1 அழகிரியை பின்னுக்குத் தள்ளி, குறுக்கு வழியில் தலைவரானவர் ஸ்டாலின்.-வனத்துறை அமைச்சர் சீனிவாசன்: # நம்ம ஓபிஎஸ் ஈபிஎஸ் எல்லாம் நேர் வழியில் முதல்வர் ஆனாங்களா:?
===============
2 ஜெயலலிதாவிற்கு, மோடியை பிடிக்காது. மோடியா, லேடியா பார்ப்போம் என்றார்.விஜயகாந்த்தை கூட பிடிக்காது. வன்முறையின் மறுபெயர், பா.ம.க., என, ஜெயலலிதா கூறினார்.- ஸ்டாலின்: # ஜெயலலிதாவுக்குப்பிடித்த கட்சி திமுக தான் பிடித்த தலைவர் ஸ்டாலின் தான் அப்டினு பிரச்சாரம் பண்ணிடுவாரோ?
================
3 ஸ்டாலினுக்கு, தமிழக முதல்வரை திட்டவில்லை என்றால் தூக்கம் வராது.- ராமதாஸ்: # அடப்பாவமே, அப்படி ஒரு வியாதி இருக்கா? சரி திட்டிட்டுப்போகட்டும், அதிமுக வைத்திட்டுனவங்க எல்லாம் அதிமுக கூட கூட்டணீல இருக்காங்க இப்ப
=================
4 மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அடுத்த நாளே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. அது, மக்கள் கையில் தான் உள்ளது.-சிதம்பரம் # அப்போ இவங்களை எம் பி ஆக்குனா இன்னொரு தேர்தல் வர வைக்க ஆவண செய்வாங்க, தண்டச்செலவு
===============
5 தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் வேண்டும். எனவே, நாம் தான் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்காற்றுவோம்.-தினகரன் # அது கிடக்குது க்ழுத், நம்ம சின்னப்படி பரிசுப்பெட்டில குக்கர் தருவீங்களா? வேற எதுனா மோதிரம், மூக்குத்தினு ஐடியா இருக்கா?
==========
6 மோடி தவிர, வேறு யாருக்கும் பிரதமராகும் தகுதி இல்லை. வேறு யார் பிரதமரானாலும் நாட்டுக்கு ஆபத்து.-பா.ஜ., - எம்.பி., நடிகை ஹேமமாலினி # மோடி பிரதமர் ஆனாதான் பாகிஸ்தான் நாட்டுக்கு ஆபத்தா?
==============
7 -. பா.ம.க., தேர்தல் அறிக்கையை,தி.மு.க., 90 சதவீதம்,காப்பியடித்துள்ளது -ராமதாஸ் # ஸ்டாலின் - அட்லீ , தேவா ரசிகராம்
============
8 நம்ம வீட்டு கல்யாணம்னு நினைச்சு, தேர்தல் செலவுகள பார்த்து பண்ணச் சொல்லுங்கப்பா' என, ஆளும் கட்சியினரை அறிவுறுத்துமாறு, அ.தி.மு.க., தலைமையிடம், பா.ம.க., கோரிக்கை விடுத்துள்ளது. # மொய் வைக்கச்சொல்றாரோ? தேர்தல் செலவுக்கு?
============
9 சசிகலாவின் காலில், மண்புழு போல ஊர்ந்து சென்று, பதவியை வாங்கியது சந்தர்ப்பவாதம். இப்போது, 'படிப்படி யாகவே முதல்வர் பதவிக்கு வந்தேன்; சசிகலா இதற்கு காரணம் அல்ல' என்று, இ.பி.எஸ்., கூறுகிறார்; இதுதான், சந்தர்ப்பவாதம் - ஸ்டேலின் # மண்புழு ரொம்ப மெதுவா தானே பயணிக்கும், இவரு டகார்னு ஸ்பீடாத்தானே கால்ல அ விழுந்தார்?
====================
10 இடைத்தேர்தல் நடக்கும், 18 சட்ட சபை தொகுதிகளில், ஒரு ஓட்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்க, ஆளுங்கட்சி திட்டமிட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. # 234 தொகுதிகளுக்கும் இதே மாதிரி இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளதா?
===================
11 பல கல்லா பெட்டிகளை, பரிசு பெட்டி உடைக்கும்,'' - தினகரன் # அப்போ பரிசுப்பெட்டியை உடைச்சா உள்ளே எதுனா கல்லாப்பெட்டி இருக்குமோ?
============
12 'தினகரனின், அ.ம.மு.க., இன்று தேர்தல் களத்தில் இல்லை. அவரது சின்னம் பரிசு பெட்டி இல்லை. காலி பெருங்காய டப்பா,'' -, கூட்டுறதுத்துறை அமைச்சர் ராஜு # காலியா இருந்தாலும் வாசமா இருக்கும்கறாரா?
=============
# இவரு சொல்றதை ஜனங்க காதுல வாங்குவாங்களா?வாங்க மாட்டாங்களா? தெரில
================
14 8 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி அபாரம்; புகழ்ந்து தள்ளுகிறார் ராம்தாஸ் # அப்போ ஊழல் நிறைந்த ஆட்சினு கவர்னர்ட்ட மனு கொடுத்தது யாரு>?
================
15
பிரதமர் மோடி இரும்பு மனிதர் அல்ல.. கல் மனிதர்... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு # கல் நெஞ்சம்னு பேசி “கல்”லா கட்டப்பார்க்கறாரா>?
============
16
ஊழலின் மறுபெயர் காங்கிரஸ்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு # அதனால தானே காங்”கிரேஸ்” குறைஞ்சிடுச்சு?
=============
17
அறிவில்லாத அரசுதான் பாதுகாப்பு ரகசியங்களை வெளியிடும்': மிஷன் சக்தி குறித்து ப.சிதம்பரம் காட்டம் # சாதனையைச்சொன்னாஅது எப்படி பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்டதாகும்? அவர் என்ன ராணுவ ரகசியத்தையா வெளியிட்டார்?
=========
18 நான் கழிப்பறைகளின் காவலனாக (சவுகிதார்) இருப்பதில் பெருமைப்படுகிறேன், இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்களின் கவுரவத்தை நான் பாதுகாக்கிறேன் = மோடி # டோல்கேட் , ஜிஎஸ்டி மாதிரி அதுக்கு எதுவும் கட்டணம் வசூலிக்காம இருந்தா சரி
-===============
19
வாக்கு சதவீதத்தை அதிகரிக்க பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்: கட்சியினருக்கு கமல்ஹாசன் அறிவுரை # அப்போ வெற்றி பெறத்தேவை இல்லை? வாக்கு % மட்டும் உய்ர்ந்தா போதுமா? அதை வெச்சு அடுத்த தேர்தல்ல கூட்டணீ பேரம் பேச உதவிய இருக்கும்னா?
===============
20
என்னிடம் வசூலித்த ரூ.10 ஆயிரத்தில் 1000 ரூபாய் வைத்துக்கொண்டு மீதியை கொடுங்க: கமலுக்கு விருப்ப மனு அளித்த எஸ்.ஐ. கடிதம் # இப்படி எல்லாருமே திருப்பிக்கேட்டா தேர்தல் நிதி க்கு என்ன பண்ண?
==============