1 சென்னை - சேலம் எட்டு வழி சாலை வழக்கில், தீர்ப்பு வந்துள்ளது. : விவசாயிகள் நலனை காக்கும் வகையில், அந்த முடிவு இருக்கும்-ஜெயகுமார் # 8 வழி சாலையே விவசாயிகளின் ஜாதகத்தில் அஷ்டமத்துல சனிதானே?
================
2 : சென்னை - சேலம் எட்டு வழி சாலை வழக்கில், தீர்ப்பு வந்துள்ளது. தீர்ப்பு நகல் கிடைத்த பின், அரசு உரிய முடிவு எடுக்கும்.-ஜெயகுமார் # நகல் கிடைத்த பின் அரசின் அசல் முகம் தெரிய வரும்?
==============\\
3 விவசாயிகள் நலனை காக்கும் வகையில், அந்த முடிவு இருக்கும்-ஜெயகுமார்
முதல்வர் கூட ஒரு விவசாயிதான், அவரோட நலனைக்காக்கும் விதமா இருக்குமோ?
==============
4 : தமிழிசைக்கு வேறு தொகுதி கிடைக்கவில்லையா? - ஸ்டாலின் # அதானே? க்ரெக்டா தங்கைக்கோர் கீதம் பாடறப்போ ராகம் தாளம் பல்லவி பாடறாரே?
===============
5 ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல பிரச்னைகள் உள்ள துாத்துக்குடியில், தோற்பதற்காகவே, அவர் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. தமிழிசைக்கு எதிராக, பா.ஜ., சதி செய்துள்ளது-ஸ்டாலின் # எங்களுக்கென்னவோ உங்க தங்கைக்கு எதிரா நீங்க சதி செய்யறிங்களோனு தோணுது
=================
6 நாங்கள், ஜெயலலிதாவின் ஆன்மாவிற்கு பயந்து, மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்-ஓபிஎஸ்
சிவாஜி , கமல் ரேஞ்சுக்கு பின்னிப்பெடல் எடுக்கறாரே?
அப்போ மக்கள் கேள்வி கேட்பாங்க அப்டிங்கற பயம் எல்லாம் இல்ல?
=================
7 பா.ஜ., மதவாத கட்சி என்றால், ஸ்டாலின், 'ஹிந்துக்களுக்கு நாங்கள் எதிரி இல்லை' என்கிறார்.-தினகரன் # தேர்தல் முடியும் வரை இந்துக்களுக்கு எதிரி இல்லை என திருத்தி வாசிக்கவும்
=============
8 எங்கள் குடும்பத்திலும், கோவிலுக்கு செல்கின்றனர்' என, பா.,ஜ.,வினர் போல் பேசுகிறார் ஸ்டாலின்,. இதன் மூலம், தி.மு.க., கூட்டணி, மதசார்பற்ற கூட்டணி இல்லை; அது, பா.ஜ.,வின், அடுத்த பிரிவு எனத் தெரிகிறது= தினகரன் # தூத்துக்குடில போட்டி இடற கனிமொழி தூத்ஹ்டுக்குடில பிரச்சாரத்தை ஆரம்பிக்காம அருகில் இருக்கும் திருச்செந்தூர் முருகனை வழிபட்டு பிரச்சாரத்தை ஆரம்பிக்கலையா?
=============
9 நேற்று வரை, ஆட்சி மீது புகார் கூறி வந்த, பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகள், மக்களை மறந்து, பதவிக்காக, அ.தி.மு.க.,-வுடன், கூட்டணி அமைத்திருக்கின்றன.- செ.கு.தமிழரசன் # அப்போ அவங்க ஜெயிச்சிடுவாங்கனு ஒத்துக்கறீங்களா?
===============
10 குத்துச் சண்டையில், ஒரு போட்டியாளரின் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு, மற்றொரு போட்டியாளர் வெற்றி பெற்றதாகக் கூறுவதை எப்படி ஏற்க முடியாதோ, அதேபோல் தான், எங்கள் வீட்டில், வருமான வரித்துறை சோதனை நடத்திவிட்டு, தேர்தல் பணிகளை அடியோடு முடக்கிவிட்டு, எங்களை வீழ்த்தி விட்டோம் எனக் கூறுவது, நியாயமாக இருக்காது -துரைமுருகன் # அப்போ ரெய்டில் கைப்பற்றப்பட்ட பணம் உங்களுதுதான்னு ஒத்துக்கறீங்களா?
