1 ஓபிஎஸ் மட்டும் தன் வாரிசை களம் இறக்கிட்டாரே?நாமளும் நம்ம சைடுல மனைவி,மகன்/மகள் னு வாரிசை இறக்கிடுவோமா அப்டினு EPS 2021 சட்டசபைத்தேர்தலில் நினைக்கக்கூடும்
===============
2 நெட் தமிழன் ஒரு வரிக்கி பாக்கெட் போட்டோ போட்டு இதன் ருசி எப்படி இருக்கும்? னு கருத்து கேட்கறாப்டி. பேஸ்புக்ல இதே அப்டேட் பண்ற டைம்ல பாக்கெட்டை ஓப்பன் பண்ணி டேஸ்ட் பாத்திருக்கலாமில்ல?
=============
3 பாஜக வுக்கு ஒரு ஐடியா − ராமராஜன் நடித்த இளையராஜா இசை அமைத்த எங்க"ஊரு காவக்காரன் படப்பாடலான "எங்க ஊரு காவக்காரன் அவன்"எல்லாத்துலயும்"கெட்டிக்காரன்" பாடலை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தலாம்.அவரும் பசு நேசன்தான்.செட் ஆகுது
===============
4 இந்த லலிதா ஜூவல்லரி ஓனரு,விளம்பரத்துல "உங்களுக்காக உங்க முதல் தவணையை நாங்களே கட்றோம்"என்பது"அரசியல்வாதிகள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம்னு சொல்ற மாதிரி
நம்பகத்தன்மை இல்லாதது
===============
5 தேர்தல் பிரச்சாரம் மூலம் வாக்காளர்களின் மனநிலையை மாற்றி தனக்கு வாக்களிக்க வைத்து விடலாம் என்பது ஒரு வகை மூட நம்பிக்கையே!
==============
6 தலைவரே!'தளபதி'யிடம் குணா தோற்றது வரலாறு! அப்டினு நம்ம கட்சிக்காரங்க சிலர் பிரச்சாரம் பண்றாங்களே?அது உண்மையா?
இதுல ஒரு ரகசியம் என்னான்னா எதிர்பார்ப்பு,ஓப்பனிங்க் பிரமாதமா இருந்தாலும் தளபதி யே ஒரு தோல்விப்படம்தான்,ஒப்பீட்டு அளவில் குணாவை விட வெற்றி,அவ்ளவ்தான்
===============
7 குஷ்பூ க்கு காங் ஏன் சீட் தர்லை?னு பலரும் விவாதிக்கறாங்க.நம்ம தானைத்தளபதி தான் ராகுல் கிட்ட பேசி சீட் குடுத்து பெரிய ஆள் ஆக்காதீங்க னு வேண்டுகோள் விடுத்திருப்பார்னு யூகிக்கிறேன்
==============
8 தனக்காகவும் ,தன் மனைவி,மகனுக்காகவும் பல முறை ஜாமீன் மனு தந்த வகையில் அரசாயல்வாதிகளிலேயே அதிகமுறை ஜாமீன் கேட்ட வகையில் ப.சிதம்பரம் சாதனை செய்திருக்கிறாராமே?இது உண்மையா?
=================
9 தான் (நல்லா) ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.
உதா
டி ராஜேந்தர் − சிம்பு
கே பாக்யராஜ் − சாந்தனு
===================
10 நிலக்கடலை சட்னி எப்படி வைக்கிறது??
இது பெரிய கம்ப சூத்திரமா?உங்களுக்கு பொட்டுக்கடலை சட்னி வைக்கத்தெரியுமா?
