Saturday, January 25, 2020

சைக்கோ - சினிமா விமர்சனம் 25+

psycho tamil के लिए इमेज परिणाम

ஹீரோ ராஜபார்வை , காசி ,தாண்டவம் படங்கள்ல வர்ற ஹீரோ மாதிரி விழி ஒளி இழந்தவர் , ஹீரோயின் ஒரு ரேடியோ ஜாக்கி . பொதுவா தறுதலையா வெட்டியா இருக்கற பசங்களுக்கு ஒருதலையா எதுனா ஃபிகரை லவ் பண்றது வழக்கமான பழக்கம், இதிலும் டிட்டோ , ஆனா பாப்பா ஏத்துக்கலை , ஒரு மேடை நிகழ்ச்சில ஹீரோவை ஹீரோயின் அவமானப்படுத்துது. இருந்தாலும் அதை பொருட்படுத்தாத ஹீரோ ஒரு பாட்டு பாடறார். மைக் மோகன் டைப்ல வர் பாடறதைக்கேட்டு ஹீரோயின் மனசு மாறி உன்னை லவ் பண்றேனா? இல்லையா?ங்கறதை  நான் க்ளூ கொடுக்கற இடத்துக்கு நீ சரியா வந்தா லவ்வை சொல்றேன்குது பாப்பா . ஒரு கேவலமான க்ளூ தருது.


 எங்கேயோ அத்துவானக்காட்டில்  ஹீரோயின் ஹீரோவுக்காக வெய்ட்டிங்
 அங்கே ஹீரோவும் எண்ட்ரி , வில்லனும் எண்ட்ரி . வில்லன் அல்ப சொல்பமானவன் இல்லை. ஆல்ரெடி பல பெண்களை கொலை செஞ்சவன். ஹீரோயினை கடத்திட்டுப்போய்டறான்

 அதுக்குப்பின் என்ன ஆச்சு? ஹீரோ ஹீரோயினை மீட்டாரா? புரொடியூசர் போட்ட முதலீட்ல பாதியாவது  திருப்பி எடுத்தாரா?

 வெண் திரையில் காண்க


சைக்கோ கொலைகாரன் பற்றி தமிழில் வந்த முக்கியமான படங்கள்
பாலுமகேந்திராவின்  மூடுபனி  ( ஹிட்)
பாரதிராஜா வின் சிகப்பு ரோஜாக்கள் ( செம ஹிட்)
சிம்பு வின் மன்மதன் ( செம ஹிட்)
கவுதம் வாசுதேவ் மேனன்   நடுநிசி நாய்கள் ( அட்டர் ஃபிளாப்)
செல்வராகவன்  காதல் கொண்டேன் ( சூப்பர் ஹிட்)
ராம்குமார்  ராட்சசன்  செம ஹிட்
செந்தில்   காளிதாஸ்  ஹிட்

இந்த லிஸ்ட்டைப்பார்த்துட்டு மிஸ்கின் என்ன கணக்கு போட்டார்னா சைக்கோ படம்னா வெற்றிக்கான வாய்ப்பு ஜாஸ்தியா இருக்கு , நாமளும் நம்ம பங்குக்கு ஒண்ணை இறக்குவோம்னு களம் இறங்கி இருக்கார்


படத்துல மிகப்பெரிய பிளஸ்  இளையராஜா , உன்னை நினைச்சு நினைச்சு  செம ஹிட் மெலோடி . படத்துக்கு இவ்ளோ ஓப்பனிங் கிடைக்க முக்கியக்காரணம் பாட்டு ஹிட் ஆனதே ., இது போக 2 பாட்டு இருக்கு , அதுவும் பரவால்லை ரகமே . பிஜிஎம் பற்றி
  சொல்லவே வேணாம், இளையராஜா அதில் விற்பன்னர் ,. முதல் பாதில சுமாரா போன இசை  பின் பாதியில் பட்டாசைக்கிளப்புது


ஒளிப்பதிவு ரொம்ப முக்கியம்,. சைக்கோ கொலைகாரன் ஸ்பாட் ம்னட்டும் டிம் அடிச்ச மூட்ல காட்டிட்டு மற்ற இடங்களை எல்லாம் பிரமாதமான லைட்டிங்கோட ஒளி அமைத்த விதம் அருமை


