Tuesday, June 09, 2020

CARE OF KANCHARAPALEM ( TELUGU) -சினிமா விமர்சனம் ( கிளாசிக் மூவி )


CARE OF KANCHARAPALEM ( TELUGU) -சினிமா விமர்சனம்  ( கிளாசிக் மூவி )


தமிழ் சினிமாவில் இதுவரை வந்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் . ஆனந்த விகடன் மார்க் 60 . அதை விட அதிக மதிப்பெண் பெற்ற 16 வயதினிலே ( 61.5)  கூட சில இடங்களில் செயற்கை தட்டும் , ஆனா உதிரிப்பூக்கள் முற்றிலும் புதிய  அனுபவத்தை தந்தது . அந்த அளவுக்கு  இல்லைன்னாலும் கிட்டத்தட்ட அந்த லெவலுக்கு தெலுங்கில் ஒரு படம் கண்டேன். 2019ல் ரிலீஸ் ஆகி விமர்சகர்கள் மத்தியிலும் , மீடியாக்களிலும் அதிக வரவேற்பு பெற்ற இந்தப்படத்தை இப்போ தமிழ் ல ரீமேக்கறாங்க . 

கதையோட ஒன் லைன் என்ன?னு பார்த்தா ஒரே ஊர்ல  வாழ்ந்த  4 காதல் ஜோடிகள். வெவ்வேறு  கால கட்டம். வெவ்வேறு வயசு. கிட்டத்தட்ட 4 குறும்படங்களை ஒரு நேர்கோட்டில் கொண்டு வரும் உத்திதான். ஆனா க்ளைமேக்ஸ்ல யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் உண்டு. இது நெட் ஃபிளிக்சில்  கிடைக்குது. கொஞ்சம் விளக்கமாப்பார்ப்போம் 


ஒரிசாவிலிருந்து  மாற்றல் ஆகி ஊருக்கு புதுசா வரப்போகும் லேடி ஆஃபீசர் பற்றி அந்த ஆஃபீஸ்ல பரபரப்பா பேச்சு. 42 வயசான அந்த லேடி கணவனை இழந்தவர். ஒரு மகள் உண்டு அதே ஆஃபீசில் அட்டெண்டரா இருக்கும் ஹீரோ 48 வயசு ஆகியும் திருமணம் ஆகாத முதிர்கண்னன். . இருவரும் ஒன்றாக வாக்கிங் போவது , மலைக்குப்போவது என  மனதால் நெருக்கம் ஆகறாங்க இவங்க 2 பேருக்குமான காட்சிகள் கவிதை . கண்ணியமான டி ஆர் டைப் தொடாத காதல், . மிக இயல்பான நடிப்பு இருவருக்குமே. இவங்க காதலுக்கு  பெண்ணின் அண்ணா எதிரி . இந்தக்கதை இப்படியே இருக்கட்டும், வாங்க அடுத்த கதைக்குப்போவோம்


மெல்லத்திறந்தது கதவு படத்துல வர்ற அமலா மாதிரி இந்தக்கதை நாயகி கொரோனா இல்லாத சமயத்துலயே மாஸ்க் ஹீரோயினாக ஊரை வலம் வந்தவர் . ஹீரோ அப்பப்ப சரக்குக்கடைக்கு வரும் நாயகிக்கு  சரக்கு பாட்டில் விலைக்கு தருவார் . அவர் நாயகியின் முகத்தைப்பார்க்காமலேயே கண்களைப்பார்த்தே காதலில் விழுகிறார். ஆனா அதை வெளிப்படுத்தாம இதயம் முரளி கணக்கா இருக்கார் . ஒரு டைம் நண்பர்கள் அவங்க ரூம்க்கு ஒரு  விலைமகளை அழைத்து வருகிறார்கள். நாயகனையும் கூப்பிடறாங்க . அவர் மறுக்கிறார். வற்புறுத்தறாங்க . சும்மா பாவ்லாவுக்காக ரூமுக்குள்ளே போறார். அந்தப்பெண்ணிடம் எனக்கு அதில் இஷ்டம் இல்லை , நான் ஒரு பொண்ணை லவ்வறேன்னு சொல்றார். அந்தப்பொண்ணுக்கு ஆச்சரியம். இந்தக்காலத்துல இப்படி ஒரு ஆணா?