============:
11 . பூஜ்ஜியத்திற்கு உள்ளே ஒரு ராஜ்ஜியம் என, ஸ்டாலின் வாழ்ந்து வருகிறார். வெளியே வந்து பார்த்தால், பா.ஜ., சதம் அடித்திருப்பது, அவருக்குத் தெரியும்.-பொன்.ராதா # 100 தொகுதிதான் பாஜக வுக்கு கிடைக்கும்னு அர்த்தமா?
==============
12 'லாலுவுக்கு, 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 'ஆனால், லாலு சிறையில் இருந்தது, 24 மாதம் தான். எனவே, 'ஜாமின்' வழங்க முடியாது-நீதிபதிகள் # அப்போ இன்னும் 3 மாசம் கழிச்சு 27 மாசம் ஆனதும் ஜாமீன் விடுவாங்களா? தேர்தலே முடிஞ்சிடுமே? எப்படி பிரச்சாரம் பண்ணுவாரு?
==================
13 ஊழல் செய்வதற்காகவே ஆட்சிக்கு வரத் துடிக்கிறது காங்கிரஸ்: மோடி # ஆட்சி செய்வது என்றாலே ஊழல் செய்வது என்றுதான் அர்த்தம்கறாரா?
=================
14 ரூ. 38 ஆயிரம் கட்டண பாக்கி வருண் மீது பி.எஸ்.என்.எல்., புகார் # வரும் வரும் வெய்ட் பண்ணுங்க - வருண்
================
15 துரைமுருகன் மகன் மீது வழக்கு: எந்நேரமும் கைதாக வாய்ப்பு $ ப சிதம்பரத்துக்கு அடுத்து குடும்பத்தோட ஜெயிலுக்குப்போன அரசியல்வாதில இவர் பேரும் வருமோ?
==================
16 தி.மு.க., ஹிந்து விரோதக் கட்சி' என, சிலர் கூறுகின்றனர். -ஸ்டாலின் #எப்பவும் எதிரினு சொல்லிட முடியாது , தேர்தல் வரும்போது நண்பர்கள்தான் , அவங்க ஓட்டு வேணுமில்ல?
============
17 ஹிந்து மதம், பா.ஜ.,வுக்கு மட்டும் சொந்தமானதல்ல. ஹிந்துக்களைப் பாதுகாப்பதாகக் கூறி, பா.ஜ.,வினர் நாடகமாடுகின்றனர். எந்தவொரு ஜாதி, மதத்திற்கும், தி.மு.க., எதிரானதல்ல. -ஸ்டாலின் # அப்போ கலைஞர் டிவி ;ல இந்துப்பண்டிகைகளுக்கு விடுமுறை தின சிறப்புத்திரைப்படம் போடுவது ஏன்? இந்துப்பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துக்கூறாதது ஏன்?
==================
18 சமுதாய நலனை பேணிக் காக்கும் கடமை கொண்ட இயக்கம். மதசார்பற்ற அரசு மத்தியில் உருவாக வேண்டும். அதேநேரம், எல்லா மதத்தினரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதே, எங்கள் எண்ணம்.-ஸ்டாலின் # நிச்சயம், அப்போத்தானே எல்லா மத ஓட்டுகளும் கிடைக்கும்?
=====================
19 கர்நாடகாவில், காங்., வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபோது, நடிகை குஷ்புவை, கூட்டத்தில் இருந்த இளைஞன் சில்மிஷம் செய்தான். ஆவேசமடைந்த குஷ்பு, அந்த இளைஞன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் # கன்னத்துல வை அப்டினு அந்த இளைஞர் பாடி இருப்பாரோ? அதான் பளார்னு வெச்ட்டார்
================
20 மோடியின் புஜபல பராக்கிரமம் என்ன என்பது இந்த தேர்தலில் முழுவதுமாக தெரிந்து விடும்-ராகுல் # நடப்பது தேர்தலா? குஸ்திப்போட்டியா?
=================