1 : சென்னை - சேலம், எட்டு வழிச்சாலை தொடர்பான, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மத்திய, மாநில அரசுகள், மேல்முறையீடு செய்யக் கூடாது. விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்காக, உச்ச நீதிமன்றத்தில், என் சார்பில், 'கேவியட்' மனு தாக்கல் செய்யப்படும் -அன்புமணி # நம்ம கூட்டணிக்கட்சி தானே? நேருக்கு நேரா சொல்லலாமே?
=============
2 என் கொள்ளு தாத்தா நேரு, பாட்டி இந்திரா, பெரியப்பா ராஜிவ் ஆகியோர், இதற்கு முன், பிரதமர்களாக பதவி வகித்துள்ளனர். அவர்களை விட, தற்போதைய பிரதமர் மோடி தான், சர்வதேச அளவில், நம் நாட்டுக்கு அதிக பெருமை சேர்த்துள்ளார் - *பா.ஜ., - எம்.பி., வருண்: # ஜால்ரா சத்தம் ஜாஸ்தியா இருக்கே?
==================
3 தமிழகத்தில், அ.தி.மு.க.,வை மிரட்டி, பா.ஜ. கூட்டணி அமைத்துள்ளது -இ.கம்யூ., தேசிய செயலர் சுதாகர் ரெட்டி: # மிரட்டலான படம்னு திகில் , பேய்ப்படங்களுக்கு விளம்பரம் தர்றது மாதிரி இது ஒரு அரசியல் மிரட்டல் கூட்டணிங்கறீங்களா?
===================
4 பா.ஜ., இருக்கும் அணிக்கு, த.மா.கா., தலைவர் வாசன் சென்றது, வேதனைக்குரியது. இதை, எந்தவொரு உண்மையான காங்கிரஸ்காரனும், ஏற்றுக் கொள்ள மாட்டான்.=கார்த்தி சிதம்பரம் # ஜனங்க ஏத்துக்கிட்டாப்போதாதா?
============
5 த.மா.கா.,வுக்கு, சைக்கிள் சின்னம் கிடைத்ததில், எனக்கும் பங்கு உண்டு. சைக்கிள் சின்னம், கவுரவமானது. அந்தச் சின்னம் இப்போது, அவர்களுக்குக் கிடைக்காததில் மகிழ்ச்சி -கார்த்தி சிதம்பரம் - என்ன ஒரு நல்ல எண்ணம், அடுத்தவனுக்கு ஒரு கஷ்டம்னா நமக்கு சந்தோஷம்
===============
6 சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது, பின்னடைவு கிடையாது. இது சம்பந்தமாக, அரசு மேல்முறையீடு செய்யும் - ராஜேந்திர பாலாஜி # மேல்முறையீட்டிலும் அந்த திட்டத்துக்கு பால் ஊத்திட்டாங்கன்னா? என்ன ப்ன்றது? பால்வளத்துறை அமைச்சரே?
===============
7 தொழில் துறை வளர்ச்சிக்கு, சாலை வசதி மிகவும் அவசியம். அடுத்தக்கட்டமாக, கூட்டணிக் கட்சி தலைவர்களை அழைத்துப் பேசி, யாரும் பாதிக்காத அளவுக்கு, முதல்வர் முடிவெடுப்பார் -ராஜேந்திர பாலாஜி # விவச்சாயிகள் பாதிக்காதவாறு சொல்றீங்களா? கூட்டணிக்கட்சிகளை கவனிக்கறதுல பாதிப்பு இல்லாம செட்டில்மெண்ட்டா?
==============
8 அரசியல் களம் எனக்குப் புதிது. முதலில் நான், கள நிலவரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்த முறை நான், வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்றால், இம்முறை நான், மக்களைச் சந்தித்து, அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்; என்னையும், மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, தலைவர் முடிவு எடுப்பதற்கு முன், இம்முறை நான் போட்டியிடவில்லை என்ற என் நிலைப்பாட்டை, அவரிடம் தெரிவித்து விட்டேன் - ஸ்ரீபிரியா # அப்போ சட்டமன்றத்தேர்தல்ல நிச்சயம் சீட் கேட்பாருன்னு இப்பவே துண்டு போட்டுட்டாரு
==============
9 தி.மு.க., வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, ஹீரோ. காங்., தேர்தல் அறிக்கை, சூப்பர் ஹீரோ.- ஸ்டாலின் # அப்போ காங்கிரசை விட திமுக ஒரு மாற்று கம்மினு ஒத்துக்கறாரா?
===============
10 பா.ஜ., வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், மக்களுக்கு பயன்படும் எந்தத் திட்டங்களும் இல்லை. மோடி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, ஜீரோ. இந்தத் தேர்தலில், மத்திய, மாநில அரசுகளை, வீட்டுக்கு அனுப்ப வேண்டும். -ஸ்டாலின்
கணக்குல ரொம்ப முக்கியமான எண் ஜீரோ தான்னு அவங்க வாதிடுவாங்களா?
