Saturday, May 11, 2019

பகுத்தறிவுப்பகலவரின் கட்சி ஜோசியம் சொல்வது கூட ஒரு சாதனை தானே?

1  எந்த சாதனையும் செய்யாத, தி.மு.க.,வினர், மக்களுக்காக செயல்படுத்தும் திட்டங்களைப் பற்றி குறை கூற முடியாமல், அ.தி.மு.க., ஆட்சி கவிழ்ந்து விடும் என, ஜோதிடம் கூறி வருகின்றனர்.-ஓபிஎஸ்  # பகுத்தறிவுப்பகலவரின் கட்சி ஜோசியம் சொல்வது கூட ஒரு சாதனை தானே? 


================
2  ஸ்டாலின் ஒருபோதும், முதல்வராக முடியாது. -ஓபிஎஸ்   # அது  தெரிஞ்சுதான் துரை முருகனே இன்னும் 25 வருசம் க்ழிச்சு  அதாவது ஸ்டாலினோட 96 வது   வயசுல ஜனாதிபதி ஆவார்னாரா?


==============

3  அ.தி.மு.க., மிகப்பெரும் ஆல மரம்.-ஓபிஎஸ்   #  அதனாலதான்  முதல்வர் துணை முதல்வர்னு ஏகப்பட்ட விழுதுகள் இருக்கோ?




===============

4   28 ஆண்டு காலம் நாட்டை ஆளும் பெரும் இயக்கம், அ.தி.மு.க., தான். அ.தி.மு.க., அரசில், எந்தக் குறையும் இல்லை  -ஓபிஎஸ்   # குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா ரேஞ்சுக்குப்போய்ட்டாரே?   குறை  இருக்கா? இல்லையா?னு ஜனங்க தானே சொல்லனும்?


==============

5      எங்கள் கட்சிக்கு, ஜாதி, மதம் கிடையாது. -கமல்   # ஆனா  தேவர் மகன் , தேவர் மகன்  2  -னு  சினிமால மட்டும் ஜாதிக்குக்கொடி பிடிப்பது ஏனோ?


=============
6 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டவர்களால், குடிநீர் பிரச்னையை கூட தீர்க்க முடியவில்லை. '-கமல்  #  அந்தத்தண்ணீரை   விடுங்க , டாஸ்மாக் தண்ணி க்கு எந்தக்குறையும் இந்த ஆட்சி வைக்கலையே? அது போதாதா?


=============

7  டிவி'யில் பேசும் அரசியல்வாதிகள், மிக நேர்மையானவர்கள் போல், மக்களை குழப்புகின்றனர். மக்கள் மனது வைத்தால், மாற்றத்திற்கான விதையை துாவ முடியும்-கமல்  #  இனிமே விதையைத்தூவி அது வளர்ந்து வர சமயம் எடுக்குமே? 


================

8   முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 1 லட்சம் கோடி ரூபாய் 'ஆர்டர்' தந்ததை நினைவுபடுத்த விரும்புவதாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.


# ராகுலுக்கு   செலக்டிவ் அம்னீஷியா , பழசை எல்லாம் மறந்துடுவார்


================


9  வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பதாக கூறி ஆட்சி என்ற குத்துச் சண்டை வளையத்தில் குதித்த மோடி அதற்கு பதிலாக தன் பயிற்சியாளர் அத்வானியை தாக்கி அவர் கதையை முடித்து விட்டார்' - ராகுல்     # அமைதிப்படை  அமாவாசை நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ ஆன மாதிரி?


=================




ஆமா 2021 ல  சட்டம்னறத்தேர்தல் வருது


===============




 
11  தேர்தல் களத்தில், மோடிக்கு போட்டியாக, ராகுலை பிரதமர் வேட்பாளராக உருவாக்கிய பெருமை, ஸ்டாலினுக்கு உண்டு.-துரைமுருகன்:   அந்த  ஒரு பெருமையாவது மிஞ்சுச்சே?


