Thursday, May 14, 2020

the weather man (2005) -சினிமா விமர்சனம்

the weather man (2005) -சினிமா விமர்சனம்

மிக எளிமையான , சாதாரணமான , எல்லா மொழிகளுக்கும் உகந்த ஒரு கதை. தொலைக்காட்சியில்  வெதர்மேனாகப்பணி புரிகிறார் ஹீரோ. அவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கிறார். அவர்களது குழந்தைகள் இருவர்  அவர்களது அம்மாவுடன் இருக்கின்றன. அப்பப்ப அவங்களைப்பார்க்க வருவார் ஹீரோ , வெளில அழைச்ட்டுப்போவார் .


குழந்தைகளுடன் வசிக்கும் அவர் மனைவி இப்போ வேறு ஒரு பாய் ஃபிரண்ட் உடன் லிவ்விங் டுகெதர் மாதிரி ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.குழந்தைகளோடு நேரம் செலவழிக்கும் ஹீரோ வுக்கு ஏற்படும் பிரச்சனைகள் , மனைவியுடனான வாக்குவாதங்கள், பணியில் காணும் சில சிக்கல்கள் என மிக யதார்த்தமான ஒரு திரைக்கதை தான் இது


பர பரப்பான காட்சிகள் , அதிரடி சண்டை , க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் என  எதிர்பார்த்துப்போறவங்க ஏமாற்றம் அடைவாங்க  ஆனா  ஒரு ஃபீல் குட் காமெடி மெலோ டிராமா வகைப்படம் என்ற அளவில் இது ஒரு நல்ல படமே . .,

 தமிழில் இதுபோல கணவன் , மனைவி பிணக்குகள் கொண்ட படங்கள் நிறைய வந்திருக்கு , அவ்வை சண்முகி, நான் அடிமை இல்லை என சொல்லிட்டே போகலாம். இந்த மாதிரி கதைகள் ல ஹீரோ -ஹீரோயின் க்ளைமாக்ஸ் ல சேருவாங்களா? சேரமாட்டாங்களா? என்பதுதான்  க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டாக இருக்கும். ஆனா இந்தப்பட இயக்குநர் அதைப்பற்றி எல்லாம் கவலையே படம போற போக்குல  க்ளைமாக்ஸை  எடுத்திருக்கார் ., அதுதான் படத்தின் பலமும், பலவீனமும்

 ஹீரோவா நிக்கோலஸ் கேஜ் . மிக யதார்த்தமான இயல்பான நடிப்பு . பணி செய்யும் இடங்களில் அவருக்கு ஏற்படும் அனுபவங்கள் காமெடி கலக்கல்ஸ்
நம்ம ஊர் நம்பியார்  பொது இடங்களில் ரசிகர்களை சந்தித்தால்  வித்தியாச்மான கேள்விகளை சந்திப்பாராம். நீங்க நிஜமாவே வில்லனா? கொடூரமானவரா? என கேட்பாங்களாம். அந்த மாதிரி ஹீரோ  பொது இடங்களில் சந்திக்கும் பிரச்சனைகளை காமெடியா சொல்லி இருக்காங்க 


மகளுடன் ஹீரோ கழிக்கும் பொழுதுகளில் அவரது உடைகள் அவருக்குப்பொருத்தமாக இல்லை என உணர்வது , மகளுக்கு அதை உணர்த்துவது அனைத்தும் டச்சிங் 


 மகனை எல்லோருக்கும் தெரிந்த ஒருவரே   பாலியல் சீண்டல் புரிய முற்பட்ட்டதை உணர்ந்து  அவனை துவம்சம் செய்யும் சீன் கை தட்டலை அள்ளுது. அதுவரை எல்லா சூழ்நிலைகளிலும் அமைதியாகவே வரும் ஹீரோ  மாணிக்கம் டூ மாணிக் பாட்ஷா ஆவதைக்கண்டு  மகன் பிரமிக்கும்  தருணம் குட் ஒன்


 மகன், மகள் முன்னால் தன் மனைவியிடம்  வாக்குவாதம் செய்யும் சூழலில்  ஹீரோவின் தர்மசங்கடம்   குட் பர்ஃபார்மென்ஸ். 

 ஹீரோவுக்கும் அவரது அப்பாவுக்குமான பாண்டிங்  ஹாலிவு ட்  படத்துக்கு புதுசு

 படம் நெடுக  தத்துவ வசனங்கள் அள்ளி இறைக்கப்பட்டிருக்கு 


 கதை ஹீரோவின் பார்வையிலேயே செல்வதால் ஹீரோயின் மேல் பரிதாபமோ அவர் இவருடன்  சேர்ந்தால் தேவலை என்ற எண்ணமோ ஏற்படவில்லை 


 நச் வசனங்கள் 


1    வாழ்க்கைல ஏதாவது ஒண்ணை அடையனும்னா ஒண்ணை விட்டுக்குடுக்கனும்


2   உலகத்துல கஷ்டமான பாதைன்னு ஒண்ணு இருந்தா நிச்சயம்   சரியான பாதைனு ஒண்ணு இருக்கும் 

3   எதுவும் ஈசியா கிடைக்காது , அப்படிக்கிடைச்சா அது நிலையா இருக்காது  (  இது ரஜினி படத்துல வரும்- முத்து-னு நினைக்கறேன்  )

4 அப்பா கிட்டே நல்ல பேர் எடுக்கனும்னு ஆசைப்பட்டா அவர் எதிரே வேற யாரையும் எக்காரணத்துக்காகவும் அடிக்கக்கூடாது . அதை மீறி அடிச்ட்டா அவன் மகாத்மாவே ஆனாலும் அப்பா கண்ணுக்கு வில்லனாதான் தெரிவான் 



5  வாழ்க்கையும்  வெதர் மாதிரி தான், எப்போ மாறும் அப்டினு யாராலும் கணிக்க முடியாது 

6  வாழ்க்கைல ஒருத்தன் தப்பான வழில போறான்னா அவனுக்கு ஏற்படும் மன உளைச்சல் தான் காரணம் , ஆனா உண்மைல அவனுக்கு மன நிம்மதியே என்றும் இருந்ததில்லை 


7 ஒரு மனுசனுக்கு சந்தோஷம் சிதைஞ்சு போச்சுன்னா  அவன் வன்முறையைக்கையில் எடுக்கிறான்

8   வாழ்க்கைல முடிவுங்கறதே கிடையாது , எல்லாமே ஆரம்பம் தான்

 சபாஷ்  டைரக்டர் 

1  ஹீரோவுக்கும், அப்பாவுக்குமான பந்தம் , அவர்களின் உரையாடல் மிக அழகு.அதே போல் ஹீரோவுக்கும் அவரது மகனுக்குமான சந்திப்புகள்  கவிதை 


2  வன்முறையை விரும்பாத அப்பா தன் பேரனை வன் கொடுமை செய்ய முயன்றவனை  தன் மகன் தாக்கியது கண்டு பூரிப்பது டச்சிங்


3  தனக்கு பிரமோஷன் கிடைத்ததும் அதை தன் மனைவியிடம் தெரிவிக்க வரும் ஹீரோ அவள் அதைக்கண்டு கொள்ளாதது , இன்க்ரீமெண்ட் பற்றி அக்கறை கொள்ளாதது கண்டு கனம் வெதும்புவது கவிதை 



4  யதார்த்தமான க்ளைமாக்ஸ்