Tuesday, April 16, 2019

திருப்பூர் தில்லுமுல்லுகள்- மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ் பாகம் 2 - 16/4/2019

1  குழப்படி குப்புசாமி





=================


கை கொடுக்காத கை





-------================


சம்பாதிக்கறது இங்கே ,முதலீடு அங்கே





==============


த தமிழ் இந்து நெட் பஞ்ச் அட்டாக்கிங் ஆக ஆக...ஆக








=

5  ph இல்லாம ஒரு நொடி கூட....




-------------------


6  டோக்கன் ஸ்பெஷலிஸ்ட்
டோண்டு ராகவன்




==============’

7  வாக்களிக்கும்போது



================


8  த தமிழ் இந்து நெட் பஞ்ச்




===============

9  பஞ்ச்சோந்தி பராக் @ இந்து






=============


10 வாட்சப் தகவல்

திருப்பூரில் ஏற்றுமதி குறைந்து விட்டது. காரணம் GST மற்றும் டிரா பேக் குறைக்கப்பட்டதே என்று கூறி மோடியை அகற்ற வேண்டும் என்கிறார்கள்.

இது உண்மையா என ஆராய்ந்த போது அறிந்த விஷயம் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கான ஏற்றுமதியில் சரிவில்லை. ஆனால் , ஐக்கிய அரபு நாடுகளுக்கான ஏற்றுமதியில் மட்டும் 31% சரிவு ஏற்பட்டுள்ளது.

அரபு நாடுகளுக்கான ஏற்றுமதி மட்டும் வீழ்ச்சியடைய என்ன காரணம் என்று ஆராய்ந்து முடிவறிந்தால் GST யின் அவசியம் புரிவதோடு , மோடி எப்படி காவல் காரராய் செயல்படுகிறார் என்றும் புரிந்து கொள்ளலாம்.

திருப்பூரில் ஒரு ஏற்றுமதியாளர் துபாய் நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறார் .எப்படித் தெரியுமா ?

பெரிய ஏற்றுமதி நிறுவனங்களில் , தரமற்றது என்ற காரணங்களால் ஒதுக்கப்பட்ட ஆயத்த ஆடைகளை மிகவும் குறைந்த விலைக்கு வாங்குவார். உதாரணமாக ஐம்பதாயிரம் எண்ணிக்கையில் ஒன்றின் விலை ரூ. 50 |- என்ற மதிப்பில் வாங்குவார்.

மொத்த கொள்முதல் மதிப்பு 50000 x 50 = 25, 00,000/

சரியா ? இந்த கொள்முதலுக்கு பில்லும் கிடையாது , புண்ணாக்கும் கிடையாது.

அடுத்ததாக , இதனை ஏற்றுமதி செய்வார். விலை என்ன தெரியுமா ? ஒன்றின் விலை 500 |- என்ற மதிப்பில் அனுப்புவார்.

என்னய்யா அநியாயம். ?.ஐம்பது ரூபாய் மதிப்புள்ள ஆடைக்கு விற்பனை விலை ஐந்நூறா என வாயைப் பிளக்காதீர்கள்.

சரிங்க... வாயைப் பிளக்கல .... ஒரு கருத்தா கேட்கிறேன். இவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்க , துபாய் இறக்குமதியாளர் முட்டாளா ? என்ற கேள்வி எழுகிறதா ? எழ வேண்டும் .அப்போதுதான் நீங்கள் புத்திசாலி.

இங்கேதான் விஷயமே அடங்கியுள்ளது. இங்கே யார் ஏற்றுமதி செய்கிறாரோ , அவரின் வெளிநாட்டு நண்பர்தான் இறக்குமதியாளராக இருப்பார். அல்லது , இவரின் நிறுவனமே அங்கு விற்பனையகத்தை நிறுவியிருக்கும் .
ஆகவே , அதிக விலை யென்பது ஒரு பொருட்டே அல்ல.

பின் எதற்காக அதிகமான விலையில் அனுப்ப வேண்டும் ? இதில் தான் மோசடி அடங்கியுள்ளது.

இப்போது ஏற்றுமதி செய்யும் சரக்கின் மதிப்பைக் கணக்கிடுங்கள்.

50000 x 500 | = 2,50,00,000/

சரியா ? நன்றாக பெருக்கிப் பார்த்துக் கொள்ளவும். பிறகு , முழிக்கக் கூடாது.

சரி. முன்பு ஏற்றுமதிக்கான மானியம் 7% இருந்தது. இப்போது இவருக்கு மானியம் மட்டும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா ?

