Thursday, August 15, 2019

கோமாளி - சினிமா விமர்சனம்



ஹீரோ ஸ்கூல்ல படிக்கறப்ப தன் முத லவ்வை தன் முத காதலி கிட்டே முதல் தடவையா வெளிபடுத்தும்போது ஒரு விபத்து . 16 வருசம்   கோமா ல விழறான். அவன் உணர்வு தெளிஞ்சு எழும்போது படு,ம் ஆச்சரியங்கள் தான் சுவராஸ்யமான முதல் பாதி .


 ஆனா இயக்குநர்  பின் பாதி திரைக்கதைல எதுக்கு ரிஸ்க்? சேஃப்டி ஜோன்ல போய்டுவோம்னு வழக்கமான மசாலா ,சிலை கடத்தல் , அடைதல் , வில்லன் செண்ட்டிமெண்ட் என பேக் அடிச்ட்டார். இல்லைன்னா இது சந்தோஷ் சுப்ரமணியம் மாதிரி செம ஹிட் அடிச்சிருக்க வேண்டிய படம் ,


 ஹீரோவா செயம் ரவி 3 பட தனுஷ் மாதிரி  ஸ்கூல் ஸ்டூடண்ட்டா வரும்  தொடக்கக்காட்சிகள் அசத்தல் . க்ளைமாக்ஸில் பேசும் செண்ட்டிமெண்ட் வசனம் , வில்லனின் மனைவியிடம் பேசும் வசனம் எல்லாம் தாய்க்குலங்களை உச் கொட்ட வைப்பவை. ஜெயம் ரவிக்கு இது ஒரு ஹிட் படம் 



ஹீரோயினா 2  பேரு

 சம்யுக்தா ஹெக்டே  ஸ்கூல் மாண்வியா வரும்போது காட்டும் பாவனைகளை விட  பிஉன் பாதியில்  டாக்டரின் மனைவியாக வரும்போத்பு காட்டும் பாவனைகள் அசத்தல் 


இன்னொரு நாயகியா காஜில் ஜில் அகர் வாவ் வா;ல் . ஆனா பெரிய வாய்ப்பு எதும் இல்லை , க்ளைமாக்ஸ் ல செய்ற்கையான ஆச்சரியம் காட்றது , செயற்கையான நடிப்புனு ஒட்டலை . ஒரு டூயட் கிருக்கு,ம் சீன் பார்க்கறவங்க் லைட்டா பாத்துக்கலாம்



இன்னொரு ஹீரோ மாதிரி படம் முழுக்க யோகி பாபு வர்றார். இவருக்கு காமெடியை விட செண்ட்டிமெண்ட் நல்லா வருது.இதே ரூட் ல போறது நல்லது


கே எஸ்  ரவிக்குமார்  வில்லன்  ரோல்.  கொடூரம் அதிகம் இல்லாம செண்ட்டிமெண்ட் க்கு மயங்கும் ஆளாக  காட்டிட்டாங்க


 ஜெயம் ரவியின்  தங்கையாக வருபவர் அந்த நீளமான சோக கோப  டயலாக்கை கொட்டும்போது ஆக்டிங்கோ ஆக்டிங்க் ஓவர்  ஆக்டிங். வாங்குன ம்காசுக்கு மட்டும் நடிங்கம்மா 

டாக்டராக , ஹீரோவின் முன்னாள் காதலியின் இன்னாள் கணவராக வருபவர் நடிப்பு அடடே! இவங்க  3 பேர் சம்;பந்தப்பட்ட காட்சிகள் அல்லோலகல்லோலப்படுத்துது. பேசாம கதையை இதே டைப்புல் காமெடி  டபுள் மீனிங் கில்மா த்ரில்லரா கொண்டு போய் இருக்கலாம்


இசை சுமார் ரகம் தான் . வசனகர்த்தா பல இடங்களில் பளிச்


 இய்க்குநருக்கு இது  முதல் படம் என்பதால் ஆங்காங்கே நகாசு வேலைகள் , மெனக்கெடல்கள் தெரிகின்றன . தமிழ் சினிமாவுக்கு ஆரோக்ய வரவு



