ஹீரோ ஒரு ப்ரைவேட் மெடிக்கல் காலேஜ்ல ஹவுஸ் சர்ஜன் படிப்புல இருக்கார் , அவருக்கு ஜூனியரான ஹீரோயினை பார்த்ததும் காதல் வருது. இதயம் முரளி மாதிரி எல்லாம் பம்மாம அடுத்த சீன்லயே கிஸ் அடிச்சுடறாரு. ஹீரோயினும் தேமேனு அதை வாங்கிக்குது, என்னமோ ரேஷன் கடைல குடுக்கற இலவச கோதுமை யை வாங்கற மாதிரி, ஹீரோயின் ரொம்ப அமைதியான டைப் , அதனால கில்மா க்கு கூப்பிட்டப்பக்கூட ஹீரோவை எதிர்த்து எதுவும் பேசல , அதான் அமைதியான டைப் ஆச்சே? 2 பேரும் காலேஜ் முடிக்கறதுக்குள்ள 549 தடவை தப்பு பண்ணீடறாங்க , இதை வேலை வெட்டி இல்லாம எண்ணிட்டு இருந்திருக்கான் பாருனு என்னை யாரும் கேட்டுடாதீங்க , அந்த கவுண்ட்டிங்கை ஹீரோ , ஹீரோயின் 2 பேருமே சொல்றாங்க
அதான் மேட்டர் முடிஞ்சுதே , இனி என்னத்தை திரைக்கதைல சொல்லிடப்ப்போறாங்க அப்டினு யாரும் அல்ப சொல்பமா நினைக்க வேண்டாம்.
லவ் மேட்டர் , மேட்டர் பண்ண மேட்டர் எல்லா மேட்டர்களும் வீட்டுக்கு தெரிஞ்சுடுது, அடுத்த நாளே மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணி ஹீரோயினுக்கு மேரேஜ் பண்ணீ வெச்சுடறாங்க , கல்யாண மண்டபம் எல்லாம் 6 மாசம் முன்பே புக் ;பண்ணனும், எப்படி அவங்களுக்கு மட்டும் மண்டபம் கிடைச்சுது?னு மடத்தனமா யாரும் கேட்க வேண்டாம், சினிமான்னா அப்டித்தான்
அதுக்குப்பின் திரைக்கதைல ஒரு பெரிய தொய்வு . ஹீரோ தம் அடிக்கறாரு , சரக்கு அடிக்கறாரு .கஞ்சா அடிக்கறாரு , அபின் அடிக்கறாரு, மொத்தத்துல நம்மை நோக அடிக்கறாரு
2 வது பாதில ஒரு கிளு கிளு வேணாமா , ஹீரோ ஒரு நடிகையை சந்திக்கறாரு.
என்னமோ பிளஸ் டூ ;படிகறப்ப உங்க பிசிக்ஸ் புக் தர்றீங்களா>னு கேட்கற மாதிரி ஹீரோ நடிகை கிட்டே எனக்கு பிசிக்கலா ஒரு ஹெல்ப ;பண்ண முடியுமா?னு ஹீரோ ஒரு பிட்டைப்போடறாரு, நடிகைக்கு அதிர்ச்சி
இப்போ ஹீரோ நடிகை கூட மேட்டர் பண்ணாரா?? க்ளைமாக்ஸ் யார் கூட பர்மணண்ட் க்ளைமாக்ஸ் ரெகுலரா பண்ணப்போறார் என்பதை வெண் திரையில் காண்க
ஹீரோவா த்ருவ் விக்ரம் புதுமுகம் மாதிரியே தெரியல அவ்ளோ இன்வால்வ்மெண்ட்டோட நடிச்சிருக்காரு , பல காட்சிகள் அப்பா விக்ரம் நடிச்ச சேது படத்தை நினைவு ”படுத்தறார்.:குறிப்பா தண்ணீ அடிக்கற காட்சி , தம் சீன் எல்லாம் உணர்ந்து நடிச்சிருக்காரு
\
படத்துல மொத்தம் 29 லிப் டூ லிப் சீன்கள் தமிழ் சினிமால இதுக்கு முன் கிஸ் சாதனை நிகழ்த்தியவர் கமல் படம் சூரசம்ஹாரம், நாயகி நிரோஷா 19 லிப் கிஸ் + நாக்கு கிஸ் 1
