Tuesday, April 09, 2019

அஷ்டமத்துல சனி

: போலீஸ் வாகனங்களில், பணம் எடுத்து செல்லப்படுவதாக தகவல்கள் வருகின்றன. தொண்டர்கள், கூட்டணி கட்சியினருடன் இணைந்து, சோதனை செய்யலாம்; அதற்கு நமக்கு உரிமை இருக்கிறது.- ஸ்டாலின்  # திமுக தொண்டர்கள் VS  போலீஸ்  கை கலப்பு , கலவரம் நடக்கனும், சட்டம் ஒழுங்கு கெட்டுடுச்சுனு முழக்கம் இடனும், இதானே பிளானு?


================


: லோக்சபா தேர்தலுக்குப் பின், எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. அப்போது, எங்கள், எம்.பி.,க்கள், பிரதமரை முடிவு செய்வர்- தினகரன் # அடுத்ததா ஜனாதிபதி, கவர்னர் இவங்களையும் இவரே முடிவு பண்ணிடுவாரோ?

===============


3  அ.தி.மு.க., ஆட்சியில், மக்களை பற்றி சிந்தித்து, தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. - ஓபிஎஸ்  # அனைவருக்கும் பைனாகுலர் இலவசம்னு சொல்லிடுவாரோ?


================

 பிரதமர் மோடிக்கு, வயதாகி விட்டது.-  ராகுல் 

அப்போ அனுபவஸ்தர்னு நீங்களே ஒத்துக்கறீங்க, உங்களுக்கு அனுபவம் இல்லைனு ஜனங்க நினைக்க நீங்களே காரணம் ஆகிட்டீங்களே?


=================


5  மோடி அவசரக்காரர். பொய்களைக் கூறுபவர். பொய் எப்போது வேண்டுமானாலும், வெட்ட வெளிச்சத்திற்கு வரும். அதனால், நான் பொய்களை தெரிவிப்பதில்லை. -ராகுல்   # நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏழைக்குடும்பத்துக்கு மாசம் 6000 ரூ இலவசம்னு அடிச்சு விட்டீங்களே,அது என்ன கேட்டகிரில வரும்?

================

6   காங்., கட்சி, மக்களுக்காக பணியாற்ற விரும்புகிறது. ஆனால், பா.ஜ., பொய்யான வாக்குறுதிகளையே அளிக்கும்-ராகுல் # அரசியல்வாதிகள் வாக்குறுதின்னாலே பொய் தானே?அதுல என ஏ கிரேடு? பி கிரேடு?


=================


நாங்கள் நிறைவேற்றிய வளர்ச்சி திட்டங்களைப் பட்டியலிட்டு, பிரசாரம் செய்கிறோம்-இ.பி.எஸ்.,  # திடீர்னு முதல்வர் ஆனது எப்படி? இந்த மாதிரி உங்க வளர்ச்சித்திட்டங்கள் பற்றியா?


==================

8  , செய்த திட்டங்களை பற்றி பேச முடியாமல், எங்கள் அணியில் உள்ள தலைவர்களை, வேட்பாளர்களைப் பற்றி தரக்குறைவாக,  ஸ்டாலின் பேசி வருகிறார்-இ.பி.எஸ்.# கடமை , கண்ணியம்  , தட்டுப்பாடு?



===============


. 9  ஸ்டாலின்  கண்ட கனவு, ஒரு வகையாக இருக்கிறது; நடப்பது, வேறு வகையாக உள்ளது. கனவெல்லாம், கானல் நீராகிவிட்டது. இதனால், பித்து பிடித்தவர் போல், ஸ்டாலின் அலைகிறார்--இ.பி.எஸ் # ஆட்சி கலையும்னு நினைச்சாரு, நடக்கல.அந்த கோபம் தான்


================


10  கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தை கொண்டு வந்தது, காங்., கட்சி. உலகின் மிகப்பெரும், சமூக நலத் திட்டம் அது. இதன் மூலம், ஏழை மக்களின் வறுமை ஒழிக்கப்பட்டது. -தமிழக, காங்., தலைவர், அழகிரி : # அப்போ நாட்ல ஏழைங்களே இல்லைங்கறாரா?


============


11 கிராமப்புற வேலை உறுதியளிப்புத்திட்டத்தைக் கூட, இதயத்தில் ஈரம் இல்லாமல், விமர்சிப்பவர்கள் உண்டு. இப்படி ஒரு திட்டத்தை, பா.ஜ., அரசு கொண்டு வந்தது உண்டா? -தமிழக, காங்., தலைவர், அழகிரி :# அப்படிக்கொண்டு வந்தா எங்களைப்பார்த்துக்காப்பி அடிக்கிறார்கள்னு சொல்லுவீங்களே?