நச் வசனங்கள்


1   1000 பேர் 1000 சொன்னாலும் நமக்குப்பிடிச்ச வேலையை நாம செஞ்சிட்டே இருக்கனும் விட்ரக்கூடாது,என்னைக்காவது ஒரு நாள் யூஸ் ஆகும் #ComaliReview



இந்த உலகத்துல அழறவங்க""தன் கஷ்டத்தை நீ தீர்த்து வைப்ப னு உன் முன் அழறதில்லை.நான்"இருக்கேன் ,கவலைப்படாதேனு நீ ஒரு ஆறுதல் வார்த்தை சொல்வே னு தான் அழறாங்க,அதனால உன் முன் யாராவது அழுதா ஆறுதல் சொல் ,போதும் #ComaliReview ( டச்சிங் டயலாக்)


3 டாக்டர்,உங்க ஒய்ப் இவனோட லவ்வர்

அய்யோ
இருங்க,மாத்தி சொல்றேன்,இவனோட லவ்வர் தான் உங்க ஒய்ப்
அய்யய்யோ #ComaliReview


4 போலிங்க எத்தனை வேணா இருக்கலாம்,ஆனா "அசல்" ஒண்ணு தான் #ComaliReview ( யாரோட ரெப்ரென்ஸ்னு தனியா ஒரு வரி எழுத தேவையில்லைனு நினைக்கறேன்)


5 ஒருத்தருக்கு நம்மைப்பிடிக்கனும்னா அவங்களை சிரிக்க வெச்சா போதும் #Comali (ஜோக் சொல்ல ட்ரை பண்ணுங்க, கிச்சு கிச்சு பண்ணி சிரிக்க வைக்கக்கூடாது)


6 சாப்ட்டியா? தூங்கினியா நல்லா? - இந்த மாதிரி கேள்விகளை எல்லாம் நம்ம அம்மாவைத்தவிர வேற யார் கேட்டிட ,முடியும்? #Comali



7 வாட்டர் தான் நம்மை சேவ் பண்ணும், இப்போ நிலைமை பாருங்க சேவ் வாட்டர்னு சொல்ற அளவுக்கு போய்டுச்சு #Comali


8 புருசனும் பொண்டாட்டியும் ஒரே வீட்ல வாழ்றதுதான் இப்போ ஜாயிண்ட் ஃபேமிலினு ஆகிடுச்சு #Comali


9 உன்னை மாதிரி சில பொண்ணுங்க சிங்கிளா இருக்கறதாலதான் என்னை மாதிரி பல பசங்க உயிரோடயே வாழ முடியுது #Comali


10 நம்ம அம்மாக்கள் நமக்கு நிலாவைக்காட்டி சோறு ஊட்டுனாங்க , இப்போதைய அம்மாக்கள் செல்ஃபோனை காட்டி சோறு ஊட்டுறாங்க ., ஆனா அடிப்படை சோறு ஊட்டறதுங்கறது மாறலை #Comali



11 டாக்டர், இது நம்ம குழந்தையா?

யோவ், என் குழந்தை

ஜாடை தெரியலயே? அதான் கேட்டேன் #Comali



12 என்னடி சொல்றே? உனக்கு காலேஜ் படிக்கற;ப்ப ஒரு லவ்வர் இருந்தானா?

டேய் , புருஷன் நான் தானே ஷாக் ஆகனும்? நீ எதுக்கு ஷாக் ஆகறே?

