Monday, April 08, 2019

ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு # சரிதா நாயர்

1  :  ராகுல், எந்த விஷயத்தையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாத, குழந்தையாகவே இருந்து வருகிறார். அதனால் தான், அவரை, 'அமுல் பேபி' என்கிறேன்.-அச்சுதானந்தன் #இதைக்காரணமா சொ;ல்லியே தேர்தல்ல போட்டி இட முடியாதபடி பண்ண முடியாதா? போட்டி இட வயசு பத்தாது, அமுல் பேபி இப்டி சொல்லிடலாமே?


===================


2  தர்மபுரியில், அன்புமணியை தவிர, வேறு யாரும், பா.ம.க.,வில் இல்லையா' என, உதயநிதி கேட்டுள்ளார். நான் கேட்கிறேன்; தி.மு.க.,வில் உங்களை விட்டா, கட்சியில் வேறு யாரும் இல்லையா?-அன்புமணி: '# ஏன் இல்லை? அவங்க குடும்ப உறுப்பினர்களே  ஒரு ஊரு சேரும், ஆனா தேர்தல்ல கரை சேருமாங்கறது டவுட் தான்


-====================

3   காமராஜரின் பொற்கால ஆட்சிக்குப் பின், தமிழகத்தில், 50 ஆண்டு கால ஆட்சியில், ஏழை, எளிய மக்களுக்காக அடித்தளம் அமைத்து கொடுத்தது, அ.தி.மு.க., ஆட்சி தான்.-வாசன்  # நல்ல வேளை காமராஜர் உயிரோட இல்லை, அவர் குடும்பத்தார் யாரும் ஆக்டிவா நெட்ல இல்லை, இல்லைன்னா இந்நேரம் அவதூறு வழக்கு போட்டிருப்பாங்க 


===================


4  : மக்கள் சொத்தை கொள்ளை அடித்தவர்களை கண்டறிந்து, நீதிமன்றத்தில் நிறுத்தி, தண்டனை பெற்று தர முயன்றோம். ஐந்து ஆண்டுகளில், அது முடியவில்லை. ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்ப, மேலும் ஐந்தாண்டுகள், பா.ஜ.,விற்கு, மக்கள் வாய்ப்பு வழங்க வேண்டும்  -இல.கணேசன் # மொத்தமா 25 ஆண்டுகள் தேவைப்படும்னு சொல்லிடுங்க, தேர்தலே வேணாம்


==================

5   : பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி, தோல்வி பயத்திலேயே, தி.மு.க., நிர்வாகிகள் வீட்டில், வருமான வரித்துறை சோதனை நடத்தி உள்ளது. முதல்வர், துணை முதல்வர் வீட்டில் இல்லாத பணமா, தி.மு.க., நிர்வாகி வீட்டில் இருக்கப் போகிறது-முத்தரசன் # அப்போ யாரும் பேங்க்ல பணம் போட்டு வைக்கற பழக்கமே இல்லையா? திருடன் வந்துடப்போறான்


===================




6   இதுபோன்ற சோதனைகளுக்கு எல்லாம், தி.மு.க., அஞ்சாது.-வைகோ # வெளீல தான் இப்டி , உள்ள்  “ சோதனை மேல் சோதனை போதுமடா சாமி


===============


அருணாச்சல பிரதேச முதல்வர், பெமா காண்டுவின் பாதுகாப்பு வாகனத்தில், 1.8 கோடி ரூபாய் பணத்தை, தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்' என, காங்., குற்றம்சாட்டியுள்ளது


பெமா காண்டு  பணம் பிடிபட்டதும்  செம காண்டு ஆகி இருப்பாரே?


====================


8   நாடு முழுவதும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனைகளில், கணக்கில் வராத ரூ. 377 கோடி ரொக்கப் பணம்,  பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் .அதிகபட்சமாக, தமிழகத்தில், ரூ. 127.84 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் # டாஸ்மாக் சேல்சுலயும், பிளாக் மணீ லயும் தமிழகம் தான் முதல் இடம் பெருமையா இருக்கு


===============


9  வயநாட்டில் ராகுலை எதிர்த்து போட்டி 'சோலார்' ஊழல் சரிதா நாயர் அறிவிப்பு #  ரணகளத்துலயும் ஒரு கிளுகிளூப்புங்கறது இதுதானா?


