Sunday, June 07, 2020

Agent Sai Srinivasa Athreya - (telugu) = சினிமா விமர்சனம் ( டிடெக்டிவ் த்ரில்லர் )



130  கோடி ரூபா பட்ஜெட் போட்டு 1 வருசம் படப்பிடிப்பு நடத்தி பின் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திச்சு ரிலீஸ் ஆகற படம் 100 கோடி வசூல் ஆனதும்  10 கோடி தண்டச்செலவு பண்ணி பார்ட்டி வெச்சு கொண்டாடி வெட்டி பந்தா பண்ற படங்களும் உண்டு .  வெறும் ஒன்றரை கோடி பட்ஜெட்டில் புதுமுகங்களை வைத்து படம் எடுத்து 17 1/2  கோடி சம்பாதிச்சும் அமைதியா இருக்கற படங்களும் உண்டு . ஆந்திராவில் ரிலீஸ் ஆன இந்த  படம் சக்கை போடு போட்ட படம். படம் பார்த்தவங்க வாய்மொழி விமர்சனத்தாலயே ஓடிய முதல் மரியாதை , புது வசந்தம் மாதிரி  இதுவும் மவுத் டாக்லயே ஹிட் அடிச்ச படம் 


துப்பறியும் சாம்பு , பரத்- சுசீலா, நரேன் - வைஜ்  மாதிரி ஒரு  புகழ் பெற்ற  டிடெக்டிவ்  ஆகனும்னு ஹீரோவுக்கு ஆசை. ஹாலிவுட், பாலிவுட் , கோலிவுட், மல்லுவுட் சஸ்பென்ஸ் படங்களாப்பார்த்து பார்த்து தன் அறிவை கூர் தீட்டிக்கறார். சொந்தமா ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ஓப்பன் பண்ணிடறார். ஆனா வந்து சேர்றதெல்லாம் டம்மி கேசுங்க . வாழ்க்கைல பிரமாதமான பெரிய கேஸ் ஒண்ணு புடிக்கனும், அதுல ஜெயிக்கனும், புகழ் பெறனும் அப்டிங்கற அவர் லட்சியம்  எதிர்பாராம கிடைச்ச ஒரு கேஸ்ல நிறை வேறுது


போலீஸ் லாக்கப்ல ஒரு பெரியவரை சந்திக்கிறார். அவரோட மகள் காணாமப்போன  கேஸ். அதை போலீஸ் ஸ்டேசன்ல புகார் தரப்போனா அவரையே போலீஸ்  கேஸ்ல உள்ளே தள்ளிடறாங்க .  இந்த கேசை தான் ஹீரோ கைல எடுத்துக்கறாரு. பொதுவா ஒரு டெட் பாடி கிடைச்சா யாராவது காணாம போய்ட்டாங்கனு அந்த ஏரியாவில்  புகார் கொடுத்திருப்பாங்க , ஆனா லைனா டெட் பாடி அங்கெங்கே கிடைச்ட்டே இருக்கு , ஆனா அந்த ஏரியா போலீஸ் ஸ்டேசன்ல சம்பந்தபப்ட்ட  ஆள் காணாமப்போனதா புகாரே வர்ல. இது ஹீரோக்கு சவாலான கேசா இருக்கு


 இது பற்றி துப்பு துலக்கிட்டு இருக்கும்போது . பொண்ணு காணாம போய்டுச்சு , ரேப் அண்ட் மர்டர் அப்டினு அப்பா சொன்ன பொண்ணு வேற ஒரு ஊர்ல வேற ஒரு பெயரோட வேறு ஒரு அப்பா கூட இருப்பதை ஹீரோ பார்க்கறார் . குழம்பறார். ட்வின்ஸ்  கிடையாது. ஆனா ட்விஸ்ட் உண்டு 


 தொடர்ந்து கேஸ்  சூடு பிடிக்குது. இவரு துப்பறிவது பிடிக்காம யாரோ இவரை மாட்டி விடறாங்க . இப்போ ஹீரோவையே கொலை காரன்னு போலீஸ் அரெஸ்ட் பண்ணுது. ஹீரோ அந்த சதியிலிருந்து எப்படி தப்பினார் , அந்த கேசை எப்படி துப்பறிந்தார் என்பதை திரையில் காண்க 


