Wednesday, October 09, 2019

எந்தகட்சியிலிருந்து யார் வந்தாலும் அரவணைத்துக்கொள்ளும் ஒரே கட்சி எது?

1  அ.ம.மு.க., விலிருந்து, இன்று நம் கட்சியில் இணைந்துள்ள பரணி கார்த்திகேயன், தேர்தல் பணிகளை செய்வதில் கில்லாடி என்பதை அறிந்து, மகிழ்ச்சி அடைந்தேன்.-  ஸ்டாலின்:

கள்ள ஓட்டுப்போடறதைத்தான் தேர்தல் பணினு சொல்றாரோ?


அப்போ நம்ம கட்சில யாருக்கும் தேர்தல் பணி செய்யத்தெரியாதுங்களா?  


எந்தகட்சியிலிருந்து யார் வந்தாலும் அரவணைத்துக்கொள்ளும் ஒரே கட்சி நம கட்சிதான்


அரசியல்வாதி ஆகனும்னா கேடி பில்லாவா இருக்கனும், இல்லைனா கில்லாடி ரங்காவா இருக்கனும்?
====================== 


 2 : தமிழிசை  இருந்தாலும், இல்லாவிட்டாலும், தமிழகத்தில், பா.ஜ., தொடர்ந்து வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.-வானதி
 

அவரு  தமிழகத்தில் தாமரை  விரைவில் மலரும்னாரு
இவரு வளரும்கறாரு
ஜனங்க என்னடான்னா  தளரும்கறாங்க 


அப்போ முழுசா வளற ஒரு 20 வருசம் ஆகுங்களா? 



====================
 3  தமிழகத்தில், அ.தி.மு.க,, ஆட்சி தான் நடக்கிறது. இதில், பா.ஜ.,வின் பங்களிப்பு எங்கு இருக்கிறது? -அமைச்சர் ராஜு:
 
இதே டய்லாக்கை டெல்லி ல பாஜக விழா மேடைல ஹிந்தில சொல்லுங்க பார்ப்போம்

ஊருக்கே தெரியுது , உங்களுக்குத்தெரியலையா?

================
4 ., : பல தரப்பு மக்களுடன் பேசிக் கொண்டே தான் இருக்கிறேன். அனைவரும், சிதம்பரம் கைது குறித்து வருத்தப்படுகின்றனர்-கார்த்தி சிதம்பரம்
 
அவங்க வருத்தப்படறாங்க என்பதற்காக எல்லாம் அவரை ரிலீஸ் பண்ண முடியாது - ஜட்ஜ்

 வெட்டியா அவங்க கிட்டே பேசறதை   விட்டுட்டு வக்கீல்கள் கிட்டே பேசுனாலாவது ஜாமீன் கிடைக்கும்

=============

5 ,: நம் நாட்டில், தேர்தலுக்கு, ஓட்டுச் சீட்டு முறையை, மீண்டும் அமல்படுத்த வேண்டும். இரண்டாவது முறையாக, மோடி பிரதமரானது, மக்கள் ஓட்டளித்ததாலா அல்லது ஓட்டு இயந்திரங்களின் முடிவா என்பது, சந்தேகப்படக் கூடியதாக உள்ளது.-திருச்சி எம்.பி., திருநாவுக்கரசர்

2 வது முறையா மன்மோகன் சிங் பிரதமர் ஆனபோது உங்களுக்கு இதே மாதிரி டவுட் வர்லையே அது ஏன்?


ஓட்டுச்சீட்டு முறைல தான் கள்ள ஓட்டுப்போட வாய்ப்பு அதிகம் என்பதாலா?

================
 
6  அ.தி.மு.க., எவ்வளவு பணம் செலவு செய்தாலும், நடைபெற உள்ள இடைத்தேர்தலில், வெற்றி பெற முடியாது. அ.தி.மு.க., எப்போதும், பணத்தை நம்பியே, தேர்தலில் போட்டியிடுகிறது - கனிமொழி:

நாம் ஜனங்களோட்  ஞாபக மறதி குணத்தை நம்பி போட்டி இடறமா?