=================
11 துரைமுருகன்: என் வீட்டில் நடத்தப்பட்ட, வருமான வரி சோதனையின் போது, என் மகன் கதிர்ஆனந்தை கழிப்பறைக்கு செல்லவோ, காபி குடிக்கவோ அதிகாரிகள் அனுமதிக்காமல் அலைக்கழித்தனர்.- துரைமுருகன்:# துரை முருகனை CRYமுருகன் ஆக்கீட்டாங்க போல
ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்னு வீரவ்சனம் எல்லாம் பேசுனிங்க?4 மணி நேரம் காபி குடிக்காம கூட இருக்க முடியல, நீங்க எல்லாம் எப்படி மக்கள் நலனுக்காக உண்ணாவிரதம் இருக்கப்போறீங்க?
=================
12 கடந்த, 2011ல், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தது தான் தவறு. அன்று வைக்காமல் இருந்தால், விஜயகாந்த் தான் இன்று முதல்வராக இருந்திருப்பார் -பி ரேமலதா: # இன்னும் 2 வருசம் கழிச்சு 2019 ல் கூட்டணி வைத்தது தவறு , தனியாக நின்றிருந்தால் விகாந்த் தான் பிரதமர் ஆகி இருப்பார்னு சொல்வாரோ?
====================
13 வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பதை, தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்- தமிழக, காங்., தலைவர், கே.எஸ்.அழகிரி: #ஆமாங்க , ஆரத்தி எடுத்தா காணிக்கை போடனும், தண்டச்செலவு
==================
14 தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., சேரவில்லை என்ற கோபத்தில், தேர்தல் பிரசாரத்தில் என்னை, திட்டித் தீர்க்கிறார், ஸ்டாலின்.-ராமதாஸ் # திட்டத்திட்ட திண்டுக்கல்னு போய்க்கிட்டே இருங்க
================
15 தி.மு.க.,வில் இருந்து, எம்.ஜி.ஆர்., எப்போது வெளியே போனாரோ, அப்போதே, தி.மு.க., அழிந்துவிட்டது-ராமதாஸ் # அப்போ நாம ஏன் அழிந்து போன கட்சியோட கூட்டணி வெச்சோம்?
================
16 இன்று, அ.தி.மு.க., பெரிய கட்சியாக வளர்ந்து இருப்பதற்கும், தி.மு.க.,வினர் தான் காரணம்-ராமதாஸ் # அப்போ நீங்க அதிமுக கூட கூட்டணி வெச்சதுக்கும் திமுக தான் காரணம்? அப்போ நன்றி சொல்லிடுங்க
================
17 ஜெயலலிதா மரணம் குறித்து, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை திசை திருப்பவே, கருணாநிதியின் மரணம் குறித்து, முதல்வர், இ.பி.எஸ்., விமர்சிக்கிறார். இது, கண்டனத்திற்குரியது. முதல்வர் தகுதிக்கு, இது பண்பல்ல. அரசியல் தலைவர்களின் விமர்சனங்கள், தற்போது தரம் தாழ்ந்து விட்டன. தரமற்ற அரசியல்வாதிகளை, பொதுமக்கள் தேர்ந்தெடுப்பதே இதற்குக் காரணம்.-திருநாவுக்கரசர் : # ஈபிஎஸ் சை முதல்வராக பொதுமக்களா தேர்ந்தெடுத்தாங்க?
==============
18 கறுப்பு பணம் இருந்தால் தான், இலவசமாக கல்வி வழங்க முடியும். என்னிடம், கறுப்பு பணம் கிடையாது. -தம்பிதுரை # அப்போ உங்க கூட்டணி ல இருக்கற ஏ சி சண்முகம் இலவசககல்வி தர்றாரே? அவர் கிட்டே கறுப்புப்பணம் இருக்குங்கறீங்களா?
================
19 45 கல்லுாரிகள் எனக்கு இருப்பதாக, பொய் பிரசாரம் செய்யும் ஸ்டாலின் மீது, விரைவில் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்படும். என் மீது கூறி வரும் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் நிரூபித்தால், அரசியலை விட்டு விலகத் தயார். அப்படி நிரூபிக்காவிட்டால், அவர் அரசியலை விட்டு விலகத் தயாரா?-தம்பிதுரை # இன்னும் ஒரு தடவை கூட முதல்வரா ஆகலை, அதுக்குள்ளே அரசியலை விட்டு விலகச்சொன்னா எப்படி?-ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ்
================
20 ஆட்சியை மீண்டும் பிடிக்கும் கட்சி, எவ்வளவு பொறுப்போடு ஒரு தேர்தல் அறிக்கையை கொடுக்க முடியுமோ, அந்த வகையில், சிறப்பான தேர்தல் அறிக்கையை, பா.ஜ., கொடுத்துள்ளது. பா.ஜ., தேர்தல் அறிக்கையை ஸ்டாலின், 'பூஜ்ஜியம்' எனக் கூறியதன் அர்த்தம் புரியவில்லை.-பொன்.ராதா # பூஜயம்னா சுழி. பாஜக வுக்கு அதிர்ஷ்டச்சுழினு சொல்றாரு போல
===================