துப்பறிவாளன் படத்துல ஷெர்லக் ஹோம்ஸ் மாதிரி கெட்டப்ல விஷால் வருவது போல் இதிலும் ஹீரோ கோட் சூட்  கெட்டப்பில் வர்றார். படத்தோட முதல் 30 நிமிடங்கள் சும்மா காமெடி அலப்பறைகள் தான் , டம்மி கேஸ்களை அவர் எப்படி சாமார்த்தியமா கண்டு பிடிக்கிறார் என்பது , இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் டைப் காமெடி பிடித்தவர்கள் ரசிக்கலாம், பிடிக்காதவர்கள் அந்த 30 நிமிசம் பொறுத்துக்கவும், அல்லது ஸ்கிப் பண்ணிக்கலாம். மெயின் கதைக்கும்  முதல் 30 நிமிசத்துக்கும் சம்பந்தம் இல்லை . 


 நாயகன் நடிப்பு பாடி லேங்வேஜ் டயலாக் டெலிவரி எல்லாமே பக்கா . 

நாயகி கண் காஜல் அகர்வால் மாதிரி கலர் தமனா மாதிரி 

இருவரும் படம் பூரா இணைந்து வந்தாலும்  டூயட் இல்லாதது ஆறுதல் 

 தீரன் அதிகாரம் 1 படத்தின் திரைக்கதை போல மிக சிரமம் எடுத்து பல  ஆராய்ச்சிகள் மூலம் உண்மை சம்பவங்களை  அடிப்படையா வெச்சு எழுதப்பட்ட திரைக்கதை .யாராலும் யூகிக்க முடியாத கேஸ்  திசை . லோ பட்ஜெட்டின் காரணமாக ஒளிப்பதிவு , லைட்டிங் மட்டும் அங்கங்கே டல் அடிக்கி றது , மற்றபடி  திரைக்கதை யில் குறையே சொல்ல முடியாத நேர்த்தியான வடிவமைப்பு 


 சபாஷ் இயக்குநர் 

1  பொதுவா போலீஸ் ஸ்டேஷன் ல புகார் கொடுக்கப்போனா சாரி இது என் ஏரியா இல்லை அப்டினு அசால்ட்டா சொல்லிடுவாரு இன்ஸ்பெக்டர் . இப்படி  அவங்க எஸ்கேப் ஆகறதுதான் கிரிமினாலஜி படிச்ச  வில்லனுக்கு சாதகமாக பிளான் போட ஈசியாக அமைந்தது என்ற ஒன் லைன் அபாரம்

 2   டெட் பாடிகள்   சரக்கு ரயிலில்  கொண்டு வரப்பட்டு  ஆங்காங்கே வீசப்படுகிறது  என்ற கண்டுபிடிப்பு அபாரம் .

3  வழக்கமாக டெட் பாடிகளில் இருந்து உடல் உறுப்புகள் தான் திருடப்படும் , அதை தவிர்த்து டெட் பாடிகளின் ஃபிங்கர் பிரிண்ட்சை எடுத்து பத்திரப்படுத்தி அதை ,மற்ற கொலைக்கேஎஸ்களில் டைவர்ட் பண்ண  யூஸ் பண்ணிக்கறாங்க என்ற  யோசனை கலக்கல் ரகம் 

4  


 நச் டயலாக்ஸ் 


 1  பாப்பா , நீ ஓவர் ஆக்டிங்  ரொம்ப பண்ண  வேணாம் , ஒரு டைம் பண்ணா போதும் 


2  டிடெக்டிவ்களுக்கு பர்சனல் லைஃப் கிடையாது , அதனால் நீ டி காப்ரியா ஆசையை விட்டுடு 

3    எஃப் பி ஐ அப்டினா என்ன?  ( FBI)

 ஃபாத்திமா பரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன், இதுல ஃபாத்திமாங்கறது நான் முதல் ல லவ் பண்ணுன பொண்ணு 


4  சார், கேசை துப்பு துலக்கி உதவுனீங்க , நன்றி , எவ்ளோ  ஃபீஸ்?

