Friday, May 03, 2019

ஆடி போய் ஆவணி வந்தா தளபதி டாப்பா வந்திருவாப்டி

1  ஜூன், ஜூலை மாதங்களில், உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் என, மாநில அரசு கூறியுள்ளது. அதிலும், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி தொடரும்.-வாசன்:   # பஸ் ஸ்டேண்டுக்குள்ளே இன்னும் பஸ்சே வர்லை, அதுக்குள்ளே துண்டு போட்டு ஜன்னல் சீட் இடம் பிடிக்கப்பார்க்கறாரு


மக்கள் நலக்கூட்டணில இருந்தப்பவும் இதே டயலாக் தான் விட்டாரு, எதிர் காலத்திலும் இதே கூட்டணி தொடரும்னு 

--------------------



2  அ.தி.மு.க.,வில் வெற்றி பெற்று, அதிகமான பணம் சம்பாதித்து, தற்போது, பதவி ஆசையில், இங்கு சம்பாதித்த பணத்தை, தி.மு.க.,வில் சேர்ந்து, 'சீட்' வாங்கி செலவு செய்து வரும் செந்தில் பாலாஜி, அரசியல் நாகரிகம் அற்றவர்- அமைச்சர் ராஜு:   

# அரசியல்னு வந்துட்டா நாகரீகம், அநாகரீகம் பார்க்க முடியுமா? 


அப்போ அதிமுக ல் இருந்தப்போ அதிகமா  பணம் சம்பாதிச்சார்னு ஒப்புதல் வாக்குமூலம் தர்றாரு, அப்போ இவரு எவ்ளோ சம்பாதிச்சாரோ?

 கட்சி தாவறவங்களூக்கு அரசியல் நாகரீகம் இல்லைன்னா இப்போ இருக்கற 90% அரசியல் தலைவர்கள் எல்லாருமே  அந்த லிஸ்ட்ல வந்துடுவாங்களே?


======================


3   பிரதமர் மோடி, ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல், இந்த நாட்டுக்காக உழைக்கிறார்-அமித் ஷா:  # ஃபாரீன் டூர்ல தான் எப்பவும் இருக்காரு. லீவ் எடுத்தா அப் அண்ட் டவுன் க்கே 2 நாட்கள் ஆகிடுமே?

அவரோட ட்யூட்டி டைம் பூரா வெககேசன் சம்மர் ட்ரிப் மாதிரிதானே?


==================


4  ராகுல், இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விடுப்பு எடுத்து, வெளிநாடுகளுக்கு சென்று ஓய்வு எடுக்கிறார்-   -அமித் ஷா:  #  இப்போ  என்ன  மோடிக்கும் ஓய்வு வேணும்னு மக்கள் கிட்டே கேட்கறீங்களா? அவங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு ராகுலை பிரதமஃப்ர் ஆக்கிடப்போடறாங்க சேம் சைடு கோல் ஆகிடும்

====================

5  கடந்த, 20 ஆண்டுகளாக,   மோடி இரவு, பகல் பாராது, அயராது உழைத்து வருகிறார்-அமித்ஷா # தூக்கம் ஒரு நாள் கெட்டாலே கண்ணுக்குக்கீழே கருவளையம் வருமே> 20 வருசமா சரியா தூங்காதவருக்கு  ஒரு வளையமுமே இல்லையே ? 

=================


6   நாட்டில், மோடிக்கு எதிரான அலையே வீசி வருகிறது-பஞ்சாப் முதல்வர், அமரீந்தர் சிங் # தமிழகம், ஆந்திரா , கேரளா , கர்நாடகா, டெல்லி,  இந்த 5 மாநிலங்களும் சேர்ந்ததுதான்  இந்தியானு நினைச்ட்டார் போல 


==============


7   தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள், குக்கிராமங்கள் வரை, மக்களை சென்றடைந்திருப்பதால், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி கட்சியினரின் வெற்றி, பிரகாசமாக உள்ளது -வாசன் # குக்   கிராமங்களில் அதிமுக ரேஷன் கார்டுக்கு 1000   2000னு  தந்ததால எதிர்க்கட்சிகளின் பருப்பு வேகாதுனு சொல்றாரா?


=================


8  அ.தி.மு.க., பதவி ஏற்றது முதல், தாங்கள் மீண்டும் பதவிக்கு வருவதாக, தி.மு.க.,வினர் சொல்லிக் கொள்கின்றனர். அது, வெறும் கனவு தான்.-வாசன்  


கனாக்காணும் காலங்கள் அப்டிங்கறாரா?