==================


12  1 லட்சம் கோடி ரூபாய்க்கு, புல்லட் ரயில் விடுவதாக, திட்டம் அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. நம் நாட்டில், ரயில்வே, 'கேட்' இல்லாத பல ஊர்கள் உள்ளன. இந்நிலையில், புல்லட் ரயில் திட்டம் தேவையா?-தமிழக, காங்., தலைவர், அழகிரி # எதுவும் செய்யலைன்னா நலத்திட்டங்கள் , முன்னேற்றத்திட்டங்கள் ஏதும் இல்லைங்கறது, கொண்டு வந்தா இது தேவையா?ங்கறது


====================

 13 துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன், பிரசாரத்தின்போது மக்களுக்கு, 300, 500 ரூபாய் அளிப்பதாக, செய்தி வந்துள்ளது. -நல்லகண்ணு # 300+500 = 800 கூட்டுத்தொகை 8 வருது , அஷ்டமத்துல சனி


=============

14  தேர்தல் துறை,  ஆளுங்க்ட்சியின் பணப்பட்டுவாடாவைக் கண்டுகொள்ளவில்லை. எதிரணியில் உள்ள முக்கியப் பிரமுகர்களை குறிவைத்து, சோதனை நடத்துகிறது. தேர்தல் ஆணையம், ஒருதலைப் பட்சமாக நடந்தால், தீவிரமான போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும். -நல்லகண்ணு # வேலூர்ல ஆளுங்கட்சி ஆளுங்க பணத்தையும் தானே பிடிச்சாங்க?


============= 

15  இரு கட்சிகளில், ஒரு கட்சி ஆட்சி அமைக்க, பற்றாக்குறை ஏற்படும்போது, குதிரை பேரம் நடக்கும். இதில், குதிரைகள் விலை போகும். மக்கள் நீதி மையத்தில் இருப்பவர்கள், மனிதர்கள். எங்கள் வேட்பாளர், விலை போக மாட்டார்கள்.கமல் # அப்டியே விலை போனாலும்  டார்ச் “லைட்”டா எடுத்துக்குவாரு


முதல்ல  நம்ம கட்சி வேடபாளர்கள் ஜெயிக்கட்டும் , முதல் தேர்தல் , டெபாசிட் வாங்கினாலே பெரிய வெற்றி தான்



===================

16 13 துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன், பிரசாரத்தின்போது மக்களுக்கு, 300, 500 ரூபாய் அளிப்பதாக, செய்தி வந்துள்ளது. -நல்லகண்ணு

 # 300+500 = 800 கூட்டுத்தொகை 8 வருது , அஷ்டமத்துல சனி


=============

14  தேர்தல் துறை,  ஆளுங்க்ட்சியின் பணப்பட்டுவாடாவைக் கண்டுகொள்ளவில்லை. எதிரணியில் உள்ள முக்கியப் பிரமுகர்களை குறிவைத்து, சோதனை நடத்துகிறது. தேர்தல் ஆணையம், ஒருதலைப் பட்சமாக நடந்தால், தீவிரமான போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும். -நல்லகண்ணு 


# வேலூர்ல ஆளுங்கட்சி ஆளுங்க பணத்தையும் தானே பிடிச்சாங்க?


============= 

15  இரு கட்சிகளில், ஒரு கட்சி ஆட்சி அமைக்க, பற்றாக்குறை ஏற்படும்போது, குதிரை பேரம் நடக்கும். இதில், குதிரைகள் விலை போகும். மக்கள் நீதி மையத்தில் இருப்பவர்கள், மனிதர்கள். எங்கள் வேட்பாளர், விலை போக மாட்டார்கள்.கமல் 

# அப்டியே விலை போனாலும்  டார்ச் “லைட்”டா எடுத்துக்குவாரு


முதல்ல  நம்ம கட்சி வேடபாளர்கள் ஜெயிக்கட்டும் , முதல் தேர்தல் , டெபாசிட் வாங்கினாலே பெரிய வெற்றி தான்



===================
16   தன் குருவையே அவமதித்து, அரசியலில் இருந்து துாக்கி எறிந்தவர், பிரதமர் மோடி,'' - ராகுல்  


#  அத்வானியை குருனு சொல்லி அத்வானிக்கு ஸ்”குரு” ஏத்தி விடறீங்களா?


================


17 பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதில், காங்., உறுதியாக உள்ளது. -ராகுல்  

 # பிரியங்கா காந்தி அரசியலுக்கு வந்ததை சொல்றாரா?


=================


18   .ஹிந்து மதத்தில், குருவுக்கு பெரும் மரியாதை வழங்கப்பட்டுள்ளது. இறைவனுக்கும் மேலானவராக, குருவை, சீடர்கள் மதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஹிந்து மதம் பற்றி, பா.ஜ., பெருமையாக பேசுகிறது. 'அரசியலில், என் குரு அத்வானி' என, மோடியே கூறியுள்ளார். இன்று, தன் குருவையே, மோடி அவமதித்து, அரசியலில் இருந்து துாக்கி எறிந்து விட்டார்.  - ராகுல்  


கடவுளை எப்பவும் எட்ட நின்றுதான் ரசிக்கனும், தரிசிக்கனும்னு நினைக்கறாரோ என்னவோ?>


=================


19 காகிதத்தால் கூட விமானம் செய்ய த்தெரியாத, அனில் அம்பானிக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, ரபேல் போர் விமானம் தயாரிக்கும் பணியை, பிரதமர் வழங்கியுள்ளார். - அப்போ போர் விமானம் தயாரிக்கனும்னா காகிதகப்பல் செய்யத்தெரிஞ்சா போதுமா?

 அம்பானி தனி பாணி எதுனா வெச்சிருக்காரோ என்னவோ>?


=================


20    காங்கிரஸ் கட்சிக்கு, முஸ்லிம் லீக் என்ற வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தான், ஏற்கனவே நம் நாட்டை துண்டாடியது. தற்போது, மீண்டும் துண்டாட வந்துள்ளது. நாட்டு மக்கள், மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்-யோகி ஆதித்யநாத் # தேர்தல் வந்துட்டாலே தேர்தல் ஜூரம் வர்றது சகஜம் தானே?


==================