ஒரு புகழ் பெற்ற சினிமா இயக்குநர் வீட்டுக்கு ( பங்களாவுக்கு) படத்தோட காஸ்ட்யூம் டிசைனரின் பெண் உதவியாளர் வர்றார். படத்துக்காக தேர்வு செய்யப்பட்ட உடைகளை அப்ரூவலுக்காக காட்றார். 22 நிமிசம் கழிச்சு வெளியே வரும் அவர் போலீசில் ரேப் கேஸ் கொடுக்கறார். போலீஸ் கேசை ஃபைல் பண்ணி டிஎன் ஏ டெஸ்ட் உட்பட்ட அனைத்து மருத்துவ டெஸ்ட்களும் எடுத்து ரேப் நடந்ததை உறுதிப்படுத்தி இயக்குநரை கைது செய்யுது. 10 வருச தண்டனை கிடைக்குது
கேஸ் ஹை கோர்ட்க்கு வருது. இயக்குநர் சார்பா வாதாடும் வக்கீல் , பாதிக்கபப்ட்ட பெண் சார்பா வாதாடும் பெண் வக்கீல், தீர்ப்பு தரப்போகும் நீதிபதிகள் ஒருவர் ஆண், ஒருவர் பெண், இந்த கேஸ் எப்படி நடந்தது? என்ன தீர்ப்பு வந்தது இதுதான் திரைக்கதை
ஒரு சீன் எனில் ஒரு சீன் கூட உங்களை சோர்வு பெறச்செய்யாத பிரமாதமான திரைக்கதை 26/1/1984 ல் ரிலீஸ் ஆன விதி படம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே கோர்ட் வசனங்களுக்காகவே ஆடியோ கேசட் அதிக அளவில் விற்றுத்தீர்ந்த இரண்டாவது படமாக இன்றளவும் தன் சாதனையை தக்க வெச்சிருக்கு முதல் படம் 17/10/1952 ல் ரிலீசான பராசக்தி
இயக்குநருக்கு ஆதரவா வாதாடும் வக்கீலா அக்சய் கன்னா பிரமாதமாக நடித்திருக்கிறார். கோர்ட்டில் அவர் வாதிடும்போது , தீர்க்கமாக தன் வாதங்களை முன் வைக்கும்போது அப்ளாஸ் அள்ளுகிறார். விதி படத்தில் டைகர் தயாநிதியாக வரும் ஜெய் சங்கர் சம்பவம் நடந்ததை வர்ணிக்கவும்னு தர லோக்கலா கேள்விகள் கேட்டு சாட்சியை சங்கடப்படுத்தினார் எனில் இதில் மிக நாகரீகமாக அதே சமயம் கிடுக்கிப்பிடி கேள்விகள் மூலம் சாட்சியை விசாரிப்பது அட்டகாசம்
அரசு தரப்பு வக்கீலாக ஆஜர் ஆகும் ரிச்சா சாதா தன் ஸ்பெஷல் நடிப்பை ரிச்சாக தந்திருக்கிறார். ஆனாலும் சுஜாதாவோடு ஒப்பிடும்போது ஒரு படி கம்மிதான்
இயக்குநராக ராகுல் பட் கலவையான உணர்வுகளை காட்டுவதில் கை தேர்ந்தவராக இருக்கிறார், குறிப்பாக கோர்ட்டில் சில உண்மைகளை சொல்லும்போது அங்கே பார்வையாளர் வரிசையில் தன் மனைவியும் இருக்கிறார் என்ற தர்மசங்கடத்தை வெளிப்படுத்துவது நுட்பமான நடிப்பு .
அசிஸ்டெண்ட் காஸ்ட்யூம் டிசைனராக வரும் மீரா சோப்ரா கன கச்சிதம். விருமாண்டியில் திரைக்கதை இரு வேறு பார்வைகளில் சொல்வது போல் ஓப்பனிங் சீனில் காட்டப்படும் காட்சியில் ஒரு மாதிரி , க்ளைமாக்சில் காட்டப்படும் அதே காட்சிக்கு வேறு மாதிரி என இரு வேறு பரிமாண நடிப்பு பிரமாதம்
முக்கியமான இந்த 4 ரோல்களைத்தவிர மற்ற பாத்திரங்களில் இயக்குநரின் மனைவியாக நடித்தவர் கலக்கி இருக்கிறார். கோர்ட்டில் லாங் ஷாட்டில் பார்வையாளர் பகுதி காட்டப்படும்போது தன் கணவர் மேல் தப்பு இருக்கு என்பதை வாதங்களின் மூலம் தெரிந்து முகம் மாறுவது தரமான சம்பவம்
படத்துக்கு வசனம் நிச்சய,ம் சட்டம் தெரிந்த ஒருவரோ அல்லது வக்கீலோதான் எழுதி இருக்கனும். ஒவ்வொரு வசனமும் கூர்மை . சட்டத்தின் பல பக்கங்களை , பாய்ண்ட்களை புரட்டிப்போடுது. திரைக்கதை , இயக்கத்துக்குப்பிறகு பாராட்டப்படவேண்டியவர் வசனகர்த்தா தான் அக்சய் கன்னா வின் மனைவியாக வருபவர் நடிப்பும் அருமை .
