Friday, March 29, 2019

சூப்பர் டீலக்ஸ் - சினிமா விமர்சனம் 18+ ( குடும்பத்துடன் பார்க்கத்தகுதி இல்லாத படம்)

Image result for super deluxe poster
ஆரண்ய காண்டம் என்ற ஒரே ஒரு படம் மூலம் கோடம்பாக்கத்தினர் அனைவரையும் கவர்ந்த இயக்குநர் தியாகராஜன் குமார ராஜா 8 ஆண்டுகள் இடைவெளி எடுத்து சொந்தமாக  தயாரித்து இயக்கிய படம் இது. திரைக்கதை உதவி - நலன் குமாரசாமி, மிஷ்கின்


4   வெவ்வேறு சிறுகதைகளை ( குறும்படங்களை) ஒரே புள்ளியில் கடைசியில் இணைக்கிறார்கள் என்பதே இதன் சவால். கிட்டத்தட்ட 3 மணி நேரப்படம்

 உலகப்படம் என்று மீடியாக்களால், வலைப்பூ  எழுத்தாளர்களால் கொண்டாடப்போகும் படம், பல விருதுகளைக்குவிக்கப்போகும் படம்

 ஆனால் தமிழ்க்கலாச்சாரத்துக்கு ஏற்ற படமா? குடும்பத்தோடு தியேட்டரில் போய் உட்கார்ந்து பார்க்க முடியுமா? என கேட்டால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 


 அதனால  ஏகப்பட்ட விஷயங்கள் காண்ட்ரவர்சியா மறுத்துப்பேச வேஎண்டி இருப்பதால் கதையைப்பத்திப்பேச வேண்டாம்

முதல்ல பிளஸ்களை எல்லாம் பார்ப்போம்


 முதல்  ஹீரோ இயக்குநரும் , திரைக்கதை ஆசிரியர்களும். சும்மா பின்னிப்பெடல் எடுத்துட்டாங்க


நடிகர்களில் முதல் இடம் ஃபகத் ஃபாசில்.ஓவர் ஆக்டிங்கே இல்லாத ரியல் ஆக்டர்

 சமந்தா வுக்கு  நல்ல ரோல். போலீஸ் ஆஃபீசர் முன் அழும் காட்சியில் அசத்தல் நடிப்பு

 விஜய் சேதுபதியின் நடிப்பு அர்ப்பணிப்பு, அவருக்கு மகனாக வரும் சுட்டிப்பையன் கலக்கி இருக்கான்

வில்லனாக வருபவர்  கொஞ்சம்  ஓவர் ஆக்டிங் போல் தோன்றினாலும்  ரசிக்கலாம்

 அந்த பிட்டுப்படம் பார்க்கும் 4 இளைஞர்கள் நடிப்பு அருமை

 இப்படி எல்லாருமே பிரமாதமாக சைன் பண்ணி இருக்காங்க

 யுவன் பிஜிஎம்மில் சிறப்பு  நீரவ் ஷா ஒளிப்பதிவு அருமை




நச் டயலாக்ஸ்

1  வாழ்க்கைல பயப்படலாம் ,ஆனா கூச்சப்படக்கூடாது


இந்தப்படம் நல்ல கதையா?


இந்த "மாதிரி" படங்கள் எல்லாமே ஒரே கதை தான்


எப்டியாவது கஷ்டப்பட்டு இந்த மாதிரி (பொண்ணுங்களை கரெக்ட் பண்ற) வேலைக்கு போய்டனும்,ஒரு வேலை செஞ்சாலும் திருவேலையா செய்யனும்


ஒரே ஒரு நாள் தாலியை கட்டிட்டு தினமும் என் தாலியை அறுக்கறான்


தனிமனிதன் மேத்ஸ் பார்முலா கண்டு பிடிக்கறான்,தனிமனிதன் விஞ்ஞானக்கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கறான்,ஆனா நாம கூட்டமா சேர்ந்து பஸ்சை எரிக்கறோம்,கலவரம் பண்றோம்

ஒருத்தனைக்கொலை பண்ண உதவுனா அதுக்கான கூலியை மட்டும்தான் கொடுப்பாங்க,ஆனா உயிரைக்காப்பாத்துனா நாம கேட்கறதைக்கொடுப்பாங்க


மனசுக்குப்பிடிக்காத பொண்டாட்டியா இருந்தாலும் தனக்கு துரோகம் பண்ற பொண்டாட்டியை எந்த புருசனுக்கும் பிடிக்காது ,ஏத்துக்க முடியாது

நீ சொல்றதெல்லாம் நியாயம்தான்,ஆனா உன்னை வெளில நிக்க வெச்ட்டாங்க பாத்தியா? நியாயம் வேற,நிதர்சனம் வேற


இன்னைக்கு தப்புனு சொல்ற விஷயத்தை நாளை சரினு சொல்லலாம்.அதை காலம் தான் தீர்மானிக்கும்


