1 கவிதை எழுதுபவர்கள் எல்லாரும்"நல்லவர்கள் என நம்பிக்கொண்டிருந்தேன்
பிக்பாஸ் சினேகன்,
பாலியல் சீண்டல்வாதி வைரமுத்து,
கமல் மீது தனிநபர் தாக்குதல் தொடுத்திருக்கும் மனுஷ்யபுத்திரன்
இவர்களை பற்றி அறியும் வரை
=============
2 உங்க"கட்சி ஊழல்கட்சியா?னு கேட்டா ஆமா,இல்லை எதுனா சொல்லனும்,ஆனா நம்மாளுங்க
1 ஆதாரம் இருக்கா?
2 சட்டப்படி நிரூபிக்க முடிஞ்சுதா? னு கேட்கறாங்களே ஒழிய
என் தலைமை யோக்கியம்,திருடி இருக்க மாட்டாப்டி னு ஒருத்தரும் சொல்லலை,பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு மொமெண்ட்
=============
3 மன்னார்குடி மாபியா கும்பலும்,கும்பிடு குருசாமி கும்பலும் பணத்தை வாரி இறைப்பதாகத்தகவல்,எப்படியோ ஜனங்க கைல பணப்புழக்காட்டம் இருந்தா மகிழ்ச்சி
============
4 கலைஞர் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல் இது.இதில் படுதோல்வியை தந்துவிட்டால் கட்சித்தலைமை மீது விமர்சனம் வரும்.கட்சிக்குள் குழப்பம் வரும்.அண்ணன் அழகிரி என்ட்ரி ஆவார்,நமக்கு நல்லா டைம் பாஸ் ஆகும்.எனவே படு கேவலமான தோல்வியை மக்கள் தர வேண்டும்
==============
5 இன்று மார்ச் 20 உலக சிட்டு குருவிகள் தினம் .சிட்டுக்குருவி லேகியம் சாப்பிட்டா நல்லது என்ற சேலம் சித்த வைத்தியரின் கூற்று"பொய்யே!
===============
6 அரசுப்பணியோ,பொதுப்பணியோ குடிகாரனுங்களுக்கு முக்கியப்பதவியோ ,பொறுப்புள்ள பதவியோ அளிக்கக்கூடாது.7 மணி ஆகிடுச்சுன்னா போனை ஸ்விட்ச் ஆப் பண்ணிடறாங்க..முக்கியமான தகவல் பகிரனும்னா பொது ஜனம் என்ன செய்யும்?
==============
7 ஆசிரியப்பணி பரிசுத்தமானது ங்கற காலம் எல்லாம் மலை ஏறிப்போயாச்சு.எப்போ சுயநலத்துக்காக,மாணவர்கள் எக்கேடோ கெட்டுப்போகட்டும்னு தேர்வு சமயத்தில் ஸ்ட்ரைக் பண்ணாங்களோ"அப்பவே அவங்களும் சராசரி மனிதர்கள் கேட்டகிரி க்கு வந்துட்டாங்க (அரசுப்பள்ளி ஆசிரியர்கள்)
=============
8 தேர்தல் பணியில்"ஈடுபடும் ஜாக்டோ ஜியோ"அமைப்பைச்சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்களை"கவனமாக"கண்காணிக்க"வேண்டும்.கோரிக்கைகள் நிறைவேறாத கடுப்பில் அவர்கள் எதுனா"தகிடுதித்தம்"பண்ண வாய்ப்பு உண்டு.பழி வாங்கும் குணம் சராசரி"மனிதனின்"குணம்
===============
9 தேர்தல் விழிப்புணர்வு வாசகம் − குடும்பத்தோடு வாக்களிக்க வாக்குச்சாவடி செல்லுங்கள்,ஆனா குடும்ப அரசியலுக்கோ,குடும்ப வாரிசு அரசியலை யோ ஆதரிக்காதீர்!ஒரு குடும்பத்துல ஒருத்தன் திருடி சொத்து சேர்த்தது போதாதா?புதிதாக ஒரு ஆள்"சம்பாதிக்கட்டும்
==============
10 நீட் தேர்வு விலக்கு னு இரண்டு திருட்டுக்கட்சிகளும்"தேர்தல் அறிக்கைல அடிச்சு விட்டது"சாத்தியம் இல்லை.அது"மத்திய அரசு"அதிகாரத்துக்கு உட்பட்டது.நாம ஹெட்மாஸ்டர்ட்ட லீவ் கேட்கலாம்.லீவ் தந்தேதான் ஆகனும்னு ஆர்டர் போட முடியுமா?
===============
11 மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து சில நிர்வாகிகள் விலகல் என்ற செய்திக்கு என்ன காரணமாக இருக்கும்.?