=================


10  காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பேன்:  மம்தா # அதுக்கு பிரதமர் ஆகனும்னு யாராவது அவங்க கிட்டே சொல்லி வைங்க


===============

11 

'சீட்' தராததால் கோபம்; பிரசாரத்திற்கு குஷ்பு, 'குட்பை'  #  அவருக்குப்பின் காங்க் கட்சில சேர்ந்த ஊர்மிளா வுக்கு சீட் குடுத்துட்டு இவருக்குத்தர்லைன் நா சும்மா இருப்பாரா?கையில காசு வாயில தோசை ஃபார்முலாதான்


=================


12  மத்திய பிரதேச மாநிலத்தில், கோவில் வாசலில் அமர்ந்திருந்த பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில், போபால் லோக்சபா தொகுதி வேட்பாளரும், காங்., மூத்த தலைவருமான, திக்விஜய் சிங்குக்கு, தேர்தல் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளது # மை டியர் மார்த்தாண்டன் படம் பார்த்திருப்பாரோ?


=================


13  

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாயை, மக்களே நம்ப வேண்டாம்: மாயாவதி சாடல் # மாயை மாயா (வதி)எதையும் நம்ப வேண்டாம்


===================


14  திருச்சியில் ஓட்டுகேட்டு வந்த (பிஜேபி கூட்டணி) அதிமுக திருச்சி MP குமாரை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்! # அடுத்த கட்டமா வாக்குக்குப்பணம் குடுக்கலைன்னா அடிப்பாங்களோ?


===============


15

பகவான் கிருஷ்ணர் குறித்து அவதூறு; தி.க. தலைவர் வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மன்னார்குடி ஜீயர் வலியுறுத்தல்  நாத்திகத்தின் மீது அவருக்கு ஒரு கிரஷ்.



==================

16    கடந்த, 2006 - 2011 ஆண்டு ஆட்சியில், 96 எம்.எல்.ஏ.,க்களை மட்டுமே, தி.மு.க., வைத்திருந்தது. பா.ம.க.,வின், 18 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கொடுத்ததால், ஐந்தாண்டுகள் ஆட்சி இருந்தது. இதற்கு காரணம் நான் தான்-ராமதாஸ்: #  அன்புமணி மத்திய அமைச்சர் ஆக யார் க்ஜாரனம்? - ஸ்டாலின் 


ஓஹோ, அப்போ அந்த பாவத்துக்குப்பரிகாரமா இப்போ அதிமுக கூட கூட்டணீ, இந்த பாவத்துக்கு பரிகாரமா அடுத்த தேர்தல்ல திமுக கூட கூட்டணீ?


ஆதாயம் இல்லாம அரசியல்வாதி ஆத்தோட போக மாட்டானே?


==================


17  வேலுாரில், வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்த பணத்திற்கும், வேட்பாளருக்கும் தொடர்பிருந்தால், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்-  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்: # ஆளுங்கட்சி பணம் கொடுத்தா இனிக்குது,எதிர்க்கட்சி பணம் கொடுத்தா கசக்குது?


==================


18 : கமலின், மக்கள் நீதி மையம், 'நோட்டா'வை விட கூடுதல் ஓட்டு பெற்றாலே, பெரிய சாதனை- பீட்டர் அல்போன்ஸ்  # நீங்களூம் தனியா நின்னு கூட்டணீ அமைக்காம இந்த பஞ்ச் டயலாக்கை பேசி இருந்தா கரெக்ட், நாமளே அடுத்தவங்க முதுகுல சவாரி பண்றோம், நமக்கு என்ன தகுதி இருக்கு?


====================


19   நான் பிரதமர் ஆனால்  உ.பி.,யில் ஆட்சி செய்தது போல், அனைத்து தரப்பு மக்களுக்கும் பலனளிக்கும் வகையில், நிர்வாகம் செய்வேன்-மாயாவதி  # இந்தியா பூரா ஒரே யானை சிலை மயமா இருக்கும்?



=================


20   எந்தவொரு முடிவெடுத்தாலும், அதில் ஊசலாட்டம் எதுவுமின்றி, உறுதியாக நிற்பவன் நான்.-வைகோ # ஆனா அந்த முடிவை 5 வருசத்துக்கு ஒரு தடவை மாத்திட்டே இருப்பீங்க, அதானே?


================