அவங்க செலவு பண்றதை விட இவங்க அதிகம் செலவு பண்ணுவாங்க போல 

திருமங்கலம் இடைத்தேர்தல்ல திமுக எதை எதை எம்பி போட்டி இட்டது?>

==========

 7  : பார்லிமென்டில் பெண்களுக்கு, இட ஒதுக்கீடு அளிப்பது, தீர்வுக்கான ஒரு சிறிய அம்சமே. உண்மையான பாலின சமநிலை, அடிமட்டத்திலிருந்து வர வேண்டும். பார்லிமென்டில் மட்டும் இட ஒதுக்கீடு கிடைத்தால் போதாது என்பதற்காக, இதைக் கூறுகிறேன்-ஸ்மிருதி இரானி 

 மேல் மட்ட்ம் நினைச்சா அடிமட்டத்தை மாத்தலாமே?

================
 
8 , சாலைகளில் பேனர் வைக்கக் கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை மீறி, 'எங்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி தாருங்கள்' என, அ.தி.மு.க., அரசு கோரிக்கை விடுத்துள்ளதன் மூலம், இரு உயிர்கள் பலியானது பற்றி, இந்த அரசுக்கு அக்கறையில்லை என்பது புலனாகிறது.-தி.மு.க., - எம்.பி., இளங்கோவன் 
 
பேனர் வைக்க வேணாம் என ஆணை இட்ட தலைவா அப்டினு உங்க கட்சி ஆளுங்க ஒரு பேனர் வெச்சாங்களாமே?


----------------

9  அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும், கூட்டணியில் தொடர்கின்றன-இல.கணேசன்

 இதுக்குப்பரிகாரம் ஏதும் இல்லைங்களா>?

=============
 10 
. காங்கிரஸ் இல்லாத பாரதம் அமைய வேண்டும் என்பதை, நாங்கள் வெளிப்படையாகக் கூறி வருகிறோம்.-இல.கணேசன்

ப,சிதம்பரத்தை உள்ளே வெச்ச மாதிரி சோனியா, ராகுல். வதேரா , ப்ரியங்கா இவங்க 4 பேரையும் உள்ளே வெச்சா சேப்டர் க்ளோஸ்

=============
11 
 கூட்டணியோடு சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பும் இருக்கிறது. அதைப் பேசி முடிவு செய்வோம்; இதில் பிரச்னையே இல்லை. -இல.கணேசன்

அரசியல்வாதி  பிரச்சனை இல்லைனு சொன்னா ஏதோ பிரச்சனை இருக்குனு அர்த்தம்

================
 

12 தமிழகத்தில் நடக்க உள்ள இரு தொகுதி இடைத்தேர்தலிலும், எங்கள் கூட்டணி வெற்றி பெறும்-இல.கணேசன் 

 டெபாசிட் வாங்குவதிலா?

=================

13  தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. துாத்துக்குடி மாவட்டத்தில், கடந்த மூன்று மாதங்களில், 19 கொலைகள் நடந்துள்ளன. திருச்சியில், தனியார் நகைக்கடையில், 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. இவையே, அதற்கு உதாரணம். -தமிழக காங்., தலைவர், அழகிரி :

கொள்ளை அடிக்கப்பட்ட 2 வது நாளே போலீஸ் கொள்ளையர்களை பிடிசிடுச்சு அதை யும் சொல்லுங்க 

==================
 14  தமிழகத்தில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது என, நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். -கனிமொழி 

ஆமா, அண்ணன் கூட துண்டுச்சீட்டு பார்த்து இதையே தான் படிச்சாரு

============
 15 
பா.ஜ., நினைப்பதை எல்லாம், இங்கே செய்கின்றனர். -கனிமொழி 

நீங்க நினைப்பதைஒ காங் செய்வது மாதிரியா?

=============