நித்யா மேணன் நடிப்பு  குட் , ஆனா ஒரு பொறுப்பான போலீஸ் ஆஃபீசர் அம்மாவைக்கூட மரியாதை இல்லாம  வாடி போடி எனவும் பேர் சொல்லியும் கூப்பிடறது என்ன மாதிரி கேரக்டர் ஸ்கெட்ச்? ஒரு வேளை மூன்றாம் கலைஞர் இருப்பதால் யாரும் அம்மாவை மதிச்சா பிடிக்காது என இயக்குநர் நினச்சாரோ என்னவோ?

2015ல இருந்து 2019 வரை கொலைகள் வரிசையா நடக்குது ஆனா போலீஸ் கண்டுபிடிக்க முடியலை என்பதெல்லாம் பூச்சுற்றல்


இயக்குநர் ராம் போலீஸ் ஆஃபீசரா வர்றார். அவரைப்பார்த்தா சுறுசுறுப்பான போலீஸ் மாதிரி தெரியல என்னமோ மூலம் வந்த  ஆதிமூலம் மாதிரி வீக்கா டயர்டா தெரியறார்.

 சார் உங்க உயிருக்கு ஆபத்து எஸ் ஆகுங்க என நாயகி எச்சரிக்கும்போது  . அட போம்மா ரொம்ப டயர்டா இருக்கு அப்டிங்கறார், அய்யோ ராமா

மூன்றாம் கலைஞர் அப்படியே தன் தாத்தா அப்பா மாதிர் , அவங்க 2 பேரும் அரசியல்ல மக்களிடம் நடிச்சாங்க , இவர் சினிமா ல நடிக்கறாரு .ஓவர் ஆக்டிங் எதும் பண்ணாம  அடக்கி வாசித்திருப்பது சிறப்பு

 நாயகியா அதிதி செம ஆக்டிங். முகம் தாமரை மாதிரி  சாரி தமிழர்களுக்குதான் தாமரைன்னாலே அலர்ஜி ஆச்சே? நந்தியா வட்டைப்பூ மாதிரி.

 வில்லன் மிரட்டல் நடிப்பு, ஆஜானுபாவக உய்ரம்.

சிங்கம்புலி கொஞ்சம் ஆறுதல்

aditi rao hydari hot के लिए इमेज परिणाम
நச் வசனங்கள்


1  சைக்கோ,சீரியல் கில்லர் என்ன வித்யாசம்?
2ம் 1தான்.
ஒரு மனுசன் இன்னொரு சக மனுசனை கொலை செய்ய அவனுக்கு உரிமை இல்லை.அப்படி அவன் தொடர்ந்து கொலை செஞ்சுட்டே வந்தா அவன் சைக்கோ

ஜாதி வெறில கொல்றவனும் சைக்கோதான் #PsychoFromtoday


இப்டி என் பொண்ணு பின்னாடியே எப்பவும் வர்றியே?

சீக்கிரம் "முன்னுக்கு" (முன் வரிசைஹீரோவா)வந்துடுவார்.. #PsychoFromtoday

கொலைகாரனைப்பிடிக்கனும்னா சாகறதுக்கு தயாரா இருக்கனும் #PsychoFromtoday








தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  மூன்றாம்"கலைஞர் சில பல படங்கள் நடிச்சிருந்தாலும் ஒருகல் ஒரு"கண்ணாடிதான் ஹிட்.எம்.ராஜேஷ் + சந்தானம் காம்போவால் தப்பிச்சாரு.ஆனா நாளை வெளியாக இருக்கும் "சைக்கோ" மிஷ்கின்,இளையராஜாவையும் தாண்டி அவருக்கு பேர் வாங்கித்தரும்னு எதிர்பார்க்கிறேன்

ஹீரோ க்கு ஹீரோயின் மேல இருக்கற அன்பை,காதலை,அபிமானத்தை"முதல்ல சிலகாட்சிகளால் ,வசனங்களால் ஆடியன்சுக்கு புரிய வெச்சுடனும்.அதுக்கப்புறம்தான் ஹிட் சாங் இன்செர்ட் பண்ணனும், எ குட் மூவ் இன் ராங் ப்ளேஸ் ,உன்னை நினச்சு நினச்சு செம ஹிட் சாங்கை ஓப்பனிங் லயே இறக்கியது பெரிய தவறு #PsychoFromtoday