வெளிப்புறப்படப்பிடிப்பு , டூயட், காமெடி டிராக் எதுவுமே இல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஹை குவாலிட்டி ஃபிலிம் . பார்க்காதவங்க தவற விட்டுடாதீங்க , அமேசான் பிரைமில் கிடைக்குது
சபாஷ் இயக்குநர்
1 அரசு தரப்பு வக்கீல் ஆல்ரெடி எதிர்க்கட்சி வக்கீலிடம் ஜூனியராக பணி புரிந்தவர் என்றாலும் ஒவ்வொரு கோர்ட் சீன் முடிந்த பின்பும் ஓய்வு அறையில் இரு தரப்பு வக்கீல்களும் சகஜமாக உரையாடுவது, கேசின் சாதக பாதகங்களை அலசுவது இதுவரை காட்டப்படாத புதிய கோணம்
2 என்ன கேஸ்? என்ன உண்மை நிலவரம் என்றெல்லாம் எதுவுமே தெரியாமல் போராடும் போலி ட்விட்டர் போராளிகள் , ஃபேஸ் புக் புரட்சியாளர்களை கிண்டல் பண்ணி நாசூக்காக நக்கல் பண்ணிய விதம் கலக்கல் ரகம்
3 சாட்சியிடம் உண்மையை வர வைப்பதற்காக பொய்யாக ஒரு வீடியோ ஆதாரம் இருப்பதாக கூறும் வக்கீலிடம் சாட்சி நட்ந்து ல்கொள்ளும் விதம் அதைத்தொடர்ந்து ஜட்ஜ்கள் வக்கீலை 6 மாசம் லைசென்ஸ் கேன்சல் என சொல்வது,ம் திருப்புமுனை காட்சிகள்
4 கிரிமினலுக்கு ஆதரவாக ஆஜர் ஆகும் வக்கீல் சமூகத்தில் , குடும்பத்தில் சந்திக்க இருக்கும் பிரச்சனைகளை போகிற போக்கில் சொன்ன நாசூக்கும் அழகு
நச் டயலாக்ஸ்
1 இங்கே நடக்கும் ரேப் கேஸ்களில் குற்றம் புரிபவர் 98% பேர் பாதிக்கபட்டவருக்கு அறிமுகம் ஆனவராகத்தான் இருக்கிறார்
2 இங்கே பதிவாகும் ரேப் கேஸ்களில் 75% குற்றவாளிகள் தண்டனை பெறாமல் தப்பி விடுகிறார்கள்
அது உங்க பார்வைல . இது போன்ற குற்றச்சாட்டுகளில் 75% பேர் அநியாயமாக குற்றம் சுமத்தப்படுது என்பது என் பார்வை
3 எல்லாருமே இங்கே ஜெயிக்கத்தான் ஆசைப்படறாங்க , ஆனா ஒருவர் ஜெயிக்கனும்னா இன்னொருவர் தோற்கனும், அதானே விதி?
4 இந்த வழக்கில் நியாயம் வழங்கப்பட்டதாகத் தோன்ற வில்லையே?"
நாம் செய்யும் தொழில் சட்டம் சார்ந்தது...நியாயம் சார்ந்தது அல்ல"
5 சட்டம் என்பது உணரக்கூடியது, தீர்ப்பு என்பது உண்மை, உணர்த்தக்கூடியது
லாஜிக் மிஸ்டேக்ஸ் / திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1 சினிமா இண்டஸ்ட்ரி பற்றி எல்லாருக்கும் தெரியும், ஒரு சினிமா இயக்குநர் எப்படிப்பட்ட கேர்க்டர் என்பது அவர் மனைவிக்கு பல வருடங்களாகத்தெரியாமல் இருக்கும் என்பதை நம்ப முடியலை . இயக்குநர் பெண் சபலிஸ்ட் என்பதும் , அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார் என்பதும் மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம், மனைவிக்கு நிச்சயம் தெரிஞ்சிடுமே?
2 சம்பவம் நடந்த இடத்தில் இருந்து நாயகி நேராக போலீஸ் ஸ்டேசன் போகாமல் தன் வீட்டுக்கு ஏன் போகனும்? ஏன்னா குடும்பத்தில் போலீஸ் கேஸ் எல்லாம் வேணாம் , குடும்ப மானம் போய்டும்னு கன்வின்ஸ் பண்ண வாய்ப்பு இருக்கே?
3 போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குற்றவாளியிடம் பேச போலீஸ் ஸ்டேசன் அருகே உள்ள பெட்டிக்கடையிலிருந்தா ஃபோன் செய்து அப்படி மாட்டிக்குவார்? ஒரு சாமான்யன் வேணா இப்டி மாட்டலாம், சட்டம் தெரிஞ்ச போலீசும் , வக்கீலும் எப்பவும் கிரிமினலா தானே சிந்திப்பாங்க ? ட்யூட்டி முடிச்ட்டு வீட்டுக்குப்போற வழில ஏதாவது பூத்ல பேசி இருக்கலாம். அல்லது வழியில் முன் பின் அறிமுகம் இல்லாதவனிடம் ஓடி ஃபோன் வாங்கி பேசி இருக்கலாம்
4 பெண்களுக்கு பாதுகாப்பான உடை ஜீன்ஸ் பேண்ட் அல்லது சுடி என்பது பலரும் உணர்ந்த ஒன்று. அப்போ ரேப் டிராமா போடும் ஒரு பெண் அது பிற்காலத்தில் கேசில் ஒரு வேலிட் பாய்ண்ட்டாக வரும் என்பதை உணர்ந்து சேலையில் தானே சம்பவ இடத்துக்குப் போய் இருக்கனும்?
சி.பி கமெண்ட் = விறுவிறுப்பான கோர்ட் டிராமா விரும்பிகள் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய படம் , ரேட்டிங் 3.75 / 5