திராவிடக்கட்சிகளின் வாக்குகளைப்பிரிச்சிடுவாரோ ங்கற பயத்துல இரண்டு திராவிடக்கட்சிகளும் பணபலத்தைக்காட்டி இழுத்திருக்கலாம்.ஒவ்வொரு"கட்சிலயும் ஒரு துரோகி,ஈரோடு சந்திரகுமார் மாதிரி
===========
12 திருவள்ளூர் மாவட்டத்தில் டோக்கன் கொடுத்தால் நகை கிடைக்கும்: ஓட்டுக்காக ஆளுங்கட்சி புது டெக்னிக்*
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஓட்டுக்களை பெறுவதற்காக ஆளுங்கட்சியினர் தங்கநகை டோக்கன்களை வழங்கி வருகின்றனர். மக்களவை தேர்தலை முன்னிட்டு ஓட்டுக்களை பெறுவதற்காக வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதிகாரிகள் கடும் கெடுபிடியால் அதிர்ச்சி அடைந்துள்ள ஆளுங்கட்சியினர் வேறுவகையில் வாக்காளர்களை கவர திட்டமிட்டுள்ளனர். இதன்படி ஆளுங்கட்சி பிரமுகர்கள், வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி, அந்த டோக்கன்களை நகைக்கடையில் கொடுத்து அதில் குறிப்பிட்ட தொகைக்கு ஏற்பட மூக்குத்தி, கம்மல், கொலுசு போன்ற பொருட்களை வாங்கிக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இவ்வாறு செய்வதால் திடீரென நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இதுபற்றி தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியவந்ததும் நகைக் கடைகளை கண்காணிக்க துவங்கியுள்ளனர். இவர்களுடன் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகைக்கடைகளில் மூக்குத்தி, கம்மல், 5 கிராம் செயின், 10 கிராம் செயின், வெள்ளி கொலுசு போன்ற பொருட்களை மொத்தமாக யாருக்கும் கொடுக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அத்துடன் டோக்கன் கொண்டுவரும் நபர்களுக்கும் நகை கொடுக்கக்கூடாது என்று தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதை மீறி செயல்படும் நகைக்கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
வாட்சப்
==============
13
ராஜ கண்ணப்பன் கடந்து வந்த பாதை
1991-96- அதிமுக அமைச்சர்
2000 - மக்கள் தமிழ் தேசம் (தனிக்கட்சி )
2006 - கட்சி கலைப்பு
2006 - திமுகவில் இணைந்தார்
2009- திமுக எம்.எல்.ஏ வாக இருந்த போதே அதிமுக தாவல்
2009- அதிமுக ( நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி)
2011- அதிமுக ( சட்டமன்ற தேர்தலில் தோல்வி)
2016- தீபா அணி
2017- ஒபிஸ் அணி
2017- ஒருங்கிணைந்த அதிமுக
2019- மீண்டும் திமுக
(வாட்சப்)
==============
14
அரசியல் வினாடி வினா = ஒரு தொகுதில அண்ணன் தம்பி 2 பேருமே வெவ்வேற கட்சில போட்டி இடறாங்க. நெ1 திருட்டுக்கட்சி VS நெ 2 திருட்டுக்கட்சி, அது எந்தத்தொகுதி?வேட்பாளர்கள் யார்?
==============
15 என் கண்மணி ,என் காதலி பாடல்ல சிவகுமார்ட்ட நாயகி "நீங்க அன்னைக்கு சொன்ன ஜோக்கை இன்னைக்கு நினைச்சேன் ,சிரிப்பு வந்துடுச்சு"னு சொல்லுது,பாடல்ல கூட வரி வருது,நான் சொன்ன ஜோக்கைக்கேட்டு சிரிக்கின்ற கன்னி அல்லவோ?ஆனா கடைசி வரை அந்த ஜோக் என்ன?னு சொல்லலை
===========
16 தேமுதிக நமது கூட்டணிக்கு வராமல் ஆளுங்கட்சியுடன்"கூட்டணி அமைத்துவிட்டார்களே என்ற ஆத்திரத்தில்"ஒரு"பொதுக்கூட்டத்தில் யாரோ ஒரு மூன்றாந்தர ஆள் பேசிய வீடியோ உரை படு கேவலம்,பெண்களை மட்டம் தட்டும் கேவலமான கட்சிக்கு ஓட்டுப்போடுவதை"தவிர்க்கவேண்டும் பெண்கள்
=================
17 சமையல்
குறிப்பை
எழுதனும்னாக்கூட
பொண்ணுங்க
எழுதிடறாங்க
அதைக்’
கவிதையா
அடடே!!
===============
18 தமிழ் சினிமா வரலாற்றில் நாயகிக்கு அதிக க்ளோசப் ஷாட் வைத்த படங்கள்
1 நிலா பெண்ணே
2 நீ பாதி நான் பாதி
3 ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே
3 இஸ்பேட் ராஜாவும்,இதய ராணியும்
============
19 டாக்டர்,நேத்து நைட் சாப்ட்டேன்,இன்னைக்கு மதியம் வரை பசிக்கலை,என்னவா இருக்கும்?
எதுனா ஜீரணக்கோளாறா இருக்கும்,இல்லைன்னா மஞ்சள் காமாலை தான்
=============
20 டாக்டர்,பல் சொத்தை... அதிகமா இனிப்பு சாப்டுனால வருமா,இல்ல சத்து குறைபாட்டுல வருமா..??
அடிக்கடி சாக்லெட் மாதிரி இனிப்புகளை சாப்பிட்டு சரியாக சுத்தம் செய்யலைன்னா சாக்லெட் துணுக்குகள் கடைவாய்ப்பல்லில் ஒட்டிக்கும்,பெரும்பாலான சொத்தைப்பற்கள் அங்கேதான் வரும்
===============