நண்பர்களின் உசுப்பேற்றலால் ஒரு கட்டத்தில்  நாயகன் நாயகியிடம் அவர் முழு முகத்தைக்காட்டுமாறு கேட்கிறார். திரையை விலக்க நாயகனுக்கும் , பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சி , அன்று நாயகன் விலக்கிய விலைமகள் தான் அந்த நாயகி . இருந்தாலும் நாயகன் தன் காதல் முடிவில் உறுதியா இருக்கார்  இவர்களுக்கு இடையே ஆன காதல் காட்சிகள்  நமக்கு புதுசு. இந்தக்கதையிலும் கண்ணியம் மீறாமல் அழகிய காதல் கவிதை


 3 வது கதை இது தமிழ் சினிமா ஃபார்முலா கதை. நாயகன் ரோட்ல அடிதடில இருக்கறதைப்பார்த்து நாயகிக்கு கடுப்பு நல்லா அவனை திட்டி விடறா. அதே நாயகிக்கு ரவுடிகளால் ஒரு பிரச்சனை வரும்போது நாயகனிடம் உதவி கேட்கறா. இப்ப மட்டும் ரவுடித்தனம் பண்ணலாமா? என நக்கலாகக்கேட்டாலும்  நாயகன் உதவி அவர்களுக்குள் ஒரு காதல் மலருது . இவங்க காதலுக்கு வில்லன் நாயகியின் அப்பா 


4 வது கதை , அழகி , பள்ளிக்கூடம்  படத்துல வர்ற மாதிரி தொடக்கப்பள்ளி சின்னப்பையன் , பொண்ணு லவ். ஸ்கூல் க்ளாஸ் ரூம்ல பாடுன அதே பாட்டை விழாவில் முழுசாப்பாட டீச்சர் சொன்னதும் மாணவி தனக்கு பாட்டு முழுசா தெரியாதே என மறுக்கிறார்.நாயகன் தேடிப்பிடிச்சு பாட்டு புக் வாங்கித்தர்றார். இருவருக்கும் நட்பு துளிர்க்குது. ஆனா விழாவில் பாட்டு பாடும்போது மாணவியின் அப்பா அங்கே எண்ட்டர் ஆகி மகளை அடிச்சு இழுத்துட்டுப்போய்டறார். டெல்லில ஒரு ஸ்கூல்ல சேர்த்துடறார். கிராமத்தில் இருக்கும் நாயகன் தனிமையில் 

 இந்த 4 கதைகளின் காதல் ஜோடிகள் என்ன ஆனாங்க? எந்த எந்த  ஜோடிகள் சேர்ந்தன? யார் யார் பிரிந்தார்கள் என்பதை நெட் ஃபிளிக்சில் காண்க 


ஒரு கதை வெற்றி பெறனும்னா திரைக்கதை மனசைத்தொடனும்., நடிக்கும் நடிக நடிகைகள் நடிப்பு இயற்கையா இருக்கனும்., இந்த இரண்டுமே இயக்குநருக்கு கை கொடுத்திருக்கு . நடித்தவர்களில் 90% காட்சிகளில் யாருக்கும் ஒப்பனை இல்லை . ஆனாலும் மனதில் பதிகிறார்கள்


சபாஷ் இயக்குநர் 



1   நாயகனுக்கு 48 வயசாகியும் ஏன் மணம் ஆகலை?னு  கேட்டு அவருக்கு ஒரு ஏழரையைக்கூட்டும் ஊர்ப்பெருசுங்க ரவுசு  அழகு. கடைசி வரை தன் ஹையர் ஆஃபீசராக இருப்பதால் மேடம் மேடம் என்றே அழைக்கும் அவரது பணிவு !!!!

2   விலைமகளாக வருபவர் சாதா அழகுடன் இருக்கிறார். முகத்திரையுடன் சில காட்சிகள் வந்து பின் திரையை விலக்கும்போதுதான் அவர் தான் இவர் என்பது தெரிகிறது. இப்போ அவர் முன்பை விட கூடுதல் அழகாக தெரிகிறார். ஒரு படத்தின் திரைக்கதைக்கு கேரக்டர் ஸ்கெட்ச் எவ்ளவ் முக்கியம் என்பதற்கு இது நல்ல உதாரணம். 