25000000.x 7 %= 17,50,000/

அரசு இவருக்கு வழங்கும். எதற்காக வழங்குகிறது தெரியுமா ?

அன்பான ஏற்றுமதியாளரே .. தாங்கள் இரண்டு கோடியே ஐம்பது லட்சம் மதிப்புள்ள சரக்குகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் அந்நிய செலவாணி யை அரசுக்கு ஈட்டித் தந்துள்ளீர்கள். மேலும் , அப்பகுதி தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளீர்கள். ஆகவே , பிடியுங்கள் 17,50,000/ என்று வாரி வழங்கி விடும்.

இப்போது மானியமாய் வந்த தொகை 17,50,000 + பில் தொகை 2,50,00,000 = 
2, 67,50,000 .ஆக இது மொத்த வரவு . இதில் இவர் கொள்முதல் செய்தது 25 லட்சம் போக நிகர லாபம் 2,42,50,000/

என்னய்யா கதை விடுகிறாய். ஐம்பது ரூபாய் மதிப்புள்ளது ஐநூறுக்கு விற்றால் தானே இது சாத்தியம் ?

கேள்வி சரிதான். இதில் ஏற்றுமதியாளரும் இறக்கு மதியாளரும் கூட்டுக் களவாணிகள். அரசின் மான்யம் பெற இது போன்ற ஏற்பாடு . அந்த ஆடையின் மதிப்பு நூறு எனக் கொண்டாலும் அதிகமாக பில் செய்யப்பட்டதற்கான தொகை இங்கே ஹவாலா பணமாக கை மாறி விடும்.

எப்படி ஹவாலாக மாறுகிறது பாருங்கள். அரசின் விதிகளுக்கு உட்பட்டு சட்டபூர்வத் தொகையாக நாட்டிற்குள் வருகிறது என்பது தான் வேடிக்கை.

இவைக ளெல்லாம் GSTவரும் முன். இப்போது கொள்முதல் முதற் கொண்டு பில் தேவைப்படுவதால் இது போன்ற மோசடி வணிகம் நடை பெற முடிவதில்லை. ஆகவே தான் ஏற்றுமதி சரிந்து விட்டது என்ற புலம்பலும் , மோடி ஒழிக என்ற எரிச்சலும்.

துபாய்க்கு ஏற்றுமதி செய்த சதவிதம் மட்டும் 31% குறைந்துள்ளதை கவனிக்க வேண்டும். மற்ற நாடுகளுடனான ஏற்றுமதி குறையவில்லை.

திருட்டுப் பொருட்களை மட்டுமே வாங்கி சிலர் கடை நடத்துவார்கள். காவல் அதிகமானால் கடையை சாத்திவிட்டு , காவல் காரனைத் திட்டாமல் என்ன செய்வார்கள் ?

திருப்பூரிலும் இது தான் நடக்கிறது. மோடி என்ற காவல்காரரைத் திட்டுகிறார்கள்.

ஏற்றுமதியாளர்கள் அனைவரும் இப்படி மோசடி செய்வதில்லை. ஆனால் , இவ்வாறெல்லாம் நடைபெறவில்லையென்று யாரும் மறுக்க முடியாது.

இது போன்ற மோசடி ஏற்றுமதி கண்டு பிடிக்கப்பட்டு , அந்நிறுவனம் CBl விசாரணையில் இருப்பதாக தகவல் .

தற்போது டிரா பேக் குறைக்கப்பட்டுள்ளது. G ST நடைமுறையில் இருப்பதால் சரியான கொள்முதல் மற்றும் விற்பனை பில்களைக் கொண்டு முறையாக , சட்டத்திற்குட்பட்ட வணிகம் செய்தால் தான் GST ரீபண்ட் தொகைகள் ஒழுங்காய் வணிகர்களுக்கு வந்து சேரும். இதில் முறையற்றதாக எது இருந்தாலும் ரீபண்ட் கிடைக்காது.

எனக்கு ரீபண்ட் வந்து சேரவில்லை என்பவர்கள் தகுந்த ஆடிட்டர்களை அணுகி ஆலோசனை பெற வேண்டுகிறேன்.

இது போன்ற முறையற்ற வணிகத்திற்கு பைனான்ஸ் செய்பவர்களும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் புலம்பல் அழுகை தனி. அதைத் தனிப் பதிவாக எழுதுகிறேன்.

பைனான்சியர்களுக்குத் தனி மரியாதை தர வேண்டுமல்லவா ?