Wednesday, May 08, 2019

பரிசுப்பொட்டிக்கடையை சாத்திட வேண்டியதுதானா?

1   நடந்து முடிந்துள்ள, 18 சட்டசபை இடைத்தேர்தல், தங்களுக்கு சாதகமாக இருக்காது என்பதால், ஆட்சியை தக்க வைக்க, மூன்று, எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக்கூடிய ஜனநாயக விரோத செயலை, ஆளும் கட்சி மேற்கொள்கிறது.- முத்தரசன்: 

 #  உங்க ஊர்ல அதுக்கு   ஜனநாயக விரோத செயலா? எங்க ஊர்ல சாணக்கியத்தனம். ராஜதந்திரம்


===============


 முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், எல்லை கட்டுப்பாடு கோட்டருகே, பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதாக, காங்கிரஸ் அபாண்டமாக புளுகுகிறது.  - மோடி:  

இந்தியா பாகிஸ்தான் தாக்குதலை விட பாஜக காங்கிரஸ் துல்லியத்தாக்குதல் அபாரம்



==============


3 தேர்தல் பிரசாரத்தின்போது, எங்கள் குடும்பத்தைப் பற்றி, நாங்கள் பேசுவதில்லை; மக்களின் பிரச்னைகள் குறித்து மட்டுமே பேசுகிறோம். ஆனால், பா.ஜ., தலைவர்கள், தங்கள் பிரசாரங்களில், எங்களின் குடும்பத்தைத் தான் குறி 
வைக்கின்றனர்.-  பிரியங்கா:  

#  குடும்பத்தைப்பத்திப்பேசுனா கணவர் மீது இருக்கற ஊழல் வழக்கு பற்றியும் பேசனும், எதுக்கு வம்புனு கூட நீங்க விட்டிருக்கலாம்


===============


4   என் தந்தை லாலு பிரசாத், சுறுசுறுப்பானவர். ஒரு நாளில், பத்துக்கும் மேற்பட்ட பிரசார கூட்டங்களில் பங்கேற்பார். இப்போதைய தலைவர்கள், இரண்டு கூட்டங்களுக்கே சுருண்டு விடுகின்றனர்.- , தேஜ் பிரதாப்: 

  #  அவ்ளோ சுறுசுறுப்பா இருந்து என்ன பிரயோசனம்? சிறைப்பறவையாதானே இருக்காரு இப்போ?

============


5   பா.ஜ.,வின் பேச்சை கேட்டு, தேர்தல் ஆணையம் இயங்குவதாக, காங்., கூறும் குற்றச்சாட்டுகள் அபத்தமானது; அடிப்படை ஆதாரமற்றது.  - ஜிதேந்திர சிங்:  

 # முறைப்படி இந்த பதிலை அல்லது பதிலடியை   தேர்தல் ஆணையம் தானே   தரனும்?



=============

6    பாக்., பயங்கரவாதிகளை, ஐ.நா., பட்டியலில் சேர்ப்பதும், துல்லிய தாக்குதல்கள் நடத்துவதும் மட்டுமே, பயங்கரவாதத்தை ஒழித்து விடாது. அதிரடியாக அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே, பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும்.  - கபில் சிபல்:

   # சரி   உங்க ஆட்சில அந்தப்பணீயை ஏன் செய்யல? 


===============


7    
அனைத்து கோவில்களிலும், மழை வேண்டி யாகம் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டது சரி. இந்த உத்தரவுக்கு எதிராக பேசும், தி.க., தலைவர் வீரமணிக்கு, ஹிந்துக்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டும்  - எச்.ராஜா 

# மரம் நட்டா மரக்கன்று நட்டா மழை வர வாய்ப்பு இருக்கு , யாகம் ப்ண்றதுக்கு ஏன் அரசுப்பணம்?> அல்லது மக்கள் வரிப்பணம்?

============


8   மோடி நடத்திய துல்லியத் தாக்குதலில், எத்தனை பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டனர் என்ற விபரம், இதுவரை எவருக்கும் தெரியாத மர்மமாக இருக்கிறது. -கே.எஸ்.அழகிரி

\\ ராணுவம் நடத்தியதுதானே அந்தத்தாக்குதல்>


அதெல்லாம் ராணுவ ரகசியம்ங்க


============


7   அடுத்தவரை ஏசுவதும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுவதையும், நாங்கள் செய்வதே இல்லை.-கமல்


 அப்போ இவரை யாரோ பர்சனலா தாக்கி இருக்காங்க


------------


8  குறுக்கு வழியில், மக்களை ஆசை காட்டி, பணம் கொடுத்து ஆட்சியை தக்க வைக்க நினைக்கின்றனர். அப்படிப்பட்ட இந்த ஆட்சியால், மக்களுக்கு எந்த விதத்திலும் பலன் இருக்கப் போவதில்லை.= மல்லை சத்யா


வாங்குன 2000 ரூபா பலன் தானே?