ஹீரோயினா பனிதா சந்துனு ஒரு ஃபிக்ர். பாவமா இருக்கு, ட்விட்டர் ச்ந்து அவரை க;லாய்க்கப்ப்லோகுது
தமிழன் நடிகைக்கு எது பெருசா இருந்தாலும் பொறுத்துக்குவான் , பல் பெருசா இருந்தா பொறுத்துக்க மாட்டான் ( புன்னகை அரசி கே ஆர் விஜயா, புன்னகை இளவரசி சினேகா இவங்களுக்குக்கூடக்த்தான் பல் பெருசு, ஆனா நாம ரசிக்கலைல்யா?னு கேட்கக்கூடாது )
ஹீரோயின் இடது கண் இமை மேல ஒரு ம்ரு இருக்கு அழகா இருக்கு . மற்றபடி நடிப்பு சுட்டுப்போட்டாலும் வர்லை
ஒரிஜினல் வெர்ஷன் அர்ஜூன் ரெட்டி ஹீரோயின் ஷாலினி பாண்டே நடிச்சதுல , ஹிந்தி வெர்ஷன் கபிர்சிங்க் நாயகி க்யாரா அத்வானி நடிச்சதுல பாதி கூட இந்த பாப்பா நடிக்கல. அவருக்கு நடி[ப்பு வர்லைங்கறதுக்காக முக்க்கியமான க்ளோசப் ஷாட்களில் அவரது முகத்தைக்காட்டாமயே படம் பிடிச்ச இயக்குநருக்கு ஒரு கொட்டு , இதே ; பாலாவா இருந்தா முகரையைப்பேத்து இருப்பாரு
ஹீரோவுக்கு நண்பரா வர்ற அன்புதாசன் கவனிக்க வைக்கறார்
நடிகையாக வரும் ப்ரியா ஆனந்த் ரொம்ப இளைச்சிருக்கார் ., மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்,காதுனு பழமொழி சொன்ன ஆளை தேடிட்டு இருக்கேன்
நடிகையா எத்தனையோ பேரை சந்திச்சவரு சிடுமூஞ்சி டாக்டர் கிட்டே ஏன் காதல்ல விழறார் என்பதற்கு பதில் இல்லை
இசை சுமார் தான். ஒளீப்பதிவு ஓக்கே ரகம்
படம் நீளம் அதிகம் நீலமும் அதிகம்
படத்தில் கவனிக்க வைத்த மற்ற நடிகர்களில் கடலோரக்கவிதைகள் ராஜா ஹீரோவுக்கு அப்பாவா வர்றார், பாட்டியா லீலா சாம்சன்
நச் வசனங்கள்
1 அழகான பொண்ணுங்க Loyal லா இருக்க மாட்டாங்க ,மீரா,உன் பக்கத்து சீட்ல ஒரு குண்டு பொண்ணை உட்கார வைக்கறேன்,அவங்க கடைசி வரை நட்புக்கு நம்பிக்கை யா இருப்பாங்க ( சிவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் ,சிவப்பு+கறுப்பு டிரஸ் போட்டவன் திருட மாட்டான்கற மாதிரி இருக்கு ) #aadhithyavarma
2 நீ பொறுமையாவே இருக்க மாட்டியா? உன்னை பெத்தாங்களா? நீயே எகிறிக்குதிச்சு வந்துட்டியா?
3 18 +
ஓ,இங்கேதான் நம்ம பர்ஸ்ட் நைட்டா?
என்னது?பர்ஸ்ட்நைட்டா? 549 வது நைட்னு நினைக்கறேன்
அடப்பாவி! எண்ணிட்டு இருந்தியா?எப்படி கரெக்டா சொல்றே?
கரெக்டா னு நீ எப்டி கண்டுபிடிச்சே?நீயும் எண்ணிட்டு இருந்தியா? #Adhithyavarma
4 டியர் என் கிட்டே உங்களுக்கு பிடிச்சது என்ன?