தெரியும்
அதே பிராசஸ் தான் ,பொ.கடலைக்குப்பதிலா வறுத்த நிலக்கடலை + எண்ணெயில் வதக்கிய சின்ன வெங்காயம்
=================
11 தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் தந்த சொத்து விபரங்கள் தவிர வேறு சொத்து இருந்தால் அவை அரசு பறிமுதல் செய்யும்னு சட்டம் கொண்டு வந்துட்டா ஒரு பய போட்டி இடவே முடியாது
==================
12 ஏப்ரல்,மே, மாதங்களில் வெய்யில் கடுமையாக இருக்கும் என்பதால் ஆண்கள் கதர் சட்டை ,காட்டன் சட்டை வெள்ளை நிறத்தில் உடுத்துவது நல்லது.பெண்கள் கூல்"காட்டன் ,சுடி,சேலை அணியலாம்னு சொன்னா எப்படியும் அவங்க கேட்கப்போறதில்ல,அதனால ஆண்களுக்கு மட்டும் சொல்வோம்
===================
13 பதிவு செய்யாத ஒரு கட்சிக்கு பொது சின்னமாக அவர்கள் கேட்கும் (விரும்பும்) சின்னம் தர சட்டத்தில் இடம் இல்லை,ஆனால் ஏதோ 3 சின்னம் தந்து அவற்றில் ஒன்றை அவர்கள் தேர்வு செய்து கொள்ள சட்டத்தில் இடம் உண்டு
================
14 கமல் தனது படங்களில் சமூக சீர்திருத்தங்கள் புரிந்திருக்கிறாரா?என சிலர் கேட்கிறார்கள்,அந்தப்பட பட்டியலை பின்னர் பார்ப்போம்,ஆனால்"பராசக்தி முதல் பாலைவனரோஜாக்கள்,பெண் சிங்கம் வரை பிரமாதமான வசனம்,சீர்திருத்தக்கருத்துக்கள் புகுத்தியவர்கள் திருடலையா?
===============
15 தலைவி நயன்தாரா"நடித்து வெளிவரவுள்ள ஐரா ஒரு திகில்படம்.இயக்குநர் இதற்கு முன் லட்சுமி கில்மா குறும்படம் எடுத்தவர்,மற்றபடி"ஐரா வுக்கும் லட்சுமிக்கும் சம்பந்தம் இல்லை.வேறு"மாதிரி சீன்களை எதிர்பார்த்து யாரும் தியேட்டருக்கு வந்து ஏமாறாதீர்
==================
16 தமிழினத்தலைவர் அமரர் டாக்டர் கலைஞர் தமிழக முதல்வரா ஆனது ஒரு வகைல நல்லது,கேரள முதல்வர் ஆகி இருந்தா God's own country னு போட்டிருக்க முடியாது,கடவுளே இல்ல ,மொத்த கன்ட்ரியும் என் குடும்பத்துக்குதான் மொத்தமா சுருட்டி இருப்பாரு
===============
17 டி ராஜேந்தர் ஒரு தீர்க்கதரிசி. படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் கேரக்டர் திருப்புமுனை தரும் என்பதை யூகித்தே "உறவைக்காத்த கிளி" யில் பாடல் பல்லவியை இப்படி அமைத்தார்
"எந்தன் பாடல்களில் நீயும் நீலாம்பரி"
டகஜம் டகஜம சகஜம் சகஜம ஜம
அப்டி னு யாரும் இன்னும் கிளம்பலையா?
==================
18
உடன்பிறப்பே! 1996 ல் சூப்பர்ஸ்டார் நமக்காகக்குரல்"கொடுத்தார்,அவர் தயவில் வென்றோம்.2019 ல் லேடி சூப்பர்ஸ்டார்"நயன்தாரா நமது கட்சி ரவுடியை (தற்காலிகமாக) கட்சியை விட்டு விலக்கியதற்காக நன்றி தெரிவித்ததால் அவரது ரசிகர்கள் நம் பக்கம்.வாக்கு வங்கி 28% ல இருந்து 29.5% ஆக உயர்ந்துள்ளது,ஆக , ஆக வெற்றி உறுதி!
===============
19 நான்"பணிவாக தலைமையிடம் நடித்தபோது முதுகெலும்பில்லாதவன் என என்னை எள்ளல் செய்தனர்,இப்போ என் மகன் தெனாவெட்டாக மேடையில் பேசியதற்கு திமிர் என்கின்றனர்.பதவி வாங்கும் வரை பணிவு.பதவி வந்த பின் துணிவு,இதுவே நம் தாரக மந்திரம் #OPS
=============
20 நாளைய செய்தி − தேர்தல் முடிந்த பின்
ராதாரவி மன்னிப்புக்கடிதம் கொடுத்ததைத்தொடர்ந்து கழகத்தில் மீண்டும்"சேர்க்கப்பட்டார்.இனி 2021 மே"வரை அவர் யாரை வேணா எப்டி வேணா திட்டிக்கலாம். மே"மாதம் கட்சி அவர்"மீது"கடுமையாக நடவடிக்கை எடுக்கும்
=============