3   கதை அனுமதித்தும் நெருக்கமான , விகல்பமான காட்சி ஒன்று கூட இல்லை என்பது பெரிய பிளஸ் 

4   பள்ளிப்பருவ காதல் காட்சிகள் நம்மை நாம் படித்த கால கட்டத்துக்கே கொண்டு செல்லும் பாங்கு 

5   ஜிம் மாஸ்டர் பற்றி சொல்லும் கிளைக்கதை  மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாம போனாலும் ரசிக்க வைக்குது 

6 யாராலும் யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்  இந்த நான்கு காதல் கதைகளையும் இணைக்கும் புள்ளியாக உருவாவது . இயக்குநர் நான்கு குறும்படங்களை எடுத்த பின் எப்படி  இணைக்கலாம் என யோசிச்சாரா? அல்லது முதலிலேயே முடிவை எழுதி விட்டு பின் திரைக்கதை அமைத்தாரா? என வியக்க வைக்கும் ட்விஸ்ட் அபாரம் 


7 படத்தில் மொக்கை காமெடியோ , ஃபைட்டோ  இல்லை . பெண்களை மிகவும் கவரும் காட்சிகள் அதிகம் 

 மனம் கவர்ந்த வசனங்கள்


1  இந்த உலகத்துல இருக்கற எல்லாப்பொண்ணுங்களுமே மேக்கப்க்கு அதிக நேரம் செலவு பண்றது ஏனோ?

2  உங்க பேரு எனக்கு ஏன் டக்னு  நினைவில் நிற்குது தெரியுமா? என் பிரதர் பேரும் உங்க பேரும் ஒண்ணுதான்

 ஓஹோ, ஆனா எனக்கு சிஸ்டர் யாருமே இல்லைங்க 

லாஜிக் மிஸ்டேக்ஸ்


1  வயசான லவ் ஜோடிங்க ஒரு சீன்ல டெய்லி காலைல ஜாகிங் போலாமா?னு பேசிட்டு வாக்கிங் போறாங்க . வாக்கிங் போறப்பக்கூட ஜாகிங் அப்டிங்கற டயலாக் வருது . ஒரு வேளை ஆந்திரா ல தெலுங்கு ல  ஜாகிங்னா வாக்கிங்க்கா இருக்குமோ? 


2   ஒரு சீன்ல ஆவி பறக்கும் பாத்திரத்தின் மூடியை வெறும் கையால் பெண் எடுக்கிறாள்  கரித்துணி யூஸ் பண்ணி இருக்கலாமே? 

3   டான்ஸ் கிளாஸ் நடக்குது. 2  ரோ-ல மாணவிகள் ஆடறாங்க சமூக இடைவெளியே இல்லாம 1 இன்ச் கேப்ல ஆசிரியர்கள் 3 பேரு முன்னால உக்காந்திருக்காங்க, எப்படி ஃப்ரீயா ஆட முடியும்? 

4  பல வருடங்களா அதே கிராமத்தில் வசிக்கும் 48 வயசு நாயகனிடம் ஊர் மக்கள் கரெக்டா க்ளைமாக்ஸ் டைம்ல தான்  ஏன் இத்தனை நாட்களா  மேரேஜ் பண்ணலை?னு பிரச்சனை கிளப்பறாங்க 

5  ஸ்கூல்ல தன் பொண்ணு பாடுனது பிடிக்கலைன்னா இனி இது போல ப்ரோக்ராம்ல பங்கெடுக்க வேணாம்னு சொல்லலாம், அல்லது  அதே ஊர்ல அல்லது பக்கத்து ஊர்ல வேற ஸ்கூல்ல சேர்க்கலாம். அதை விட்டுட்டு டெல்லி பேக் பண்ணி அனுப்புவது எதுக்கு? ( லவ் மேட்டர் தெரியாது )

6   விலைமக்ளா அந்த ஊர்ல இருக்கும் ஒரு கதையின் நாயகி பல வருசமா அப்டிதான் இருக்கு , அவங்க அம்மாவும் அதே தொழில் தான். கிட்டத்தட்ட அம்மா 30 வருசம் , மக 10 வருசம்னு நடத்துனதை எல்லாம் கண்டுக்காத கிராமம் கரெக்டா க்ளைமாக்ஸ் டைம்ல  பிரச்சனை பண்ணுவது ஏன்? 

7  வயது முதிர்ந்த ஒரிசா லேடியின் மகள் சில இடங்களில் வயசுக்கு மீறிய பேபி ஷாலினி டைப் வசனங்கள்  பேசுவது நெருடல் 


சி.பி கமெண்ட் - நம்ம மனசுக்குப்பிடிச்சவங்க செய்யற தப்புகள் அல்லது அவங்க கிட்டே இருக்கற குறைகள்  நமக்குப்பெருசா தெரியாது , அது மாதிரிதான் நமக்குப்பிடிச்சுப்போன படத்திலும் சில பல குறைகள் இருந்தாலும் அதை புறந்தள்ளி ரசிப்போம். அப்படி ஒரு ரசிக்கத்தக்க படம் தான் இது . ரேட்டிங் 3. 75 / 5