ஒரு இயக்குநர் தன் கொள்கைலயும் கோட்பாடுகள்லயும் உறுதியா இருக்கலாம்,ஆனா காதல் வெளிப்படுத்தும் முக்கியக்காட்சியில் க்ளோசப் ஷாட் வைக்காமல் லாங் ஷாட்தான் வைப்பேன் னு அடம் பிடிப்பது ஏனோ? #PsychoFromtoday


மூன்றாம் கலைஞரின் நடிப்பு கனகச்சிதம் ,அவரு குடும்பமே நடிப்பு ரத்தத்துல ஊறி இருக்கே? #PsychoFromtoday


படத்தின் முதல் பாதில இளையராஜா கால்ஷீட் கிடைக்கல போல.வட்டியும்,முதலுமா பின் பாதில பிஜிஎம் ல பின்னிப்பெடல் எடுத்துட்டாரு #psyco




சைக்கோ யார் எல்லாம்பார்க்கக்கூடாது?
1 இளகிய மனம்"கொண்டோர்
2 கர்ப்பிணிப்பெண்கள்
3 தனிமையில் வசிக்கும் ஆண்கள்
4 ரத்தம் கண்டால் அலர்ஜி உள்ளவர்கள்;
5 ஒரு படம் பார்த்தா அதில் வரும் வில்லன்"போல்"நாமும் செஞ்சு பார்த்தா என்ன? என்ற எண்ணம் கொண்டவர்கள்
6 வயது 25 க்கும் கீழ் உள்ளோர்



7  சைக்கோ படத்துல இயக்குநர் சொல்ல வரும் நீதி = பல கொலைகள் கொடூரமா செஞ்சிருந்தாலும் சைக்கோ வை யாரும் வெறுக்கக்கூடாது,அன்பு"காட்டனும்,அன்புக்காக ஏங்கிதான் ,சில சம்பவங்களால் பாதிக்கப்பட்டுதான்"அவன் சைக்கோ ஆகறான்,எனவே அன்பு"செய்யுங்கள் #psyco

8   ஹீரோ கேரக்டர் வடிவமைப்பில் ஒரு சறுக்கல்
நண்பன் = நான்தான் உன் வாழ்வின் வெளிச்சம்னு சொல்வியே,இப்போ என்னை போ னு துரத்துனா நான் எங்கே போவேன்?
நாயகன் =போ ,எங்காவது போய் செத்து ஒழி
அடுத்து வரும் காட்சியில் நண்பன் இறக்கப்போகிறார் ங்கற குறியீடு ஓகே,ஆனா ஹீரோ கேரக்டர் புஸ் #psyco




சபாஷ் டைரக்டர்


1   இளையராஜாவிடம் கெஞ்சியோ , பம்மியோ நல்லபடியா 3 பாட்டு வாங்கிய திறமை


2  வாய்ப்பிருந்தும்  ரேப் சீன் வைக்காதது


3  ஹீரோவுக்கு க்ளைமாக்ஸ் ல வில்லன் கூட சோலோ ஃபைட் வைக்காதது

aditi rao hydari hot के लिए इमेज परिणाम


 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்

1  லாஜிக் மிஸ்டேக் 1 − வழக்கமாக தான் கொலை செய்யும் ஒவ்வொரு பெண்ணையும் கொல்லும் முன் அவள் முகத்தில் மரண பயத்தை ரசித்து பின் கொல்லும் சைக்கோ கொலைகாரன் நாயகி கண் முன் கொல்லும் பெண்ணை மட்டும் மயக்க நிலையில் கொல்வது ஏன்? #PsychoFromtoday


லாஜிக் மிஸ்டேக் 2− ஒரு வீட்டு எஜமானியை பாக்க வரும் விழி ஒளி இழந்த நபரை அந்த வீட்டு பணிப்பெண் அவரை மாடிக்கு வழி நடத்தி செல்லாமல் "மேலே தான் இருக்காங்க,போய்ப்பாரு"என்பது ஏனோ? இத்தனைக்கும் அவர் நல்ல மனம் கொண்டவர்,உதவும் மனப்பான்மை கொண்டவர்னு குறிப்புகள் வருது #pshyco