=============


 12  மோடியா, ராகுலா என்ற விவாதம் எழுவதற்கு காரணமே, ஸ்டாலின் தான். அவரது இந்த ஆளுமை தான், தி.மு.க.,வின் பலம்-துரைமுருகன்: $  துரை முருகனோட பலமே கண்மை , லிப்ஸ்டிக் மை  தான்


================

13   தி.மு.க., ஆட்சியில், வெளிப்படையான நிர்வாகம் இருக்கும்.- ஸ்டாலின்:  # நில ஆக்ரமிப்பு பண்றப்பக்கூட வெளிப்படையா சொல்லிட்டு தான் செய்வாங்க , வன்முறை அராஜகம், பஸ் எரிப்பு கூட வெளீப்படையா நடக்கும்


=============


14   தி.மு.க., ஆட்சியில்,  மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, தீர்வு காணப்படும்-ஸ்டாலின்:   # மக்களோட முக்கியப்பிரச்சனைகளே நம்ம கட்சிக்காரங்க டீக்கடை பஜ்ஜிக்கடை பிரியாணீக்கடை ;ல ஓசி ல சாப்ட்டுட்டு காசு குடுக்காம போய்டறதுதான், அதைக்கவனிங்க முதல்ல 


================


15   மறைந்த பிரதமர் ராஜிவ் மீது, தொடுக்கப்பட்ட போபர்ஸ் ஊழலில், போதுமான ஆதாரம் இல்லை என, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், அவரை ஊழல்வாதி என, பிரதமர் மோடி பேசி வருவது, கண்டிக்கத்தக்கது-அழகிரி: #  ரபேல் விவகாரத்துல கூட தான் கோர்ட் தீர்ப்பே வராத நிலைல ராகுல் மோடியை களாவாணின்னாரு



====================

16 அரசியல்வாதி பொய் பேசுவதற்காக நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றால் அதை  ஸ்டாலினுக்கு கொடுக்கலாம்'' = முதல்வர் பழனிசாமி  # அப்டிப்பார்த்தா  எல்லா அரசியல்வாதிகளுக்கும் நோபல் ;பரிசு கிடைச்சிடும்



===============
17    வேலைவாய்ப்பில் தமிழக இளைஞர்களை, பா.ஜ., - அ.தி.மு.க., கட்சிகள் வஞ்சித்ததாகக் கூறும் ஸ்டாலின், டில்லி மாணவர்களின் வாய்ப்பை, தமிழக மாணவர்கள் பறிப்பதாக, டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது தொடர்பாக, ஏன் வாய் திறக்கவில்லை? - எச்.ராஜா  # ஸ்டாலினுக்குதான் ஹிந்தி தெரியாதே? அர்விந்த் சொன்னது எப்படி புரியும்னு கேட்பாங்களோ அவங்க கட்சிக்காரங்க ?



============

18    ஸ்டாலின் இரண்டரை ஆண்டுகளாக, மன நோயால் பாதிக்கப்பட்டு, உளறிக் கொண்டிருக்கிறார் - எச்.ராஜா  #  விரைவில் அதிமுக ஆட்சி கவிழும் , திமுக ஆட்சி அமைக்கும்னு அடிக்கடி கனவு காண்பாரு, அது ஒரு குத்தமா?  

================= 


.19   ஜெயலலிதா மறைவுக்குப் பின், சட்டசபை உறுப்பினர்கள், பா.ஜ.,வில் இணைந்துள்ள நிலையில், ஒரு முன்னாள் பஞ்சாயத்து கவுன்சிலர் கூட, தி.மு.க.,வில் சேரவில்லை. ஆளுமை திறனற்ற நபர், ஸ்டாலின் என்பதை அனைவரும் புரிந்துள்ளனர்- எச்.ராஜா


 ஆளுங்கட்சிக்குத்தான் ஆளுங்க கட்சி மாறுவாங்க. எதிர்க்கட்சிக்கா மாறுவாங்க?


=============
20   தமிழகத்தில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. அதனால், மூன்று எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.-முத்தரசன்  #  அதிமுக இடத்துல நீங்க இருந்தா என்ன செஞ்சிருப்பீங்க? அவங்க 3 பேருக்கும் பிரமோஷன் , இன்க்ரீமெண்ட் தந்திருப்பீங்களா?


===============



===========