===============


9    வேலுாரில் அடிக்கும் வெயிலின் அனல் தாங்காமல், 'ஆட்சி மாற்றம்' என, அலறுகிறார். ஆனால், ஆட்சிக்கு எந்த பிரச்னையும் இல்லை; துரைமுருகனுக்கு தான், ஏதோ பிரச்னை போல் தெரிகிறது.-வைகைச்செல்வன்  #  ஆளுங்கட்சி ஆட்சிக்கு அரோகரா அரோகரா போட நின்மைக்கறாரு, ஆனா அவரோட மகனோட கனவு கோவிந்தா கோவிந்தா ஆகிடுச்சு


=============

10  வரும் காலங்களில், அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக கூட செயல்பட முடியாத சூழல் உருவாகும்.-தி.மு.க., முன்னாள் அமைச்சர், பொன்முடி  # அப்போ அதிமுக தொடர்ந்து ஆளுங்கட்சியாகவே இருக்கும்னு ஒத்துக்கறாரா?


===================


11   கோமதிக்கு ரூ.15 லட்சம் அ.தி.மு.க., சார்பில் பரிசு  #   திமுக வே 10 லட்சம் கொடுத்துடுச்சு, அதை விட அதிகமா ஆளுங்கட்சி கொடுத்தே ஆகனும்



===========

12   தமிழகத்தில், தண்ணீர் பஞ்சம் போல, அரிசி பஞ்சமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது,'' - தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி     # பஞ்சம்னாலே திமுக ஆட்சி தான் நினைவு வருது


=============



13   ''எனக்கு ஏன் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பவில்லை'' -  கருணாஸ்   # நோட் திஸ் பாய்ண்ட்  யுவர் ஆனர், வாண்ட்டடா ஜீப்ல ஏறுகிறார்


===============


14  டில்லியில் டீக்கடை நடத்தி வந்த அவதார் சிங் என்ற பா.ஜ. தொண்டர் வடக்கு டில்லியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது 'டுவிட்டர்' சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


டீக்கடை வெச்சிருந்தாலே முதலவராகவோ துணை முதல்வராகவோ பிரதமராகவோ மேயராகவோஇ வர்ற அரசியல் ராசி இருக்கும் போல்லயே ? 


================



வழக்கம் போல்,  வருத்தம் தெரிவிச்சா [போச்சு


=================

16  இந்தியா, பிரிட்டன் என, ராகுல்,  இரட்டை குடியுரிமை பெற்றுள்ளது தொடர்பாக, நடவடிக்கை எடுக்க வேண்டும்.\சுப்பிரமணியன் சாமி    #  போட்டியிடற தொகுதியும் இரட்டை, குடியுரிமையும் இரட்டை., அரசியல்வாதிகள்னாலே இரட்டை வேஷம் போடுவது சகஜம் தானே? 


===============


17  மோடியின் தேர்தல் பிரசார பேச்சு, ஜனநாயகத்துக்கு எதிரானதாகவும், குதிரை பேரத்துக்கு வழிவகுப்பதாகவும் உள்ளது' என, தேர்தல் ஆணையத்துக்கு, திரிணமுல் காங்கிரஸ், கடிதம் எழுதியுள்ளது


குதிரைகளை  பேரம் பேசி மோடி வாங்கறாரா?


================


18  'ஜெயலலிதாவின் படம், எங்கள் கட்சி கொடியிலிருக்கும் நிறங்களை கொண்ட, கொடி மற்றும் கரை வேஷ்டிகளை, அ.ம.மு.க.,வினர் பயன்படுத்துவதற்கு, தடை விதிக்க வேண்டும்' என, தலைமை தேர்தல் ஆணையத்தில், அ.தி.மு.க., கோரிக்கை வைத்துள்ளது. 

 அப்படிப்பார்த்தா அறிஞர் அண்ணாவின் படத்தை திமுக அதிமுக 2 கட்சிகள்மே கொடிகளில் பயன் படுத்துதே?


==================

19  மழை வர கோயில்களில் யாகம் நடத்தப்பட வேண்டும் -தமிழக இந்துசமய அறநிலையத்துறை உத்தரவு.



மரங்களை வெட்டி 8 வழிச்சாலை போடாம இருந்தாலே போதும்



=============


20 மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக மூன்று திங்கள் ஆகும் - துரைமுருகன் # ஆடி போய் ஆவணி வந்தா புள்ள டாப்பா வந்திருவாப்டி மொமெண்ட்


============