=============


 
'நான், அநாகரிகமாக பேச மாட்டேன். களவாணித்தனம், புறம்போக்கு என்பதும், சட்டசபை குறிப்பில் உள்ளது' என, ஸ்டாலின் கூறினார். கடந்த முறை சட்டசபையில், களவாணித்தனமாக, புறம்போக்குத்தனமாக, தி.மு.க., தான் செயல்பட்டது.=நாராயணன் திருப்பதி 


இப்போதான் அநாகரீகமா பேசமாட்டேன்னிங்க , இப்போ பேசிட்டீங்களே”


=================


10   தன்னை கொலை செய்ய முயற்சிக்கிறது காங்கிரஸ் என, மோடி கூறவில்லை. தன்னை கொலை செய்ய முடியாது எனக் கூறுகிறார். 'பிரதமர் இப்படி பேசலாமா' என, சொல்பவர்கள், 'பிரதமரை இப்படிச் சொல்லலாமா' என, ஸ்டாலினை பார்த்துக் கேட்காதது ஏன்?-நாராயணன் திருப்பதி 

#  அதுதான் தேர்தல் பிரச்சார யுக்தி போல, கோர்ட் கண்டிச்சா மன்னிப்பு கேட்டாப்போச்சு, அரசியல்வாதிகளுக்குப்பிடிச்ச்ச வார்த்தை மன்னிப்பு 





==============


11   
'அ.தி.மு.க., காணாமல் போய்விடும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலினும், தினகரனும், ஜோசியர்களை போல் கூறி வருகின்றனர். 47 ஆண்டு வரலாறு கொண்ட, அ.தி.மு.க.,வையும், ஆட்சியையும், யாரும் அசைக்க முடியாது. =ஓபிஎஸ்


ஆமா, யாராவது தர்ம யுத்தம் நடத்துனாத்தான் உண்டு


===============

12  ஜெயலலிதாவுடன், 32 ஆண்டுகள் இருந்து, துரோகம் செய்தவர் தினகரன். அவருடன் சில அரசியல் வியாபாரிகள் சேர்ந்து, கட்சியை நடத்துகின்றனர். அவர்களுக்கு, இந்த தேர்தல் முடிவுகள், பாடம் புகட்டும். எதிர்க்கட்சிகள், 'டிபாசிட்' இழப்பர்.-ஓபிஎஸ்

அப்போ பரிசுப்பொட்டிக்கடையை சாத்திட வேண்டியதுதானா?


===========



 13  என், 40 ஆண்டு கால அரசியல் வாழ்வில், பல தேர்தல்களை சந்தித்து விட்டேன். அந்த அனுபவத்திலும், எனக்கு வந்த தகவல்களின்படியும் கூறுகிறேன். இம்முறை நாங்கள், சட்டசபை தேர்தலில், அமோக வெற்றி பெறுவது உறுதி. இதில், ஓட்டு வித்தியாசம் என்ன என்பது மட்டுமே, நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.- சந்திரபாபு நாயுடு   # எந்த அரசியல்வாதியாவது தான் தோற்கப்போவதி உறுதினு சொல்வாங்களா? எல்லாருமே தான் தான் ஜெயிப்போம்னுதான் சொல்வாங்க 


=================


14   எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள, 'மெகா' கூட்டணி, 'மெகா' ஊழலுக்குத் தான் வழி வகுக்கும்.-மோடி:   #  நீரின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அதன் அழுத்தமும் அதிகரிக்கும்னு பிசிக்ஸ்ல படிச்சிருக்கோம், அது மாதிரியா? கூட்டணீக்கட்சிகளின் எண்ணிக்கை அதிகரீக்க  அதிகரீக்க ஊழலும் அதிகரிக்கும்?


=================


15   பா.ஜ., ஆட்சியின் போது தான், ஆப்கானிஸ்தானின் காந்தகாரில், மசூத் அஸார் விடுவிக்கப்பட்டான். அதன் பிறகே, அவன் பெரிய பயங்கரவாதியாக மாறினான்.-ராகுல்:  # விடுவிக்கப்பட்டப்போ அதுக்கு காங் ஆதரவு தெரிவிச்சதே?


==================


16  குடிநீர், மின்சார வினியோகம், தெரு விளக்குகளை சரி செய்தல், சுகாதாரப் பணி உள்ளிட்டவற்றுக்கு, தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன; உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால், பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை' என, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.


 அப்போ ஆட்சி முடியற வரை உள்ளாட்சித்தேர்தல் நடத்தற ஐடியாவே இல்லை?


==================

17 ரம்ஜான் மாதம் துவங்க உள்ளது. இந்த மாதம், பிரார்த்தனைக்கான மாதம். மக்கள் அனைவரும் நோன்பு இருப்பர். இந்த நேரத்தில், பயங்கரவாதிகளும், பாதுகாப்பு படையினரும் சண்டையிட்டு கொண்டிருப்பது, அவர்களுக்கு தொந்தரவளிக்கும். முஸ்லிம் மக்களின் அமைதிக்காக, கடந்த ஆண்டு அறிவித்ததைப் போல, இந்த ஆண்டும், சண்டை நிறுத்தத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.-மெஹபூபா முப்தி 


முதல்ல அவங்களை (பாகிஸ்தான் தீவிரவாதிகள்)  நிறுத்தச்சொல்லுங்க, நானும்  நிறுத்தறேன்பாரோ?


================

18  வட மாநில மக்கள், மத்திய ஆட்சி மாற்றத்துக்காக காத்திருக்கின்றனர்.-முதல்வர் நாராயணசாமி 

 அப்போ தென் மாநில ம,க்கள் மோடி ஆட்சியை விரும்புகிறார்களா?புதுசா இருக்கே?

================


19  -ஸ்டாலினால் தான், துரைமுருகன், கனிமொழி வீடுகளில், வருமான வரித்துறை சோதனை நடத்தியது.-ஜெயகுமார்

அப்போ மத்திய அரசை விமர்சிச்சா ரெய்டு கச்ன்ஃபர்ம்னு மறைமுகமா சொல்றாரா?

==============


20  'சட்டசபை இடைத்தேர்தலில், 22 தொகுதிகளிலும், தி.மு.க., வெற்றி பெறும்' என, ஸ்டாலின் கூறுவது, 21ம் நுாற்றாண்டின் மிகப்பெரிய காமெடி -ஜெயகுமார்

 காமெடியா? டிராஜெடியா?ஃபோர்ஜெரியா?னு மே 23 ல தெரியும்

=================