10 மொழிப்ற்று,இனப்பற்று போல ஜாதிப்பற்றும் சரியே எனும் தவறான ,சமூகத்துக்குக்கேடான ஒரு வசனம் படத்துல வருது


Image result for samantha hot

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  BGM ல அப்ளாஸ் வாங்க இயக்குனர்கள் ,இசை அமைப்பாளர்கள் கண்டறிந்த குறுக்குவழி இசைஞானியின் பாடல்களை ஆங்காங்கே உபயோகிப்பது


2  இது ஒரு ஏ படம். 18+ காட்சிகள்,வசனங்கள் நிறைந்தது.குடும்பத்துடன் தியேட்டருக்குப்போவதை தவிர்க்கவும்


இயக்குநரின் திரைக்கதை அறிவு அபாரம்.4 வெவ்வேறு கதைகள் ஒரு புள்ளியில் எப்படி இணைக்கிறார் பார்ப்போம்


திருநங்கை சம்பந்தப்பட்ட காட்சிகள் மனோரீதியான பாதிப்பைத்தரக்கூடும் என்பதால் மிகுந்த மன முதிர்ச்சி கொண்டவர்கள் மட்டும் படம் பார்க்கவும்

சமந்தா,நயன்தாரா க்களுக்கு ஒரு அட்வைஸ்,உங்க ஒப்பனைதாராரை மாற்றவும்.புருவங்களை அழகுபடுத்தறதா நினைச்ட்டு மெல்லிய புருவத்தை ஐடெக்ஸ் மை அப்பி அகல புருவமா மாத்தி கொலை பண்றாங்க.இயற்கையா எப்டி இருக்கோ அப்டியே இருக்கட்டும் ,லைட்டா டச் பண்ணா போதும்

6  எடுத்துக்கொண்ட கதைக்கு நேர்மையான,லாவகமான திரைக்கதைதான்,ஆனா எடுத்துக்கொண்ட கதை நேர்மையானதா?சமூகத்துக்கு தேவையானதா?என்பதை பார்க்கனும்.சிறந்த இயக்கம்,ஆனா தவறான கதை,காட்சி அமைப்புகள் ,இடைவேளை

மக்கள் செல்வன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் எனில் விஜய்சேதுபதி இதுபோன்ற(விஷ) பரீட்சார்த்தமான கதாபாத்திரங்கள் ஏற்று கெஸ்ட் ரோல்களில் நடிப்பதை தவிர்க்கனும்

8  கிறிஸ்துவர்களை,மதமாற்றத்தை நக்கலடிக்கும் காட்சிகள் அதிகம்.நாத்திகக்கருத்துகள் வலிய திணிக்கப்படும் சூழல்


அபூர்வ சகோதரர்கள் படத்துல நாகேஷ் வில்லனா நடிச்ச மாதிரி நடுவுல கொஞ்சம் பக்கத்தைக்காணோம் காமெடியன் இதில் வில்லன் ரோலில் கொடூரம் காட்டி இருக்கிறார்


10 சென்சாரில் பொத்தாம்பொதுவா ஏ 18+ னு குடுத்துடறாங்க.ஆனா

1 கில்மா காட்சிகள் உள்ளது
2 வன்முறைக்காட்சிகள் தெறிக்குது
3 குடும்பத்துடன் பார்க்க தகுதி அற்ற படம்
னு போஸ்டர்ல மென்ஷன்"பண்ணனும் னு சட்டம் வரனும்.எத்தனை பேர் பேமிலியோட வந்து சங்கடப்படப்போறாங்களோ?

11 திறமையும் அதிரஷ்டமும் சேர்ந்தா சினி பீல்டுல கமர்ஷியலா ஜெயிச்சிடலாம் எனும் கருத்தை பொய்ப்பிக்க வந்த படம் சூப்பர்டீ"லக்ஸ்"

12 1 சூப்பர்டீலக்ஸ் 3.5 / 5 , விகடன் 45, கமர்ஷியலா ஹிட் ஆகாது
2 Lucifer (malayalam) 2.5 / 5 ஆல்சென்ட்டர் மீடியம் ஹிட்
3 ஐரா 2.5 / 5 , விகடன் 38 ,படம் ஓடாது



சபாஷ் டைரக்டர்

1  காருக்குள் அமர்ந்து கொண்டு ஃபகத் ஃபாசில் சமந்தாவிடம் குடிகாரன்   போதையில்  இருப்பதுபோல் நடித்துக்காட்டும் சீன்


2  விஜய் சேதுபதியின் மகன் கதவைத்தாழிட்டு அப்பாவிடம் பேசும் வசனங்கள்


3  விஜய் சேதுபதியின் அம்மா , அப்பா பேசும் இடங்கள் வசனங்கள் அற்புதம் , மிக இயல்பான உரையாடல்கள்





லாஜிக் மிஸ்டேக்ஸ் ( இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்)


1  லாஜிக் மிஸ்டேக் 1 − தன் முன்னாள் காதலனுடன் ஆன இன்றைய சந்திப்பில் எதிர்பாராதவிதமா தப்பு பண்ணிட்டேன்னு ஒரு மனைவி தன் கணவனிடம் தானாக முன் வந்து சொல்வாளா?