லாஜிக் மிஸ்டேக் 3− சைக்கோ கொலைகாரன் தான் கடத்தும் பெண்களை ஒரு குட்டி நாயின் கவன ஈர்ப்பு மூலம்தான் கடத்தறான் என்பதை அறிந்து போலீஸ் மீடியாக்களில் நாய் வெச்சிருக்கற நாய் யாரையாவது"பாத்தா ஜாக்கிரதைனு வார்னிங் குடுக்குது,சைக்கோ அந்த விளம்பரத்தைப்பாத்து தன் ரூட்டை மாத்திக்கமாட்டானா?பூனைக்குட்டி வெச்சு ட்ரை பண்ண மாட்டானா? #psyco


லாஜிக் மிஸ்டேக் 4− சைக்கோ கொலைகாரன் ஒவ்வொருத்தரையும் கடத்து போது, பப்ளிக் ப்ளேஸ் ல தான் கடத்தறான், அதுவும் 14 வது கடத்தல்ல ஒரு கார் பார்க்கிங்கில் கொலையே செய்யுறாரே அங்கு சிசிடிவி கேமரா இருக்கா என்று கூட போலிஸார் விசாரிக்க மாட்டார்களா ? #PsychoFromtoday



லாஜிக் மிஸ்டேக் 5− கொலைகாரனால் தாக்கப்பட்டு கடைசி மூச்சில் இருக்கும் ஹீரோவின் நண்பன் ஹீரோவுக்கு ஒரு தகவல் சொல்ல ட்ரை பண்றப்ப பக்கத்துலயே இருந்த கொலைகாரனால் மறுபடி தாக்கப்படறாரு. ஈசியான வழி sms.அதை ஏன் அவரு ட்ரை பண்ணலை #PsychoFromtoday



லாஜிக் மிஸ்டேக் 6− சைக்கோ வில்லன் 14 பெண்களை கொலை செய்தவன்,க்ளைமாக்சில் அவனை போலீசில் சிக்க வைத்து மன நல காப்பகத்தில்"சிகிச்சை தர விடும் பொறுப்பு எதுவும் இல்லாமல் மடத்தனமாக அவனை மன்னித்து இரக்கப்பட்டு விடுவது என்ன விதமான மனநிலை?சட்டப்படி ஹீரோ,ஹீரோயின்"செய்ததே தவறுதான் #psyco


லாஜிக் மிஸ்டேக் 7− சைக்கோ தனது பெரும்பாலான கொலைகளை நாய்க்குட்டியை முன் வைத்து பெண்ணின் கவனம் கவர்ந்து தான் கொலை பண்றான்,ஆனா அவனது இருப்பிடத்தில் நாய் இருக்கும் சுவடே இல்லை.அட்லீஸ்ட் பேக்க்ரவுண்டில் நாய் குரைக்கும் சத்தம் கூட கேட்கலை #psyco


லாஜிக் மிஸ்டேக் 8− சைக்கோ ஹீரோயினை குணா"கமல் மாதிரி தன் இடத்தில் 7 நாட்கள் அடைச்சு வெச்சிருக்கான்,வேளாவேளைக்கு சாப்பாடு தர்றான்,ஆனா ஒரு டிரஸ் கூட மாத்திக்க தர்லை,ஒரு"வாரமா அழுக்கு டிரஸோடவே அழகு ஹீரோயின் #psyco


9  லாஜிக் மிஸ்டேக் 9− மேட்டுப்பாளையத்தில் உள்ள 53 பன்றிப்பண்ணைகளில் ஏதோ ஒன்றில் வில்லன் இருக்கான்னு"தகவல் தெரியுது.உடனே போலீசுக்கு தகவல் தந்தா அவங்க பல பிரிவா பிரிஞ்சு 1 மணி நேரத்தில்"பிடிச்சிருப்பாங்க,இவரு 2 பேர் மட்டும் 53 இடம் போய் விசாரிக்க 2 நாள் ஆகும் #psyco