உன் சுவாசிக்கும் ஸ்டைல் , உன் ப்ரீத்திங் ஸ்டைல் எனக்குப்பிடிக்கும்
5 ஏண்டா அவ ஃபோனை எடுக்கலை
தெரில, அவ எடுத்தா ஏன் ஃபோனை எடுக்கலை?னு நீயே கேட்டுக்கோ
6 நாம் சந்தோஷமா இல்லாத உலகத்துல யாருமே சந்தோஷமா இருக்கக்க்கூடாது
7 பொண்ணுங்க காதல்ல விழுந்தா அவங்களுக்கான ப்ரியாரிட்டிகள் மாறுபடும்
8 நாம விரும்பறவங்க இறந்து போறதுங்கறது வேற ,நம்மை விட்டுட்டுப்போறதுங்கறது வேற. விட்டுட்டுப்போனதுல வலி அதிகம் ( மொத்தப்படத்தையும் தூக்கி நிறுத்தறது இந்த ஒத்த டயலாக் தான்) #Adhithyavarma
9 (குடிகாரனா இருந்தாலும் சரி ,தம் அடிக்கறவனா இருந்தாலும் சரி )
லைப்ல ஒரு தடவை பெல் அடிக்கும் நம்ம பாடி ,இனி எனக்கு தாங்கற கெப்பாசிட்டி இல்லைனு ,அத்தோட எல்லாத்தையும் நிறுத்திடனும் #aadhithyavarma
10 என் கிட்ட எனக்கேபிடிச்ச ஒரே விஷயம் என்னோட பர்பெக்சன்தான்.என்னோட முன்னேற்றத்துக்காக என் தனித்துவத்தை இழக்க மாட்டேன்""#Adhithyavarma
11 நாள் பட்ட சோகத்துக்கு குட் பை சொல்லிட முடியாது , ஃபிளாஸ்பேக் நம்மை துரத்திட்டே இருக்கும்
12 குடிச்சுட்டியா?
ம்
முடிச்சுட்டியா?
டேய், ஓவரா திங்க் பண்ணாத , ஓவர் ஸ்மார்ட்னெஸ் உடம்புக்கு ஒத்துக்காது
\
3 தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 தமிழ் சினிமாக்குனு ஒரு செண்ட்டிமெண்ட்ஸ் உண்டு.ஹீரோ போதைப்பழக்கத்துக்கு ( குடி,தம் அல்ல , ட்ரக் அடிக்ட்) அடிமை ஆனவனா காட்னா அந்தப்படம் பிளாப் ,உதா− சூரசம்ஹாரம் (விதிவிலக்கு − தூங்காதே தம்பி தூங்காதே) . அது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகப்போகுதுனு தெரில
2 படத்துக்கு ஓப்பனிங் சுத்தமா இல்லை ., 18 பேருதான் , அட்லீஸ்ட் 18+ படத்துக்கு ஒரு 19 பேராவது வந்திருந்தா மேட்சிங்கா இருந்திருக்கும்
சபாஷ் டைரக்டர்
1 ஈ அடிச்சான் காபிம்பாங்களே சீன் பை சீன் கேமரா ஆங்கிள் முதற்கொண்டு அர்ஜூன் ரெட்டியை காப்பி பண்ணிய திறமை
2 தமிழ்க்கலாச்சாரத்துக்கு ஒத்து வராத சில காட்சிகளை வெட்டியது
லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1 லாஜிக் மிஸ்டேக் 1 − ( கன்ட்டினியூட்டி மிஸ்சிங்)
ஹீரோ பைக் ல ஹீரோயின் முத முத ஏறும்போது ஒரு ஹேர் ஸ்டைல் , பைக்ல ட்ராவல் பண்றப்ப ஒரு ஹேர்ஸ்டைல் ,பைக்கைவிட்டுஇறங்கும்போது ஒரு ஹேர்ஸ்டைல் ( காத்துல கலைஞ்சிருக்கும்னு சால்ஜாப் சொல்ல வழியில்லை, டோட்டலி டிப்ரண்ட் ) #Aadhithyavarma
2 லாஜிக் மிஸ்டேக் 2 − ஹீரோ வும் ,ஹீரோயினும் மொட்டை மாடி மாதிரி ஒரு லொக்கெஷன்"ல மெத்தையைப்போட்டு ,மேல மெத்தை விரிப்பை விரிச்சு விட்டு ரொமான்ஸ் பண்றாங்க ,சந்தோஷம்,ஆனா 2பேரும செருப்பை/கட்ஷூ வை கழட்டவே இல்லை. ஒரிஜினல்ல தெலுங்குல,ஹிந்தி ல அப்டி இருந்தா இருக்கட்டும் ,தமிழ்க்கலாச்சாரப்படி செருப்பை கழட்டிட்டு ரொமான்ஸ் பண்ணி இருக்கலாம் (எடு செருப்பை னு யாரும் கமெண்ட் போட வேணாம் ) #AdhithyaVarma
3 க்ளைமாக்ஸ் ல ஹீரோயின் சொல்றாரெ நீ நடிகை கூட நெருக்கம்கறதை பேப்பர்ல பார்த்தேன்னு அதை விஷூவலா காட்டி இருக்கனும்.பேப்பர் நியூசோ அல்லது டி வி நியூஸ்லயோ கிசு கிசு வர்றதை காட்டனும்
4 ஹீரோயின் உடம்பு பூரா ஹோலி பொடி தடவுன வில்லனுக்கு ஹீரோ தண்டனை தர்றாரு ஓக்கே ஆனா காலேஜ் நிர்வாகம் கண்டுக்கவே இல்லையே?
