Monday, June 03, 2019

வை கோ கூட்டணி சேர்ந்து பெற்ற முதல் வெற்றி

1  பா.ஜ., 250க்கும் குறைவான தொகுதிகளில் வென்றிருந்தால், ஆட்சி அமைக்க, எங்களுடைய ஆதரவு தேவைப்பட்டிருக்கும். -ஜெகன் மோகன் ரெட்டி:  

ரெட்டி ஆதரவு தந்து ரொட்டி சுடலாம்னு பாத்திருக்காரு நடக்கலை

===============

 2 ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது குறித்து மோடியை வற்புறுத்தவோ, உத்தரவிடவோ முடியாது; கோரிக்கை தான் வைக்க வேண்டும் =ஜெகன் மோகன் ரெட்டி: 


ஜெ”கன்” மோ”கன்” GUN ' மாதிரி யோசிக்கறாரு


===========

ஒடிசா மாநிலம், அடிக்கடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுகிறது. அதனால், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும்படி, மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்-நவீன் பட்நாயக்: 


அப்போ இயற்கைப்பேரிடர் நிதினு ஒண்ணு எதுக்கு ஒதுக்கறாங்க?


டோண்ட் “ஒரி”சா, எல்லாம் மேல இருக்கறவர் பார்த்துக்குவாரு


=================

4 ,  மத்தியிலும், மாநிலத்திலும், நல்லாட்சிகள் தொடர்கின்றன. -ராமதாஸ்:


 நீங்க கூட்டணி சேர்ந்தும் தொடருது, எந்த ஆபத்தும் இதுவரை வர்லையே?னு ஆச்சரியப்படறீங்களா? 

=================


5 எங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டாலும், தீயவர்களிடம் சிக்காமல், நாடும், மாநிலமும் காப்பாற்றப்பட்டுள்ளது. இதுவும், ஒரு வகையில் நமக்கு கிடைத்த வெற்றி தான் -ராமதாஸ்:


என்ன லாஜிக் இது? ஜெயிச்சாலும் தோத்தாலும் நமக்குக்கிடைச்சது வெற்றினு சொல்றது?

================

தமிழகம் முழுவதும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் போது, தேனி தொகுதியில் மட்டும், ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் எப்படி வெற்றி பெற்றார் என்பதை, ஆய்வு செய்ய வேண்டும்.-கே.பாலகிருஷ்ணன்  
\

 ஆய்வுக்குழு அமைசுசு அதுக்கு தண்டமா ஒரு செலவுக்கணக்கு எழுதிடப்போறாங்க , அப்போலோ பில் மாதிரி வந்துடப்போகுது


===================7  
 7  ஏற்கனவே, தேனியில், பண வினியோகம், விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன. ஓட்டு எண்ணிக்கையில் கூட, முரண்பாடுகள் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இதை, உரிய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதில், தவறு ஏதும் இல்லை.-கே.பாலகிருஷ்ணன்  


தேனி தொகுதிங்கறதால தேனீ மாதிரி கொட்டிட்டே இருக்காரே? 

================
8  தென் மாநிலங்களைப் புறக்கணித்ததால் தான், லோக்சபா தேர்தலில், தமிழகம், புதுச்சேரியில், பா.ஜ., பின்னடைவைச் சந்தித்தது. -

நாராயணசாமி 

அப்போ காங் வட மாநிலங்களில் படு தோல்வியை சந்தித்தது  வட ம்,ஆநிலங்களைப்புறக்கணித்ததால்தானா? 

===============
9  வட மாநிலங்களில் அவர்கள் வெற்றி பெற்றிருப்பது, பா.ஜ.,வினருக்கே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. -

நாராயணசாமி 


உங்களுக்கு அதிர்ச்சியா இருந்திருக்குமே?
====================

10 தேர்தலில், காங்., தோல்வி அடைந்தது குறித்து, கட்சி மேலிடம் அலசி ஆராயும்.-


நாராயணசாமி \\\


இப்பவே கட்சி விஐபிங்களை  துவைச்சுக்காயப்போட்டுட்டு இருக்காரே ராகுல், இனிதான் அலசிப்போடுவாரு
===============

11 சிதம்பரம் தொகுதியில், திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில், ரவிக்குமாரும் வெற்றி பெற்றுள்ளனர். இது ஒரு, புதிய திருப்பம். இருவருமே, லோக்சபாவுக்கு செல்ல இருக்கின்றனர். -வைகோ  


 வை கோ கூட்டணி சேர்ந்து பெற்ற முதல் வெற்றி ஆச்சே?

==================


12 எழுத்தால், பேச்சால், எண்ணத்தால், செயலால் அனைவரையும் வசீகரிக்கக்கூடிய தலைவர், திருமாவளவன். அதேபோல், நல்ல நட்புடன் பழகும் எழுத்தாளரும், சிந்தனையாளருமான, ரவிக்குமாரும், எம்.பி.,க்களாக லோக்சபாவுக்கு, தமிழகத்திற்காக குரல் எழுப்ப செல்ல இருப்பது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.-வைகோ 


 எதுக்கும் துண்டு போட்டு வைப்போம் மொமெண்ட்


===================

13  தேர்தலில் ஏற்படும் வெற்றி, தோல்வி, ஒரு தலைவரின் எதிர்காலத்தை, நிர்ணயம் செய்யக் கூடியது இல்லை.-திருநாவுக்கரசர்  

ஆமா, நிகழ்காலத்தை கேள்விக்குறி ஆக்கும் விஷயம், இறந்த காலத்தை ஆராய வேண்டிய விஷயம்

===============

14  காங்கிரஸ் தோல்விக்கு, ராகுல் மட்டுமே பொறுப்பில்லை; -திருநாவுக்கரசர்  


 ராகுல்க்கு பொறுப்பே  இல்லைங்கறாரா?

==================


15 ராகுல் பதவி விலக மாட்டார். -திருநாவுக்கரசர்  

அதை உங்க ஓனரை வந்து சொல்லச்சொல்லுங்க 

=============



16 ஐந்து ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால், அடுத்த பிரதமராக, ராகுல் நிச்சயம் வருவார்.-திருநாவுக்கரசர்  

10 ஆண்டுகள் கூடத்தான் விரைவில் சென்று விடும்

================



17 நாடு முழுவதும், மோடிக்கு ஆதரவான அலை வீசியுள்ளது. -

சிவசேனா கட்சி, எம்.பி., சஞ்சய் ராவத் 


தமிழ்நாடு கேரளாவில் மட்டும் எதிர்ப்பு அலை வீசி உள்ளது


===============


18  மோடிக்கு எதிரான குற்றச்சாட்டில், எந்த உண்மையும் இல்லை என்பதை, மக்கள் புரிந்து கொண்டனர். -

சிவசேனா கட்சி, எம்.பி., சஞ்சய் ராவத் 

இவரு எதுக்கு துண்டு போட்டு வைக்கறாருனு புரியலையே?

=================

19  தற்போதைய நிலையில், அடுத்து வரும், 25 ஆண்டுகளுக்கு, மோடியை யாராலும் வீழ்த்த முடியாது என்ற உரிமைக் கட்டளையை, மக்கள் பிறப்பித்து விட்டனர். -

சிவசேனா கட்சி, எம்.பி., சஞ்சய் ராவத


10 வருஷத்துல சுத்திப்பாத்துடுவாரே எல்லா நாட்டையும், அப்புறம் போர் அடிக்காதா? 

============



 இதுதான் சாக்குன்னு எல்லாருமே அதிருப்தியாளர்கள் ஆகிடப்போறாங்க 


======================