10  லாஜிக் மிஸ்டேக் 10− விழி ஒளி இழந்தவர் பல நாட்கள் பழகிய தனது வீட்டில் நடமாடுவது"எளிது,ஆனால்"முன்"பின்"அறியாத வில்லன் இருப்பிடம் போய்"கரெக்டா லெப்ட்ல திரும்பி ரைட்ல கட் பண்ணி பேக்ல டர்ன் பண்றதெல்லாம் பேரரசு ,ஹரி படத்துக்கு ஓகே,மிஷ்கின்"படத்திலுமா?இதுல நடந்து போகாம ஓடி வேற போறாரு #psyco


11 லாஜிக் மிஸ்டேக் 11- சைக்கோ ஆனது"எப்படி ?என்பதற்கு பிளாஸ்பேக் வெச்சாதான் அது"அழுத்தமா ஆடியன்ஸ் மனசுல பதியும் (உதா− சிகப்பு ரோஜாக்கள், காதல்"கொண்டேன், மன்மதன்,நடுநிசி நாய்கள்) சும்மா வசனத்துலயே சமாளிக்கறது வேலைக்கு ஆகாது.அதுவும் வில்லன் தன்"வாயால ஹீரோயின்ட்ட சொல்ற மாதிரி காட்ட வாய்ப்பிருந்தும் விட்டுட்டாங்க.வேற ஒரு கேரக்டர் அதை விளக்குவது நிக்கலை #psyco


12 லாஜிக் மிஸ்டேக் 12− விழி ஒளி இழந்த ஹீரோ ஒரு பணக்காரர்,கார் வெச்சிருக்கார் ,ஒரு டிரைவர் வெச்சுக்க மாட்டாரா?கண்ணாமூச்சி விளையாடறப்ப லெப்ட்ல போ,ரைட்ல போ னு சொல்றமாதிரி க்ளைமாக்ஸ்ல காரை நித்யாமேணன் வழி காட்ட ஓட்றாரு #psyco .


13  லாஜிக் மிஸ்டேக் 13−வில்லனை ஹீரோ இன்னும் பிடிக்கலை,நேருக்கு நேர் சந்திக்கலை,சில க்ளூ மட்டும் கிடைக்குது,ட்ரை பண்றாரு,ஆனா வில்லன் பேக்கு மாதிரி "நான் உன் கிட்ட தோத்துட்டேன் னு 4 டைம் தனிமை ல கத்தறாரு,200 ருபா அங்கேயும் வேலை செய்யுது போல #psyco


14  லாஜிக் மிஸ்டேக் 14−எந்த அடிப்படையில் வில்லன் தான் கொலை செய்யும் பெண்களைத்தேர்வு செய்கிறான்?னு கண்டுபிடிக்கவே முடியலையே? 14 பேரு கொலை செய்யப்பட்டதுல 14 பேரையும் இணைக்கும் கோடு இல்லையே னு ஹீரோ ,போலீஸ்,ஆடியன்ஸ் அங்கலாய்க்கறாங்க,கடைசி வரை யாருக்குமே விடை தெரில #psyco

15  லாஜிக் மிஸ்டேக் 14− சைக்கோ வுக்கான பிளாஸ்பேக்கில் ஆணான அவரை இன்னொரு ஆண் ரேப்பிட்டதா (!) வசன ரீதியா தெரிவிக்கிறார்.அப்போ லாஜிக்படி அவர் அந்த மாதிரி ஹோமோ டைப் கேரக்டர்களைத்தானே தேடி கொலை செய்யனும்?அப்டி செய்யலை #psyco





 விகடன் மார்க் ( யூகம்)  -42

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)  4/5


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க் -3.25 / 5 ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)


 C.P.S  கமெண்ட்-சைக்கோ − 14 பெண்களைக்கொலை செய்த சைக்கோவை பிடிக்க முயலும் ஹீரோவின் கதை.மிஷ்கின் அதகளம்,இளையராஜா பிஜிஎம்ல,கலக்கிட்டார்,மூன்றாம் கலைஞர் குட் ஆக்டிங்.அனைத்துத்தரப்பினருக்கும் ஏற்ற படம் அல்ல,கொடூரக்காட்சிகள் உள்ளடக்கம்,விகடன் 42 ,ரேட்டிங் 3.25 / 5 ,ஏ செண்ட்டர் பிலிம் #psyco