5 க்ளைமாக்ஸ்ல ஹீரோயினோட அப்பா தப்பெல்லாம் என் மேல தான் என டிராமா வசனம் பேசுவது எடுபடலை
6 பொறுப்பே இல்லாத முன் கோபக்காரரான கஞ்சா பார்ட்டியான ஹீரோ தன் அப்பாவோட அம்மா இறந்ததுக்கு அப்பாக்கு ஆறுதல் சொல்லும் வசனங்கள் கூட பொருந்தலை
7 ஹீரோ என்ன சொல்ல வர்றாருனு ஈசியா நமக்கெ புரியுது, ஆனா ஹீரோவோட அப்பா டேய் இவன் என்னடா சொல்ல வர்றான்?னு திரும்ப் திரும்ப கேட்பது கொடுமை
8 ஹீரோயின் க்ளைமாக்ஸ் ல தன்னிலை விளக்கம் தர்றாரு அதையும் விஷூவலா காட்டி இருக்கனும், என் புருசன் என்னை தொடவே இல்லை என புனிதம் காட்டுவது எல்லாம் நாடகத்தனம்
விகடன் மார்க் ( யூகம்) 42
குமுதம் ரேட்டிங் ( யூகம்) 3.5 / 5
அட்ராசக்க பொதுக்குழு ரேங்க் 3/ 5 ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2 அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி, பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)
C.P.S கமெண்ட்-
ஆதித்ய வர்மா − அர்ஜூன் ரெட்டியின் அச்சு அசல் ரீமேக்.சில"சீன்கள் ஒரிஜினலில் உள்ளது இதில் இல்ல,புதுசா,எதையும் சேர்த்தலை .( அப்படி சேர்த்ததாலதானே பாலா வை தூக்கிட்டாங்க) துருவ் விக்ரம் நடிப்பு குட்.நாயகி நடிப்பு ,தோற்றப்பொலிவு ஓகே ரகம்.க்ளைமாக்ஸ் ல நாயகி இன்னும் நல்லா நடிச்சிருந்திருக்கலாம்,ஓவர் ஆல்"படம் ஓகே தான் ,விகடன் 42 , ரேட்டிங் 3 /5 ,முக்கியமான காட்சிகளில் ஹீரோயினுக்கு க்ளோசப் ஷாட் வைக்காமல் ஹீரோவுக்கு"மட்டுமே க்ளோசப் ஷாட் வைத்தது உறுத்தல் ,லிப் டு லிப் சீன்கள் 19. கமல் கூட இவ்ளோ பண்ணலை #AdhithyaVarma
கேரளா கோட்டயம் தன்யா தியேட்டரில் படம் பார்த்தேன், தியேட்டர் கெபாசிட்டி 259 சீட்ஸ், ஃபுல் ஆனது 18 சீட்ஸ், இடைவேளை முடிஞ்சதும் ஓடிப்போனவங்க 6 பேர். படம் முடியும் முன்னே போனவங்க 4 பேர்