நீங்க புருஷன் ஆகறதுக்கு முன்னாடியே நான் அவளோட லவ்வர் #Comali

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  கோமாளி அதிகாலை ஷோ பாத்துட்டு ஒரு விமர்சகர் மெனக்கெட்டு 4 பக்கத்துக்கு விமர்சனம் டைப் பண்ணி இருக்காரு,நம்மாளு அதை"படிச்சுப்பாக்காம "ப்ரோ,காஜல் அகர்வாலுக்கு எதுனா சீன் இருக்கா?னு"கமெண்ட் போட்டிருக்காப்டி,விமர்சகர் நொந்து போய் இனி விமர்சனம் போடறதையே நிறுத்திடலாம்னு இருக்கேன்கறார்


2 திரும்பிய பக்கம் எல்லாம் பாசிடிவ் ரிவ்யூஸ் வரும் கோமாளி fdfs ஷோ 11 am @ கோட்டயம் சங்கணாச்சேரி அப்சரா 13 பேர் / 893 சீட்ஸ் #Comali

Image



Image







3  படத்துல விஜய் ரெப்ரென்ஸ் இருக்குனு நிறைய ஸ்டேட்டஸ் பாத்தேன்,கடைசில கண்டுபிடிச்ட்டேன்

அது குஷி படம் தானே?
ஆமா,
அய்யோ .இடுப்பைக்காட்றாங்க
இத்துனூண்டு பிட் இடுப்புக்குத்தான் 100 நாள் ஓடுச்சு #ComaliReview ( S.J. சூர்யா பாத்தா கடுப்பாகிடுவாரு)






சபாஷ் டைரக்டர்

1   முதல் பாதி பூரா  கலகலப்பான ரசிகர்களுக்கு புதுமையான காட்சி அமைப்புகள்


2   இயக்குநர் விகரமன் டைப் பாசிட்டிவ் வ்  வசனங்கள் , கேரக்டர்கள் அனைவரும் நல்லவர்கள்


3    யோகி பாபுவை முதல் முதலாக கெட்டப் சேஞ்ச் பண்ண வைத்தது


4   வசனகர்த்தாவின் சிந்தனை , செயல் எல்லாம் அழகு 





 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1  படத்தில் நச்சென்று அமைந்த அந்த ரஜினி  பொலிட்டிக்கல் எண்ட்ரி டயலாக் பிரச்சனை வரும்  என தெரிந்தும் ஏன் டீசர்ல விடனும்,. கமுக்கமா இருந்திருந்தா படம் ரிலீஸ் ஆகி இவங்க பார்த்து ஆட்சேபம் தெரிவிச்சு அதை  நீக்கறதுக்குள்ளே பாதி சனம் பார்த்திருக்கும்,

2   பின் பாதி திரைக்கதைல சிலையை திருடுதல் , வில்லன் மனைவி செண்ட்டிமெண்ட் என்றெல்லாம் ஊர் சுற்றாமல் ஹீரோ ஹீரோவின் முன்னாள் காதலி , இந்நாள் காதலி , முன்னாள் காதலியின் கணவன் இந்த 4 க் கேரக்டர்களை மட்டும் வைத்து காமெடி  மெலோ டிராமாவாக பண்ணி இருந்தால் இது இன்னொரு   ரெட்டை வால் குருவி


3  படத்தின் டைட்டில் கோமாளி என்பது சரி இல்லை

 ஏன் இப்படி மாறிட்டாங்க

கோமா

அன்பானவன்

 இப்படி எதுனா டைட்டில் வெச்சிருக்கலாம், ஏன்னா படத்துல செண்ட்டிமெண்ட் சீன்கள் அதிகம் இருக்கு , ஆனா டைட்டில் மைனஸ்

4   வில்லனின் இடத்துக்குப்போகும் ஹீரோ தன் உடம்பில் ஒயர்களை மாட்டி செல்வது , ஷாக் அடிப்பது , வீடியோ ஆடியோ பதிவு பண்ணுவது எல்லாம் அபத்தம்






 விகடன் மார்க் ( யூகம்)   42

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)  3.5 /5


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க் ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)


சி.பி கமெண்ட்-கோமாளி = வித்தியாசமான கதைக்கருதான்,சிக்சர் அடிக்கவேண்டியது ,திரைக்கதை முன்பாதி விறுவிறுப்பு பின்பாதில குறைவு என்பதால் 4
,ஜாலி காமெடி கலாட்டா ,ஏ சென்ட்டர் பிலிம் ,விகடன் 42,ரேட்டிங்க் 3 / 5 #ComaliReview