழக்கு எல்லாம் இருக்கும்? பாஸ் கிட்டேயே ஹீரோ சவாலா சில ஆடிட்டிங் மேட்டர்கள் பற்றி மட்டம் தட்டுவது ஹீரோயிசத்துக்கு ஓக்கே ஆனா நம்ப முடியல
3 வழக்கமா ஃபோன் கால் ஹீரோ க்கு அதிகாலை 5 மணிக்கு தான் வரும் , ஆனா ஒரு நாள் இரவு ஹீரோயின் கூட ரூம்ல இருக்கும்போது நைட்டே ஃபோன் கால் வருமோனு ஏன் பயப்படறார்?
4 ஹீரோயின் தன் முதல் காதலர் எற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரியாமல் பழகுவது நம்ப முடியல . இப்பவெல்லாம் மாடர்ன் பொண்ணுங்க உஷாரா லவ் சொன்னதும் அம்மா அப்பாவைப்பார்க்கனும் வீட்டுக்கு கூட்டிட்டுப்போ அப்டிங்கறாங்க
5 காதல் என்பது தானா வரனும், ஹீரோ ப்ரப்போஸ் பண்ணி வந்தா அது வேற , ஆனா ஹீரோயின் லவ் பண்ற ஆள் ஃபிராடு ஆல்ரெடி மேரேஜ் ஆனவன் என குட்டு வெளிப்படுத்தி அதுக்குப்பின் வரும் அல்லது வரவழைக்கும் காதலில் ஜீவன் இல்லை
சி.பி கமெண்ட் பார்த்தே ஆக வேண்டிய படம்னு சொல்லிட முடியாது, ஆனாலும் பார்க்கலாம். நல்ல படம் தான் . ரேட்டிங் 3 / 5 . இந்தப்படத்தை தமிழில் ரீமேக்கினால் உகந்த டைட்டில் அதிர்ஷ்டம் அழைக்கும் நேரம் அதிகாலை 5 . உகந்த நாயகன் தனுஷ் , சித்தார்த் இருவரில் ஒருவர்