லாஜிக் மிஸ்டேக் 2 − கூட்டுக்குடித்தனங்கள் மிக்க ஒரு மாடி போர்ஷனில் குடி இருக்கும் மனைவி தன் முன்னாள் காதலனை கணவன் ஆபீசுக்குப்போன டைமில் தன் வீட்டுக்கே வர்ச்சொல்வாளா?


லாஜிக் மிஸ்டேக் 3− இயற்கையாக நடந்த மரணத்தை (ஹார்ட் அட்டாக்) மிக சுலபமாக கையாள வேண்டிய சம்பவத்தை ரொம்ப சுத்தி வளைச்சு பாடியை டிஸ்போஸ் பண்ண அலைவது தேவை இல்லாத திருக்கல் வேலை


லாஜிக் மிஸ்டேக் 4− பட்டப்பகலில் போலீஸ் ஸ்டேஷனிலேயே ஒரு போலீஸ் ஆபீசர் திருநங்கையை வன்கொடுமை செய்வது நம்பமுடியாத நடவடிக்கை ,இதுல 2 போலீஸ் காவல் வேற

5   கள்ளக்காதலனை  ஓப்பனிங் சீனில் ஃபோன் பண்ணி வரச்சொல்லும்போதே ஹீரோயின் கில்மாவுக்காக என்பது தெரிந்திடுது, ஆனா காட்சியில் ஹீரோயின்  எதிர்பாராத விதமா தப்பு நடந்திடுச்சு என ஏன் பொய் சொல்றாப்டி?>


6    யாரோ  வீட்டுக்கு வந்தாங்க ஏதோ விசாரிச்சாங்க, ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாங்க என்றால் மேட்டர்  ஓவர், லூஸ் மாதிரி எல்லா உண்மையையும் ஏன் சொல்லனும்?


7  கூட்டுக்குடித்தன மாடியில் இருந்து ஒரு டெட் பாடியை இவ்வளவு சுலபமாக அகற்ற முடியாது அதுவும் பட்டப்பகலில்


8  போலீஸ் ஆஃபீசரான வில்லன் திருநங்கையிடம் நடந்துகொள்ளும் விதம் எல்லாம் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள். அதைத்தொடர்ந்து அவர் நாயகியிடமும் தவறாக நடக்க முயற்சிக்கிறார். இது போன்ற அழகிகளை கரெக்ட் பண்ற திறமை உள்ளவர் ஏன் திருநந்கைகளயும்?...


9  கில்மாப்படங்களில் நடிக்கும் ஒரு நடிகை தன் மகனிடம் அது பற்றி நியாயம் கற்பிக்கும் வசனங்கள் படு செய்ற்கை


10  கிறுஸ்துவர் பேசும் நாத்திக வசனங்கள் , கிறிஸ்துவர்களை நக்கல் அடிக்கும் காட்சிகள் வலிந்து புகுத்தபட்ட்டவை 

11   டெட் பாடியை மறைக்க வீட்டில் சிறந்த இடம் படுக்கை அறை கட்டிலுக்குக்கீழேதான்  ஆனால் நாயகி ஃபிரிட்ஜில் மறைப்பது ஏன்? ஃபிரிட்ஜ்ல இருக்கற பொருட்களை எல்லாம் மாற்றி வைக்கவே 20 நிமிடங்களாவது ஆகும். ஆனால் கணவன் வருவதைப்பார்த்த அடுத்த 20 நொடிகளில் இத்தனை வேலையையும் தனி ஒரு பெண்ணால் எப்படி செய்ய முடியும்?


12  மனைவி கணவனுக்கு செய்த துரோகத்தை தம்பதிகள் இருவரும் பச்சையாக விவாதிப்பது ஓவர்.கொஞ்சம் கண்ணியமான வார்த்தைகளில் விவாதத்தை வைத்திருக்கலாம்



சி.பி கமெண்ட் -சூப்பர்டீலக்ஸ் 18+ சிறந்த இயக்குர் அமைந்த படங்கள் எல்லாம் சிறந்த படங்கள் ஆவதில்லை.நல்ல இயக்கம்,ஆனால் மனதை நெருடும் சம்பவங்கள்.குடும்பத்துடன் தியேட்டரில் பார்க்க தகுதி அற்ற படம். விருதுகள் வாங்கும்,ஜனரஞ்சக வெற்றி பெறாது, விகடன் 45 , ரேட்டிங் 3.5 / 5


ஆரண்யகாண்டம் எனும் தரமான படம் (2011) தந்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா win சூப்பர் டீலக்ஸ் ,8 வருட இடைவெளிக்குப்பின் ,கேரளா கோட்டயம் அபிநயா 12% full .ஏ சென்ட்டர்லயே இவ்ளவ் கம்மியான கூட்டம்