 ம்.. ரூ 3116


 இந்த கேசே 500 ரூபா மதிப்புள்ள  பொருள் திருடு போனதுலதான் , அதனால யூ ஜஸ்ட் டேக் ரூ 116 ஒன்லி 


5 கிரிமினல்ஸ் கண்ல பயம் இருப்பதை அவங்களால மறைக்க முடியாது

6   பிரியமானவங்களைப்பிரியப்போறோம்னு தெரிஞ்சா கடைசியா அவங்களை ஒரு தடவை பார்த்துக்கலாம்


7  என் அம்மாவை உயிர் இல்லாம பார்க்கும்போதுதான் அவங்களை கடைசியா உயிரோட எப்போ பார்த்தோம்கறதே மறந்துடுச்சுனு தெரிய வந்தது 




 லாஜிக் மிஸ்டேக்ஸ் 

1  வில்லன் க்ரூப் படுபயங்கர கிரிமினாலஜி மூளை கொண்டவன். போலீசை விலைக்கு வாங்கறான். . அவங்க டீட்டெய்ல்ஸ் தெரிஞ்சு  ஃபைல்ஸ் ரெடி பண்ணவங்களை போட்டுத்தள்ளிடறான். ஹீரோவை மட்டும் எதுவும் செய்யலை , கொலை முயற்சி , மிரட்டல் எதுவும் இல்லை . அவரை கொலை கேஸ்ல மாட்ட வைக்க முயற்சி பண்றதுக்கு அவரையே போட்டிருக்கலாம்


2 ஒரு டைம் ஹீரோ  காரின் முன்  சீட்டில் இருக்கார் , பின் சீட்டில் இருந்து கொலை முயற்சி நடக்குது. இரு சமபலம் கொண்ட ஆண்கள்  இப்டி செய்யறது ரிஸ்க் . முதல்ல மயக்க மருந்து ஸ்ப்ரே பண்ணிட்டு பின் கொலை பண்ணி இருந்திருக்கலாம் அந்த  ஈசியான ஆப்சனை ஏன் வில்லன் தேர்ந்தெடுக்கலை ?

 3   காட்டிலாகா அதிகாரிகள் பார்வையில் படாமல் பல வருடங்களாக காட்டில் குறிப்பிட்ட ஒரே இடத்தில் பல பிணங்களை வில்லன் க்ரூப் எரிப்பது டவுட் தான். தீ ஜ்வாலை காட்டிக்கொடுத்திருக்குமே? புகை மண்டலம் எழும்பி இருக்குமே? 


4   பேசஞ்சர் ரயிலில் பிணங்களைக்கடத்தாமல் சரக்கு ரயிலில் அதுவும் நைட் 10 மணிக்கு மேல் கடத்துவது நல்ல ஐடியா தான்.  ஆனா ஒரு டைம் கூட ரயில் டிரைவரோ , வேறு ஊழியர்களோ பார்க்காமலேயே கண்ல மண் தூவிட்டாங்க என்பதும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை 

5  க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டில் வரும் ஆள் மாறாட்ட டூளிகேட் மரணம் சந்தேகத்துக்கு உரியதே. சும்மா அப்பா  வாக்கு மூலத்தை மட்டும் வைத்து இறந்தது மகள் தான்  என முடிவு பண்ண மாட்டாங்க , முகம் சிதைக்கப்படலை , அதனால மகளோட ஃபோட்டோவை வெச்சு  வெரிஃபை பண்ண மாட்டாங்களா?


சி.பி கமெண்ட் =  த்ரில் பட ர்சிகர்கள் மிஸ் பண்ணிவிடக்கூடாத படம் . கொலை , டெட்பாடி என பல சொற்கள் விமர்சனத்தில் வருவதால் யாரும் பயப்பட வேண்டாம், வல்காரிட்டி , வன்முறை , ரத்தம் எதுவும் இல்லை . பெண்களும் குடும்பத்துடன் பார்க்கும்படி தான் இருக்கு ., அமேசான் பிரைம்ல கிடைக்குது .  ரேட்டிங் 3. 75 / 5